சனி, 29 பிப்ரவரி, 2020

தேர்வு நேரம் -கவிதை

தேர்வு நேரம் -கவிதை
------------------------------------
படித்தது போலவும் இருக்கும் - பாடம்
படிக்காதது போலவும்   இருக்கும்

புரிந்தது போலவும் இருக்கும் - கேள்வி
புரியாதது போலவும் இருக்கும்

தெரிந்தது போலவும் இருக்கும் - பதில்
தெரியாதது போலவும் இருக்கும்

எழுதியது போலவும் இருக்கும்  - எல்லாம்
எழுதாதது போலவும் இருக்கும்

முடிந்தது போலவும் இருக்கும் - தேர்வு
முடியாதது போலவும் இருக்கும்
--------------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

வியாழன், 27 பிப்ரவரி, 2020

இது போதும் இப்போது - கவிதை

இது போதும் இப்போது - கவிதை
-----------------------------------------------------
பார்த்ததும்  சிரித்ததும்
பழகியதும் அப்போது
நினைப்பதும் மகிழ்வதும்
நெகிழ்வதும் இப்போது
இது போதும் இப்போது

தொட்டதும் தொடர்ந்ததும்
துடித்ததும் அப்போது
விட்டதும் விலகுவதும்
விரும்புவதும் இப்போது
இது போதும் இப்போது
----------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book