சனி, 30 ஏப்ரல், 2016

திருக்குறள் - கடவுள் வாழ்த்து

திருக்குறள் - கடவுள் வாழ்த்து
----------------------------------------------------
https://soundcloud.com/knbharathi/rnovm7kik4uu

Click here to buy Nagendra Bharathi's poems

சுற்றுப் பிரகாரம்

சுற்றுப் பிரகாரம்
------------------------------
வெளியூர்     பக்தர்களின்
விருந்துக் கூடமா

உள்ளூர் முதியோரின்
உணர்ச்சிக் கூட்டமா  

வீட்டுப் பிரச்னைகளை
விவாதிக்கும் இடமா

வேறோர் நினைவின்றி
தியானிக்கும் திண்ணையா

சுமை தாங்கும் சுகத்தில்
சுற்றுப் பிரகாரம்
------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

கண்மாய்க் கதை

கண்மாய்க் கதை
-------------------------------
வழுக்கி விட்ட
கண்மாய்க் கரை

காஞ்சு வெடிச்சு
காலைக் குத்தி விடும்

கரையைச் சுற்றிப்
போன பாதை

குறுக்கே தடத்தோடு
வண்டிப் பாதை ஆகும்

காலத்துக் கேற்றபடி
மாறுகின்ற கண்மாய்க் கதை
--------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வியாழன், 28 ஏப்ரல், 2016

பல்லுப் போன தாத்தா

பல்லுப் போன தாத்தா
---------------------------------------
எலும்புக் கறியைக்
கடிச்சுச் சாப்பிட்ட பல்லு

சிரிச்சுப் பாட்டியை
மயக்கிப் போட்ட பல்லு

கோபப் பேச்சில்
நாக்கைக் கடிச்ச பல்லு

குடும்ப விழாவில்
குஷியைக் காமிச்ச  பல்லு

எல்லாம் உதிர்ந்து
பல்லுப் போன தாத்தா
----------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

பல்லு முளைத்த பாப்பா

பல்லு முளைத்த பாப்பா
-------------------------------------
விளையாட்டுப் பொம்மையை
வேகமாய்க் கடிப்பதும்

விரலை வைத்தால்
மெதுவாகக் கடிப்பதும்

இட்லித் துண்டை
இதமாகக் கடிப்பதும்

எப்படித் தெரிந்தது
இப்படிக் கடிப்பது

பல்லு முளைத்த
பச்சிளங் குழந்தைக்கு
-------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

சனி, 23 ஏப்ரல், 2016

பதினாலாம் தேதி

பதினாலாம் தேதி
-----------------------------
ஒவ்வொரு மாதமும்
காலண்டரில்
ஒரு முறை மட்டும்
வந்து போகும்
பதினாலாம் தேதி

ஒவ்வொரு நாளும்
விளையாட்டில்
பல முறை
வந்து போகும்
குழந்தைக்கு

பதினாலாம் தேதி
தனது பிறந்த நாள் என்று
தெரிந்து கொண்ட பின்பு
----------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

ஆர்வக் கோளாறு

ஆர்வக் கோளாறு
---------------------------------
செங்கல்பட்டு நகைக்கடைக்குப்
போகலாமா   என்றாள்

அடுத்த தெருவிலும்
அதே நகைக்கடை

காஞ்சீபுரம் மாலுக்குப்
போகலாமா என்றாள்

பக்கத்துத் தெருவிலும்
அதே  மால்

அருகில் இருப்பதிலே
ஆர்வம் இருப்பதில்லே
-----------------------------------------------நாகேந்திர பாரதி  
Click here to buy Nagendra Bharathi's poems

வியாழன், 21 ஏப்ரல், 2016

சேவையின் தேவை

சேவையின் தேவை
---------------------------
சேவை செய்வதில்
பெருமை வேண்டாம்

சேவை செய்வதில்
திறமை வேண்டாம்

சேவை செய்வதில்
கடமை வேண்டும்

சேவை செய்வதில்
எளிமை வேண்டும்

எளிமையும் கடமையும்
சேவையின் தேவை
----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

புதன், 20 ஏப்ரல், 2016

கதை போன கதை

கதை போன கதை
-----------------------------------
அந்தக் காலப் பெரியவர்கட்கு
அறுபதிலே முதுமை

பேரனோடும் பேத்தியோடும்
வீட்டுக்குள்ளே கதை

இந்தக் காலப் பெரியவர்கட்கு
எண்பதிலும் இளமை  

நண்பரோடும் உறவினரோடும்
வெளியிலேதான் கதை

தாத்தா பாட்டி கதைகள் எல்லாம்
நேத்தே போன கதை
---------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems 

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

காட்சிப் பிழை

காட்சிப் பிழை
--------------------------
சன்னல் வழியே
தெருவைப் பார்த்தால்

சன்னல் அளவே
தெரியும் தெரு

தெருவில் இருந்து
சன்னலைப் பார்த்தால்

சன்னல் அளவே
தெரியும் வீடு

கட்டம் கட்டிப்
பார்க்கும் எல்லாம்

காட்சிப் பிழைக்குச்  
சாட்சி ஆகும்
-----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems


திங்கள், 18 ஏப்ரல், 2016

தரையின் தவிப்பு

தரையின் தவிப்பு
-------------------------------
அந்தப் பொட்டலின் மேல் தான்
ஒரு வீடு இருந்தது

முற்றம் இருந்தது
அடுப்படி இருந்தது

தட்டு முட்டுச் சாமான்கள்
ஏராளம் இருந்தன

பிறந்தும் வளர்ந்தும்
இருந்தவர்கள் பல பேர்

தரை மட்டும் கிடக்கிறது
தனியாகத் தவித்தபடி
--------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

மழலை மொழி

மழலை மொழி
---------------------------
எல்லா மொழிகட்கும்
அடிப்படை மழலை மொழி

அழுவதும் சிரிப்பதும்
அன்புடன் அணைப்பதும்

ஆடுவதும் ஓடுவதும்
அங்குமிங்கும் தேடுவதும்

முறைப்பதும் முனகுவதும்
முத்தமிட்டுக் கொஞ்சுவதும்

எல்லாக் குழந்தைகட்கும்
இயல்பான உடல் மொழி
-------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

அமைதிப் பேச்சு

அமைதிப் பேச்சு
------------------------------
சொல்லுவதும் செய்வதும்
அவரவர் சுகத்திற்காய்

அள்ளுவதும் தள்ளுவதும்
மற்றவர் மனத்திற்காய்

எல்லாப் பேச்சுக்கும்
எதிர்ப் பேச்சு தேவையில்லை

எதிர்ப் பேச்சு பெரும்பாலும்
எதிரிப் பேச்சாகும்

ஆராய்ந்த மனத்திற்கு
அமைதியே பேச்சாகும்
-----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வியாழன், 7 ஏப்ரல், 2016

சின்னச் சின்ன எண்ணம்

சின்னச் சின்ன எண்ணம்
--------------------------------------------
எண்ணங்கள் பெரிதாக
இருந்தாலே குழப்பம்தான்

சின்னஞ்சிறு  எண்ணங்களில்
ஜெயிக்கின்ற உறுதி உண்டு

அடிமேல் அடி எடுத்து
நடந்தாலே வெற்றி உண்டு

வெற்றியின் மகிழ்ச்சியிலே
ஆர்வத்தின் அடுத்த அடி

சின்ன விதை செடியாகி
வளர்ந்து தான் மரமாகும்
---------------------------------நாகேந்திரபாரதி
 Click here to buy Nagendra Bharathi's poems