சனி, 17 ஆகஸ்ட், 2013

காய்கறியும் கரன்சியும்

காய்கறியும் கரன்சியும்
-----------------------------------
காய்கறி விலை
கூடிப் போனால் 
கரன்சி விலை
குறைந்து போகும்
ஒவ்வொரு வருக்கும்
ஒவ்வொரு வேலை
ஒழுங்காய்க் கிடைத்தால் 
உயரும் நாடு
டாஸ்மாக் வாசலில்
தத்துவம் பேசுவோம் 
--------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

தொலைந்து போன சுதந்திரம்

தொலைந்து போன சுதந்திரம் 
--------------------------------------------
இலவசத்தில் தொலைந்து போன
சேமிப்பின் சுதந்திரம் 
வறுமையிலே தொலைந்து போன
வளர்ச்சியின் சுதந்திரம்
மதுக் கடையில் தொலைந்து போன
மனிதத்தின் சுதந்திரம்
உலகத்தில் தொலைந்து போன
உள் வணிக சுதந்திரம்
ஊழலிலே தொலைந்து போன
உள் நாட்டு சுதந்திரம்
------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

திண்ணைப் பேச்சு

திண்ணைப் பேச்சு 
---------------------------
சாயந்திரம் ஆரம்பிக்கும் 
திண்ணைப் பேச்சு
ராத்திரி வரைக்கும் 
ரவுண்டு கட்டும் 
சாப்பிடச் சொல்லி
சவுண்டு கேட்கும் 
பெருசுகள் பசியோடு
பிரிந்து போகும் 
இரவுகள் கூடும் 
எண்ணிக்கை  குறையும் 
-----------------------நாகேந்திர பாரதி

ஆண் பாவம்

ஆண் பாவம்
----------------------------
பேச்சில் மயங்கி 
சிரிப்பில் மயங்கி
விரலில் மயங்கி
மடியில் மயங்கி
உணர்வில் மயங்கி
உள்ளம் மயங்கும் 
ஆண் பாவம்
பொல்லா தது
பெண் சோகம் 
சொல்லா தது  
--------------------நாகேந்திர பாரதி

சனி, 10 ஆகஸ்ட், 2013

ஒருதலைப் பெண்ணினம்

ஒருதலைப் பெண்ணினம்
----------------------------------------
அடுப்பாங் கரையில்
அவிந்து கிடந்து
வயக்காட்டு வரப்பில்
தேய்ந்து கிடந்து 
டூரிங் டாக்கீஸில் 
தொலைந்து கிடந்து 
திருவிழாச்  சாமியைத் 
தேடிக் கிடந்து 
ஒருதலைப் பெண்ணினம் 
ஓய்ந்து கிடந்தது 
--------------------------நாகேந்திர பாரதி