வெள்ளி, 25 டிசம்பர், 2020

விடியலை நோக்கி . - கவிதை

 விடியலை நோக்கி .   - கவிதை 

------------------------------------------------------

விடியலை நோக்கி பயணங்கள் 

வேதனை நிறைந்த உள்ளங்கள் 


வடிகால் இல்லா வாட்டங்கள் 

வறுமைத் தீயின் மூட்டங்கள் 


படியும் பாசித் கூட்டங்கள் 

வழுக்கும்  வாழ்க்கை ஓட்டங்கள் 


முடியும் இங்கே மாற்றங்கள் 

முக்கியத் தேவை சீற்றங்கள் 

--------------------------------------------------நாகேந்திர  பாரதி 

My E-books in Tamil and English

வியாழன், 24 டிசம்பர், 2020

மௌனம் - கவிதை

 மௌனம் - கவிதை 

--------------------------------------

மௌனம் மந்திரம் 

சொற்களுக்கு உபதேசி 

வடிகட்டிய வார்த்தைகளில் 

வலிமை அதிகம் 


மௌனம் ஏரிநீர் 

அளைக்காமல் உற்றுப்பார் 

அடிவாரம் வரை புரியும்  


மௌனம் தேன்கூடு 

கலைக்காமல் கவனி 

'கொட்டு'வது  தேன் மட்டும் 


மௌனம் மின்சாரம் 

ஓடுவது தெரியாது 

உணர்ந்தாலோ 

பலன் கோடி, பல கோடி 

-------------------------------------நாகேந்திர பாரதி 

My E-books in Tamil and English

செவ்வாய், 15 டிசம்பர், 2020

அரும்பொருள் வேட்டை - போட்டி

 அரும்பொருள் வேட்டை - போட்டி 

--------------------------------------------------------------

அரும்பொருள் வேட்டை -  யூடியூபில்

My E-books in Tamil and English 

பாரதியாரின் ஞாயிறு - கவிதை வாசிப்பு

 பாரதியாரின் ஞாயிறு  - கவிதை வாசிப்பு

-------------------------------------------------------------------------

பாரதியாரின் ஞாயிறு -  யூடியூபில் 

My E-books in Tamil and English 

பெண் விடுதலை - கவிதை வாசிப்பு

 பெண் விடுதலை - கவிதை வாசிப்பு

--------------------------------------------------------------

பெண் விடுதலை -  யூடியூபில் 

My E-books in Tamil and English 

நாகேந்திர பாரதியின் கவிதைகள் - அறிமுகம்

 நாகேந்திர பாரதியின் கவிதைகள் - அறிமுகம்

---------------------------------------------------------------------------------

நாகேந்திர பாரதியின் கவிதைகள் -  யூடியூபில் 

My E-books in Tamil and English 

பொன்னியின் செல்வன் - வழக்காடு மன்றம்

 பொன்னியின் செல்வன் - வழக்காடு மன்றம்

----------------------------------------------------------------------------

பொன்னியின் செல்வன் -  யூடியூபில் 

My E-books in Tamil and English 

புதுமைப்பித்தன் சிறுகதை -- மதிப்புரை

 புதுமைப்பித்தன் சிறுகதை -- மதிப்புரை

----------------------------------------------------------------------

புதுமைப்பித்தன் சிறுகதை -  யூடியூபில் 

My E-books in Tamil and English 

பேச்சுத் திறன் - ஊக்கப் பேச்சு

 பேச்சுத் திறன் - ஊக்கப் பேச்சு

--------------------------------------------------

பேச்சுத் திறன்- யூடியூபில் 

My E-books in Tamil and English 

பேச்சுத் தமிழ் - ஊக்கப் பேச்சு

 பேச்சுத் தமிழ் - ஊக்கப் பேச்சு

-----------------------------------------------

பேச்சுத் தமிழ் - யூடியூபில் 

My E-books in Tamil and English 


ஒளியின் வலி - கவிதை வாசிப்பு

 ஒளியின் வலி - கவிதை வாசிப்பு

-----------------------------------------------------------

ஒளியின் வலி - யூடியூபில் 

My E-books in Tamil and English 

இடப் பெயர்ச்சி - கவிதை வாசிப்பு

 இடப் பெயர்ச்சி - கவிதை வாசிப்பு

---------------------------------------------------------------

இடப் பெயர்ச்சி - யூடியூபில் 

My E-books in Tamil and English 

தி.ஜா.ரா . சிறுகதை - மதிப்புரை

 தி.ஜா.ரா . சிறுகதை - மதிப்புரை

-------------------------------------------------

தி.ஜா.ரா . சிறுகதை - யூடியூபில் 

My E-books in Tamil and English 

பண்டிகைக் காலம் -ஊக்கப் பேச்சு

 பண்டிகைக் காலம் -ஊக்கப் பேச்சு

---------------------------------------------------------

பண்டிகைக் காலம்  - யூடியூபில்

My E-books in Tamil and English 

சேலை எடுக்கும் வேலை - கவிதை வாசிப்பு

 சேலை எடுக்கும் வேலை - கவிதை வாசிப்பு

------------------------------------------------------------------------

சேலை எடுக்கும் வேலை - யூடியூபில் 

My E-books in Tamil and English

புத்தக அறை - கவிதை வாசிப்பு

 புத்தக அறை - கவிதை வாசிப்பு

-------------------------------------------------------

புத்தக அறை - யூடியூபில் 

My E-books in Tamil and English

பேச்சு முறை - ஊக்கப் பேச்சு

 பேச்சு முறை - ஊக்கப் பேச்சு

--------------------------------------------------

பேச்சு முறை - யூடியூபில் 

My E-books in Tamil and English 

காந்தி ஜெயந்தி - கவிதை வாசிப்பு

 காந்தி ஜெயந்தி - கவிதை வாசிப்பு

---------------------------------------------------------

காந்தி ஜெயந்தி - யூடியூபில் 

My E-books in Tamil and English 

கவிதை மதிப்புரை - விருட்சம் நிகழ்வு

 கவிதை மதிப்புரை - விருட்சம் நிகழ்வு

---------------------------------------------------------------------

கவிதை மதிப்புரை - யூடியூபில் 

My E-books in Tamil and English 

பாட்டுப் பாடவா - குவிகம் நிகழ்வு

 பாட்டுப் பாடவா - குவிகம் நிகழ்வு

----------------------------------------------------------

பாட்டுப் பாடவா - யூடியூபில் 

My E-books in Tamil and English 

சிறுகதை மதிப்புரை - நவீனவிருட்சம் நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - நவீனவிருட்சம் நிகழ்வு

-------------------------------------------------------------------------

சிறுகதை மதிப்புரை - யூடியூபில் 

My E-books in Tamil and English

சாலைப் பொழுது - கவிதை வாசிப்பு

 சாலைப் பொழுது - கவிதை வாசிப்பு

-----------------------------------------------------------------

சாலைப் பொழுது - யூடியூபில் 

My E-books in Tamil and English 

உறவும் பிரிவும் - கவிதை வாசிப்பு

 உறவும் பிரிவும் - கவிதை வாசிப்பு

--------------------------------------------------------------

உறவும் பிரிவும் - யூடியூபில் 

My E-books in Tamil and English

திங்கள், 7 டிசம்பர், 2020

பெண் வரவேற்பு - கவிதை

 பெண் வரவேற்பு  - கவிதை 

----------------------------------------------------

எங்கள்  பிறப்பிற்கு வரவேற்பு 

பெற்றோரின் பெருமூச்சில் 


எங்கள் இளமைக்கு வரவேற்பு 

ஏராளப் பார்வைகளில் 


எங்கள் அழகுக்கு வரவேற்பு 

பார்ப்பவர்கள் பார்த்தால்தான் 


எங்கள் அறிவிற்கு வரவேற்பு 

ரசிப்பவர்கள் ரசித்தால்தான் 


எங்கள் கண்களுக்கு வரவேற்பு 

காதலரின் கண்ணீரே 


எங்கள் இதயத்தின் வரவேற்பு 

எம்மவரின் ஏக்கத்தில் 


எங்கள் கல்யாண வரவேற்பு 

காசுகளைக் கொடுத்தால்தான் 


எங்கள் புக்ககத்தில் வரவேற்பு 

புருஷனுக்குப் பணிந்தால்தான் 


எங்கள் வாழ்க்கைக்கு வரவேற்பு 

வருகின்ற கனவுகளில் 


எங்கள் இன்பத்தின் வரவேற்பு 

என்றைக்கும் எதிர்பார்ப்பில் 

-------------------------------------நாகேந்திர  பாரதி 

My E-books in Tamil and English


திங்கள், 30 நவம்பர், 2020

விளையாட்டு முகங்கள் - கவிதை

 விளையாட்டு முகங்கள் - கவிதை 

------------------------------------------------------

நமது புறங்களில் 

அகங்களின் முகங்கள் 


அவையும் 

முலாம் பூசிய முகங்கள் 


அடுத்தவரின் 

அனுமானத் தவறுகளில் 


சில நேரங்களில் 

அவர்களின் கர்வங்கள் 


பல நேரங்களில் 

கர்வ பங்கங்கள் 

----------------------------நாகேந்திர  பாரதி 

My E-books in Tamil and English

புதன், 25 நவம்பர், 2020

யுகப் புரட்சி - கவியரங்கக் கவிதை

யுகப் புரட்சி -  கவியரங்கக் கவிதை 

-----------------------------------------------------------------

கெட்டவர்க ளாயிருப்போம், கேடு செய்வோம்  

     கீழ்ஜாதி என்று பேசி கிழித்திடுவோம் 

பட்ட மரம், பதியிழந்தாள், விதவை  என்போம் 

      பதினாறை  அறுபதிற்கு பரிசளிப்போம்  

குட்டிடுவோம் குனிபவரை, குரங்கைப் போல 

       கூரை  விட்டு  கூரை  தாவி குதித்திடுவோம் 

எட்டாகச் செய்திடுவோம்,  ஏழைச்  சைபர் 

       எம்மிடத்தில் அகப்பட்டால் பிழிந்திடுவோம்  

ஏன் வேண்டும் யுகப் புரட்சி,  இந்த  மண்ணில்  

       என்னப்பா  குறைச்சல் இப்போ புரட்சி பூக்க 


பெண்களென்றால்  தெய்வமென்போம், பெற்ற நெஞ்சம் 

       பேதலிக்கக் கேட்டிடுவோம் சீத னங்கள் 

வண்ண மயில் பெண்ணரசி வாலிபத்தை 

       சீதனமாய் எண்ண  மாட்டோம், வட்ட நிலா  

புன்னகைக்கும் பூமுகத்தை, புதிய வண்டை , 

         பூத்த மலர்க் கூட்டத்தை, புன்சிரிப்பை ,

கன்னத்தில் விழுகின்ற குழியை,  அந்த 

         காவியத்தை  விட்டு, சீரைக்  கேட்கின்றோம் 

ஏன்  வேண்டும் யுகப் புரட்சி இந்த மண்ணில் 

          என்னப்பா குறைச்சலிப்போ புரட்சி  பூக்க  

-----------------நாகேந்திர  பாரதி   

(1971 இல் கவிஞர் மீரா அவர்கள் முன்னிலையில் சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் நினைவுக் கல்லூரிக் கவியரங்கில் வாசித்த  கவிதையின் ஒரு பகுதி . அது ஒரு காலம் )

My E-books in Tamil and English

செவ்வாய், 24 நவம்பர், 2020

புதுமைப் பித்தனின் ' சிறுகதை - மதிப்புரை

 

புதுமைப்  பித்தனின் ' சிறுகதை -  மதிப்புரை

 நவீன விருட்சம்  நிகழ்வு on 21/11/2020

---------------------------------------------------------------------------

 சிறுகதை மன்னன் புதுமைப் பித்தனின் 'குப்பனின் கனவு' என்ற சிறுகதையைப் படித்த அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் .

முதலில் ஒரு சின்னஞ்  சிறிய கதைச் சுருக்கம். குப்பன் ஒரு ரிக்ஷாக்காரன்.ஒரு மழை நாளில்  சவாரிக்கு ஒரு ஆள் கூட வராமல் அலைகிறான். ஒரு  நாலணா சாராயம் குடிக்க கிடைக்காதா என்று ஏங்குகிறான். அப்போது ரிக்ஷாவில்  இருந்தபடி ஒரு  கனவு. 

பணக்காரனாகி ஆங்கில மதுக்கடைக்கு செல்கிறான். இவன் ரிக்ஷாவில் நனவில் ஏற மறுத்த   ஒரு கனவானிடம் நாலணாவைத் தூக்கி எறிகிறான். கனவு கலைகிறது . நாலணா  கொடுப்பதாக சொல்லி இவன் ரிக்ஷாவில் ஏறுகிறான்   ஒருவன். அந்த  நாலணா சாராய நினைப்பிலேயே ரிக்ஷாவை ஓட்டுகிறான்.இதற்கு '  நாலணா ' என்றே  தலைப்பு  வைத்திருக்கலாம் என்று  தோன்றுகிறது. 

-----------------------------------

என்னைப் போன்று மேலோட்டமாக  படிப்பவர்களுக்கு  இது ஒரு குடிகார ரிக்ஷாக்காரனின்  வாழ்க்கையைச் சொல்லி இரக்க உணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறுகதை  போலத்தான் தோன்றும். ஆனால்  புதுமைப் பித்தனை உணர்ந்து படிப்பவர்களுக்கு இது  பொது உடைமைத்  தத்துவத்தின் பக்கம்  வாசகர்களை  ஈர்க்கும் ஒரு  சமுதாய சிந்தனை சிறுகதையாகத்  தான்  வெளிப்படும்.

இடத்தை காட்சிப் படுத்துவதிலும்  பொருளில் உணர்ச்சிப் படுத்துவதிலும் நம்மை ஒரு நோக்கம் நோக்கி  ஏவி விடுவதிலும் தான் ஒரு வாசகனை எழுத்தாளன் வசப் படுத்துகிறான். இந்த சிறு கதையில்  அது நிறைவேறுகிறது.  சில உதாரணங்கள்.

----------------------------

முதலில் இடத்தைக் காட்சிப் படுத்துதல் .

அந்த மழை  நாளை எப்படி வர்ணிக்கிறார்  கேளுங்கள் .

அன்றைக்கு நாள் முழுவதும் மழை சிணுசிணுத்துக் கொண்டிருந்தது. ஒரேயடியாக இரண்டு மணி நேரமோ மூன்று மணி நேரமோ அடித்து வெறித்தாலும் கவலையற்று வேலை பார்க்கலாம். இப்படி நாள் முழுவதும் அழுது  கொண்டிருந்தால் ?.தலையில் போட்டிருந்த ஓட்டைத் தொப்பி. அது எந்த வெள்ளைக்காரன்  போட்டதோ.  அதுவும்  தொப்பலாக நனைந்து விட்டது. தொப்பியிலும் உள்பக்கம்  ஈரம் கவரியது என்றால் வேஷ்டியைக் கூட பிழிந்து கட்ட நேரமில்லை.

அந்த ரிக்ஷாக்காரனின்  தொப்பித் தோற்றம் நம்  முன் தெரிகிறது தானே..   அந்த சிணுசிணுக்கும் மழைத்தூறல் நம் மீதும் தெறிக்கிறது  தானே.

--------------------------------------

அடுத்து கதை பொருளில் நம்மைக்  கட்டிப் போடுதல்.

மழை நாளில் சவாரிக்கு அலையும்  ரிக்ஷாக்காரனின்  மன நிலை அவன் குடும்ப நிலை , சிறுகதை மன்னனின் வார்த்தைகளில்.இதோ

ஒரு நாலணா கிடைத்தால் வீட்டிலே  எறிந்து  விட்டாலாவாது முடங்கலாம் .இப்பொழுது ஒரு மொந்தை சாராயம அடித்தால்   என்ன குஷியாக இருக்கும்.  நாவில் ஜலம் ஊறுகிறது..

குப்பன்  பொண்டாட்டி நாலு  காசு  பார்க்காமலா  இருப்பாள். அவளும் கொஞ்சம் '  தொழில் ' நடத்துகிறவள் தான். இப்போ எந்த ...  பத்தினியா இருக்கா  . அவனுக்கும் தெரியும் .அவனுக்குத் தெரியும் என்று அவளுக்குத்  தெரியும் .அவ நாலு காசு பாத்திருந்தா வீட்டுக் கவலை ஓய்ஞ்சுது .  இவனுக்கும் இந்த நாலணா கிடைச்சா சாராயக் கடைக்காச்சு.

 

அந்த ஏழை தொழிலாளியின் சாராய மன  நிலையும்,  வீட்டுக் கவலை போக்க விலை போகும் மனைவியின் துயர்  நிலையும் , இந்த அடித்தட்டு மக்கள் சிலரின்  வாழ்க்கைப்  பொருளை நமக்கு விளக்குகிறது அல்லவா.

-------------------------------------------

இடத்தையும் பொருளையும் காட்டிவிட்டு அடுத்து  நம் மீது சமுதாய சிந்தனையை ஏவி விடுகிறார் பாருங்கள்.

 

சட்டை போட்ட பேர்வழிகளை கண்டால் அவனுக்கு  எரிச்சலாக இருந்தது.திருட்டுப் பசங்க.  ஒரு பயலாவது ரிக்ஷாவில் ஏற கூடாதா. அந்த மனிதனை கிழித்து  விடலாமா என்று கோபம். என்ற  வரிகளில்  தெறிக்கும் ஏழையின் எரிச்சல் .

அடுத்து  வரும் கனவிலே  ' பணக்காரனாகி இவனை ரிக்ஷாவில்  இழுத்து செல்லும் குப்பனுக்கு ' இந்தாடா நாலணா ,  கூட  ஓரணா இனாம் ' என்று கொடுப்பது.  இவனை ஒத்த  ஏழைகட்கு உதவி  செய்ய நினைக்கும்  மனதின் வெளிப்பாடு.   முன்பு தன் ரிக்ஷாவில்   ஏற  மறுத்த கனவானைப் பார்த்து 'குப்பாயி வெளியே  புடிச்சு   தள்ளு  அவனை.. ஓடிப் போ. கூச்ச போடாதே  இது குப்பாயீ  வீடு தெரிஞ்சுதா. வேணும்னா  வெளியே ரிக்ஷா கீது. .இஸ்து பொய்ச்சிக்கோ ' என்ற வரிகளில்  பணக்காரனிடம் கோபப்படும்  குணமும் , மனைவி ஒழுக்கமாக  இருக்க வேண்டும் என்ற ஆசையும் வெளிப்படுகிறது ..

இப்படி கோபம்,  எரிச்சல்,  குணம் , என்று  அந்த ஏழை  குப்பனின் ஆசைகள் அந்த கனவிலே வெளிப்படும்  போது

சமுதாய சிந்தனையை வாசகனின் மனதில் விதைக்கிறார் அல்லவா.

--------------------------------------

 

இப்போது ரிக்ஷா லாந்தல் கம்பத்தில் மோதி கனவு  கலைகிறது..

பிராட்வேக்கு வர ஒருவர்  நாலணா கொடுக்க முன் வருகிறார். 

குப்பனுக்கு சற்று முன்  இழந்த முதலாளிப் பதவியை  விட அந்த  நாலணா மிகுந்த களிப்பை தந்தது . 'நாலணா ' என்ற வார்த்தையோடு கதை  முடிகிறது...

       

காடு வெளஞ்சன்ன மச்சான்   , நமக்கு கையும்  காலும்  தானே மச்சான் ' என்ற பட்டுக்கோட்டையின்  பாட்டு வரிகளை நினைவு  படுத்தும்   படி கதை முடிகிறது.

 

ஒரு பொது உடைமை  சமுதாயம்  பூக்காதா , ஏழைகள் வாழ்வில் இன்பம்  மலராதா  என்ற  எண்ணத்தை நம்முள்ளே,  இடம்,   பொருள் ஏவல் பாணியிலே  ஏற்றி விடும்  இந்த  சிறுகதை தந்த  புதுமைப்பித்தன்  சிறுகதை  மன்னன் மட்டும் அல்ல. பொதுவுடைமை சிந்தனைக்காரன்  என்ற  உண்மையும்  புரிகிறது  அல்லவா.  நன்றி. வணக்கம்.

------------------------------நாகேந்திர  பாரதி

 My E-books in Tamil and English

.

.

சனி, 14 நவம்பர், 2020

தீபத்தின் ஒளியும் திரியின் வலியும்

 தீபத்தின் ஒளியும் திரியின் வலியும் 

----------------------------------------------------------

அதிகாலை உசுப்பி விட்ட 

தாத்தாவைக்  காணோம் 


ஓலை வெடி  கொளுத்திப் போட்ட 

அப்பாவைக்  காணோம் 


உச்சந்தலை எண்ணெய் வைத்த 

அப்பத்தா காணோம் 


பலகாரம் சுட்டுப் போட்ட 

அம்மாச்சி காணோம் 


ஒவ்வொரு உயிராய் 

ஊர் விட்டுப் போன பின் 


தீபத்தின் ஒளியாகத் 

தெரிந்தது அப்போது 


திரியின் வலியாக 

எரிந்தது  இப்போது 

------------------------------நாகேந்திர பாரதி 

My E-books in Tamil and English

வியாழன், 12 நவம்பர், 2020

உயிரும் மழையும் - கவிதை

 உயிரும் மழையும் - கவிதை 

----------------------------------------------------

மண்ணிலும்  விண்ணிலும் 

இருப்பது கண்டேன் 


ஆக்கமும் அழிவும் 

செய்வது கண்டேன் 


பழியும் புகழும் 

சேர்வது கண்டேன் 


முதலும் முடிவும் 

ஆவதும் கண்டேன் 


உயிரும் மழையும் 

ஒன்றாய்க்  கண்டேன் 

---------------------------------நாகேந்திர பாரதி 

My E-books in Tamil and English

சனி, 7 நவம்பர், 2020

இடப் பெயர்ச்சி - கவிதை

 இடப்  பெயர்ச்சி - கவிதை 

------------------------------------------------

உறிஞ்சுகின்ற மண் பார்த்து

பழக்கப்பட்ட மழைக்கு


தெறிக்க வைக்கும் கல் தரைகள்

திடுக்கிடத்தான் வைக்கும்


திரும்பிப் பார்த்து மேலிடத்தில்

தன் வலியைச் சொல்லும்


கான்கிரீட் காடுகளைக்

கடந்து செல்லும் மேகம்


காய்ந்து விட்ட மண்ணோடு

கருகி விட்ட மனத்தோடு


காத்துக் கிடக்கின்ற

கிராமங்களை நோக்கி

———————————நாகேந்திர பாரதி

My E-books in Tamil and English

திங்கள், 26 அக்டோபர், 2020

நினைவுகளின் கூடாரம் - கவிதை

 நினைவுகளின் கூடாரம் - கவிதை 

-----------------------------------------------------------

நினைவுகளின் கூடாரமாய்

வீடுகள்


காலத்தின் மாற்றத்தில்

மாறிக் கொண்டு


உள்ளிருந்து வெளியே

விளையாடிக் கொண்டு


வெளியிருந்து உள்ளே

உறங்கிக் கொண்டு 


உற்றுப் பார்ப்போர்

யாரும் உண்டோ

————————நாகேந்திர பாரதி

My E-books in Tamil and English

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

புத்தக அறை - கவிதை

 புத்தக அறை - கவிதை 

-----------------------------------------

புத்தகப் பக்கங்களைப்

புரட்டும் பொழுது


அறைக்குள் வந்து

சேர்ந்தவை எத்தனை


அருகருகே கிடக்கும்

ஆகாயமும் சாலையும்


நகரத்து வீதிகளில்

கிராமத்து வயல்கள்


திரும்பி வந்து விட்ட

செத்துப் போனவர்கள்


சேர்ந்தே நடக்கும்

சாவும் கல்யாணமும்


அத்தனையும் பார்த்து

திகைத்துப் போனேன்


புத்தகத்தை மூடினேன்

அறையும் அமைதியானது

———நாகேந்திரபாரதி

My E-books in Tamil and English

வெள்ளி, 9 அக்டோபர், 2020

காற்றில் பறக்கும் கோடுகள் -கவிதை

 காற்றில் பறக்கும் கோடுகள் -கவிதை 

------------------------------------------------------------

ஓவியத்தின் கோடுகளும்

கவிதையின் கோடுகளும்


கட்டம் கட்டாமல்

காற்றில் பறந்து விடும்


கோடிழுத்த  கையே

படைத்தவனின் பொறுப்பு


காற்றிழுத்த கற்பனையோ

பார்த்தவனின் விருப்பு

—————————————-நாகேந்திரபாரதி

My E-books in Tamil and English

சனி, 3 அக்டோபர், 2020

காந்தி ஜெயந்தி - கவிதை

காந்தி ஜெயந்தி - கவிதை 

------------------------------------------

காந்தி ஜெயந்தி

விடுமுறை ஞாபகங்கள்


ஆரம்பப் பள்ளியில்

ஆரஞ்சு மிட்டாய் ஞாபகம்

உயர்நிலைப் பள்ளியில்

உறுதிமொழி ஞாபகம்


கல்லூரிக் காலத்தில்

ஊர்ப்பயணம் ஞாபகம்

வேலைப் பருவத்தில்

விடுமுறை ஞாபகம்


கல்யாணம் ஆனதும்

கடை வீதி ஞாபகம்

குழந்தைகள் வந்ததும்

சுற்றுலா ஞாபகம்


காந்தி ஜெயந்தியின்

விடுமுறை தினத்தன்று

சத்தியாக் கிரகமோ

சத்திய சோதனையோ

ஞாபகம் வந்ததாய்

ஞாபகம் இல்லை


நவீன விருட்சம்

நடத்தும் விழாவிலே

காந்திஜி ஞாபகம்

வந்து விழுகிறது

————————————-நாகேந்திர பாரதி

My E-books in Tamil and English


சனி, 26 செப்டம்பர், 2020

அலை வரிசை - கவிதை

 இசை மேதை எஸ் பி பி அவர்களுக்கு அஞ்சலி 

அலை வரிசை - கவிதை 

———————-----------------

கேட்க முடிந்த

அலைவரிசையில்

கேட்டுக் கொண்டிருக்கிறோம்

நாம்


கேட்க முடியாத

அலை வரிசைக்கு 

கிளம்பிப்   போய் விட்டது

 நாதம்  


——————————————நாகேந்திர பாரதி

My E-books in Tamil and English


வியாழன், 24 செப்டம்பர், 2020

மௌனத்தின் சப்தம் - கவிதை

 மௌனத்தின் சப்தம் - கவிதை 

-----------------------------------------------------

இலைகளின் மௌன சப்தம் 

வேர்களை நீள  வைக்கும் 


சிலைகளின் மௌன சப்தம் 

சிற்பியைப் பேச வைக்கும் 


வறுமையின் மௌன சப்தம் 

புரட்சியைப் பூக்க வைக்கும் 


கருமையின் மௌன சப்தம் 

வெண்மையை விளங்க வைக்கும் 


இயற்கையின் மௌன சப்தம் 

உலகினை இயங்க வைக்கும் 


மௌனத்தின் மௌன சப்தம் 

மனதினை  மலர வைக்கும் 

-------------------------------------------நாகேந்திரபாரதி 

My E-books in Tamil and English

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

அமைதியின் ஆர்ப்பாட்டம்- கவிதை

 அமைதியின் ஆர்ப்பாட்டம்- கவிதை 

---------------------------------------------------------------

இயற்கையின் உலகப் 

போக்கின் புலம்பலை 


உற்றுப் பார்த்து 

அடங்கிக் கிடக்கும் 


அமைதியின் ஆர்ப்பாட்டம் 

என்னவென்று சொல்ல 

----------------------------------நாகேந்திரபாரதி 

My E-books in Tamil and English


வியாழன், 17 செப்டம்பர், 2020

பழைய வீடு - கவிதை

 பழைய வீடு - கவிதை 

--------------------------------------

அப்பத்தா சிலுக்கெடுத்த 

முற்றத்தைக் காணோம் 


அம்மாச்சி தோசை சுட்ட 

அடுப்படியைக் காணோம் 


தாத்தா படுத்திருந்த 

படுக்கையறை காணோம் 


சின்னம்மாக்கள் விளையாடிய 

திண்ணையைக் காணோம் 


உறவுகளால் கட்டிய 

செங்கல் வீடு 


உரு மாறி  இப்போது 

சிமெண்டு வீடாய் 

--------------------------நாகேந்திர பாரதி 

My E-books in Tamil and English

திங்கள், 7 செப்டம்பர், 2020

நிழல் நிறுத்தம் - கவிதை

 நிழல் நிறுத்தம் - கவிதை 

------------------------------------------------

நான் நடந்து கொண்டு இருந்தேன் 

என்னுடைய நிழலும் 

என்னோடு சேர்ந்து 

நடந்து கொண்டே வந்தது 


போகச் சொன்னேன் 

போக மாட்டேன் என்றது 


காலால் உதைத்துப் பார்த்தேன் 

அப்படியும் போகவில்லை 


என்னுடைய நிழல் கூட 

என் பேச்சைக் கேட்பதில்லை 


சூரியனிடம் தான் 

சொல்லிப் பார்க்க வேண்டும் 

---------------------------------------------நாகேந்திரபாரதி 

My E-books in Tamil and English சனி, 15 ஆகஸ்ட், 2020

பூனையும் புலியும் - கவிதை

பூனையும் புலியும் - கவிதை 

————————---------------------

தொட்டாலும் பட்டாலும்

துடைக்கின்ற கொரோனாக்  காலத்தில்

பூனையைப்  பார்த்தாலும்

புலியாகத் தெரிகிறது


உள்ளுக்குள் படிந்து விட்ட

அழுக்கான பயத்தால்

'பாய்ந்து விடுமோ

பிறாண்டி விடுமோ' 


புலியும் கூட

பூனையின் குடும்பம் தானே

எப்போதோ படித்தது

இப்போது  ஞாபகம் வரும்


மடியில் கிடந்து

கொஞ்சிய பூனை

உற்றுப் பார்த்து விட்டு

ஒதுங்கிப் போகும்


கொரோனா முடிந்து

கூப்பிடும் போது

பூனையாய் வருமா

புலியாய் வருமா


—————————— நாகேந்திர  பாரதி

குறிப்பு : நண்பர் திரு. அழகிய சிங்கரின் ' நவீன விருட்சம்' இதழின் 'வானலை கவிஞர் சந்திப்பில்'  ஆகஸ்ட் 14 அன்று வாசித்த கவிதை 

My E-books in Tamil and English

வியாழன், 9 ஜூலை, 2020

நிலமும் நீரும் - கவிதை

நிலமும் நீரும் - கவிதை 
-----------------------------------------
காட்டிலும் மலையிலும் 
ஓடி விளையாடியும் 
ஒளிந்து விளையாடியும் 
விலங்குகளும் பறவைகளும் 

கடலிலும் ஆற்றிலும் 
கூடி விளையாடியும் 
கொஞ்சி விளையாடியும் 
மீன்களும் தாவரங்களும் 

நிலமும் நீரும் 
தனதென்று நினைத்த 
மனிதன் மட்டும் 
வீட்டினில் தனியே 

ஆகாயம் அவனைப் பார்த்து 
சிரித்துக் கொண்டு 
--------------------------------------நாகேந்திரபாரதி 

திங்கள், 2 மார்ச், 2020

அறிவூட்டும் பேச்சின் அவசியம் -ஊக்கப் பேச்சு

அறிவூட்டும்  பேச்சின் அவசியம்  -ஊக்கப் பேச்சு
---------------------------------------------------------------------------

அறிவூட்டும்  பேச்சின் அவசியம் - யூடியூபில்
--------------------------------------------------------------------------

Humor in Business - Poetry Book