சனி, 16 நவம்பர், 2024

இருட்டின் வெளிச்சம் - கவிதை

 இருட்டின் வெளிச்சம் - கவிதை 

---------------------------

வெளிச்சத்தைத் திருடியவன்

விட்டுச் சென்ற

அடையாளக் குறிகளாய்

ஆகாயத்தில் நட்சத்திரங்கள்


இருட்டு

இறைவன் போர்த்திக்கொண்ட

கனத்த போர்வை

அவனைத் தேடுபவர்கள்

இங்கே திண்டாடுவார்கள்

அவனைத் தெரிந்தவர்கள்

இதைக் கொண்டாடுவார்கள்


இது ஒரு

கருப்பு வெளிச்சம்

இது

அடையாளம் காட்டும்

அகங்கள் ஆயிரம்


இங்கே தொலைந்து போனவர்கள்

தங்களைத்

திரும்பப் பெற்றவர்கள்


----------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அழுக்கின் அழுக்கு - கவிதை

 அழுக்கின் அழுக்கு - கவிதை  -------------------- அழுக்கின் அழுக்கிற்கு ஆரம்பம் ஆராய்ந்தால் அறியாமை இருளகற்றும் தீக்குச்சி கிடைத்து விடும் வன...