சனி, 30 செப்டம்பர், 2017

இயற்கைக் கல்வி

இயற்கைக் கல்வி
---------------------------------
பேசிப் பழகுவது
இயலாம் கல்வி

பாடிப் பழகுவது
இசையாம் கல்வி

ஆடிப் பழகுவது
கூத்தாம் கல்வி

இயலிசை நாடகம்
இயற்கைக் கல்வி

மதிப்பெண் தேடும்
மனப்பாடக் கல்வி
------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

புதன், 13 செப்டம்பர், 2017

காலம் கடந்த கவிதை

காலம் கடந்த கவிதை
---------------------------------------
கடந்த கால நினைவும்
நிகழ் கால நடப்பும்
எதிர் கால ஏக்கமும்

எண்ணத்தின்  வழியாக
எழுத்தில் இறங்கும் போது
காலங்கள் மாறி விடும்

பார்த்ததும் படித்ததும்
பட்டதும் உணர்ந்து

வருகின்ற வார்த்தைகளில்
வடித்துவிட்டுப் போய் விடலாம்

காலமும் கருத்தும்
படிப்பவர்  அனுபவம்
--------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

வலித் துணை

வலித் துணை
------------------------
வளர்கின்ற பருவத்தில்
வருகின்ற வலிகட்கு
பெற்றோர் துணை

அலுவலக வேலைகளில்
ஆகின்ற வலிகட்கு
நண்பர் துணை

குடும்பச் சுமைகளிலே
கூடுகின்ற வலிகட்கு
இணையே துணை

உற்றோர்கள் மறைவினால்
உண்டாகும் வலிகட்கு
சுற்றம் துணை

வயதான பின்னாலே
வாட்டுகின்ற வலிகட்கு
தானே துணை
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

வாழ்க்கைப் பயணம்

வாழ்க்கைப் பயணம்
-------------------------------------
அந்தக் கிராமத்தில் இருந்து
பள்ளிக்கூட ஊருக்கு
கருவக் காட்டு வழி
நடைப் பயணம்

தூக்குச் சட்டியோடும்
தொங்கு பையோடும்
போய் வந்து முடிந்தது
பள்ளிப் பயணம்

மாட்டு வண்டியோடு சிலர்
மண்ணு லாரியோடு சிலர்
கட்சிக் கொடியோடு பலர்
வாழ்க்கைப் பயணம்
----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

திங்கள், 4 செப்டம்பர், 2017

இடப் பெயர்ச்சி

இடப் பெயர்ச்சி
-----------------------------
செவ்வாய்க் கிழமை காணோம்
வெள்ளிக்கிழமையும்  காணோம்

கோயில் வாசலில்
படுத்துக் கிடக்கும்
பிச்சைக்காரனைக் காணோம்

ஞாயிற்றுக்கிழமை பார்த்தோம்
டாஸ்மாக் வாசலில்
படுத்துக் கிடந்தான்

கூட்டம் சேருமிடத்திற்கு
இடப் பெயர்ச்சி
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

தேநீர் நேரம்

தேநீர் நேரம்
-----------------------
தேநீர் கோப்பையைப் பார்க்கிறோம்
பாதிக் கோப்பைதான் தேநீர்
எப்போது குடித்தோம்

மறுபடியும் பார்க்கிறோம்
கோப்பை காலியாக இருக்கிறது
என்ன நடக்கிறது

அடியில் சில துளிகள் மட்டும்
மெதுவாக வாயில் கவிழ்க்கிறோம்

அந்த ருசி நாக்கில்
அந்த வாசம் மூக்கில்

நாமேதான் குடித்திருக்கிறோம்
இந்த தேநீர் நேரங்களே இப்படித்தான்
-----------------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

வானம் வறக்குமேல் ..

வானம் வறக்குமேல் ..
-----------------------------------
ஊடு பயிரோடு
நெல்லும் வளர்ந்தது

ஆடு மாடோடு
வாழ்க்கை நடந்தது

படப்பு கட்டும்போது
பயறும் கடலையும்

கருப்பு சாமிக்கு
ஒயிலும் படையலும்

காணாமல் போனது
எல்லாமே இப்போது
-----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

பிரிவோம் சந்திப்போம்

பிரிவோம் சந்திப்போம்
-----------------------------------------
மறுபடியும் சந்திக்கிறோம்
எதைப் பற்றிப் பேசுவது

ரெயிலில் நடந்ததையா
தெருவில் நடந்ததையா

பார்த்துப் போனதையா
பாராமல் போனதையா

எதையுமே பேசாமல்
மறுபடியும் பிரிகிறோம்

மறுபடியும் சந்திப்போம்
பேசாமல் பிரிவதற்கு
-------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com