புதன், 30 ஆகஸ்ட், 2017

தெப்பக் குளம்

தெப்பக் குளம்
----------------------------
மூழ்கும் களிமண் பிள்ளையாரின்
வயிற்றுக் காசை
சுரண்டி எடுப்பதைப்
பார்த்திருக்கிறோம்

நடுக்குளச் சகதியில்
கால் மாட்டிக் கத்தியதைப்
பார்த்திருக்கிறோம்

மண்டபத்தில் இருந்து
பயத்தோடு குதித்ததைப்
பார்த்திருக்கிறோம்

தெப்பம் ஓடி மட்டும்
பார்த்ததில்லை
அந்தத்  தெப்பக்குளத்தில்
--------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

காலைப் பொழுது

காலைப் பொழுது
----------------------------
சூரிய ஒளியோடு
விளையாடும் மேகங்கள்

காற்றுக்கு ஏற்றபடி
ஆடுகின்ற இலைகள்

ஊர்திகளுக்கு உள்ளேயும்
வெளியேயும் மனிதர்கள்

எங்கோ போய்க்கொண்டு
எதையோ நினைத்துக்கொண்டு

ஆடுகின்ற ஓடுகின்ற
அத்தனையும் பார்த்தபடி

நடந்து கொண்டிருக்கும்
காலைப் பொழுது

மாலை வரும் இரவு வரும்
மறுபடியும் காலை வரும்
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

ரயில் பயணங்கள்

ரயில் பயணங்கள்
-----------------------------------
அதே ரயில் தான்
அதே ஊர்கள் தான்

அதே கம்பங்கள் தான்
அதே ஓட்டம் தான்

வேறொரு நாளில்
வேறொரு கூட்டத்தோடு

வேறொரு மனத்தோடு
வேறொரு பயணம்

ஒவ்வொரு பயணமும்
ஒவ்வொரு விதமாய்
---------------------------------நாகேந்திர  பாரதி
 http://www.nagendrabharathi.com 

வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கைப் பாடம்
----------------------------------
அன்பால் முடியுமென்றும்
அறிவால் முடியாதென்றும்

உறவால் முடியுமென்றும்
பிரிவால் முடியாதென்றும்

நலத்தால் முடியுமென்றும்
வளத்தால் முடியாதென்றும்

உளத்தால் முடியுமென்றும்
உடலால் முடியாதென்றும்

உணரும் நேரம்
உண்மை நேரம்
---------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

புதன், 23 ஆகஸ்ட், 2017

வயசுக் கோளாறு

வயசுக் கோளாறு
----------------------------------
மேல் மூச்சு வாங்கும்
மேனியெங்கும் வேர்க்கும்

புரண்டபடி கிடக்கும்
புதுநினைவில் தவிக்கும்

எடுத்தெறிந்து பேசும்
ஏக்கமாகப் பார்க்கும்

காதலுக்கும் முதுமைக்கும்
காரணமாய் இருக்கின்ற

வயசுக் கோளாறு
இருபதிலும் அறுபதிலும்
-----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com