ஹைக்கூ - கவிதை வாசிப்பு
----------------------------------------------------
அழகியசிங்கரின் நவீன விருட்சம் நிகழ்வு - 9/1/21
ஹைக்கூ - கவிதை வாசிப்பு
----------------------------------------------------
அழகியசிங்கரின் நவீன விருட்சம் நிகழ்வு - 9/1/21
ஹைக்கூ - குறுங்கவிதைகள்
-------------------------------------------------------
அழகியசிங்கரின் 'நவீன விருட்சம்' நிகழ்வில் வாசித்த கவிதைகள்
-------------------------------------------------------------------------------------------------------------
உருமாறி இறங்கிய
காதலனின் கண்ணீர்த் துளியில்
சிலிர்த்துப் போகும் செடி
-------------
எங்கோ போகின்ற
ரெயிலின் ஊதல் ஓசையை
அசை போடும் மாடுகள்
-------------
பைபாஸில் கடக்கும்
அந்த சிற்றூரில் இருந்து வரும்
வேர்க்கடலை வாசம்
----------------
ராணுவத்தில் இருந்து
வரும் வீரனை வரவேற்று நிற்பது
பனைமரம் மட்டும்தான்
-----------------------------
----------------------------------------நாகேந்திர பாரதி
முள்ளும் மலரும் - திட்டமிடாப் பேச்சு
---------------------------------------------------------------------
கு. அழகிரி சாமியின் சிறுகதை - பாலம்மாள் கதை - சிறுகதை அனுபவம்
-நாகேந்திரபாரதி
----------------------------------------------------------------------------------------------------------------------
குடும்பக் கதை மன்னர் கு.அழகிரிசாமி அவர்களின் ' பாலம்மாள் கதை'
என்ற சிறுகதையைப் படித்த அனுபவத்தை இங்கே அழகியசிங்கரின் 'நவீன விருட்சம் ' நிகழ்வில்
பகிர்ந்து கொள்கிறேன் .
முதலில் ஒரு சின்னஞ் சிறிய கதைச் சுருக்கம்.
இது பாலம்மாள் என்ற ஒரு ஏழைப் பெண்ணின் கம்மல் கனவைப் பற்றிய கதை. புடவையும் பொன்
நகையும் தானே பெண்களுக்குப் பிடித்த பொருட்கள். அந்த ஏழைப்பெண்ணின் குடும்பமே கூலி
வேலை செய்து பிழைக்கும் குடும்பம். தாய், தந்தை, தங்கை தங்கம்மாள், தம்பி செல்லத்துரை என்று அளவான குடும்பம். வாக்கப்பட்டுப் போன தாய்
மாமன் மாடசாமியும் கூலி வேலை செய்பவன்தான். அவள் கல்யாணத்திற்கு இரவல் வாங்கிப் போட்டிருந்த
சிவப்புக் கம்மலையும் ஓரிரு நாளில் திருப்பிக் கொடுக்க வேண்டியதாகிறது.
மழை பொய்த்து விட்டால் கூலி வேலையும் கிடைக்காமல் அவர்கள் அரை
வயிற்றுக் கஞ்சிக்கே கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்குள் தங்கை தங்கம்மாளுக்கும்
திருமண வயது வந்து விட அவளை பாலம்மாள் கணவனுக்கே பாலம்மாள் சம்மதத்துடன் திருமணம் முடிக்க ஏற்பாடு நடக்கிறது.
ஆனால் பாலம்மாள் கணவன் மாடசாமி தங்கம்மாளுக்கு வேறு ஒரு வசதியான இடத்தில் மணம் முடிக்க ஏற்பாடு செய்து வைக்கிறான். அந்த ஏழாயிரம்
பண்ணை மாப்பிள்ளை விதவை மாமியாரையும் மைத்துனனையும்
தங்கள் வீட்டுக்கே அழைத்துச் சென்று விடுகிறான். நடுவில் மிகப் பெரிய பஞ்சம் வந்து
பாலம்மாளும் மாடசாமியும் கஷ்டப்படுவதை அறிந்து அவர்களையும் தன் வீட்டுக்கே அழைத்துச்
சென்று சில நாட்கள் கழித்து அவர்கள் தங்கள் ஊருக்கு திரும்பும்போது தங்கம்மாள் தன்
அக்காவிற்கு மூட்டை நெல்லும், கம்பும் கொடுத்து ஒரு ஜோடி புஷ்பராகக் கம்மலும் போட்டு அனுப்புகிறாள்.
சில மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் வறுமை. அந்த கம்மலை அடகு
வைத்து காலம் ஓடுகிறது. பாலம்மாளுக்கும் தங்கம்மாளுக்கும்
குழந்தைகள் பிறந்த பின் தங்கம்மாள் குழந்தையைப் பார்க்க அவர்கள் அங்கு போகும் போது
அக்கா கம்மலை அடகு வைத்தது தெரிய வர முதலில் கோபித்துக்கொண்டு பிறகு அதைத் திருப்ப
பணம் கொடுத்து அனுப்புகிறாள் . திரும்பி வந்தபின் பாலம்மாள் பையனுக்கு விபத்து ஏற்பட
ஆஸ்பத்திரி செலவுக்கு மறுபடியும் கம்மல் அடகுக் கடை போகிறது. தொடர்ந்து மூன்று மாதம்
கூட பாலம்மாளால் அந்த கம்மலை காதில் போட்டுக் கொள்ள முடியவில்லை.
ஒரு முறை தம்பி செல்லத்துரை அடகு நகையைத் திருப்ப காசு கொடுக்கிறான்.
சிறிது நாட்களுக்குப் பிறகு மறுபடியும் அடகுக் கடை. வருடங்கள் ஓட பையன் ராணுவத்தில்
சேர்ந்து தொடர்ந்து பணம் அனுப்ப குடும்பம் ஓரளவு நல்ல நிலைக்கு வர , ஊருக்கு வரும்
பையன் அடகு நகையை திருப்பிக் கொடுக்கிறான். அதை போட்டுக்கொண்டு விசேஷங்களுக்குச் செல்லும் பாலம்மாளை அந்த ஊர் பெண்கள்
கேலி செய்கிறார்கள். ‘அறுபது வயசாயிருச்சு.
இப்ப என்ன வெள்ளைக் கம்மல் போட்டுக்கிட்டு திரியிறா ‘ என்று கேவலமாகப் பேசுகிறார்கள்.
அழுதுகொண்டே வீடு திரும்பும் பாலம்மாள் கம்மலைக்
கழட்டி பானைக்குள் வைத்துவிட்டு வீடு வரும் மகனிடம் 'இது உன் பொண்டாட்டிக்கு ' என்று
அழுது கொண்டே சொல்வதாகக் கதை முடிகிறது
இந்தக் கதையிலே கு அழகிரிசாமி அவர்களின் கதை சொல்லும் பாணி எளிமையாகவும் உருக்கமாகவும் உள்ளது. அந்த ஏழைக்
குடும்பத்தின் வாழ்க்கைக் கஷ்டங்களை விவரிக்கும் பொழுது அந்தக் காட்சியை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்.உதாரணத்திற்கு ஓரிரு காட்சிகள்.
பாலம்மாளின் தந்தை மரணத்தைப் பற்றி சொல்லும் போது இப்படி சொல்கிறார்.
'ஏற்கனவே வறுமையின் அடி
பாதாளத்தில் திக்கு முக்காடும் குடும்பமாதலால் பெரியவரின் மரணம் பொருளாதார ரீதியில் குடும்பத்தை பாதிக்கவில்லை .ஒரு ஆள் வரும்படி நின்றது. ஒரு ஆள் சாப்பிடும் செலவும் நின்றது .அவ்வளவுதான். . ' அந்த வறுமை நம் மனதில் பதிகிறது அல்லவா.
அடுத்து அவர் கதையின் கதாபாத்திரங்களின் குண நலன்களையும் ஓரிரு வரிகளில் கோடி காட்டுகிறார்.
அந்த
ஏழாயிரம் பண்ணை மாப்பிள்ளை சொல்வது இது ' .அண்ணாச்சி ஊரிலே இப்போ என்ன அவசரம்.அங்கெ தான் மழை தண்ணீ கிடையாதுன்னு சொல்றீங்களே .காலம் செழிச்ச பிறகு போனா போச்சு .இங்கேயே ரெண்டு பேரும்
இருங்க.
இது யாரு வீடு ? உங்க தம்பி வீடு தானே?' என்ற வரிகளில் தெரியும் அந்த தங்கம்மாள் புருஷனின் அன்பும், உதவும் குணமும்.
சகலன் வீட்டில் பிழைப்புக்காக வந்து மனைவியோடு உட்கார்ந்திருக்க மாடசாமிக்கு பிடிக்கவில்லை, என்ற வரிகளில் மாடசாமியின் வறுமையிலும் சுய மரியாதையை விட்டுக் கொடுக்க விரும்பாத அந்த குணம் தெரிகிறது அல்லவா.
'என் கட்டை உள்ள மட்டும் எனக்கு பாடு பட சக்தி உண்டு. அடுத்தவன் உழைப்பில் ஒரு வேளைக் கஞ்சி கூட இந்த மாடசாமியால் குடிக்க முடியாது ' என்று சொல்லும் அந்த ஏழை கூலிக்காரனின் சுய மரியாதையை.
பெரும்பாலும் மூன்றாவது மனிதன் கண்ணோட்டத்தில் சொல்லப்படும் இந்தக் கதையில் அங்கங்கே தெறிக்கும் இது போன்ற வசனங்களில் மனிதர்களின் குண நலன்கள் வெளிப்படுகின்றன.
இத்தனைக்கும் மேலாக கம்மலுக்கு ஏங்கும் அந்த பாலம்மாளின் ஏக்கம்.
'நல்ல நாள் வருகிறது, நான் மூளியாக இருக்க வேண்டி இருக்கிறது. கம்மல் தான் போய்
விட்டதே '.என்று ஏங்கும் இடங்கள் .
கடைசியில் ஊர்ப் பெண்களின் கேலியைப் பொறுத்து கொள்ள முடியாமல்
'எனக்கு இந்த வயதான காலத்திலே கம்மல் எதற்கு. உன் பொண்டாட்டிக்காக வைத்திருக்கிறேன் ' என்று மகனிடம் சொல்லும் இடம்.
“பாலம்மாளால் தொடர்ந்து பேச முடியவில்லை. உதடுகள் துடித்தன. என்ன முயற்சி செய்தும் பொய்ச் சிரிப்பு சிரிக்க முடியவில்லை.சுவரைப் பார்த்துத் திரும்பிக் கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கொதிக்கின்ற கண்ணீரைச் சிந்தினாள் .மறு நிமிடமே முகத்தைத் துடைத்துக்கொண்டு மகனைப் பார்த்து திரும்பி சிரமப் பட்டு புன்னகை செய்துகொண்டு 'எனக்கு எதற்கு இனி கம்மல். உன் பொண்டாட்டிக்கு தாண்டா ' என்று சொன்னாள் பாலாம்மாள் “.
இப்படி கதா பாத்திரங்களின் குண நலன்களை வெளிப்படுத்தும் வசனங்களும் , வறுமைக் கோலத்தை வெளிப் படுத்தும் வருணனைகளுமாக
இந்த சோகச் சிறுகதையை நம் முன் நடத்திக் காட்டுகிறார்.
இந்த
சோகக் கதைகளினால் நம் மனதினில் இரக்க உணர்வை தூண்டுவது தானே அந்த எழுத்தாளர்களின் நோக்கம். அந்த நோக்கத்தில் இந்த குடும்பக் கதை மன்னர் கு. அழகிரிசாமியின் பாலம்மாவும்
நம் மனதில்
இரக்க உணர்வை எழுப்புகிறார். வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.
---------------------------நாகேந்திரபாரதி
புத்தாண்டு விடியல் - கவிதை வாசிப்பு
-------------------------------------------------------------------
கவிதையே சமையல் - கவிதை
---------------------------------------------------------
கருத்தும் கற்பனையும்
கலந்தே இருக்கும்
சாதமும் குழம்பும்
சார்ந்தே இருக்கும்
எதுகையும் மோனையும்
இசையைச் சேர்க்கும்
கூட்டும் பொரியலும்
கூட்டும் சுவையை
கார சாரக்
கவிதையே சமையல்
----------------------------நாகேந்திர பாரதி
My E-books in Tamil and English