பேசும் வீடு - சிறுகதை
---------------
' போட்டோ பேசுதுன்னு பார்க்கிறியா. பூட்டிட்டு எடுத்தியே ,அப்பவே என்னோட நினைவுகளோடே போனுக்குள்ளே புகுந்திட்டேன். '
'அப்பப்போ என்னைப் பார்த்து கண்ணீர் விடுறியே , நான் என்ன சொல்ல முடியும். நானும் உன்னை மாதிரியே தான். உள்ளுக்குள்ளே அழுதுக்கிட்டு இருக்கேன் .
' போன மாதம் போயிப் பார்த்தியே, நம்ம இருந்த இடத்தை. இப்போ மண்தரை . ஆனா நான் உன் கூடத்தான். நம்ம பழைய நினைவுகள் கூடத்தான். நீ பெயிண்டைக் கிறுக்கின என் சுவர் . நீ தொங்கிக்கிட்டே தள்ளுன கதவு . நீ உட்காருவியே , வெளியே கெடக்கே, அந்த ஸ்டூல், நீ போடுற பிஸ்கேட்டுக்காகக் காத்துக் கிடந்த தெரு நாய் . '
'உன் வேலை உத்தரவை வாங்கிய அந்தத் தபால் பெட்டி. கிராமம் விட்டு குடும்பத்தோடு உங்க அப்பா கிளம்ப முடிவெடுத்து வீட்டை விற்ற நேரம், சாட்சியாக கதவில் தொங்கும் பூட்டு. அழியாத நினைவுகளாக இங்கே '
'இன்னும் வீட்டின் உள்ளே இருக்கிற உன் நினைவுகளில் ஊஞ்சல் ஆடும் அறைகள், பலகார வாசம், படுத்திருந்த பாய் , கொஞ்சிய கோழிக் குஞ்சுகள் , கல் கட்டி விட்ட புடலை இன்னும் எல்லாமே எனக்குள்ளும் இருக்கத்தான் செய்கின்றன . இந்த வெளித்தோற்றப் புகைப்படத்தில் தெரியாவிட்டாலும் '
'அழாதே . நான் இருக்கேன். நினைவுகளில் இளைப்பாற. அதோ உன் அப்பா கூப்பிடுறாரு . போடா குமாரு . .நான் காத்திருப்பேன் உன் போனில் '
---------------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக