வியாழன், 19 மார்ச், 2020

இயற்கையின் ரகசியம் - கவிதை

இயற்கையின் ரகசியம் - கவிதை
-----------------------------------------------------
வளர்வதும் தேய்வதுமாய் வானத்திலே
 வந்து வந்து போகின்ற
 நிலவின் ஒளி

மலர்வதுவும் விழுவதுமாய் செடியினிலே
வந்து வந்து போகின்ற
 பூவின் வாசம்

பக்கத்திலும் தூரத்திலுமாய் பாதையிலே
வந்து வந்து போகின்ற
 பறவைச் சப்தம்

இயற்கையின் ரகசியமாய் உலகத்திலே
வந்து வந்து போகின்ற
வைரஸ் தாக்கம்

பிறவிகளின் தொடர்ச்சியாய் வாழ்க்கையிலே
வந்து வந்து போகின்ற
இன்ப துன்பம்
--------------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

ஞாயிறு, 15 மார்ச், 2020

தமுக்கம் மைதானம் - கவிதை

தமுக்கம் மைதானம் - கவிதை
------------------------------------------------
மதுரைத் தமுக்கம்
மாலாக மாறுகிறதா

முதன் முதல் சுற்றிய 
பொருட் காட்சிக் கடைகளும்

முதன் முதல் சாப்பிட்ட
டெல்லி அப்பளமும்

முதன் முதல் ஏறிய
ராட்சத ராட்டினமும்

முதன் முதல் பார்த்த
திறந்த வெளித் திரைப்படமும்

பிரிகின்ற காதலியை
ஏற்றிச் செல்லும் ரெயில் போல

வணிகப் பெரு வளாகத்தில்
ஏறிப் போய் மறைந்திடுமா
-----------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

சனி, 14 மார்ச், 2020

ஒற்றுமை நேரம் - கவிதை

ஒற்றுமை நேரம் - கவிதை
--------------------------------------------
இயற்கையின் சக்தியை
உலகம் முழுவதும்
உணரும் நேரம்

இயற்கையும் கடவுளும்
ஒன்றே என்பது
தெரிகின்ற நேரம்

எல்லாப் பிரிவுகட்கும்
ஒன்றே ஆரம்பமென்று
அறிகின்ற நேரம்

எல்லா உயிர்கட்கும்
ஒன்றே மூலமென்று
புரிகின்ற நேரம்

இப்போது விட்டால்
எப்போது உண்டாகும்
ஒற்றுமை  நேரம்
--------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

வெள்ளி, 13 மார்ச், 2020

சில்லறைச் சிரமங்கள் - கவிதை

சில்லறைச்  சிரமங்கள்   - கவிதை
---------------------------------------------------
ஒரு ரூபாய்க் காசை
வீசி எறிகிறான்  பிச்சைக்காரன்

ஐந்து ரூபாயாவது
போட வேண்டுமாம்

இரண்டாயிரம் ரூபாய் நோட்டை
திருப்பிக் கொடுக்கிறான் கடைக்காரன்

ஐநூறு ரூபாயாவது
கொடுக்க வேண்டுமாம்

ஐந்தும் ஐநூறும் கேட்டால்
சலித்துக் கொள்கிறான்   வங்கிக் காசாளன்

சில்லறை ரூபாயின்
சிரமங்கள் நமக்குத் தான்
--------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

வியாழன், 12 மார்ச், 2020

அழகின் அமைதி - கவிதை

அழகின் அமைதி  - கவிதை
------------------------------------------
கை அசைவில்
கால் அசைவில்

கண் அசைவில்
உதட் டசைவில்

உடலே சப்தமாய்
உடலே நிசப்தமாய்

உடலே வெளிச்சமாய்
உடலே இருட்டாய்

உணர்ச்சிக் கடலாய்
உருக்கும் நெருப்பாய்

விரியும் விண்ணாய்
வீழும் அருவியாய்

இருக்கும் நிலமாய்
இழுக்கும் காற்றாய்

ஆடும் நடனத்தில்
அழகின் அமைதி
----------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

செவ்வாய், 10 மார்ச், 2020

நிறப் பிரிகை - கவிதை

நிறப்   பிரிகை - கவிதை
---------------------------------------------
எத்தனை பிரிவுகள்
எத்தனை நிறங்கள்

அத்தனையும் சேர்ந்தால்
அமைவது வெண்மையே

வெண்மையின் நோக்கம்
ஒற்றுமை தூய்மை

வண்ணங்கள் பிரித்து
வாரிப் பூசினாலும்

ஒன்றாய்ச் சேர்வதே
நட்பின் திருவிழா
------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

திங்கள், 9 மார்ச், 2020

கேள்விகள் ஆயிரம் - கவிதை

கேள்விகள் ஆயிரம் - கவிதை
------------------------------------------------
தவழ்ந்து  பிடித்து
எழுந்து  நடந்தபின்

பார்வையின் ஆராய்ச்சி
கேள்வியாய்க் கிளம்பி வரும்

பதிலுக்குள் ஒளிந்திருக்கும்
வார்த்தைக்குள் கேள்வி வரும்

சொல்லையும் அறிவையும்
சுவையாகச் சேர்த்து விட்டு

சொல்லி முடிப்பதற்குள்
அடுத்த கேள்வி வரும்

விடைகளைத் தேடியே
விபரங்கள் தெரிந்து கொள்ளும்

பெற்றோரின் படிப்புக்கும்
பிள்ளையே ஆசிரியன்
------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

வெள்ளி, 6 மார்ச், 2020

நிறம் மாறும் இலைகள் - கவிதை

நிறம் மாறும் இலைகள்  - கவிதை
-------------------------------------------------------
பசும் மஞ்சள் நிறத்தினிலே தளிராகி
இளம் பச்சை நிறத்தினிலே இலையாகி

கடற் பச்சை நிறத்தினிலே காய் தொட்டு
கரும் பச்சை நிறத்தினிலே கனி தொட்டு

செம் பச்சை நிறத்தினிலே சருகாகி
கருஞ் சிவப்பு நிறத்தினிலே விழுகின்றாய்

பசும்  மஞ்சள்  விரிந்து உருவாகி
கருஞ் சிவப்பு சுருங்கி எருவாகி

மனிதர்களின் வாழ்க்கை ஓட்டத்தை
மாறுகின்ற நிறத்தாலே காட்டுகின்றாய்
----------------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 5 மார்ச், 2020

முகமூடி உயிர் - கவிதை

முகமூடி உயிர் - கவிதை
----------------------------------------
எத்தனை இன்பங்கள்
கிடைத்திருக்கும் உயிர்

எத்தனை துன்பங்கள்
துடைத்திருக்கும் உயிர்

எத்தனை தலைமுறைகள்
நடந்திருக்கும் உயிர்

எத்தனை வழிமுறைகள்
கடந்திருக்கும் உயிர்

எத்தனை நாடுகளில்
அழிந்திருக்கும் உயிர்

எத்தனை முகமூடிகளில்
ஒளிந்திருக்கும் உயிர்
-------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

திங்கள், 2 மார்ச், 2020

அறிவூட்டும் பேச்சின் அவசியம் -ஊக்கப் பேச்சு

அறிவூட்டும்  பேச்சின் அவசியம்  -ஊக்கப் பேச்சு
---------------------------------------------------------------------------

அறிவூட்டும்  பேச்சின் அவசியம் - யூடியூபில்
--------------------------------------------------------------------------

Humor in Business - Poetry Book