வியாழன், 19 அக்டோபர், 2017

குழந்தையின் பந்து

குழந்தையின் பந்து
----------------------------------
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்

உள்ளிருந்து வெளியேயும்
வெளியிருந்து உள்ளேயும்

உருண்டும் புரண்டும்
களைத்துப் போய்

படுத்துக் கிடக்கிறது
அந்தப் பந்து

உறங்கும் குழந்தையின்
உள்ளங்கை ஓரத்தில்
-----------------------------------நாகேந்திர பாரதி
  http://www.nagendrabharathi.com

புதன், 18 அக்டோபர், 2017

பிரிவும் முடிவும்

பிரிவும் முடிவும்
-----------------------------
பிரிந்து போவது என்பது
முடிந்து போவதல்ல

கண்கள் பார்க்காத
தூரத்தில் இருந்தாலும்

காதுகள் கேட்காத
தூரத்தில் இருந்தாலும்

கைகள் தொடாத
தூரத்தில் இருந்தாலும்

உதடுகள் ஒட்டாத
தூரத்தில் இருந்தாலும்

எண்ணங்கள் எப்போதும்
அருகிலேயே இருப்பதால்

பிரிந்து போவது என்பது
முடிந்து போவதல்ல
----------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

திங்கள், 16 அக்டோபர், 2017

ஆதார் அட்டை

ஆதார் அட்டை 
-------------------------
ரேஷன் அட்டையோடு இணைப்போமென்று
தெரியாது

வாக்காளர் அட்டையோடு இணைப்போமென்று
தெரியாது

பான் அட்டையோடு இணைப்போமென்று
தெரியாது

மொபைல் அட்டையோடு இணைப்போமென்று
தெரியாது

டிரைவிங் அட்டையோடு இணைப்போமென்று
தெரியாது

தெரிந்து இருந்தால் போட்டோவில்
சிரித்திருக்கலாம்

---------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

முதலும் முடிவும்

முதலும் முடிவும்
-------------------------------
செடிக்குள் விதை நீ
விதைக்குள் செடி நீ

உடலுக்குள் உயிர் நீ
உயிருக்குள் உடல் நீ

உள்ளத்தில் எண்ணம் நீ
எண்ணத்தில் உள்ளம் நீ

இன்பத்தில் துன்பம் நீ
துன்பத்தில் இன்பம் நீ

முதலுக்குள் முடிவு நீ
முடிவுக்குள் முதலும் நீயே
--------------------------------------நாகேந்திர   பாரதி
http://www.nagendrabharathi.com