செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

பெண்ணுரிமைப் பேச்சு

பெண்ணுரிமைப்  பேச்சு
-------------------------------------
குந்தவை ராணி முதல் 
டயானா ராணி வரை 

பெண்ணுரிமை என்பதெல்லாம் 
பெரிய இடத்தில் தான் 

அடுப்படி முதல் 
அலுவலகம் வரை 

ஏனைய பெண்கள் எல்லாம் 
இரண்டாம் இடத்தில் தான் 

பெண்ணுரிமை என்பதெல்லாம் 
பேச்சிலும் எழுத்திலும் தான் 
--------------------------நாகேந்திர பாரதி 

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

குளியலறைக் கரப்பான்

குளியலறைக் கரப்பான் 
-----------------------------------
குளியலறைக் கரப்பானுக்கு 
குடும்பப் பற்று அதிகம் 

கூட்டமாகச் சேர்ந்து கொண்டு 
குடித்தனத்தை நடத்தும் 

குளிக்க வரும் போது நம்மைப்  
பறந்து வந்து தாக்கும்

மருந்தடித்துப் பார்த்தாலும்  
மறு பிறவி எடுக்கும்

அருவருப்பில் குளிக்காமல் 
ஐந்து நாட்கள் ஆச்சு 
-------------------------------நாகேந்திர பாரதி 

சனி, 9 ஆகஸ்ட், 2014

உள்ளே வெளியே

உள்ளே வெளியே 
---------------------------
வெளியே தெரியாத நிலத்தையும் 
வெட்டிக் கொண்டு வரலாம் 

வெளியே தெரியாத நீரையும் 
தோண்டிக் கொண்டு வரலாம் 

வெளியே தெரியாத நெருப்பையும் 
உரசிக் கொண்டு வரலாம் 

வெளியே வீசாத  காற்றையும் 
விசிறிக் கொண்டு வரலாம் 

வெளியே தெரியாத விண்ணையும் 
உள்ளே கொண்டு வரலாம்  
-----------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

காய்ச்சல் சுகம்

காய்ச்சல் சுகம் 
-------------------------
காய்ச்சலில் கிடந்து 
கலங்கும் போது 

சுசீலா குரலும் 
சரோஜா தேவி முகமும் 

சொக்க வைக்கும் 
சுகத்தைக் கொடுத்தாலும் 

பிறந்து வளர்ந்து 
வாழும் வாழ்வின் 

சுற்றமும் நட்பும் 
கொடுத்த சுகத்தை 

நினைத்துப் பார்த்தால் 
நெஞ்சம்  கனக்கும்  
-------------------------நாகேந்திர பாரதி