திங்கள், 15 ஏப்ரல், 2019

ஐம்பூத ஓட்டு

ஐம்பூத ஓட்டு
-----------------------
நிலத்துக்குக் கேடு வராத்
திட்டங்களைத் தீட்டு

நீருக்கு அலையாத
நிலைமையினைக் காட்டு

நெருப்புக்கு இரையாக
ஊழலினை வாட்டு

காற்றுக்கு மாசு வராத்
தொழில்களையே கூட்டு

விண்ணுக்கு நிகராக
நம் வாழ்வை  நாட்டு

ஐம்பூதம் காப்போர்க்கே
அளித்திடுவோம் ஓட்டு
--------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book