புதன், 25 செப்டம்பர், 2019

வாய்ச் சொல் வீணர்கள் - கவிதை

வாய்ச் சொல் வீணர்கள்
--------------------------------------
பட்டம் பெறுவதற்கும்
பணத்தை நம்பி விட்டு

உடனே வேலைக்கும்
கையூட்டுக் கொடுத்து விட்டு

தொழிலுக்கு கூலியினை
கறுப்பிலும் வாங்கி விட்டு

ஓட்டுச் சீட்டினையும்
பண்ட மாற்றம் செய்து விட்டு

உண்டியலில் போட்ட வுடன்
புனிதர் ஆகி விட்டு

நாட்டில் ஊழலென்று
நாகிழியப்  பேசிடுவார்
--------------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book