புதன், 21 ஜனவரி, 2015

காதல் காரணங்கள்

காதல் காரணங்கள் 
--------------------------------------
கண்கள் மட்டுமா 
காதல் காரணம் 

சேர்ந்து நடக்கின்ற 
கால்கள் காரணம் 

சார்ந்து அணைக்கின்ற 
கைகள் காரணம் 

உண்மை பேசுகின்ற 
உதடுகள் காரணம்

உணர்ந்து மகிழ்கின்ற 
உள்ளம் காரணம் 
------------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com

செவ்வாய், 20 ஜனவரி, 2015

அடங்கிய ஆட்டம்

அடங்கிய ஆட்டம் 
-----------------------------
கில்லி ஆடியதும் 
கிட்டி ஆடியதும் 

பம்பரம் ஆடியதும் 
பட்டம் ஆடியதும் 

ஓடி ஆடியதும் 
ஒளிந்து ஆடியதும் 

கண்களில் ஆடி
கண்ணீர்  ஆடும் 

அன்பன் போகிறான் 
ஆடாத உடம்போடு 
-------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com

திங்கள், 19 ஜனவரி, 2015

புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சி 
----------------------------------
அகர முதல எழுத்தெல்லாம் 
ஆரம்பத்தில் படித்தோம் 

நகர வாழ்க்கை வந்தபின்னே 
நல்ல தமிழ் மறந்தோம் 

அயல் மொழிகள் கற்றுவிட்டு 
ஆணவத்தில் திரிந்தோம் 

அருந்தமிழர் புத்தகங்கள் 
கண்காட்சி நடக்க 

அங்குமிங்கும் நடந்தபடி 
அட்டைப் படம்  பார்த்தோம் 
---------------------------நாகேந்திர பாரதி 

புதன், 14 ஜனவரி, 2015

சிறப்புப் பொங்கல்

சிறப்புப் பொங்கல் 
-----------------------------
மஞ்சளும் கரும்பும் 
மட்டுமா பொங்கல் 

மாடும் பொங்கல் 
வீடும் பொங்கல் 

காடும் மலையும் 
வயலும் பொங்கல் 

கடலும் மழையும் 
மணலும் பொங்கல் 

சேர்ந்து செழிக்கும் 
சிறப்புப் பொங்கல் 
---------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

காதல் என்னும் கருணை

காதல் என்னும் கருணை 
----------------------------------------
மெல்லெனப் புலரும்  
பொழுதைப் போலே 

மெல்லெனப் பூக்கும் 
பூவைப் போலே 

மெல்லெனப் பொழியும் 
பனியைப் போலே 

மெல்லென வழியும் 
அருவியைப் போலே 

காதல் என்றொரு 
கருணை பிறக்கும் 
-----------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com

ஆசுவாசக் கவிஞன்

ஆசுவாசக் கவிஞன் 
------------------------------------
அடுக்கடுக்காய்க் கவியெழுதும் 
ஆசு கவி அல்ல - கற்பனை 

அணைத்தபின்னே கவியெழுதும் 
ஆசுவாசக் கவிஞன் 

மெட்டுக்குக்  கவியெழுதும் 
மிடுக்குக் கவி அல்ல - கற்பனை 

சொட்டுக்குக்    கவியெழுதும் 
சுமாரான   கவிஞன்  

கவிஞர்கள் வரிசையிலே 
கடைசிக் கவிஞன் 
--------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

சனி, 3 ஜனவரி, 2015

அன்பின் இனிமை

அன்பின் இனிமை 
-----------------------------
அன்பால் அழுத 
காலமும் உண்டு 

அன்பால் சிரித்த 
காலமும் உண்டு 

அன்பால் கொதித்த 
காலமும் உண்டு 

அன்பால் குளிர்ந்த 
காலமும் உண்டு 

எல்லாக் காலமும் 
இனிமைக் காலமே
-----------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 2 ஜனவரி, 2015

பாட்டிதான் பரம்பொருள்

பாட்டிதான் பரம்பொருள் 
-------------------------------------------
மகனை வளர்த்துவிட்டு 
பேரனை வளர்த்துவிட்டு 

கொள்ளுப்பேரனை வளர்த்துவிட்டு 
எள்ளுப்பேரனை வளர்த்துவிட்டு 

ஒவ்வொரு தலைமுறையில் 
ஒவ்வொரு தலைமகன் 

உழைத்துக் கொடுத்ததைப் 
பகிர்ந்து உண்டுவிட்டு 

படுத்துக் கிடக்கின்ற 
பாட்டிதான் பரம்பொருள் 
------------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com

வியாழன், 1 ஜனவரி, 2015

வருடத்தின் விநாடிகள்

வருடத்தின் விநாடிகள் 
-------------------------------------
விநாடி நிமிடம் மணியாக 
விரைந்து வளரும் காலம் 

வாரம் மாதம் வருடமாக 
வளர்ந்து மலரும் நாட்கள் 

வருடத்தின் முதல் துளியை 
வாழ்த்தி வரவேற்போம் 

மணித் துளியே ஆண்டாகும் 
மழைத் துளியே கடலாகும் 

விநாடியில் வாழ்ந்திருந்தால் 
வெற்றிக் கடலாகும் 
--------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com