திங்கள், 27 ஜனவரி, 2014

நெற் காலம்

நெற் காலம் 
--------------------
தூவி விட்ட விதை நெல்லு 
துளிர்த்து வரும் காலம் 

களையோடு  சேர்ந்து 
கனத்து  வரும்  காலம் 

அறுவடைக்குத் தயாராகி 
ஆடி விழும் காலம் 

அறுத்து அடித்து 
அவித்து அரைக்கும் காலம் 

உழைத்தவன் வயிற்றுக்குள் 
உணவாகிப் போகும் காலம் 
----------------------------------நாகேந்திர பாரதி 
 

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

குழந்தையின் கேள்வி

குழந்தையின் கேள்வி 
------------------------------------
எல்லாத் தொடர்களும் 
இவுக பார்ப்பாக 

நம்ம பார்த்தாக்க 
நாட்டாமை பண்ணுவாக 

எல்லாத் திண்பண்டமும் 
இவுக சாப்பிடுவாக  

நம்ம சாப்பிட்டாக்க 
நல்லதில்லை என்பாக  

இருபத்தோராம் நூற்றாண்டில் 
இப்படியா இருப்பாக 
-----------------------------நாகேந்திர பாரதி

ஓடான கிழவன்

ஓடான கிழவன் 
-------------------------
கச்சத் தீவுத் திருவிழாவுக்கு 
கள் குடிக்கப் போனதும் 

கார்த்திகைச் சம்பாவை 
காசாக்கித் திரிந்ததும் 

ஒவ்வொரு ஊரிலும் 
ஒருத்தியை வச்சிருந்ததும் 

ஓடுது மனசுக்குள்ளே
ஓடான கிழவனுக்கு 

வந்தாலும் வருவாளுக 
வாய்க்கரிசி போடுறதுக்கு 
------------------------------------நாகேந்திர பாரதி 
http://www.nagendrabharathi.com

சனி, 11 ஜனவரி, 2014

தொல்லைக் காட்சித் தொடர்கள்

தொல்லைக் காட்சித்  தொடர்கள் 
-------------------------------------------------
நடப்பதைத்   தானே 
நடிக்கிறோம் என்பார்கள் 

நடக்காத வீடுகளிலும் 
நடத்தி விடுவார்கள் 

ஒன்றிரெண்டு வீடுகளில் 
ஓடுகின்ற பிரச்னையை 

ஒவ்வொரு வீட்டிலும் 
ஓடவிட வைப்பார்கள் 

தொல்லைக்காட்சித் தொடர்களால் 
எல்லையில்லாத் துன்பமே 
----------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 10 ஜனவரி, 2014

நீரும் நெருப்பும்

நீரும் நெருப்பும் 
--------------------------
கோபம் என்பது 
கொதிக்கும் நெருப்பு

தாபம் என்பது 
தவிக்கும் நெருப்பு 

பயம் என்பது 
பதைக்கும் நெருப்பு 

கோபம் தாபம் 
பயத்தைப் போக்கும் 

தியானம் என்பது 
தண்ணீர்ச் சிறப்பு 
---------------------நாகேந்திர பாரதி 
 

வியாழன், 9 ஜனவரி, 2014

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல் 
------------------------------------
அல்லதைப்  போக்க 
போகிப் பொங்கல் 

நல்லதைப் போற்ற 
சர்க்கரைப் பொங்கல் 

வல்லதை வாழ்த்த 
மாட்டுப் பொங்கல் 

உள்ளது  வளரும் 
உள்ளமும் வளரும் 

பொங்குக  பொங்கல் 
பொங்கலோ பொங்கல் 
--------------------------நாகேந்திர பாரதி 

புதன், 8 ஜனவரி, 2014

குசும்புக் குடும்பம்

குசும்புக் குடும்பம் 
----------------------------
நிலைமையைப் பார்த்தா 
பாவமா இருக்கும் 

பேச்சைக் கேட்டா 
கோவமா இருக்கும் 

ஏழைக் குசும்பு
ஏத்தி விடும் 

பணக்காரக் குசும்பு 
படுத்தி விடும் 

குசும்பும் தீரும் 
குடும்பம் சேரும் 
----------------------நாகேந்திர பாரதி 
http://www.nagendrabharathi.com