க நா சு அவர்கள் சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு
-----------
நன்றி அழகியசிங்கர்
. வணக்கம் நண்பர்களே .
க நா சு அவர்களின்
'தகப்பனும் பிள்ளையும்' சிறுகதையைப் படித்து முடித்தவுடன் எனக்குத் தோன்றியது இந்தப்
பழமொழிதான் .
'பெத்த மனம்
பித்து , பிள்ளை மனம் கல்லு' .
இதன் விளக்கமே இந்தக் கதையாக அமைந்திருக்கிறது ஒரு தந்தையின் பேச்சாலும்,
மகனின் பேச்சாலும் .தந்தையின் பேச்சுதான் தொண்ணூறு சதவிகிதம் கதையில் . எதிரில் இருப்பவர் சொல்லும் வார்த்தைகளை எழுதாமலேயே , அதற்கு
இவர் பதில் சொல்லுவதாக சொல்லும் வார்த்தைகளிலேயே
, எதிரில் இருப்பவர் என்ன சொல்லி இருப்பார் என்று நம்மை ஊகிக்க வைத்து தனது எழுத்தின் புதிய பாணியில் வெற்றி கண்டிருக்கிறாரார் ஆசிரியர்
.
உதாரணத்திற்கு
ஒன்று
' நல்ல பையன்
என்கிறீர்களா, நல்ல பையன் தான், யார் இல்லை என்று சொன்னது '
இதுபோல் தொடர்ந்து
எதிர் நபர் சொல்வதை, தந்தையின் வார்த்தையிலே காட்டி இருப்பது ,இருவர் உரையாடலை
நாம் கேட்பது போல் ஒரு பிரமையை உண்டாக்கும் நல்ல சிறுகதை யுக்தி .
மகன் மேல் தான்
கொண்ட பாசத்தையும் அவனுக்காகத் தான் பட்ட , படுகின்ற பாடுகளையும் அந்தத் தந்தையின் உணர்ச்சிகரமான வார்த்தைகளால் கொட்டித்
தீர்த்து இருக்கிறார் க நா சு அவர்கள்.
'ஆமாம் சார்.
எனக்கு ஒரே ஒரு பிள்ளைதான். வேறு குழந்தை குட்டி கிடையாது .உற்றார் உறவினர் கூடக் கிடையாது..
இவனை நம்பித்தான் உயிர் வைத்திருக்கிறேன் ' என்று ஆரம்பிக்கும் முதல் வரியிலேயே , நம் இரக்கத்தைச்
சம்பாதித்து விடுகிறார் இந்த அப்பா.
தொடர்ந்து வரும்
வரிகளில் அந்த அப்பா மேல் நமக்கு ஏற்படும்
பரிதாபம் கூடிக் கொண்டே போகிறது .
அந்தக்காலத்தில்
நாப்பது ரூபாய் மாசச் சம்பளம் வாங்கும் ஏழை
குமாஸ்தா வான அவர் , தனது தகுதிக்கு மீறி கடன் வாங்கி பணம் கட்டி
பையனை ஹானர்ஸ் படிப்பு படிக்க வைத்துக் கொண்டு இருப்பது ,
பையன் அப்பா
பேச்சையோ அம்மா பேச்சையோ மதிக்காமல் நடந்து
கொண்டு இருப்பது .சட்டை ,பைஜாமா ,ஹோட்டல், புஸ்தகம் என்று செலவு செய்து கொண்டு இருப்பது .
அவனைப் பற்றி
எவ்வளவோ குற்றம் சொன்னாலும் பையன் நன்றாகப் படிக்கிறான் என்று ஆசிரியர்கள் மூலம் அறிந்து
பெருமைப்பட்டுக் கொள்வது .
அவனுக்கு நல்ல
இடத்தில் கல்யாணம் செய்ய ஆசைப்படுவது. பணக்கார வீட்டில் கொடுத்தால், பையன் தங்களை விட்டுப்
போய் விடுவானே என்று பயப்படுவது .ஆனால் தெய்வசங்கல்பம் அப்படிதான் என்று இருந்தால்
நடக்கட்டும் , என்று அவன் சந்தோசம் ஒன்றையே விரும்புவது .
அவன், மேல் படிப்புக்கு அமெரிக்கா போக ஆசைப்படுவதையும்
சொல்லி விட்டு, போய் விடுவானே என்று வருத்தப்பட்டாலும் , அவன் விருப்பம் என்று நினைப்பது
.
இதற்கு நடுவில் அவனுக்கு அவ்வப்போது உடல் நலம் சரியில்லாமல்
போவதைப் பற்றி வருத்தப்படுவது. அவர்கள் ஏதாவது சொன்னால், தற்கொலை செய்து விடுவேன் என்று
அவர்களை அவன் பயமுறுத்துவது என்று அவனைப் பற்றி
நண்பரிடம் புகார்ப் பட்டியல் வாசித்தாலும் , ' நான் பேசியதை எல்லாம் அவனிடம் சொல்லி விடாதீர்கள்' என்று பயந்து கேட்டுக்கொள்வது
என்று கதை முழுக்க
அந்த முதிய தந்தையின் பரிதாபமும் , பாசமும் நம்மைத் தாக்கும்படி கதையைக் கொண்டு செல்கிறார்
ஆசிரியர்.
இறுதியில் அந்த
நண்பரிடம். ‘உங்களிடம் ஐந்து ரூபாய் கடன் வாங்கியிருந்
தானாமே, வீட்டு சாமானை விற்று கொடுத்தேன்,
கொண்டு வந்து கொடுத்தானா ' என்று கேட்க , அவர் ‘இல்லை’ என்றதும் தந்தைக்கு அதிர்ச்சி.
இருந்தாலும்
அதைக் காட்டிக் கொள்ளாமல் ' வருவான், வருவான். சீக்கிரம் ' என்று அவருக்கு சமாதானம்
சொல்லிவிட்டு , ‘நான் பேசினதை அவனிடம் சொல்லிடாதீங்க ' என்று அவரிடம் கெஞ்சிக் கேட்டு விடை பெறுகிறார் அப்பா.
அப்பாவின் மேல் ஏற்பட்ட இரக்கத்தின் ஆழத்தில் நாம் மூழ்கிக்
கிடக்கும் போது, அந்தக் குழியைத் தோண்டி இன்னும் துயரத்தில் ஆழ்த்த வருகிறான் அவர்
மகன் , அந்த நண்பரிடம் இப்போது கொடுமையான வார்த்தைகளோடு .
‘நேத்தே வரணும்னு
நினைச்சேன் சார்.’ என்று ஆரம்பித்து அந்த ஐந்து
ரூபாயைக் கொடுத்து விட்டு அவன் சொல்லும் வார்த்தை
'என்ன எங்க
அப்பா வந்தாரா, .அவர் பாட்டுக்கு தத்துப் பித்தென்று அசட்டுப் பிசட்டென்று செமி மாதிரி
பேத்திக்கொண்டே இருப்பார் ‘.
பாசக்கார அப்பாவை
' செமி ' என்கிறான். தொடர்ந்து வருகிறது இன்னும் மோசமான வார்த்தைகள்.
'எனக்கு என்னவோ
இந்த ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களை எல்லாம் ...' என்று சொல்ல வந்தவன் சட்டென்று நிறுத்துகிறான்.
முன்னால் இருப்பவரும் அப்பாவின் நண்பரும் ,ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர் என்பதை உணர்ந்ததால் இருக்கலாம் .
அவன் சொல்ல
வந்தது , அவருக்கும் புரிந்திருக்கும் , நமக்கும் புரிந்தது. அவன் வாழ வேண்டும், வளர
வேண்டும் என்று தன் இன்பங்களை எல்லாம் துறந்து அவன் கேட்ட படிப்பு, அயல்நாட்டுப் பயணம்,
அவனுக்குப் பிடித்த பெண் பணக்காரியாய் இருந்தாலும், என்றெல்லாம் நினைத்து , அவன் மேல்
பாசத்தைக் கொட்டி வளர்த்து , வளர்த்துக் கொண்டிருக்கும் அவன் தந்தையைப் பற்றி அவன் சொல்ல
நினைத்த இந்த வார்த்தை,
'ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களை எல்லாம் சாகடிக்க
வேண்டியது தான்' .
இவனை வாழ வைத்துக்
கொண்டிருப்பவரைப் பார்த்து 'சாகடிக்க வேண்டும் ' என்று நினைக்கும் எவ்வளவு கொடூரமான
மனம் இந்தப் பிள்ளைக்கு என்று துடிக்க வைக்கிறது நம்மை.
அந்த வரிகளை
முடிக்காமல் யாரோ ஒருவர் காத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி விடை பெற்று செல்கிறான். இங்கும் ஒரு முரண் . ‘தன்னோடு பேச ஆள் இல்லை’ என்று வந்தவுடன்
சொன்னவன், இப்போது ஒருவர் காத்துக் கொண்டு இருப்பதாகச் சொல்லி விடை பெறுவதில், அவன்
பொய் முகத்தையும், பாசமில்லா பேய் முகத்தையும் காட்டி முடிக்கிறார் ஆசிரியர்.
இப்படியும்
சில இடங்களில் தகப்பனும் பிள்ளையும் இருக்கத்தான் செய்கிறார்கள் ,சில இடங்களில்
. அதற்கு மாறாக பாசமுள்ள அப்பா மட்டும் அல்ல, பாசமுள்ள பிள்ளைகள் பலரையும், நம் வாழ்க்கையில்
பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ,
இருந்தாலும்,
கதை என்ற முறையில் ஒரு குறிப்பிட்ட தகப்பனையும்
பிள்ளையையும் எடுத்துக்கொண்டு இதை உணர்ச்சி கரமாக எழுதியுள்ள மூத்த எழுத்தாளர் க நா
சு அவர்களுக்கு வணக்கத்தோடும் , அழகியசிங்கர் அவர்களுக்கு நன்றியோடும் என் உரையை முடிக்கிறேன். நன்றி வணக்கம்.
------ நாகேந்திர
பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English