பகலும் இரவும் - அறிமுகப் பேச்சு
-------------------------------------------------------
பகலும் இரவும் - அறிமுகப் பேச்சு
-------------------------------------------------------
புத்தக அனுபவம் -குவிகம் நிகழ்வு
----------------------------------------------------------
கவிதை மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு
------------------------------------------------------------------------------
இலக்கியத்தின் இலக்கணம் - மகிழ்வுப் பேச்சு
---------------------------------------------------------------------------
பூனையும் புலியும் - கவிதை
————————---------------------
தொட்டாலும் பட்டாலும்
துடைக்கின்ற கொரோனாக் காலத்தில்
பூனையைப் பார்த்தாலும்
புலியாகத் தெரிகிறது
உள்ளுக்குள் படிந்து விட்ட
அழுக்கான பயத்தால்
'பாய்ந்து விடுமோ
பிறாண்டி விடுமோ'
புலியும் கூட
பூனையின் குடும்பம் தானே
எப்போதோ படித்தது
இப்போது ஞாபகம் வரும்
மடியில் கிடந்து
கொஞ்சிய பூனை
உற்றுப் பார்த்து விட்டு
ஒதுங்கிப் போகும்
கொரோனா முடிந்து
கூப்பிடும் போது
பூனையாய் வருமா
புலியாய் வருமா
—————————— நாகேந்திர பாரதி
குறிப்பு : நண்பர் திரு. அழகிய சிங்கரின் ' நவீன விருட்சம்' இதழின் 'வானலை கவிஞர் சந்திப்பில்' ஆகஸ்ட் 14 அன்று வாசித்த கவிதை