சனி, 29 ஆகஸ்ட், 2015

ஒரு கவிஞனின் கதை - நகைச்சுவைப் பேச்சு

ஒரு கவிஞனின் கதை  - நகைச்சுவைப் பேச்சு
----------------------------------------------------------------------------
https://soundcloud.com/knbharathi/ykdfvoytapbj


Nagendra Bharathi's poems 

இயலாமை ஏக்கம்

இயலாமை ஏக்கம்
----------------------------
அப்பத்தா ஏக்கம்
அப்போது புரியவில்லை

அலட்சியப் படுத்திவிட்டுப்
போனதாய் ஞாபகம்

இயலாமை ஏக்கம்
எழும்பும் போதுதான்

எண்பது  வயதில்
இப்போது புரிகிறது

அமைதிப் படுத்துவது
அன்பு வார்த்தைதான்
-----------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நினைவுச் சங்கிலி

நினைவுச் சங்கிலி
-------------------------------
பேரனைப் பார்க்கும்போது
தாத்தா நினைப்பு வரும்

பேத்தியைப் பார்க்கும்போது
பாட்டி நினைப்பு வரும்

மகனைப் பாரக்கும்போது
அப்பா நினைப்பு வரும்

மகளைப் பார்க்கும்போது
அம்மா நினைப்பு வரும்

அவரவர் நிலைமைக்கேற்ப
அவரவர் நினைப்பு வரும்
-------------------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

மேனேஜர் படும் பாடு -நகைச்சுவைப் பேச்சு

மேனேஜர் படும் பாடு  -நகைச்சுவைப் பேச்சு
------------------------------------------------------------------------
https://soundcloud.com/knbharathi/h1w35l7liylv


Nagendra Bharathi's poems 

புதன், 26 ஆகஸ்ட், 2015

கண்ணீரின் கதை - நகைச்சுவைப் பேச்சு

கண்ணீரின்  கதை - நகைச்சுவைப் பேச்சு
--------------------------------------------------------------------

https://soundcloud.com/knbharathi/of5uzwdacj1k


Nagendra Bharathi's poems

புதைபொருள் ஆராய்ச்சி

புதைபொருள் ஆராய்ச்சி
--------------------------------------
நமது பள்ளிப்பருவ நினைவுகள்
எத்தனை ஆச்சரியம்

நமது  மூதாதையர் இளமைக் காலம்
அதை விட ஆச்சர்யம்

நாம் பிறந்து வளர்ந்த இடங்கள்
எத்தனை மாற்றம்

நமது மூதாதையர் பிறப்பிடங்கள்
அதை விட மாற்றம்

புதை பொருள் ஆராய்ச்சியில்
புலப்படும் தமிழகம்
------------------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

பட்டப் பெயர்

பட்டப் பெயர்
----------------------
வயிறு வீக்கத்துக்கு
வைத்தியத்தில்  தெரிந்தது

மண்ணு தின்னும் பழக்கம்
மரகதத்திற்கு உண்டென்று  

பழக்கத்தை மாற்றினாலும்
பட்டப் பெயர் மாறவில்லை

வளர்ந்து வளமாகி
முதலாளி ஆகி விட்டான்

மண்ணு வண்டி வைத்திருக்கும்
மண்ணு தின்னி மரகதம்
--------------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems 

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

வெள்ளித் திரை

வெள்ளித் திரை
--------------------------
'மீதியை வெள்ளித்திரையில்
காண்க' பாட்டுப் புத்தகம்

'இன்று இப்படம்
கடைசி' வால் போஸ்டர்

'படம் போடப் போவதைச்
சொல்லும் ' கடைசி ரெக்கார்ட்

'குறுகலான வரிசையில் நின்று
வாங்கிய ' வேர்வை டிக்கெட்

'மூன்று இடை வேளைகளில்
சாப்பிட்ட ' முறுக்கு, மிட்டாய்

'காம்ப்ளெக்ஸ் தியேட்டர்கள் வந்தும்
கண்ணுக்குள் ' டூரிங் டாக்கீஸ்
------------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

சனி, 22 ஆகஸ்ட், 2015

கண்மாய்க் கதை

கண்மாய்க் கதை
----------------------------
கரைகளுக்கு நடுவிருக்கும்
தண்ணீரா கண்மாய்

ஊர்ப்புரணிக் கதைகளைத்
துவைப்பதுவும்  கண்மாய்

காதலர்கள் கண்களினால்
கலக்குவதும்   கண்மாய்

சாதிமத பேதங்கள்
முழுகுவதும் கண்மாய்

கோடையிலே வற்றிவிட்டால்
வண்டிப் பாதை கண்மாய்
------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems 

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

மக்கட் பேறு

மக்கட் பேறு
-------------------------
கருவுக்குள் இருந்த
கவசத்தை உடைத்து

உருவத்தைக் காட்டி
உலகுக்கு வந்தான்

பொறுமைக்குத் தாயும்
உரிமைக்குத் தந்தையும்

பெருமித்துப் பார்க்க
பிஞ்சுடல் வந்தான்

அறிவுக்கும் அன்புக்கும்
அடைக்கலம் தந்தான்
----------------------------நாகேந்திர பாரதி
 Nagendra Bharathi's poems

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

கண்ணீரின் வார்த்தைகள்

கண்ணீரின் வார்த்தைகள்
---------------------------------------
வருத்தமாக இருந்தாலும்
கண்ணீர் வருகிறது

மகிழ்ச்சியாக இருந்தாலும்
கண்ணீர் வருகிறது

பெருமையாக உணர்ந்தாலும்
கண்ணீர் வருகிறது

சிறுமையாக உணர்ந்தாலும்
கண்ணீர் வருகிறது

கண்ணீரின் வார்த்தைகளில்
எத்தனை உணர்ச்சிகள்
-----------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems 

சனி, 15 ஆகஸ்ட், 2015

பாடச் சுமை - நகைச்சுவைக் கட்டுரை

பாடச் சுமை - நகைச்சுவைக் கட்டுரை 

இந்தப் புள்ளைங்கல்லாம் புத்தகத்தை மூட்டை மூட்டையா தோளிலே சுமந்துக்கிட்டு போறதைப் பாக்கிறப்பெல்லாம் எனக்கு என்னோட பள்ளிக்கூட ஞாபகம்தான் வர்றது.

எத்தனை பாடம், தமிழ்ஆங்கிலம் , ஹிந்தி , கணக்கு, இயற்பியல், வேதியியல் , தாவரயியல் , விலங்கியல் , பூகோளம், சரித்திரம், அப்பப்பா .

தமிழ். தாய் மொழி . எளிதா இருக்கணுமா இல்லையா . திருக்குறள் தவிர மத்த இலக்கியம் எல்லாம் கஷ்டமா இருந்துச்சு . ' தேறா மன்னா செப்புவது உடையேல்'   அந்த மன்னன் எந்த வகுப்பிலே தேறலை. அதுக்காக எதுக்கு செப்பை எல்லாம் உடைக்கணும் . அப்புறம் வாத்தியார் வந்து அந்தக் கால தமிழை இந்தக் காலத் தமிழ்லே மொழி பெயர்த்துச் சொன்னார் .

ஆங்கிலம் - இந்த ப்ரீபொசிஷன் இலக்கணத்திலே இருக்கே. அது புரியவே இல்லை. ஏங்க ப்ரீபொசிஷன் ன்னா என்ன அர்த்தம். முன்னாலே வர்ற துன்னு தானே அர்த்தம். அப்புறம் ஏன் அது நடுவிலே எல்லாம் வந்து தொலையறது .

ஹிந்தி - தமிழ்லே ஒரு '' வை வச்சுக்கிட்டே நாம்  கஷ்டப்படுறோம். அங்கே நாலு '' வாம் . நாலு '' வாம்    . இன்னும் ரெம்ப. சொல்லிச் சொல்லி நம்ம தொண்டை ரணமாய் ஆயிடுத்து .

கணக்கு. இதிலே எனக்கு ஒரு சந்தேகம். வாத்தியாராலே தீக்கவே முடியலை. (a+b)2  = a2 + b2 + 2ab   யாம் .      (a+b)2 ன்னா   a2 + b2    மட்டும்தானே   வரணும் . இந்த   2ab  எதுக்கு பின்னாலே வர்றது. புரியலை .

இந்த வேதியியல்லே   குடுவையை ஆட்டிக்கிட்டே இருக்கணும். லேசான பிங்க் கலர் வந்ததும் நிறுத்தணும்.   நமக்கு எப்பவுமே குப்புன்னு பிங்க் கலர் வந்துரும் . அந்த ஒரு சொட்டிலே நம்ம  லேப் மார்க்கெல்லாம்   போயிடும்.

அப்புறம் இந்த இயற்பியல்லெ தாடி வச்சுக்கிட்டு, சொக்கின கண்ணோட ரெம்ப விஞ்ஞானிகள் பித்தகோரஸ் தியரி , பித்துக்குளி தியரி ன்னு எக்கச்சக்க தியரி எழுதி வச்சிருக்காங்க. எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணணும். கணக்கு பித்தகோரஸ் தியரியை ரெம்ப நாளா இயற்பியல்னு வேற நினைச்சுக்கிட்டு   இருந்தேன் 

தாவரயியல் - ஒரு பூவை வச்சுக்கிட்டு சொல்லிக் கொடுத்தாங்க, நம்ம செம்பருத்திப் பூங்கஆனா அதை ஹைபிஸ்கஸ் ரோஸா சைனன்சிஸ் ன்னு சொல்லணுமாம்.        
  
விலங்கியல் - குப்புன்னு நாத்தம் அடிக்கிற அந்த டிசக் ஷன் பெட்டியை வச்சுக்கிட்டு செத்த தவளையை அறுத்து அதோட மூச்சுக் குழல் பகுதியை பிரிச்சுக் காட்டணும். நம்ம மூச்சுக் குழலே   திணறிப் போயிடும்.   

அதை விடுங்க. இந்த பூகோளம் . ஒரு மேப் பைக் கொடுத்து நதிகளைக் குறிக்கச் சொன்னாங்க. நான் காவிரியை வடக்கேயும் கங்கையை தெக்கேயும் குறிச்சுக் கொடுத்தேன். தப்பாங்க. நதிகளை இணைக்கணும்கிற  நம்ம நல்லெண்ணம் யாருக்கும் புரியலைங்க .

அப்புறம். சரித்திரம். என்னோட நண்பன் ஒருத்தன் சொன்னான். சரித்திரத்திலே எவ்வளவு அதிகமா பக்கங்கள் எழுதுறியோ அவ்வளவு அதிகமா மார்க் கிடைக்கும் னு  சொன்னான். கேள்வி வந்தது . அசோகரின் காலம் ஏன் பொற் காலம் என்று அழைக்கப் படுகிறது. எழுதினேன் பாருங்க. அசோகர் சாலையின் இருபுறமும் மரங்களை நட்டார். வலது புறம் அரச மரங்களை நட்டார். இடது புறம் ஆல மரங்களை நட்டார். வலது புறம் புளிய மரங்களை நட்டார். இடது புறம் வேப்ப   மரங்களை நட்டார். இப்படியே பத்துப் பக்கம் மரங்களை நட்டு முடிச்சுட்டேன். ஆனா மார்க்கு வரலைங்க.

இப்புடிப் படிச்ச நம்மளை    ஒழுங்காப் படிக்க வச்சு பாஸ் பண்ண வைக்கணும்னா அந்த ஆசிரியர்களுக்கு எவ்வளவு   பொறுமை வேணும். செப்டம்பர் 5 ம் தேதி மட்டும்  ஆசிரியர் தினம் இல்லைங்கவருடத்தின் எல்லா நாளுமே நம்ம ஆசிரியர்கள் தினம் தானுங்கோ .
-----------------------------------------------    நாகேந்திர பாரதி


வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

சின்னத்தாயி திண்ணை

சின்னத்தாயி திண்ணை
----------------------------------------
வாரம் ரெண்டு முறை
சாணியால் மெழுகி விட்டு

தினசரி  ரெண்டு முறை
வெளக்குமாத்தால் பெருக்கி விட்டு

திண்ணையில் படுத்திருந்த
சின்னத்தாயி போயாச்சி

திண்ணை இருக்கிறது
மேடு பள்ளமாக

சின்னத்தாயி நினைவுச்
சின்னமாக  மாறி
------------------------------நாகேந்திர  பாரதி
Nagendra Bharathi's poems

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

நாளை முதல் குடிக்க மாட்டேன் - நகைச்சுவைக் கட்டுரை

நாளை முதல் குடிக்க மாட்டேன் - நகைச்சுவைக் கட்டுரை
-------------------------------------------------------------------------------------------------
கொஞ்ச நாளா ரெம்ப கஷ்டமாப் போச்சுங்க . டாஸ்மாக் பக்கம் போகவே பயமாய் இருக்குங்க . முந்தியெல்லாம் நம்ம பாட்டுக்குப் போவோம். ஹாட்டா ஒரு குவார்டர் கூலா ஒரு பீர், தள்ளாடிட்டு வீடு வந்து சேர்வோம். நடு வழியிலே  விழுந்துட்டாலும் யாரவது ஒரு புண்ணியவான் அட்ரஸ் கேட்டு கொண்டாந்து சேத்துடுவார்.

இப்ப என்னன்னா டாஸ்மாக் போறதுக்கு முன்னாடி அங்கே பாதுகாப்பு எப்படி இருக்குன்னு விசாரிக்க வேண்டியிருக்கு. நம்ம பாதுகாப்புக்கும் யாராவது ஒரு குடிகார நண்பனைக் கூட்டிட்டுப் போக வேண்டியதா இருக்கு. குடிக்கற செலவு ரெட்டிப்பாகுது .

ரெம்ப நாள் கடை திறக்கிறதே சந்தேகமா இருக்கு. அப்படியே திறந்தாலும் , கல்லடி விழுறதுக்குள்ளே அவசர அவசரமா வாங்க வேண்டியதா இருக்கு.

நம்ம பாட்டுக்கு குடிச்சுட்டு மட்டையா ரோட்டிலேயும்     படுக்க முடியலே . முந்தியெல்லாம் பாவம்னு நினைச்சவங்க இப்போ 'குடிகாரப் பயலை அடிடா' ன்னுட்டு அடிக்க வராங்க. குடிச்சு சாகறதுக்கு முன்னாடி, அடிச்சு சாகடிச்சுடுவாங்க போல இருக்கு.

என்ன ஆச்சு இந்த மக்களுக்கு. ஒபாமா மாதிரி எவனாவது மாற்றம் கொண்டு வருவான்னு நினைச்சு நினைச்சு ஏமாந்து போயிட்டாங்க போலிருக்குஅப்புறம் புத்திமதி சொல்லிக்கிட்டு இருந்த ஒண்ணு ரெண்டு  பெரியவங்களும் போயிச் சேர்ந்துட்டாங்க .

இப்ப வேற வழியே இல்லன்னு மாற்றத்தை அவங்களே கொண்டு வரலாம்னு ஆரம்பிச்சுட்டாங்க போல இருக்கு.

இதிலே பத்திரிகைபேஸ்புக் எல்லாம் சின்னப் புள்ளைங்க குடிக்கிறதை போட்டோ வீடியோ எடுத்து போட்டு கிளப்பி விட்டுட்டாங்கே . இதுலே நம்ம மாதிரி ஒரிஜினல் குடிகாரன் பாடுதான் கஷ்டமாய்ப் போயிடுச்சு .

பெர்மிட் வாங்கி ஓட்டல்லே ரூம் போட்டுக் குடிக்கிறதும் நமக்குக் கட்டுப்படி ஆகாது . கடையிலே போயி குடிச்சு அடி வாங்கவும் முடியாது . ஒழுங்கா வேலை வெட்டியைப் பாத்துக்கிட்டு வீட்டையும் நாட்டையும் முன்னேத்த வேண்டியதுதான் போலிருக்கு. நாளை முதல் குடிக்க மாட்டேன்னு முடிவு பண்ணிட்டேங்க .

-----------------------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 12 ஆகஸ்ட், 2015

தவளைக்கும் மீனுக்கும் தண்ணீ - நகைச்சுவைக் கட்டுரை


தவளைக்கும் மீனுக்கும் தண்ணீ  - நகைச்சுவைக் கட்டுரை
----------------------------------------------------------------------------------------------

மீன்களே நீந்துறப்போ நம்ம நீந்தக் கூடாதா?  மீனுக்கு இல்லாத கையும் காலும் வேற  நமக்கு இருக்கு . நான் முடிவு செஞ்சுட்டேன். எப்படியும் நீச்சல் கத்துக்கணும்னு .

நீச்சல் குளத்திலே தண்ணியிலே இறங்குறப்போ கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு .ஜில்லுன்னு வேற இருந்துச்சா . ஆனா ஆழம் அஞ்சு அடிதான், காலை நல்லா தரையிலே ஊண்டிக்கிட்டு தலை மட்டும் தண்ணிக்கு மேலே நீட்டிக்கிட்டு   நின்னேன்..

முதல்லே கையாலே தண்ணியை இப்படியும் அப்படியும் அடிச்சேன். ரெம்பவும் ஈசியாதான்  இருந்துச்சு .முன்னாடி நீட்டி, பக்கவாட்டிலே திருப்பி ,பின்னாலே இழுத்து கை நீச்சல் பயிற்சி நல்லாவே இருந்துச்சு .

இப்ப காலைத் தூக்கணும். இங்கேதான் பிரச்சினையே ஆரம்பம் ஆச்சு. ஒத்தைக் காலைத் தூக்கினேன். ஓகே . ரெண்டு காலையும் தூக்கினா, திருப்பி பொத்துன்னு கீழே விழ வேண்டியதாய் ஆயிருச்சு . காலைத் தரையிலே நல்லா அமுக்கி நிண்டுக்கிட்டேன் .

கொஞ்ச நேரம் யோசிச்சேன் . கையாலே நீச்சல் குள ஓரக் கம்பியைப் பிடிச்சிகிட்டு கால்களை மெதுவா உயரே தூக்கினேன். கொஞ்ச நேரம் தான். மறுபடி பொத்துன்னு தண்ணிக்குள்ளே முழங்கால் தரையைத் தொட , தலை வேற லேசா  தண்ணிக்குள்ளேயே முங்க, மூச்சைப் பிடிச்சுக்கிட்டு எழும்பி மேலே வந்துட்டேன்.

காலுக்கே இந்தக் கதின்னா நம்ம பெரிய உடம்பை எப்படி தூக்கிறது . அப்பத்தானே இந்த மூலையில் இருந்து அந்த மூலை வரை நீச்சல் அடிச்சுப் போகலாம்.

ஒரு யோசனை. வெறுமனே தண்ணிக் குள்ளேயே  நடந்து இந்த மூலையில் இருந்து அந்த மூலை வரை போனேன். அஞ்சு அடி ஆழம் தானே .  பாதி நீச்சல் அடித்த படு திருப்தி.

அவனவன் என்னென்னமோ நீச்சல் அடிக்கிறான். கடப்பாரை நீச்சலாம். முங்கு நீச்சலாம், கவுந்த நீச்சலாம், குப்புற நீச்சலாம் .

ம்ஹூம் இதெல்லாம் நமக்கு ஒத்து வராது . நீச்சலை குறைச்ச அறிவுள்ள மீன்கள் கிட்டேயும் தவளைகள் கிட்டேயும் விட்டுடலாம் . நமக்கு ஆறறிவு இருக்கு.  அகலமான ரோடு இருக்கு, நீச்சல் குளத்தை விட்டு வெளியேறி குளத்தைச் சுற்றி  ஆறேழு தடவை வேகமா நடந்திட்டு வீட்டுக்கு பாதுகாப்பா வந்து சேர்ந்தேன். 

------------------------------------------------------------
http://www.businesspoemsbynagendra.com 

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

சீச்சீ இந்த நீச்சல் - நகைச்சுவைப் பேச்சு

சீச்சீ இந்த நீச்சல் - நகைச்சுவைப் பேச்சு
---------------------------------------------------------------

https://soundcloud.com/knbharathi/x9yatwgsxnle


Nagendra Bharathi's poems 

நீச்சல் பயிற்சி

நீச்சல் பயிற்சி
-----------------------
மீன்கள் மட்டுமா
நாங்களும் நீந்துவோம்

கைகளால் அடிப்பது
எளிய பயிற்சி

கால்களைத் தூக்குவது
மட்டுமே கடினம்

உடம்பை எழுப்புதல்
உதவாத முயற்சி

மீன்கள் நீந்தட்டும்
நாங்கள் நடப்போம்
-------------------------நாகேந்திர பாரதி
நாகேந்திர பாரதியின் கவிதைகள்

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

மது விலக்கு

மது விலக்கு
-------------------
கும்பிட்டுக் கேட்டவர்
போன பின்னாடி

வம்பிட்டு அடிப்பவர்
வந்த பின்னாடி

கடைக்குப் போனா
உடைக்கிறாங்க

குடிக்கப் போனா
உதைக்கிறாங்க

நாளை முதல்
குடிக்க மாட்டோம்
-----------------------------நாகேந்திர பாரதி
நாகேந்திர பாரதியின் கவிதைகள்

சனி, 8 ஆகஸ்ட், 2015

குடிகாரன் பேச்சு - நகைச்சுவைப் பேச்சு

குடிகாரன் பேச்சு - நகைச்சுவைப் பேச்சு
----------------------------------------------------------------
https://soundcloud.com/knbharathi/efkv46rzbwei


Nagendra Bharathi's poems 

கலர் தெரியாத வயது - நகைச்சுவைப் பேச்சு

கலர் தெரியாத வயது - நகைச்சுவைப் பேச்சு
----------------------------------------------------------------------

https://soundcloud.com/knbharathi/lx4edpgxtlih


Nagendra Bharathi's poems 

ஓய்வு கால வேலை

ஓய்வு கால வேலை
--------------------------------
எல்லோரும் ஏதாவது
செய்து கொண்டிருக்கிறார்கள்

பேரனும் பேத்தியும்
பாடம் படித்துக் கொண்டு

மகனும் மருமகளும்
அலுவலகம் சென்று கொண்டு

அம்மாவும் மனைவியும்
சமையல் செய்து கொண்டு

ஓய்வு பெற்ற  நாமும்
உட்கார்ந்து படுக்கலாம்
-----------------------------நாகேந்திர பாரதி
நாகேந்திர பாரதியின் கவிதைகள்

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

திருக்குறள் விளக்கம் - அகர முதல

திருக்குறள் விளக்கம் - அகர முதல
---------------------------------------------------------------
https://soundcloud.com/knbharathi/gvoiptbgpo6r


Nagendra Bharathi's poems 

நகைச்சுவைப் பேச்சு - மாலை நேரத்து மயக்கம்

நகைச்சுவைப் பேச்சு  - மாலை நேரத்து மயக்கம்
------------------------------------------------------------------------------

https://soundcloud.com/knbharathi/mtmlixz2pbix


Nagendra Bharathi's poems 

நகைச்சுவைப் பேச்சு - நடைப் பயிற்சி

நகைச்சுவைப் பேச்சு  - நடைப் பயிற்சி
-------------------------------------------------------------------------------------------------

https://soundcloud.com/knbharathi/isah08mo3e7t


Nagendra Bharathi's poems


புதன், 5 ஆகஸ்ட், 2015

நிறம் மாறிய நேரம்

நிறம் மாறிய நேரம்
-----------------------------
அரக்குச் சிவப்புக்குப்   பதில்
குங்குமச் சிவப்பில் சேலை எடுத்ததால்
மனைவியிடம் திட்டு

அடர் நீலத்துக்குப் பதில்
இள நீலத்தில் சட்டை எடுத்ததால்
மகனிடம் திட்டு

கிளிப் பச்சைக்குப் பதில்
இலைப் பச்சையில் பாவாடை எடுத்ததால்
மகளிடம் திட்டு

நிற பேதம் தெரியா நமக்கு
கருப்பு வெள்ளைதான் லாயக்கு
-------------------------------------நாகேந்திர பாரதி
நாகேந்திர பாரதியின் கவிதைகள்

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

இயற்கை நிறங்கள்

இயற்கை நிறங்கள்
-------------------------------
இலையொரு பச்சை
கிளையொரு பச்சை

மரமொரு சாம்பல்
மண்ணொரு  சாம்பல்

வானொரு நீலம்
கடலொரு நீலம்

நிலவொரு வெள்ளை
நீரொரு வெள்ளை

இயற்கையின் வரங்கள்
எத்தனை நிறங்கள்
---------------------------------நாகேந்திர பாரதி
நாகேந்திர பாரதியின் கவிதைகள்