புதன், 6 மார்ச், 2024

நினைவுகளே நிரந்தரம் - கவிதை

 நினைவுகளே நிரந்தரம் - கவிதை 

———


கட்டிய கனவுகள்

கலைந்து போய் விடும்


கிட்டிய நினைவுகள்

கிளர்ந்து நின்றிடும்


ஒவ்வொரு நினைவிலும்

உண்மையின் வெளிச்சம்


இன்பமும் துன்பமும்

ஏற்றிய வெளிச்சம்


காட்டிய பாதையில்

கால்கள் போகட்டும்


நடப்பது எல்லாம்

நன்மையாய் ஆகட்டும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

நம்பிக்கைச் செடி- குறுங்கதை

 நம்பிக்கைச் செடி- குறுங்கதை  ——— மேடும் பள்ளமும் பார்த்து முடித்து , சாய்ந்து கிடக்கும் ஓட்டைச் சைக்கிள் . உப்புமாவான ரவாவை உதிர்த்து முடித...