திங்கள், 28 அக்டோபர், 2013

காசும் கரியும்

காசும் கரியும் 
---------------------------
தீப ஒளித் திருவிழா 
தெருக் குப்பைத் திருவிழா ஆச்சு 

காதைப் பிளக்கும் சத்தமும்
கண்ணைப் பறிக்கும் வெளிச்சமும் 

காசைக் கரியாக்கும்
காரியங்கள் ஆச்சு 

வயிற்றுக்குச் சோறில்லா 
வாழ்க்கையில் இருக்கையிலே 

இயற்கைக்குத் தீங்கிழைக்கும் 
புகை போக்கிகள் எதற்காக 
--------------------------------நாகேந்திர பாரதி 

காதல் மேகம்

காதல் மேகம் 
-----------------------
காதல் நினைவில்
கதறும் மேகம் 

அங்கும் இங்கும் 
அலைந்து ஏங்கும் 

கண்ணீர் கறுத்துத்
தண்ணீர் ஆகும் 

மழையாய்ப் பொழிந்து 
மறைந்து போகும் 

நிலமும் குளிரும் 
நினைவும் சாகும் 
--------------------------------நாகேந்திர பாரதி 


திங்கள், 21 அக்டோபர், 2013

தொடர்கதை வாழ்க்கை

தொடர்கதை வாழ்க்கை 
--------------------------------------
நாட்களில் நடந்த 
நிகழ்ச்சிகள் எத்தனை 

மாதங்களில் மலர்ந்த 
மகிழ்ச்சிகள் எத்தனை 

வருடங்களில் கரைந்த 
வருத்தங்கள் எத்தனை 

தொடர்கதை வாழ்க்கையில் 
தொடரும் திருப்பங்கள் 

முற்றும் போட்டும் 
முடியுமா உயிர்நிலை 
------------------------------நாகேந்திர பாரதி 

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

சிரிப்பு சினிமா

சிரிப்பு சினிமா 
-----------------------
கொலையும் கொள்ளையும் 
குடியும் கற்பழிப்பும் 

கொடூரச் செயல்களாய்க் 
காட்டிய காலம் போய் 

சிரிப்பும் பாட்டுமாய்க் 
காட்டும் சினிமாவில்  

சிக்கிச் சீரழியும் 
சிறுவர் சமுதாயம் 

தேறுமா இனிமேல் 
மாறுமா சினிமா 
---------------------------------நாகேந்திர பாரதி