புதன், 11 ஏப்ரல், 2018

இறை உணர்வு

இறை உணர்வு
--------------------------
உயிரும் மனதை
உணரும் பொழுது

மனமும் அறிவாய்
மாறும் பொழுது

அறிவும் பரமும்
சேரும் பொழுது

இயக்கம் இருப்பாய்த்
தெரியும் பொழுது

இறையும் நாமும்
இணையும் பொழுது
--------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com