சாதனையின் வேர்கள் இவை - கவிதை
---------------------------------------------------
ஆடு கடித்தாலும்
அடுத்துத் துளிர்கிறது இலை
நனைத்துப் போனாலும்
அணைக்க வருகிறது அலை
மாலை மறைந்தாலும்
காலை வருகிறது கதிர்
முன்னால் முடிந்ததெல்லாம்
பின்னால் நினைப்பதில்லை இவை
சாதனை வேர்களின்
சங்கதியின் சாட்சிகளே இவை
---------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக