வியாழன், 2 ஏப்ரல், 2020

ஐம்பூத அமைதி -கவிதை

ஐம்பூத அமைதி -கவிதை
-----------------------------------------
மிதி படாமல்
ஓய்ந்திருக்கும் நிலம்

கழிவு படாமல்
தெளிந்திருக்கும் நீர்

மாசு படாமல்
வீசியிருக்கும் காற்று

தூசி படாமல்
எழுந்திருக்கும் நெருப்பு

தீமை படாமல்
அமைந்திருக்கும் விண்

ஐம்பூத அமைதி
காத்திருக்கும் உலகை
----------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book