திங்கள், 25 ஜூன், 2018

பொன்னான நேரம்

பொன்னான நேரம்
--------------------------------------
காதலிக்குக் காத்திருக்கும்
நேரத்தை விட

காஃபிக்குக் காத்திருக்கும்
நேரம் - பொன்னான நேரம்

திங்கட்கிழமை பூத்திருக்கும்
நேரத்தை விட

வெள்ளிக்கிழமை சேர்த்திருக்கும்
நேரம் - பொன்னான நேரம்

பொன்னாவதும் புண்ணாவதும்
மனம் மயங்கும் நேரம்
-------------------------------------------------நாகேந்திர பாரதி 
http://www.nagendrabharathi.com

புதன், 20 ஜூன், 2018

இளமை இறைவன்

இளமை இறைவன்
--------------------------------
கோயில் பிரகாரத்தில்
கூடி விளையாடியோரும்

கோயில் குளத்திலே
குதித்து நீச்சல் அடித்தோரும்

கோயில் தேர் வடத்தை
குதூகலமாய் இழுத்தோரும்

காலத்தின் ஓட்டத்தால்
மண்டபத்தில் களைத்திருக்க

எப்போதும் இளமையோடு
உற்சவர் புறப்பாடு
------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

வெள்ளி, 15 ஜூன், 2018

குழந்தை மனம்

குழந்தை மனம்
-------------------------------
அடம் பிடித்து
அழுவதற்கும்

சொன்ன பேச்சை
மறுப்பதற்கும்

பசி பசி என்று
கேட்பதற்கும்

ஓடிக் கொண்டே
இருப்பதற்கும்

காரணம் புரிவதற்கு
குழந்தையாக  வேண்டும்
---------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

சனி, 9 ஜூன், 2018

முரண் நலன்

முரண் நலன்
--------------------
முன்னுக்குப் பின்
முரணும் நலன்தானே

முன்னாலே சொன்னது
உலகம் தட்டையென்று

பின்னாலே வந்தது
உலகம் உருண்டையென்று

முன்னுக்குப் பின்
முரணாகச் சொன்னாலும்

முன்னுக்கு வந்தால்
முரணும் நலன்தானே
-------------------------------------------நாகேந்திர பாரதி
 http://www.nagendrabharathi.com