பூக்களைப் பறியுங்கள் - கவிதை
--------------------------------
பூக்களைப் பறிக்காதீர்கள்
என்று சொல்லாதீர்கள்
இவை பறிக்க வேண்டிய
பூக்கள்
பறித்துக் கசக்க வேண்டிய
பூக்கள்
கசக்கி முகர வேண்டிய
பூக்கள்
முகர்ந்து உணர வேண்டிய
பூக்கள்
உணர்ந்து பகிர வேண்டிய
பூக்கள்
ஆம் , இவை
புத்தகப் பூக்கள்
———-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
நல்ல சிந்தனை... புத்தகப் பூக்கள் முகர வேண்டியவையே...
பதிலளிநீக்கு