சனி, 26 செப்டம்பர், 2020

அலை வரிசை - கவிதை

 இசை மேதை எஸ் பி பி அவர்களுக்கு அஞ்சலி 

அலை வரிசை - கவிதை 

———————-----------------

கேட்க முடிந்த

அலைவரிசையில்

கேட்டுக் கொண்டிருக்கிறோம்

நாம்


கேட்க முடியாத

அலை வரிசைக்கு 

கிளம்பிப்   போய் விட்டது

 நாதம்  


——————————————நாகேந்திர பாரதி

My E-books in Tamil and English


வியாழன், 24 செப்டம்பர், 2020

மௌனத்தின் சப்தம் - கவிதை

 மௌனத்தின் சப்தம் - கவிதை 

-----------------------------------------------------

இலைகளின் மௌன சப்தம் 

வேர்களை நீள  வைக்கும் 


சிலைகளின் மௌன சப்தம் 

சிற்பியைப் பேச வைக்கும் 


வறுமையின் மௌன சப்தம் 

புரட்சியைப் பூக்க வைக்கும் 


கருமையின் மௌன சப்தம் 

வெண்மையை விளங்க வைக்கும் 


இயற்கையின் மௌன சப்தம் 

உலகினை இயங்க வைக்கும் 


மௌனத்தின் மௌன சப்தம் 

மனதினை  மலர வைக்கும் 

-------------------------------------------நாகேந்திரபாரதி 

My E-books in Tamil and English

திங்கள், 21 செப்டம்பர், 2020

தரையின் தவிப்பு - கவிதைதரையின் தவிப்பு - கவிதை 

----------------------------------------------------

அந்தப் பொட்டலின் மேல் தான்

ஒரு வீடு இருந்தது


முற்றம் இருந்தது

அடுப்படி இருந்தது


தட்டு முட்டுச் சாமான்கள்

ஏராளம் இருந்தன


பிறந்தும் வளர்ந்தும்

இருந்தவர்கள் பல பேர்


இப்போது 

தரை மட்டும் கிடக்கிறது

தனியாகத் தவித்தபடி

--------------------------------------நாகேந்திர பாரதி

My E-books in Tamil and English


ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

பூவுக்குள் பூகம்பம்- கவிதை

 பூவுக்குள் பூகம்பம்- கவிதை 

--------------------------------------------------

'அப்பா அது வேணும்' என்று கெஞ்சும் பிள்ளையிடம்

முறைப்புப் பார்வை வைக்கும் அப்பாக்கள்


'அம்மா வலிக்குது' என்று அழும் குழந்தையின்

கையிழுத்து  விரைகின்ற அம்மாக்கள்


வீட்டுப் பாடம் எழுதாத காரணத்தைக் கேட்காமல்

விரல் நோக அடிக்கின்ற ஆசிரியர்கள்


சிறுபிள்ளை என்றெல்லாம் சிந்தித்துப் பார்க்காமல்

பெரும் வேலை வாங்குகின்ற வியாபாரிகள்


பூவுக்குள் புதைந்துள்ள பூகம்பம் வளர்ந்து

வயதாகி வெடிக்கையிலே வன்முறைகள்

------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

My E-books in Tamil and English

சனி, 19 செப்டம்பர், 2020

சாலைப் பொழுது - கவிதை

 சாலைப் பொழுது - கவிதை 

---------------------------------------------

வாகனங்களும் மனிதர்களும்

வருவதால் போவதால் வரும்

வலிகளைப் பொறுத்துக் கொண்டு


வெயிலும் மழையும் விழுந்து

வாட்டுவதால் வரும்

இடைஞ்சல்களைத் தாங்கிக் கொண்டு


அந்த நீண்ட சாலை


ஆலமரத்தின் நிழல் தன் மேல்

சுருங்கியும் விரிந்தும் விழுவதை

வேடிக்கை பார்த்துக் கொண்டு

பொழுதைப்  போக்குகிறது

--------------------------------------------------------நாகேந்திர பாரதி

My E-books in Tamil and English

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

ஆசை வட்டம் - கவிதை

 ஆசை வட்டம் - கவிதை 

---------------------------------------

நடந்து போகும் போது 

சைக்கிளில் போக ஆசை

சைக்கிளில் போகும் போது

 ஸ்கூட்டரில் போக ஆசை

ஸ்கூட்டரில் போகும் போது 

 காரில் போக ஆசை

காரில் போகும் போது

சர்க்கரை வியாதியால் 

நடந்து போகும் ஆசை 

----------------------------------------------நாகேந்திர பாரதி

My E-books in Tamil and English


அமைதியின் ஆர்ப்பாட்டம்- கவிதை

 அமைதியின் ஆர்ப்பாட்டம்- கவிதை 

---------------------------------------------------------------

இயற்கையின் உலகப் 

போக்கின் புலம்பலை 


உற்றுப் பார்த்து 

அடங்கிக் கிடக்கும் 


அமைதியின் ஆர்ப்பாட்டம் 

என்னவென்று சொல்ல 

----------------------------------நாகேந்திரபாரதி 

My E-books in Tamil and English


வியாழன், 17 செப்டம்பர், 2020

காதல் பாசாங்கு - கவிதை

  காதல் பாசாங்கு - கவிதை 

-------------------------------------------

பார்வையில் பிரியம் 

பேச்சில் விஷமம் 


வராவிட்டால் விசாரிப்பு 

வந்தால் புறக்கணிப்பு 


கூட்டத்தில் அரட்டை 

தனிமையில் மௌனம் 


இங்கிட்டும் போகாம 

அங்கிட்டும் போகாம 


ரெண்டும் கெட்டானாய் 

என்னடி பாசாங்கு 

-----------------------------------------நாகேந்திரபாரதி 

My E-books in Tamil and English


பழைய வீடு - கவிதை

 பழைய வீடு - கவிதை 

--------------------------------------

அப்பத்தா சிலுக்கெடுத்த 

முற்றத்தைக் காணோம் 


அம்மாச்சி தோசை சுட்ட 

அடுப்படியைக் காணோம் 


தாத்தா படுத்திருந்த 

படுக்கையறை காணோம் 


சின்னம்மாக்கள் விளையாடிய 

திண்ணையைக் காணோம் 


உறவுகளால் கட்டிய 

செங்கல் வீடு 


உரு மாறி  இப்போது 

சிமெண்டு வீடாய் 

--------------------------நாகேந்திர பாரதி 

My E-books in Tamil and English

புதன், 16 செப்டம்பர், 2020

ஓர சீட்டு ஆசை - கவிதை

 ஓர சீட்டு ஆசை - கவிதை 

-------------------------------------------

தொங்கிக் கொண்டு போகும்போது

உள்ளே போக ஆசை


உள்ளே போன பின்பு

உரசாமல் நிற்க ஆசை


உரசாமல் நின்ற பின்பு

உட்கார்ந்து போக ஆசை


உட்கார்ந்து போகும் போது

ஓர சீட்டு ஆசை


ஓர சீட்டு கிடைத்த பின்பு

வாந்தி வரும் ஓசை

------------------------------------நாகேந்திர பாரதி

My E-books in Tamil and English


செவ்வாய், 15 செப்டம்பர், 2020

சண்டை - கவிதை

  சண்டை  - கவிதை 

-----------------------------------

எப்படியாவது 

சண்டை போடவேண்டும் எங்களுக்கு 


மதங்களுக்கு  இடையே சண்டை 

ஒரே மதமென்றால் 

சாதிகளுக்கு இடையே சண்டை 


ஒரே சாதியென்றால் 

ஊர்களுக்கு இடையே சண்டை 

ஒரே ஊரென்றால் 

தெருக்களுக்கு இடையே சண்டை 


ஒரே தெருவென்றால் 

வீடுகளுக்கு இடையே சண்டை 

ஒரே வீடென்றால் 

உறவுகளுக்கு இடையே சண்டை 


மதக் கலவரம் முதல் 

வீட்டு நிலவரம் வரை 


எப்படியாவது 

சண்டை போடவேண்டும் எங்களுக்கு 


----------------------------------------------நாகேந்திரபாரதி 

My E-books in Tamil and English


சிங்கப்பூர் பேரன் - கவிதை

 சிங்கப்பூர் பேரன் - கவிதை 

-----------------------------------------------

'என்னடா தம்பி இப்படி 

எளச்சிப் போயிட்டே '


'பனியன் ஜட்டி கெடக்கட்டும் 

நான் தொவச்சிப் போடறேன் '


'சாப்பிட்ட  பொறகு  கொஞ்சம் 

தூங்கிட்டுப்  போயேன்பா '


பிரியத்துக்கு மறுபேராய் 

இருந்த அப்பத்தா 


செத்துப் போனப்ப - பேரன் 

சிங்கப்பூரில் இருந்தான் 

----------------------------------நாகேந்திர  பாரதி 

My E-books in Tamil and English


திங்கள், 7 செப்டம்பர், 2020

நிழல் நிறுத்தம் - கவிதை

 நிழல் நிறுத்தம் - கவிதை 

------------------------------------------------

நான் நடந்து கொண்டு இருந்தேன் 

என்னுடைய நிழலும் 

என்னோடு சேர்ந்து 

நடந்து கொண்டே வந்தது 


போகச் சொன்னேன் 

போக மாட்டேன் என்றது 


காலால் உதைத்துப் பார்த்தேன் 

அப்படியும் போகவில்லை 


என்னுடைய நிழல் கூட 

என் பேச்சைக் கேட்பதில்லை 


சூரியனிடம் தான் 

சொல்லிப் பார்க்க வேண்டும் 

---------------------------------------------நாகேந்திரபாரதி 

My E-books in Tamil and English