வியாழன், 9 ஜூலை, 2020

நிலமும் நீரும் - கவிதை

நிலமும் நீரும் - கவிதை 
-----------------------------------------
காட்டிலும் மலையிலும் 
ஓடி விளையாடியும் 
ஒளிந்து விளையாடியும் 
விலங்குகளும் பறவைகளும் 

கடலிலும் ஆற்றிலும் 
கூடி விளையாடியும் 
கொஞ்சி விளையாடியும் 
மீன்களும் தாவரங்களும் 

நிலமும் நீரும் 
தனதென்று நினைத்த 
மனிதன் மட்டும் 
வீட்டினில் தனியே 
--------------------------------------நாகேந்திரபாரதி 

வெள்ளி, 3 ஜூலை, 2020

தனிமையில் இனிமை - கவிதை

தனிமையில் இனிமை - கவிதை 
--------------------------------------------------
இனித்திருக்கும்  நினைவுகளைக் 
கொடுத்து விட்டுச் சென்றதனால் 

அணைத்திருக்கும்  இன்பத்தை 
அனுபவித்துப் பார்த்ததினால் 

பிணைத்திருக்கும் அருகாமை 
பிரித்து விட்டுச் சென்றாலும் 

துனித்திருக்கும்  கண்ணீரைத் 
துடைத்து விட்டுப் பழகியதால் 

தனித்திருந்தும்  கவலையில்லை 
தவிப்பிருந்தும் துன்பமில்லை 
-------------------------------------------------------நாகேந்திர  பாரதி