செவ்வாய், 31 மே, 2016

காதல் மாறிப் போச்சு

காதல் மாறிப் போச்சு
-------------------------------------
அந்தக் காலக் காதலுக்கு அன்னன்னிக்கு அரையணா காப்பிதாங்க செலவு . இந்தக் காலக் காதலுக்கு ஆயிரம் ரூபாய் காபி டேயிலே செலவு ஆகுதுங்க.

அப்பல்லாம் கிராமத்திலே குளத்தங்   கரையிலேயும்  நகரத்திலே கடற் கரையிலேயும்  பேசிக்கிட்டு கீசிக்கிட்டு இருப்பாங்க. இப்ப என்னடான்னா நகரங்கள்ளே பெரிய பெரிய மால்கள் வந்தாச்சு. கிராமங்கள்ளே இருந்தும் பக்கத்துக்கு டவுன் மாலுக்கு தனித் தனியா பஸ் ஏறிப் போயி சேந்துக் கிறாங்க  .

மாலுன்னா செலவில்லாமப் போயிடுமா. ஒரு பாடாவதி பர்ஸ் வாங்கினாலே நூறு ரூபாய் ஆகும். சுடிதார் பைஜாம்மான்னு  வாங்கினா ஏசி சார்ஜ் சேர்த்து ஆயிரம் ரூபாய்க்குக் குறையாது .

இவங்க பேசிச் சிரிக்கப் போனாங்களா இல்லே கடை கடையா ஏறி இறங்கப் போனாங்களான்னு தெரியலீங்க. ஒரு வேளை கல்யாணம் ஆனப்பறம் குடும்பச் செலவு எவ்வளவு ஆகும்னு கூட்டிக் கழிச்சுப் பார்த்து , முடியலேன்னா விலகிடலாம்னு முடிவு செய்யப் போறாங்களோ என்னவோ தெரியலீங்க.

ரெண்டு பெரும் வேலை பாக்கிறவங்களா   இருந்தா, அவனுக்கு அவள் ஒரு கர்சீப் வாங்கி கொடுத்திட்டு அவளுக்கு அவனை லெக்கின்ஸ்  வாங்க வச்சிடுறாதுணி வாங்கிக் கொடுத்தாச்சு. துணியிலே சிறுசு என்ன பெருசு என்னங்க. காதலோட வாங்கித் தர்றது தானே முக்கியம்னு சொல்லிடுவா.

இது தவிர சினிமா தியேட்டருக்குப்   போனா   அங்கே டிக்கெட் செலவை விட பாப் கார்ன் செலவு தான் ஜாஸ்தியா இருக்கு.

இப்படி ஒரு தடவை வெளியே போயிட்டு வந்தாலே அவளுக்கு கால் வாசி சம்பளம் காலி. அவனுக்கு முழுச் சம்பளமும் காலி. இதனாலே தான் இந்தக் காலக் காதலர்கள் அடிக்கடி வெளியே சேர்ந்து போறது இல்லே.

இருக்கவே  இருக்கு வாட்ஸ் அப் .   காசு செலவே இல்லாம காதல் சங்கதி பேசிக்கலாம். இன்டர்நெட் செலவு மால் செலவை விட கம்மி தானுங்களே.

அந்தக் காலத்திலே பாத்து பேசி பழகி புரிஞ்சு காதலிச்சு கல்யாணம் பண்ணி குழந்தை குட்டிகளோடு சேர்ந்து இருந்தாங்க.

இந்தக் காலத்திலே பேஸ் புக்  , வாட்ஸ் அப் காதல் எல்லாம் சீக்கிரமே டெலீட்  ஆகி ஆர்கைவ் ஆயிடுது .

----------------------------------------------------------------நாகேந்திர பாரதி

காதற் செலவு

திங்கள், 30 மே, 2016

ஆள் மாறாட்டம்

ஆள் மாறாட்டம்
---------------------------------
தவறான ரிசெப்ஷன்   ஹாலிலே  நுழைஞ்சது   நம்ம தப்பில்லேங்க . ஒரே தெருவிலே ஏகப்பட்ட  ஹால் இருந்து , நம்ம நண்பன் பேர் மாதிரியே மணமகன் பேர் இருந்து, ரிசெப்ஷன் ஹாலிலே இருக்கிற பெண்கள் புன்னகையோடு நம்மை வரவேற்று பூங்கொத்தும்   கொடுத்தா நாம என்ன பண்ண முடியும் சொல்லுங்க.

உள்ளே நுழைஞ்சப் புறம்  பேரை சரி பார்க்கலாம்னு நினைச்சா அங்கே புன்னகையோட திரியற மக்கள் கூட்டத்தைப் பார்த்தப்புறம் அப்படிக் கேக்கறதே அவங்களுக்கு ஒரு அவமரியாதையா ஆயிடுமோன்னு   வேறே பயமாயிடுச்சு     .

பேசாம போயி கடைசி வரிசையிலே  உட்கார்ந்து மூக்குக் கண்ணாடியைத்   தேடினா காணோம். கண்ணாடி போட்டுப் பார்த்தாலே நம்ம கண்ணு பூஜ்யம். கண்ணாடி இல்லாம மைனஸ்ஸுக்குக்   கீழேகடைசி வரிசையிலே இருந்து பாத்தா பையன் மங்கலா, பேய் மாதிரித் தெரியிறான்.

இதுக்கு நடுவிலே நமக்கு ஏகப்பட்ட தொந்தரவுகள். பக்கத்து டைனிங் ஹாலிலே இருந்து அருமையான வாசம் வந்து தொந்தரவு செய்யுது . நம்மளை மாதிரியே அந்த வாசத்தாலே இழுக்கப்பட்ட பல பேரு அதை நோக்கி நடக்க ஆரம்பிக்க நம்ம கால்களும் அவர்கள்  கால்களைப் பின் தொடர்ந்தன.

டைனிங் ஹாலிலே அருமையான காட்சி. வித விதமான காய்கறிகள், வித விதமான சாப்பாட்டு வகைகள், ஐஸ் கிரீம்கள், சாக்கலேட்கள் , . எல்லாத்தையும் ஒரு பிடி பிடிச்சுட்டு  'கம கம' வாயோடும் 'கட முட' வயிறோடும் திரும்பி வந்து பரிசு கொடுக்கிற கியூவிலே நின்னோம்.

மேடைக்குப்   பக்கத்திலே போனதும் பையன் முகத்தை உத்துப் பார்க்கிறோம். இவன் நம்ம நண்பன் இல்லேமணமகன் முகத்திலே பூசி இருக்கிற முகப் பூச்சை எல்லாம் மானசீகமா துடைச்சிட்டு நுழைஞ்சு பாத்தாலும் இந்த முகம் நம்ம நண்பன் முகம் இல்லே .

இதுக்குள்ளே மக்கள் நம்மை பிடித்து தள்ளி மணமக்கள் முன்னே கொண்டு போய் நிறுத்திறாங்க . நம்ம முழிச்சுக்கிட்டு நிக்கறப்போ பொண்ணோட அப்பா போட்டார் பாருங்க ஒரு போடு . நம்மளை மணமக்கள் கிட்டே அறிமுகப் படுத்தி வைக்கிறாரு.

' இவரு நம்ம ஒண்ணு விட்ட  மச்சானோட தம்பியோடு தாத்தாவோட  அண்ணன் பேரன் ' ன்னுட்டாருஹால் மாறாட்டத்திலே நடந்த  ஆள் மாறாட்டத்தை மகிழ்ச்சியோடு ஏத்துக்கிட்டு மணமக்களுக்கு பரிசுப் பொருளைக் கொடுத்திட்டு,            அருமையான டின்னர் சாப்பிட்ட குற்ற உணர்ச்சியை ஏப்பம் விட்டு அழித்த படி , மண மேடையை விட்டு இறங்குகிறோம்.

-------------------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 29 மே, 2016

அக்கினி நட்சத்திரம்

அக்கினி நட்சத்திரம்
----------------------------------
ஆகாயம் பாட்டுக்கு
பேயுது காயுது

அக்கினி நட்சத்திரத்தால்
ஆவது ஒண்ணுமில்லே

ஓசோன் ஓட்டையாலே
உஷ்ண நிலை மாறியாச்சு

தாங்க முடியாம
வெந்து தீக்கணும் - இல்லை

தாவரம் வளர்த்து
வெப்பத்தைப் போக்கணும்
---------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

ஹால் மாறாட்டம்

ஹால் மாறாட்டம்
------------------------------------

https://soundcloud.com/knbharathi/0icgvklt8l1g

Click here to buy Nagendra Bharathi's poems

திங்கள், 23 மே, 2016

ஓலைக் குடிசை

ஓலைக் குடிசை
-----------------------------
'பாத்து உள்ளே வாப்பு    , நெலப் படி இடிக்கும்'

குனிந்து நுழைந்து ஓலைத் தடுக்கில்
உட்கார்ந்து   பார்க்க  மண்ணுச் சுவற்றில்
ஆணியோடு சேர்ந்து அசைந்து கொண்டிருக்கும்
பாட்டனும் பாட்டியும் சிரிக்கும் புகைப்படம்

பக்கத்தில் சாய்ந்து ஆடிக் கொண்டிருப்பது
சின்ன வயதில் செத்துப் போன பெரியப்பா படம்
டவுசர் சட்டையோடு போட்டோ மேல் குங்குமத்தோடு

'பாலு தீந்திடுச்சு  , வரக் காப்பி போடறேன் '
ஓலையைப் பத்த வச்சு அடுப்புக்குள் சொருக
காப்பி வாசமும்  புகை  வாசமும்
ஓலைக் குடிசைக்குள்  சேர்ந்து நிரம்பும்

உடைஞ்ச  மண்சட்டி  அங்கங்கே  கிடக்கும்
என்ன கதைகள் இருக்கோ அதுக்குள்ளே
'பட்டணத்துக்கு  கூப்பிட்டா வர மாட்டேங்கிறே '
'பாட்டன்   உசிரு இங்கே ஒட்டிக்கிட்டு இருக்குய்யா'

பாட்டியின் பதிலோடு திரும்பும் போது
நிலைப் படி தலையிலே  இடிக்கும்
குட்டி அனுப்புவது பாட்டனாக இருக்குமோ?
--------------------------------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

ஞாயிறு, 22 மே, 2016

அனாதைக் குழந்தை

அனாதைக் குழந்தை
--------------------------------------
அனாதைக் குழந்தையொன்று
அழுது கொண்டு இருக்கிறது

அள்ளி அணைப்பதற்கு
அம்மா இல்லை

அமுது ஊட்டுதற்கு
அம்மா இல்லை

தூக்கி விளையாட
அம்மா இல்லை

தூங்க வைப்பதற்கு
அம்மா இல்லை

அனாதைக் குழந்தையொன்று
அழுது கொண்டு இருக்கிறது
-------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

திருக்குறள் : மக்கட் பேறு

திருக்குறள் : மக்கட் பேறு
-------------------------------------------------
https://soundcloud.com/knbharathi/uis8ayguszy8

Click here to buy Nagendra Bharathi's poems

வெள்ளி, 20 மே, 2016

ஐம்பொறிப் பெண்கள்

ஐம்பொறிப் பெண்கள்
------------------------------------------
சாணி தேய்த்து
நிலம் மெழுகி

குடம் தூக்கி
நீர் மொண்டு

விறகு மூட்டி
நெருப்பில் சமைத்து

மழலை தூங்க
காற்று வீசி

குடும்பம் காத்து
விண் ஏகும்

ஐம்பொறிப் பெண்களை
அடையாளம் தெரிகிறதா
--------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

திருக்குறள் : வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள் : வாழ்க்கைத் துணை நலம் 
---------------------------------------------------------------------

https://soundcloud.com/knbharathi/2m8itp68eynn

Click here to buy Nagendra Bharathi's poems

புதன், 18 மே, 2016

திருக்குறள் - இல் வாழ்க்கை

திருக்குறள் - இல் வாழ்க்கை 
-------------------------------------------------

https://soundcloud.com/knbharathi/do0oiedpwgwc

Click here to buy Nagendra Bharathi's poems

உணர்வின் உயர்வு

உணர்வின் உயர்வு
-------------------------------
மற்றவரைப் பார்த்து தன்னை
மறந்து நின்றவர் உண்டு

ஏழைகளைப் பார்த்து
ஏளனம் செய்தவர் உண்டு

பணக்காரரைப்   பார்த்து
பொறாமைப் பட்டவர் உண்டு

தன்னையே பார்த்து
உணர்ந்து கொண்டவர் உண்டு

உணர்த்து கொண்டதால் வாழ்வில்
உயர்ந்து நின்றவர் உண்டு
--------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

மூச்சில் முதுமை

மூச்சில் முதுமை
--------------------------------
வேகமாய் நடந்தால்
வருகின்ற மூச்சிலும்

பெட்டியைத் தூக்கினால்
வருகின்ற மூச்சிலும்

படிகளில் ஏறினால்
வருகின்ற மூச்சிலும்

அதிகம் பேசினால்
வருகின்ற மூச்சிலும்

வருகின்ற முதுமையை
வரவேற்கும் மூச்சு
----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems 

திங்கள், 16 மே, 2016

அன்றாடங் காய்ச்சி

அன்றாடங்   காய்ச்சி
--------------------------------
இன்னிக்கிச் சாப்பாட்டுக்குக்
காசு வேணும்

இன்னிக்கிச் சாராயத்துக்குக்
காசு வேணும்

வறுமைக் கோட்டைத்
தாண்ட வச்சு

பெருமைப் பண்பைத்
தூண்டி விட்டா

என்னிக்கும் இலவசக்
காசு வேணாம்
------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வியாழன், 12 மே, 2016

பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம்
-------------------------------------
காய்ச்சலோ தலைவலியோ
கடுமையான   வியாதிகளோ

பாட்டி இருக்கும்வரை
படி தாண்டிப் போனதில்லை

அஞ்சறைப் பெட்டியிலே
அத்தனைக்கும் மருந்திருக்கும்

உணவே மருந்தாக
உட்கொண்ட காலமது

மருந்தே உணவாக
மாறிவிட்ட காலமிது
----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

திருக்குறள் : அறன் வலியுறுத்தல்

திருக்குறள் : அறன் வலியுறுத்தல்
-------------------------------------------------------
https://soundcloud.com/knbharathi/06s8uo98uabr

Click here to buy Nagendra Bharathi's poems

செவ்வாய், 10 மே, 2016

பூங்காப் பார்வை

பூங்காப் பார்வை
------------------------------
சிறுவர்கள் வேகமாக
ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்

பெரியவர்கள் மெதுவாக
நடந்துகொண்டு இருக்கிறார்கள்

மரங்கள் மட்டும்
அசையாமல் நின்று கொண்டு இருக்கின்றன

காற்றுக் காதலர்கள்
வந்தது தான் தாமதம்

தலையை விரித்துக் கொண்டு
என்னமாய்  ஆடுகின்றன
----------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

திருக்குறள் - நீத்தார் பெருமை

திருக்குறள் - நீத்தார் பெருமை
------------------------------------------------------
https://soundcloud.com/knbharathi/xdpifs3jol4b

Click here to buy Nagendra Bharathi's poems 

திங்கள், 2 மே, 2016

குழாய்ச் சப்தம்

குழாய்ச் சப்தம்
-----------------------------
சுட்டெரிக்கும் வெயிலிலே
கொப்பளிக்கும் கால்களோடு

இடுப்பிலும் தலையிலும்
ஏராளக் குடங்களோடு

நடையாய் நடந்துபோய்
ஊற்றுக்குக்   காத்திருப்பார்

தொலைக் காட்சிப் பெட்டியிலே
பார்த்துக் கலங்குகின்ற

வீட்டுக்குள் நீர்ச்சப்தம்
மூடாத குழாய் வழியே
---------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

திருக்குறள் - வான் சிறப்பு

திருக்குறள் -  வான் சிறப்பு
------------------------------------------------
https://soundcloud.com/knbharathi/ef0oh108l2gh

Click here to buy Nagendra Bharathi's poems