சனி, 6 ஜூலை, 2024

போகும் பாதையெங்கும் - கவிதை

 போகும் பாதையெங்கும் - கவிதை 

————

போகும் பாதையெங்கும்

பூவும் இருக்கலாம்

முள்ளும் இருக்கலாம்


முள் குத்தும் வலியைத்

பூ தடவி ஆற்றலாம்

புண் ஆகா திருக்கலாம்


பார்த்து நடப்பதற்கும்

பழக்கம் ஆகலாம்

பக்குவம் கிடைக்கலாம்


வாழ்க்கைப் பாதையிலே

வசந்தமும் இருக்கலாம்

வாட்டமும் இருக்கலாம்


நடப்பது என்பது

முடிவான பின்பு

நடப்பது நடக்கட்டும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English  


2 கருத்துகள்:

ஒத்தைப் பனை மரம் - கவிதை

ஒத்தைப் பனை மரம் - கவிதை  ------------------------- கள்ளு இறக்கிய காலத்தில் காத்துக் கிடந்தவர் பல பேர் கதிர் அறுத்த காலத்தில் கஞ்சி குடித்தவ...