சனி, 26 ஏப்ரல், 2014

தேர்தல் ஜாதி

தேர்தல் ஜாதி 
-----------------------
பணமும் வாங்க மாட்டான் 
ஓட்டும் போட மாட்டான் 
பணக்கார  ஜாதி 

பணத்தை வாங்கிட்டு 
ஓட்டைப் போட்டிடுவான் 
ஏழை ஜாதி 

பணமும் வாங்காம 
ஓட்டும் போடுறவன் 
உரிமை ஜாதி 

ஏழை பணக்காரன் 
ரெண்டு பேருமே 
இதிலே பாதி 

உரிமை ஜாதி 
உயர உயரத் தான் 
உண்மை நீதி  
-----------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com 

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

இந்தியக் கண்ணீர்

இந்தியக் கண்ணீர் 
----------------------------
பெரு வெள்ள மாக்கி 
பேஞ்சும் கெடுக்குது 

கரு மண்ணாய் ஆக்கி 
காஞ்சும்  கெடுக்குது  

கங்கையில் வெள்ளம் 
காவிரியில் பள்ளம் 

நதிகளின் இணைப்பு 
நாக்கோடு போச்சு 

இந்தியத் தண்ணீரின் 
மாநிலக் கண்ணீர் 
-----------------------------நாகேந்திர பாரதி 

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

தேர்தல் கனவு

தேர்தல் கனவு 
--------------------------
அடிப்படைத் தொண்டில் 
அறிமுகம் ஆனவர் 
வேட்பாளர் ஆகணுங்க 

ஆளைப் பாத்து 
ஓட்டுப் போடுற 
காலம் வரணுங்க 

தேர்தல் முடிஞ்சு 
கூட்டணி மாறிக் 
குழப்பம் நடக்கையிலே 

ஒவ்வொரு ஆளும் 
ஒழுங்கா இருந்தா 
நல்லது நடக்குமுங்க 

கனவு காணும் 
பழக்கம் எனக்கு 
கொஞ்சம் அதிகமுங்கோ
----------------------------நாகேந்திர பாரதி  

சனி, 19 ஏப்ரல், 2014

கருணைக் குயில்

கருணைக் குயில் 
------------------------------
மரத்தில் இருப்பது 
காக்கையா குயிலா 

மனத்தில் இருப்பது 
கயமையா கருணையா 

இலைகள் போர்த்த 
மரத்தில் இருந்தும் 

வாழ்க்கை போர்த்த 
மனத்தில் இருந்தும் 

வாயைத் திறந்தால் 
தெரிந்து போகும் 
----------------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

காதல் விளையாட்டு

காதல் விளையாட்டு 
------------------------------------------
பேசச் சொல்லி 
சும்மா இருக்கத் தெரியும் 

வரச் சொல்லி 
போகச் சொல்லத் தெரியும் 

தொடச் சொல்லி 
விலகிச் சொல்லத் தெரியும் 

சிரிக்கச் சொல்லி 
அழ  வைக்கத் தெரியும் 

காதல் சொல்லி 
கழன்று போகத் தெரியும் 
---------------------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com 

வியாழன், 17 ஏப்ரல், 2014

வேலையில்லாக் காலம்

வேலையில்லாக் காலம் 
-------------------------------------
இயற்கையைப் பற்றி 
என்னமோ புரிந்தும் 

வாழ்க்கையைப் பற்றி 
ஒண்ணுமே புரியாமலும் 

வெயிலைப் பார்த்து 
வெறித்துக் கொண்டும் 

இருட்டைப் பார்த்து 
முழித்துக் கொண்டும் 

வீணாய்ப் போகும் 
வேலையில்லாக் காலம் 
-------------------------------------நாகேந்திர பாரதி 

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

நாட்களின் வேகம்

நாட்களின் வேகம் 
----------------------------
சனிக்கிழமைக்கு அடுத்த நாளே 
திங்கட்கிழமை வந்து விடுகிறது 

திங்கட்கிழமைக்கு அடுத்த நாளே
வெள்ளிக்கிழமை வந்து விடுகிறது 

ஒவ்வொரு நாளுக்கும் 
ஒரே நேரம்தான் 

உழைப்பின் வேகமும் 
உல்லாச வேகமும் 

நாட்களின் வேகத்தை 
நகர்த்திப் போகிறது 
-------------------------------நாகேந்திர பாரதி