திங்கள், 18 ஜூலை, 2016

வள்ளுவர் செய்த பாவம்

வள்ளுவர் செய்த பாவம்
--------------------------------------
வள்ளுவர் செய்த
பாவம் என்ன

வடநாட்டு மண்ணில்
வாடிக் கிடக்க

ஆதி பகவான்
முதற்றே என்றவர்

சாதிச் சண்டையில்
மாட்டிக் கொண்டார்

அய்யன் சிலையை
அனுப்பி வையுங்கள்

ஆயிரம் இடமிங்கு
அமர்த்தி வணங்க
-------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

வியாழன், 14 ஜூலை, 2016

அமைதியின் அடர்த்தி

அமைதியின் அடர்த்தி
------------------------------------------
அமைதியின் அடர்த்தியை
எப்படி விவரிப்பது

இருட்டாக இருக்கிறது
என்று சொல்லலாமா

அதிகம் அழுத்துகிறது
என்று சொல்லலாமா

இன்னும் என்னென்னமோ
யோசிக்கும் போதே

அமைதியின் அடர்த்தி
தூங்க வைத்து விடுகிறது
----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

வியாழன், 7 ஜூலை, 2016

வன்முறை நெருப்பு


வன்முறை நெருப்பு
--------------------------------
சுற்றிலும் நெருப்பு
சுடாமல் என்ன செய்யும்

திரைப்படத்தில் வன்முறை
தொலைக்காட்சியில் வன்முறை

சிறுகதையில் வன்முறை
சித்திரத்தில் வன்முறை

பார்த்தும் கேட்டும்
படிக்கும் வன்முறை

வீட்டிலும் வெளியிலும்
வெடிக்காமல் என்ன செய்யும்
-------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com


சனி, 2 ஜூலை, 2016

அதே மேகங்கள்

அதே மேகங்கள்
---------------------------
அதே மேகங்கள்

பள்ளிப் பருவத்தில் பார்த்த
அதே மேகங்கள்

கல்லூரிக் காலத்திலும்
வேலைக்குப் போகையிலும்

பார்க்காமல் விட்டு விட்ட
அதே மேகங்கள்

ஓய்வுக் காலத்தில்
உடகார்ந்து பார்க்கையில்

கருப்பும் வெளுப்புமாய்
கண்டபடி உருவெடுத்து

வயதான சுவடின்றி
அலைந்து திரிகின்ற

அதே மேகங்கள்
-----------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

வெள்ளி, 1 ஜூலை, 2016

போக்கு வரத்து

போக்கு வரத்து
-----------------------------
தெரு முக்கிலே
காய்கறி வண்டியில்
கத்தரிக்காய் வாங்கி விட்டு

அடுத்த தெருவில்
எலெக்ட்ரானிக் கடையில்
ரிமோட்டை வாங்கி விட்டு

திரும்பும் போது
அண்ணாச்சி கடையில்
தயிர் வாங்கி விட்டு

வீட்டுக்குள் நுழைந்து
போக்கு வரத்து இல்லாமல்
நிம்மதியாய் நடக்கலாம்
---------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com