வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

சினிமாச் சுற்று

சினிமாச் சுற்று
-----------------------------
பாகவதர் பாட்டை ரசிச்ச 
தாத்தா போயாச்சு

எம்ஜியார் சிலம்பம் ரசிச்ச 
அப்பா போயாச்சு 

ரஜினி ஸ்டைல் ரசிச்ச 
நமக்கு வயசாச்சு 

விக்ரம் நடிப்பை ரசிச்ச 
பிள்ளையோ   பிசியாச்சு

காக்கிச் சட்டை கார்த்திகேயன் 
பேரனுக்குப்  பிடிச்சாச்சு 
-------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com

வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கைப் பாடம் 
-----------------------------
பெண்மையின் மென்மையும் 
ஆண்மையின் வலிமையும் 

அகமும் புறமுமாய் 
அமைவது வாழ்க்கை 

சுற்றமும் சூழ 
நட்பும் நாட 

அன்பும் பண்புமாய் 
அமைவது வாழ்க்கை 

மக்கள் வாழ்த்த 
வாழ்வது வாழ்க்கை 
--------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com

வியாழன், 26 பிப்ரவரி, 2015

குழப்பக் கவிதை

குழப்பக் கவிதை 
-------------------------------
பொருள் இருப்பது போல் 
பொய்த் தோற்றம் காண்பிக்கும் 

புரிந்து கொள்வதற்கு 
முயற்சி செய்யப்படும் 

புரிய முடியாமல் 
தலை முடிகள் பிய்க்கப்படும் 

புரிந்து விட்டது போல் 
பாவனை செய்யப்படும் 

குழப்பக் கவிதைக்கென்று 
கூட்டமொன்று இருக்கிறது  
------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

பெருசுகள் உலகம்

பெருசுகள் உலகம் 
-------------------------------
கூடப் பேசுதற்கு 
நேரமிலாக் காலத்தில் 

குறும்பாய்ப் பேசுகின்ற 
குழந்தைகள் இன்பம் 

கூட உட்கார 
யாருமிலாக் காலத்தில் 

குதித்து விளையாடும் 
குழந்தைகள் இன்பம் 

பேரன் பேத்திகளே 
பெருசுகள் உலகம் 
----------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com

மொட்டைக் கோபுரம்

மொட்டைக் கோபுரம் 
----------------------------------
மொட்டைக் கோபுரத்தில் 
முனியொன்று  இருக்குதாம் 

இரவும் பகலும் 
இருட்டாக இருக்குதாம் 

பீடி சிகரெட்டு 
பிரியாணி பிராந்தியோடு 

குடும்பமும் நடத்துவதாய் 
குளறிச் சொன்னவர்கள்

பயந்தோடி வந்தவராம் 
பழைய கைதிகளாம் 
-------------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com

சனி, 21 பிப்ரவரி, 2015

சில்லுக் கருப்பட்டி

சில்லுக்  கருப்பட்டி 
--------------------------------
அதிகாலைக் குளிரில் 
நடுங்கும் பனைமரத்தின் 

பானைப்  பதினியை 
பதமாய் இறக்கி வந்து 

கண்மாய்க் கொட்டகையில் 
காய்ச்சிக் கருப்பட்டியாக்க 

சிதறும் சில்லுகளை 
சேகரித்து எடுத்து  வந்து 

கம்பங் கூழுக்குக்  
கடித்தால் தனி ருசி தான் 
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

கால மாற்றம்

கால மாற்றம் 
--------------------------
பள்ளிக்கூடம் , வீடு 
தெரு பிள்ளைக்  காலம் 

ஆபீஸ், கிளப் 
தியேட்டர் இளமைக்  காலம் 

படிப்பு, விளையாட்டு 
தின்பண்டம் பிள்ளைக்  காலம் 

பணம் , பதவி 
புகழ் இளமைக்  காலம் 

அது உண்மைக்  காலம் 
இது பொய்மைக்  காலம்  
------------------------------ நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com

புதன், 18 பிப்ரவரி, 2015

மொட்டை மாடிகள்

மொட்டை மாடிகள் 
--------------------------------------
கோடைக் காலத்தில் 
வடாம் காயவும் 

குளிர் காலத்தில் 
காதலர் காயவும் 

பார்த்துக் கிடந்த  
மொட்டை மாடிகள் 

டிஷ் ஆன்டெனாக்கள் 
நிரம்பி வழிய

இடைவெளிக் குள்ளே  
இருண்டு கிடக்கும்  
--------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

திங்கள், 16 பிப்ரவரி, 2015

வைக்கோல் படப்பு

வைக்கோல் படப்பு 
---------------------------------
வைக்கோலுக்கு வாயிருந்தால் 
வைதிருக்கும் அழுதிருக்கும் 

அடிச்சுத் தூத்‌தி 
நெல்லைப் பிரித்து 

குவித்து வைத்து 
அமுக்கிக் கட்டுவார் 

படுத்துப் புரண்ட 
பள்ளிச் சிறுவர்க்கு 

அரிப்பைக் கொடுத்து 
ஆத்திரத்தைத் தீர்க்கும் 
-----------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

எது ருசி

எது ருசி 
-------------------
தவித்துக் கிடைக்கும் 
தண்ணீர் ருசி 

பசித்துக் கிடைக்கும் 
உணவு ருசி

உழைத்துக் கிடைக்கும் 
உணவு ருசி 

களைத்துக்  கிடைக்கும் 
தூக்கம் ருசி 

கொடுத்துக் கிடைக்கும் 
அன்பு ருசி 
--------------------------நாகேந்திர பாரதி 

சனி, 14 பிப்ரவரி, 2015

காதல் புராணம்

காதல் புராணம் 
-----------------------------
தூய்மை உள்ளது காதல் 
துயரம் துடைப்பது காதல் 

வாய்மை உள்ளது காதல் 
வலிமை தருவது காதல் 

நோய்மை தீர்ப்பது காதல் 
நுண்மை உணர்ச்சி காதல் 

பூவைப் போன்றது காதல் 
புதுமைக் கவர்ச்சி காதல் 

சாவைக் கூட வென்று 
சரித்திரம் படைப்பது காதல் 
---------------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com

காதல் அல்ல

காதல் அல்ல 
----------------------
பார்ப்பது காதல் அல்ல 
சிரிப்பது காதல் அல்ல 

பேசுவது காதல் அல்ல 
பழகுவது காதல் அல்ல 

பிரிவது காதல் அல்ல 
அழுவது காதல் அல்ல 

மறுபடி  மீண்டும் 
சந்திப்பது காதல் 

மறக்காமல் மனத்தில் 
சிந்திப்பது காதல் 
------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com

சனி, 7 பிப்ரவரி, 2015

சம நிலை

சம நிலை 
-------------------
ஆம் என்றும் 
இல்லை என்றும் 
அலைக்கழிக்கும் மனத்தை 

ஓம் என்றும் 
சாந்தி என்றும் 
ஒருநிலைப்படுத்தி விட்டால் 

தான் என்றும் 
தனது என்றும் 
தவிக்கின்ற நிலை போய் 

சம நிலையாய் ஆகும் 
-------------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com