விழி, எழு .. - நகைச்சுவைக்
கட்டுரை
------------------------------------------------------------------------------------------------
இந்த 'குட் மார்னிங்
' மெசேஜ் உங்களுக்கு வாட்சப்பிலேயும் பேஸ்புக்கிலேயும் எத்தனை வர்றது. எனக்கு
தினசரி அம்பதாவது வர்றதுங்க.
அதோடு சேர்த்து இப்பல்லாம் சுய முன்னேற்ற கருத்து
வேற அனுப்புறாங்க. அதை படிச்சு முடிக்கிறதுக்குள்ளே
குட் நைட் மெசேஜ்
வர ஆரம்பிச்சுடுது.
' விழி , எழு ' அதிகாலை
நாலு மணிக்கு அதுவும் மார்கழி
மாசக் குளிரில் எப்படிங்க எந்திரிக்கிறது .
அப்புறம்,
' உன் கனவுகள் மெய்ப்படும் ' . அய்யய்யோ
, என் கனவிலே மிருகங்களும் வர்றதே
. மிருகங்கள் கூட எப்படி வாழறது.
என் மனைவி கிட்டே கேட்டேன்.
அவள் சொல்றாள். ' ஏன் , நான் உங்க
கூட வாழலியா' ன்னு
சொல்லிட்டு அப்புறம் சொல்றாள். ' அது ஒரு உதாரணங்க, உங்க
வாழ்க்கையோட நோக்கங்களை
பத்தி சொல்றாங்க.
' எனக்கு
ஏகப்பட்ட நோக்கங்கள் இருக்கே' .
ஏதாவது
பெஸ்ட்டா ஒண்ணை சூஸ் பண்ணுங்க.
என்னை மாதிரி' என்றாள்.
சரின்னு யோசித்துப் பார்த்தேன்.
எனக்கு வாத்தியார் ஆகணும்னு ஆசை. ஆனா பசங்களை
நினைச்சா பயமா இருக்கு. அரசியல்வாதி
ஆகணும்னு ஆசை. ஆனா, இந்த
சோசியல் மீடியா மீம்ஸ் நினைச்சா
பயமா இருக்கு. சரி. நடிகர் ஆகலாம்..
நமக்கு ஒண்ணும் பிரச்னை
இல்லே. நம்ம படத்தைப் பாக்கிறவங்களுக்கு
தானே பிரச்சினை.
முடிவு பண்ணிட்டு உடனே
ஒரு திரைப்படக் கல்லூரிக்கு
போயி அந்த ப்ரின்சிபாலை பார்த்தேன். அவரு
என்னைப் பார்த்ததும் ஆனந்தக் கூச்சல் போட்டார்.
' இது
வரை எங்கே இருந்தீங்க நீங்க.
அசப்பில் அப்படியே சிவாஜி மாதிரி இருக்கீங்க.
உடனே எங்க காலேஜில் சேர்ந்திடுங்க.
ஒரு இருபத்தையாயிரம் ரூபாய் தான் பீஸ்.
' என்றார்.
சிவாஜின்னு சொல்லிட்டாரே. கடனை உடனை வாங்கி
பீஸ் கட்டி உடனே சேர்ந்தாச்சு
.
அப்புறம் சொல்றாரு. ' கூடவே சண்டை, டான்ஸ்
எல்லாம் கத்துக்கணும். அதுக்கு ஒரு இருபதாயிரம்
தனியா கட்டணும் '
' என்ன
சண்டையா, வீட்டிலே தினசரி மனைவி கூட
சண்டை போடறேன். அதிலே எப்பவும் அவள்
தான் ஜெயிக்கிறா. அப்புறம். சக்கரை வியாதி கூட
வேற சண்டை . சண்டையே வேணாம் சார் '
'டான்ஸ்,
அதுக்கு இடுப்புன்னு ஒண்ணை ஆட்டணும்லே. முதல்லே
என்னோட இடுப்பை கண்டுபிடிக்கணும். அது
கண்டபடி வளர்ந்து கிடக்கு. அதை கண்டுபிடிச்ச பிறகு
அதை வேற ஆட்டணும். நம்மாலே
முடியாது சார் '.
';இந்த சிவாஜி சார்
மாதிரி முக பாவம் காண்பிக்கிறேன்
சார் ' என்று சொல்லி முக
பாவம் காண்பிக்கும் முயற்சியில் பாவம் போல் ஆகி
இரும ஆரம்பித்து விட்டேன்.
பிரின்சிபால் உற்சாகப் படுத்தினார் .' ம்ம் ., அப்படித்தான், நல்லா
இருமுங்க. குணச்சித்திர நடிப்புக்கு இருமல் நல்லது ' ன்னார்.
' நடிப்புக்கு வேணா நல்லது சார்,
என் உடம்புக்கு நல்லது இல்லை சார்.
ஏதாவது வசனம் பேசுறேன் ' என்றேன்.
'சரி
இதை பேசுங்க' என்றவர் பேசிக் காண்பித்தார்.
'
'மாமனா
மச்சானா அல்லது எங்கள் குல
பெண்டிருக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா,
ஏன் கொடுக்க வேண்டும் வட்டி
'
'சார்,
பேசாம வட்டியைக் கொடுத்திரலாம் , வேற பொண்ணுங்களுக்கு மஞ்சள்
அரைச்சுக் கொடுத்தா வீட்டிலே பிரச்சினை ஆயிடும் சார்'
தலையில்
அடித்துக்கொண்டு அவர் ' சரி பாடத் தெரியுமா ' என்று
கேட்டார்.
' ஓ,
ஜோராய் பாடுவேன் சார், பாத் ரூமிலே
பாடுவேன்'
' அது
நாலு சுவத்துக்கு நடுவிலே '
' இல்லே
சார், சுவர் மூணு பக்கம்
தான் சார், நாலாவது பக்கம்
கதவு. அதுவும் உடைஞ்சு போயிடுது
சார். அதனாலே தான் சார்
பாட வேண்டியதா இருக்கு '
' அரே,
இங்கே கேள்வி உங்க சுவத்தைப்
பத்தி இல்லே. உங்க பாட்டாலே
பாதிக்கப் படுறவங்களைப் பத்தி. வீட்டிலே நீங்க
பாடின, உங்க ஒய்ப் மட்டும்
தான் பாதிக்கப்படுவாங்க. ஆனா வெளியே பாடினா
எத்தனை பேரு பாதிக்கப் பாடுவாங்க.
யோசிச்சுப் பாருங்க ப்ளீஸ், என்றார்.
'நான்
நல்லா பாடுவேன் சார் . தினசரி நைட்
என் பையனுக்கு பாட்டு பாடி தூங்க
வைக்கிறது நான் தான் சார்'
என்றேன்.
' நம்ம
பாட்டு தூங்க வைக்கக் கூடாது.
மக்களை 'விழி , எழு' ன்னு உசுப்பேத்தி
விடணும்..சரி பாடுங்க. கேட்டுத்
தொலைக்கிறேன். '
ஆரம்பித்தேன்.' சார் இதுவும் அந்த
மஞ்சள் அரைச்ச வசனம் மாதிரி
ரெம்ப பேமஸ் ஆன
பாட்டு சார், - ' நிலா
நிலா ஓடி வா' '
'ஸ்டாப்
, அந்த நிலா அங்கேயே ஆகாயத்திலே
இருக்கிறது தான் அதுக்கும் நல்லது,
நமக்கும் நல்லது. வேற வழி
ஒண்ணும் எனக்கு தெரியலே. பேசாம
டைரக்டர் ரோல் பண்ணுங்க. சேரிலே உக்கார்ந்துக்கிட்டு ஸ்டார்ட்
கட் டுன்னு சொல்லணும். சரியா '
'சரி
சார், ஒரு சின்ன சந்தேகம்.
எப்ப ஸ்டார்ட் சொல்லணும். எப்ப கட் சொல்லணும்
'
' நினைச்சேன்,
இப்படி கேப்பீங்கன்னு . கவனமா கேளுங்க. . நீங்க
ஸ்டார்ட் செய்யும்போது சொல்லுங்க 'ஸ்டார்ட்' . ஓகே . அடுத்து நீங்க
கட் பண்ணும்
போது சொல்லுங்க 'கட் - ஓகேயா '
'சார்,
நீங்க பெரிய ஆளு சார்,
எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு
சிம்பிளா சொல்லிக் கொடுத்திட்டீங்க .
'கட்'
கனவிலிருந்து விடுபட்டு எழுந்தேன். அப்பாடா . நல்ல வேளை. எல்லாம்
கனவு. இருபத்தையாயிரம்
ரூபாய் தப்பிச்சுது .
இந்த கனவு உலகம்
எல்லாம் வேண்டாங்க. நனவு உலகத்துக்கு வருவோம்.
நம்மாலே என்ன முடியும்னு யோசிச்சு
அதை முயற்சி செய்வோம். விழிப்போம்
எழுவோம்.
நான் முடிவு பண்ணிட்டேன்.
ஏதாவது எழுத்தாளர் சங்கத்தில் சேர்ந்து அவர்களோடு பழகி, அனுபவப்பட்டு, ஏதாவது
நகைச்சுவைக் கட்டுரை எழுதி நகைச்சுவை
எழுத்தாளர் ஆகிட வேண்டியதுதான். என்ன
நான் சொல்றது.
------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி