வெள்ளி, 29 ஜனவரி, 2021

எழுத்தாளர் சூடாமணி - சிறுகதை அனுபவம்

 

எழுத்தாளர் சூடாமணி -  சிறுகதை அனுபவம்

----------------------------------------------------------------------------------------------

 (நவீன விருட்சம் நிகழ்வில் வாசித்தது - 22/1/21)

உளவியல் எழுத்தாளர் என்று பாராட்டப் பட்ட ஆர். சூடாமணி அவர்களின் ' அன்னையின் முகத்துப் புன்னகை' கதையை  படித்து அனுபவித்த விதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

 

இதுவும் ஒரு உளவியல் கதைதான்.  பதினெட்டு வயதிலே கணவனை இழந்து, அடுத்த சில மாதங்களிலே பிறந்த மகனை வளர்த்து ,அவனது நாற்பத்திரண்டு வயதிலும் அவன் தன்னை விட்டு பிரிந்து விடக் க கூடாது என்று,  அவனுக்கு திருமணம் நடத்தி வைக்க விரும்பாத, ஒரு அம்மாவுக்கும், அவளை புரிந்து கொண்டு தனக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லி  அம்மாவுக்காக வாழும் ஒரு மகனுக்கும், இடையே நடக்கின்ற உரையாடல்களில்  அந்த இருவரின் உளவியல் கூறுகளை வெளிப்படுத்தும் சூடாமணி அவர்களின் எழுத்து திறமை நம்மை வியக்க வைக்கிறது.


 

அம்மா காயத்ரி.இப்போது வயது அறுபது.   மகன் மணி .இப்போது வயது நாற்பத்தியிரண்டு

 

அவனுக்கு திருமணம் தள்ளிப் போகும் போதெல்லாம் தனக்கு ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் மேலுக்கு வருத்தத்தோடு பேசும் அம்மா. அதை புரிந்து கொண்டு அவளை சமாதானம் செய்யும் மகன். இறுதியில் வரும் ஒரு எதிர்பாராத திருப்பம். நடு நடுவே வரும் வர்ணணைகள் என்று ஒரு திரைப் படம் பார்க்கும் உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறார். 

அதில் ஒரு சில உரையாடல்களையும், வருணனைகளையும், அந்த திருப்பத்தையும் இந்த ஐந்து நிமிடங்களில் பகிர்ந்து கொள்கிறேன்.

---------------------------------------

முதலில் சில உவமைகள் .

அம்மா காயத்ரி நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கிறாள்.அருகில் ஊதுபத்தி எரிகிறது .

ஒற்றைக் கனகாம்பரப் பூ ஒளிர்ந்து நிற்பதுபோல் ஊதுவத்தியின் கொழுந்துப் புள்ளி ஒளிர்ந்தது. ஒற்றைக் கனகாம்பரப் பூ ஒளிர்ந்து நிற்பதுபோல் ஊதுவத்தியின் கொழுந்துப் புள்ளி ஒளிர்ந்தது  என்ன ஒரு  அழகான உவமை.

அடுத்து மகன் கல்யாணம் ஆகி தன்னை கைவிட்டு விடுவானோ என்ற எண்ணத்தில் கேட்கிறாள்.

'நீ ஒருத்திக்கு புருஷனாயிடுவே . ஆனா எனக்கும் பிள்ளைதான். இல்லையா ' என்ற கேள்வி பிரித்த பேனாக்கத்தி போல் படக்கென்று நீளும். பிரித்த பேனாக்கத்தி போல் படக்கென்று நீளும். என்ன ஒரு கூர்மையான உவமை

-----------------------------------------------

அடுத்து உளவியல் கூறுகளை வெளிப்படுத்தும்  காட்சிகள் உரையாடல்கள்

பதினெட்டு வயதிலே கணவனை இழந்து -அந்த அழகிய இள  மங்கை இயற்கைக்குப் புறம்பாக கட்டாய மூளித்தனத்தில் சிறைப்படுத்தப்பட்டு அப்படித் தன் குழந்தையை பார்த்தவாறு உட்கார்ந் திருந்தபோது சிறிது சிறிதாக ஒரு தீவீர பகையில் அவள் நெஞ்சில் பந்தம் பிணைத்திருந்தால் அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.--- தன் குழந்தையை பார்த்தவாறு உட்கார்ந் திருந்தபோது சிறிது சிறிதாக ஒரு தீவீர பகையில் அவள் நெஞ்சில் பந்தம் பிணைத்திருந்தால் அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

என்ன ஒரு நுணுக்கமான உளவியல் ஆராய்ச்சி

-----------------------------

மணிக்கு இருபத்துநான்கு வயதாகிய போது அவன் தாத்தா ஒரு பெண்ணை அவனுக்கு நிச்சயித்தார்.

மகனைப் பார்க்கும் அவள் பார்வையில் கலக்கமும் ஒருவித வெறியும் தென்பட்டன.

திருமணத்திற்கு மூன்று நாட்கள் முன்பு தாத்தா இறந்ததும் அதை காரணம் சொல்லி அந்த திருமணத்தை நிறுத்தி விடுகிறாள் .

-------------------------------

அடுத்து மணிக்கு இருபத்தேழு வயதில் மறுபடி திருமணம் நிச்சயம் ஆகிறது. இன்னும் சில நாட்கள் தான் என்று பழைய திருமண நிச்சயத்தின் போது எண்ணியதுபோல் நாட்களை எண்ணுகிறாள். அமைதியற்ற பார்வையோடும். இரவு நேர விழிப்போடும். 

 

அந்தப் பெண்ணும் ஒரு விபத்தில் இறந்து போக அந்த திருமணமும் நின்று போகிறது.

------------------------------

இளமையிலே தனியாகப் போன ஓன்று இன்னொன்றை இணையாகக் காணப் பொறாமல் கொண்ட தவிப்பு விலகி விட்ட ஆறுதலா   .

இளமையிலே தனியாகப் போன ஓன்று இன்னொன்றை இணையாகக் காணப் பொறாமல் கொண்ட தவிப்பு விலகி விட்ட ஆறுதலா   .

உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருக்கும் உணர்வை எடுத்துக் காட்டும் எழுத்து அல்லவா இது.

-------------------------------------------------

அடுத்து வந்த சம்பந்தங்களை கை கழுவுவதில் தாயின் பொறுப்பு அதிகமா அல்லது மகனின் பொறுப்பு அதிகமா  

என்று சொல்ல முடியாது .

அவள் அடித்தளத்து உருப்புரியாத உணர்ச்சியில் பாதி செய்தாள் .அவன் அதை புரிந்து கொண்ட முழுமையில் மீதியை செய்தான்.

அவள் அடித்தளத்து உருப்புரியாத உணர்ச்சியில் பாதி செய்தாள் .அவன் அதை புரிந்து கொண்ட முழுமையில் மீதியை செய்தான்

உனக்கு பலி கொடுத்து சாந்தப் படுத்த எனக்கு ஒரு வாழ்க்கை தானே இருக்கிறது ' என்று அன்பில் உருகிக் கதற வேண்டும் போல் இருக்கும் மணிக்கு. 

தாயின் உணர்வு போல் மகனின் உணர்வும் வெளிப்படும் இடம் அல்லவா இது. அருமை

சில சமயம் ' நான் பொல்லாதவளாடா ' என்று கேட்பாள். அவன் ' நீ ரொம்ப நல்லவள் ' என்று சொல்வான்.

அத்தனைக்கும் மேலாக இறுதியில் ஆசிரி யர் தரும் திகைப்பான திருப்பம்.

-----------------------------------------------------

அவர்கள் வீட்டு வேலை செய்ய ஒரு வயதான சமையல்காரர் இருக்கிறார். காலை முதல் இரவு வரை அவருக்கு அங்கேதான் வேலை . அவருக்கு இரவு நேரம் கண் பார்வை சரியாக தெரியாததால் தினசரி இரவு அவரை பக்கத்தில் இருக்கும் அவர் வீடு வரை சென்று விட்டு வருவது மணியின் வழக்கம். கடந்த ஐந்து ஆண்டுகளாக இரவு அவரை அவரது வீட்டில் விட்டு வருவான் மணி.  

 

அன்று காலை சமையல்காரர் வர நேரமாகிறது.  பேரப்பையன் கீழே விழுந்து அடிபட்டுட் டான் என்று சொல்கிறார். அதற்குள் அவருடன் கூட வந்த அவளின் மகள் வழி   மூன்று வயது பேர பையன் உள்ளே வருகிறான்.

 

வேலை நேரத்தில் குழந்தையை அழைத்து வரக் கூடாது என்பது மணியின் உத்தரவு. கோபப்படுகிறான். அவர் சமாதானப் படுத்த  அம்மா அந்தக் குழந்தையைப் பார்த்து 'முன்னேயே பார்த்த குழந்தையாட்டம் இருக்கே அசப்பில் ' என்றபடி வாழைப்பழம் எடுத்தபடி அருகே வர சொல்கிறாள்.. மணி அந்தப் பழத்தை வாங்கிக்கொண்டு  அவளுக்கு முதுகை காண்பித்தபடி பையனை மறைத்துகொண்டு குழந்தையிடம் பழத்தை  நீட்டுகிறான்.

குழந்தை இடக்கையால் பழத்தை வாங்குகிறது. 

சமையல்காரர் ரங்கநாதன் பேரனுடன் அந்த இடத்தை விட்டு விரைந்து செல்கிறார்.

------------------------------

கதையில் முன்பே பல இடங்களில் மணிக்கு இடக்கைப் பழக்கம் உண்டு என்று சொல்லப்பட்டு இருப்பதாலும் , குழந்தை இடக்கையால் பழத்தை வாங்குவதாலும் அவன் குழந்தையை தாயிடம் இருந்து மறைப்பதாலும், சமையல்காரர் வேகமாக விரைவதாலும்  நமக்கு புரிய ஆரம்பிக்கிறது. உளவியல் கூறுபாடுகளின் இன்னொரு இயற்கையான பரிமாணம் தானே இது. திகைக்க வைக்கும் அதே சமயம் மணியின் நிலைமை புரிந்த நமக்கு ஒரு ஆறுதலும் அளிக்கும் உளவியல் திருப்பம் அல்லவா இது.  சில விஷயங்களை வெளிப்படையாக சொல்லாமல்வாசகனுக்கு  கோடி காட்டி விடுவதும் சிறுகதையில் ஒரு யுக்தி தானே. அதை திறமையாக செய்கிறார் சூடாமணி அவர்கள்.

------------------------------------

தொடர்கிறது கதை. . குழந்தையை மறந்துவிட்டு , தாய் மகனிடம் கேட்கிறாள் ' கல்யாணம் பண்ணிக்கலையேன்னு உனக்கு நிஜமா குறையா இல்லையா ' . மகன் சொல்கிறான் 'எனக்கு அப்படியெல்லாம் குறையே கிடையாதம்மா'.  படிக்கும் நமக்கும் புரிகிறது. படிக்கும் நமக்கும் புரிகிறது.

 

அதைக் கேட்டு அவள் பார்வையில் தீபங்கள் சுடர்ந்தன. அதுவே அவன் இன்பம். அவன் லட்சியம் .  என்று  ‘ .அன்னையின் முகத்துப் புன்னகை' கதை முடிகிறது.

--------------------------------

அழகிய உவமைகள் , உளவியல் சார்ந்த உரையாடல்கள் , திடீர்த் திருப்பம் என்று ஒரு அருமையான திரைப்படம் பார்த்த திருப்தியை இந்தக் கதையைப் படித்தபோது அடைந்தேன். உளவியல் ஆசிரியர்   சூடாமணி அவர்களின் எழுத்துத் திறமையை வணங்கி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன் . நன்றி. வணக்கம்

------------------------------ - நாகேந்திர  பாரதி

My E-books in Tamil and English 


வியாழன், 28 ஜனவரி, 2021

செவ்வாய், 26 ஜனவரி, 2021

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

சூரிய உதயம்- கவிதை

 சூரிய உதயம்- கவிதை 

--------------------------------------------------------

பனைமரத் திடையே பகலவன் தோன்ற

  பார்த்த நிலவுப் பெண் பயம் கொள்ள

தனிமை கண்டு தவித்த அப்பெண்

  துடியுடை மேகம் துணையென மறைய

தினைகதிர் கொய்ய நின்றிடும் உழவர்

  தினவுதோள் பொங்கி ஆர்த்திடும் வேளை

கணைதொடு கயல்விழி மாதர்கள் கூடி

  வளைகரம் ஒலிக்க வாவியில் ஆடி

இணையிலாப் பொருளை மனதிலே ஏற்ற

  எழுகதிர் கண்டு போற்றினர் ஆன்றோர்

————————நாகேந்திர  பாரதி

(1970 இல் பள்ளி ஆண்டு மலருக்காக  எழுதிய கவிதை )

My E-books in Tamil and English


வெள்ளி, 22 ஜனவரி, 2021

புதன், 13 ஜனவரி, 2021

ஹைக்கூ - கவிதை வாசிப்பு

 ஹைக்கூ - கவிதை வாசிப்பு 

----------------------------------------------------

அழகியசிங்கரின் நவீன விருட்சம் நிகழ்வு - 9/1/21 

ஹைக்கூ - யூடியூபில் 

My E-books in Tamil and English

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

ஹைக்கூ - குறுங்கவிதைகள்

 ஹைக்கூ - குறுங்கவிதைகள் 

-------------------------------------------------------

அழகியசிங்கரின் 'நவீன விருட்சம்' நிகழ்வில் வாசித்த கவிதைகள் 

-------------------------------------------------------------------------------------------------------------

உருமாறி இறங்கிய 

காதலனின்  கண்ணீர்த் துளியில் 

சிலிர்த்துப் போகும் செடி 

-------------

எங்கோ போகின்ற 

ரெயிலின் ஊதல் ஓசையை 

அசை  போடும் மாடுகள் 

-------------

பைபாஸில் கடக்கும் 

அந்த சிற்றூரில் இருந்து வரும் 

வேர்க்கடலை வாசம் 

----------------

ராணுவத்தில் இருந்து 

வரும் வீரனை வரவேற்று நிற்பது 

பனைமரம் மட்டும்தான் 

-----------------------------

----------------------------------------நாகேந்திர  பாரதி 

My E-books in Tamil and English

திங்கள், 4 ஜனவரி, 2021

கு. அழகிரி சாமி-சிறுகதை அனுபவம்

 

கு. அழகிரி சாமியின் சிறுகதை - பாலம்மாள் கதை - சிறுகதை அனுபவம் -நாகேந்திரபாரதி

----------------------------------------------------------------------------------------------------------------------

குடும்பக் கதை மன்னர் கு.அழகிரிசாமி அவர்களின் ' பாலம்மாள் கதை' என்ற சிறுகதையைப் படித்த அனுபவத்தை இங்கே அழகியசிங்கரின் 'நவீன விருட்சம் ' நிகழ்வில் பகிர்ந்து கொள்கிறேன் .

முதலில் ஒரு சின்னஞ் சிறிய கதைச் சுருக்கம்.

இது பாலம்மாள் என்ற ஒரு ஏழைப்  பெண்ணின் கம்மல் கனவைப் பற்றிய கதை. புடவையும் பொன் நகையும் தானே பெண்களுக்குப் பிடித்த பொருட்கள். அந்த ஏழைப்பெண்ணின் குடும்பமே கூலி வேலை செய்து பிழைக்கும் குடும்பம். தாய், தந்தை, தங்கை தங்கம்மாள்,  தம்பி செல்லத்துரை  என்று அளவான குடும்பம். வாக்கப்பட்டுப் போன தாய் மாமன் மாடசாமியும் கூலி வேலை செய்பவன்தான். அவள் கல்யாணத்திற்கு இரவல் வாங்கிப் போட்டிருந்த சிவப்புக் கம்மலையும் ஓரிரு நாளில் திருப்பிக் கொடுக்க வேண்டியதாகிறது.

மழை பொய்த்து விட்டால் கூலி வேலையும் கிடைக்காமல் அவர்கள் அரை வயிற்றுக் கஞ்சிக்கே கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்குள் தங்கை தங்கம்மாளுக்கும் திருமண வயது வந்து விட அவளை பாலம்மாள் கணவனுக்கே பாலம்மாள்  சம்மதத்துடன் திருமணம் முடிக்க ஏற்பாடு நடக்கிறது. ஆனால் பாலம்மாள் கணவன் மாடசாமி தங்கம்மாளுக்கு வேறு ஒரு வசதியான இடத்தில்  மணம் முடிக்க ஏற்பாடு செய்து வைக்கிறான். அந்த ஏழாயிரம் பண்ணை  மாப்பிள்ளை விதவை மாமியாரையும் மைத்துனனையும் தங்கள் வீட்டுக்கே அழைத்துச் சென்று விடுகிறான். நடுவில் மிகப் பெரிய பஞ்சம் வந்து பாலம்மாளும் மாடசாமியும் கஷ்டப்படுவதை அறிந்து அவர்களையும் தன் வீட்டுக்கே அழைத்துச் சென்று சில நாட்கள் கழித்து அவர்கள் தங்கள் ஊருக்கு திரும்பும்போது தங்கம்மாள் தன் அக்காவிற்கு மூட்டை நெல்லும், கம்பும் கொடுத்து ஒரு ஜோடி புஷ்பராகக் கம்மலும்  போட்டு அனுப்புகிறாள்.

சில மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் வறுமை. அந்த கம்மலை அடகு வைத்து காலம் ஓடுகிறது. பாலம்மாளுக்கும்  தங்கம்மாளுக்கும் குழந்தைகள் பிறந்த பின் தங்கம்மாள் குழந்தையைப் பார்க்க அவர்கள் அங்கு போகும் போது அக்கா கம்மலை அடகு வைத்தது தெரிய வர முதலில் கோபித்துக்கொண்டு பிறகு அதைத் திருப்ப பணம் கொடுத்து அனுப்புகிறாள் . திரும்பி வந்தபின் பாலம்மாள் பையனுக்கு விபத்து ஏற்பட ஆஸ்பத்திரி செலவுக்கு மறுபடியும் கம்மல் அடகுக் கடை போகிறது. தொடர்ந்து மூன்று மாதம் கூட பாலம்மாளால் அந்த கம்மலை காதில் போட்டுக் கொள்ள முடியவில்லை.

ஒரு முறை தம்பி செல்லத்துரை அடகு நகையைத் திருப்ப காசு கொடுக்கிறான். சிறிது நாட்களுக்குப் பிறகு மறுபடியும் அடகுக் கடை. வருடங்கள் ஓட பையன் ராணுவத்தில் சேர்ந்து தொடர்ந்து பணம் அனுப்ப குடும்பம் ஓரளவு நல்ல நிலைக்கு வர , ஊருக்கு வரும் பையன் அடகு நகையை திருப்பிக் கொடுக்கிறான். அதை போட்டுக்கொண்டு  விசேஷங்களுக்குச் செல்லும் பாலம்மாளை அந்த ஊர் பெண்கள் கேலி செய்கிறார்கள். ‘அறுபது  வயசாயிருச்சு. இப்ப என்ன வெள்ளைக் கம்மல் போட்டுக்கிட்டு திரியிறா ‘ என்று கேவலமாகப் பேசுகிறார்கள். அழுதுகொண்டே வீடு திரும்பும் பாலம்மாள்  கம்மலைக் கழட்டி பானைக்குள் வைத்துவிட்டு வீடு வரும் மகனிடம் 'இது உன் பொண்டாட்டிக்கு ' என்று அழுது கொண்டே சொல்வதாகக் கதை முடிகிறது

 

இந்தக் கதையிலே கு அழகிரிசாமி அவர்களின் கதை சொல்லும் பாணி எளிமையாகவும் உருக்கமாகவும் உள்ளது. அந்த ஏழைக்  குடும்பத்தின் வாழ்க்கைக் கஷ்டங்களை விவரிக்கும் பொழுது அந்தக் காட்சியை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்.உதாரணத்திற்கு ஓரிரு காட்சிகள்.

பாலம்மாளின் தந்தை மரணத்தைப் பற்றி சொல்லும் போது இப்படி சொல்கிறார்.

'ஏற்கனவே வறுமையின் அடி  பாதாளத்தில் திக்கு முக்காடும் குடும்பமாதலால் பெரியவரின் மரணம் பொருளாதார ரீதியில் குடும்பத்தை பாதிக்கவில்லை .ஒரு ஆள் வரும்படி நின்றது. ஒரு ஆள் சாப்பிடும் செலவும் நின்றது .அவ்வளவுதான். . ' அந்த வறுமை நம் மனதில் பதிகிறது அல்லவா.

 

அடுத்து அவர் கதையின் கதாபாத்திரங்களின் குண நலன்களையும் ஓரிரு வரிகளில் கோடி காட்டுகிறார்.

 

அந்த ஏழாயிரம் பண்ணை மாப்பிள்ளை சொல்வது இது ' .அண்ணாச்சி ஊரிலே இப்போ என்ன அவசரம்.அங்கெ தான் மழை தண்ணீ கிடையாதுன்னு சொல்றீங்களே .காலம் செழிச்ச பிறகு போனா போச்சு .இங்கேயே ரெண்டு பேரும்  இருங்க.  இது யாரு வீடு ? உங்க தம்பி வீடு தானே?' என்ற வரிகளில் தெரியும் அந்த தங்கம்மாள் புருஷனின் அன்பும், உதவும் குணமும்.

சகலன் வீட்டில் பிழைப்புக்காக வந்து மனைவியோடு உட்கார்ந்திருக்க மாடசாமிக்கு பிடிக்கவில்லை, என்ற வரிகளில் மாடசாமியின் வறுமையிலும் சுய மரியாதையை விட்டுக் கொடுக்க விரும்பாத அந்த குணம் தெரிகிறது அல்லவா.

'என் கட்டை உள்ள மட்டும் எனக்கு பாடு பட சக்தி உண்டு. அடுத்தவன் உழைப்பில் ஒரு வேளைக் கஞ்சி கூட இந்த மாடசாமியால் குடிக்க முடியாது ' என்று சொல்லும் அந்த ஏழை கூலிக்காரனின் சுய மரியாதையை.

 

பெரும்பாலும் மூன்றாவது மனிதன் கண்ணோட்டத்தில் சொல்லப்படும் இந்தக் கதையில் அங்கங்கே தெறிக்கும் இது போன்ற வசனங்களில்   மனிதர்களின் குண நலன்கள் வெளிப்படுகின்றன.

 

இத்தனைக்கும் மேலாக கம்மலுக்கு ஏங்கும் அந்த பாலம்மாளின் ஏக்கம்.

'நல்ல நாள் வருகிறது, நான் மூளியாக இருக்க வேண்டி இருக்கிறது. கம்மல் தான் போய்  விட்டதே '.என்று ஏங்கும் இடங்கள் .

கடைசியில் ஊர்ப் பெண்களின் கேலியைப் பொறுத்து கொள்ள முடியாமல்

'எனக்கு இந்த வயதான காலத்திலே கம்மல் எதற்கு. உன் பொண்டாட்டிக்காக வைத்திருக்கிறேன் ' என்று மகனிடம் சொல்லும் இடம்.

“பாலம்மாளால் தொடர்ந்து பேச முடியவில்லை. உதடுகள் துடித்தன. என்ன முயற்சி செய்தும் பொய்ச் சிரிப்பு சிரிக்க முடியவில்லை.சுவரைப் பார்த்துத் திரும்பிக் கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கொதிக்கின்ற கண்ணீரைச் சிந்தினாள் .மறு நிமிடமே முகத்தைத் துடைத்துக்கொண்டு மகனைப் பார்த்து திரும்பி சிரமப் பட்டு புன்னகை செய்துகொண்டு 'எனக்கு எதற்கு இனி கம்மல். உன் பொண்டாட்டிக்கு தாண்டா ' என்று சொன்னாள் பாலாம்மாள் “.

 

இப்படி கதா பாத்திரங்களின் குண நலன்களை வெளிப்படுத்தும் வசனங்களும் , வறுமைக் கோலத்தை வெளிப் படுத்தும் வருணனைகளுமாக  இந்த சோகச் சிறுகதையை நம் முன் நடத்திக் காட்டுகிறார்.

இந்த சோகக் கதைகளினால் நம் மனதினில் இரக்க உணர்வை தூண்டுவது தானே அந்த எழுத்தாளர்களின் நோக்கம். அந்த நோக்கத்தில் இந்த குடும்பக் கதை மன்னர் கு. அழகிரிசாமியின் பாலம்மாவும்  நம் மனதில்   இரக்க உணர்வை எழுப்புகிறார். வாய்ப்புக்கு நன்றி. வணக்கம். 

---------------------------நாகேந்திரபாரதி

My E-books in Tamil and English

புத்தாண்டு விடியல் - கவிதை வாசிப்பு

 புத்தாண்டு விடியல் - கவிதை வாசிப்பு 

-------------------------------------------------------------------

புத்தாண்டு விடியல் - யூடியூபில் 

My E-books in Tamil and English

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

கவிதையே சமையல் - கவிதை

 கவிதையே சமையல் - கவிதை 

---------------------------------------------------------

கருத்தும் கற்பனையும் 

கலந்தே இருக்கும் 


சாதமும் குழம்பும் 

சார்ந்தே இருக்கும் 


எதுகையும் மோனையும் 

இசையைச் சேர்க்கும் 


கூட்டும் பொரியலும் 

கூட்டும் சுவையை 


கார சாரக் 

கவிதையே சமையல் 

----------------------------நாகேந்திர  பாரதி 

My E-books in Tamil and English