வியாழன், 14 டிசம்பர், 2017

வீட்டு முகப்பு

வீட்டு முகப்பு
---------------------------
ஒவ்வொரு வீட்டின்
முகப்புத் தோற்றமும்
ஒவ்வொரு வடிவமாய்

சில வட்டமாய்
சில சதுரமாய்
சில செவ்வகமாய்

காலத்தின் ஓட்டத்தில்
கரைந்து  போய்விட்ட
ஏதேதோ காரணத்தால்

சில உதிர்ந்துபோய்
சில இடிந்துபோய்
சில காணாமல்போய்
-------------------------------------நாகேந்திர பாரதி 
http://www.nagendrabharathi.com