செவ்வாய், 9 ஜூன், 2020

நெஞ்சுக்கு நிம்மதி - கவிதை

நெஞ்சுக்கு நிம்மதி - கவிதை
-------------------------------------------------
நேரத்தைக்  கடந்தால்
எல்லாமே இப்போதே

தூரத்தைக் கடந்தால்
எல்லாமே இங்கேயே

பாரத்தைக் கடந்தால்
எல்லாமே இலேசாக

நேரமும் தூரமும்
பாரமும் நினைப்பே 

நினைப்பினைக்  கடந்தால்
நெஞ்சுக்கு நிம்மதி
---------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

சனி, 6 ஜூன், 2020

ஆறாம் அறிவு - கவிதை

ஆறாம் அறிவு - கவிதை
-----------------------------------------
பிறப்பு என்பது
சக்தியில் கலப்பது

இறப்பு என்பது
சிவத்தில் கலப்பது

பிறப்பும் இறப்பும்
சக்தியும் சிவமும்

இதற்கு இடையில்
எத்தனை பிறவி

பிறவியை அறுப்பதே
ஆறாம் அறிவு
--------------------------------நாகேந்திர  பாரதி
Humor in Business - Poetry Book

வெள்ளி, 5 ஜூன், 2020

இன்பமே எந்நாளும் - கவிதை

இன்பமே எந்நாளும் - கவிதை
----------------------------------------------
காயமா  வீரமா
காவலர் கடமையில்

தூய்மையா அழுக்கா
துப்புரவுத் தொழிலில்

வாய்ப்பா வருத்தமா
வேலையை இழந்தால்

வாழ்க்கையா கோபமா
பெற்றோர் வார்த்தையில்

பார்க்கும் பார்வையில்
நன்மையே தெரிந்தால்

எண்ணும் எண்ணத்தில்
இன்பமே இருந்தால்

நடக்கும் எல்லாமே
நன்மையாய் நடக்கும்
---------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

வியாழன், 4 ஜூன், 2020

மர்ம மனங்கள் - கவிதை

மர்ம மனங்கள் - கவிதை
--------------------------------------
பார்த்து வளர்ந்தாலும்
பழகித் திரிந்தாலும்

சேர்ந்து நடந்தாலும்
சிரித்து இருந்தாலும்

கூடிக் களித்தாலும்
குலவி மகிழ்ந்தாலும்

உறவாய் இருந்தாலும்
நட்பாய் இருந்தாலும்

ஒருவர் மனமே
மற்றவர்க்கு மர்மமே
---------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book