சனி, 29 பிப்ரவரி, 2020

தேர்வு நேரம் -கவிதை

தேர்வு நேரம் -கவிதை
------------------------------------
படித்தது போலவும் இருக்கும் - பாடம்
படிக்காதது போலவும்   இருக்கும்

புரிந்தது போலவும் இருக்கும் - கேள்வி
புரியாதது போலவும் இருக்கும்

தெரிந்தது போலவும் இருக்கும் - பதில்
தெரியாதது போலவும் இருக்கும்

எழுதியது போலவும் இருக்கும்  - எல்லாம்
எழுதாதது போலவும் இருக்கும்

முடிந்தது போலவும் இருக்கும் - தேர்வு
முடியாதது போலவும் இருக்கும்
--------------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

வியாழன், 27 பிப்ரவரி, 2020

இது போதும் இப்போது - கவிதை

இது போதும் இப்போது - கவிதை
-----------------------------------------------------
பார்த்ததும்  சிரித்ததும்
பழகியதும் அப்போது
நினைப்பதும் மகிழ்வதும்
நெகிழ்வதும் இப்போது
இது போதும் இப்போது

தொட்டதும் தொடர்ந்ததும்
துடித்ததும் அப்போது
விட்டதும் விலகுவதும்
விரும்புவதும் இப்போது
இது போதும் இப்போது
----------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book


புதன், 22 ஜனவரி, 2020

புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சி
------------------------------------
கண்காட்சி என்று பெயர்
வைத்து விட்டதால் தானோ

கண்களால் பார்த்து விட்டு
வாங்காமல் போகிறார்கள்

விற்பனை விழா என்று பெயர்
வைத்து விட்டால் மட்டும்

வேக வேகமாய்ப் புத்தகங்கள்
வாங்கி விடுவார்களா என்ன

இலவசமாய்க் கைபேசியில்
இறக்கி வைத்துக் கொண்டு
படிக்காமல் இருப்பவர்கள்
-------------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

செவ்வாய், 21 ஜனவரி, 2020

பெண் உரிமை - கவிதை

பெண் உரிமை - கவிதை
----------------------------------------
எழுத்திலும் பேச்சிலும்
பெண் உரிமை என்பார்

எண்ணத்திலும் செயலிலும்
பெண் உடைமை என்பார்

கொடுத்துப் பெறுவதல்ல
பெண் உரிமை என்றும்

எடுத்துக் கொள்வதுதான்
பெண் உரிமை என்றும்

உண்மையை உணர்ந்தாலே
உலகமே உய்யும்
------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book