ஞாயிறு, 28 ஜூலை, 2013

வறுமைக் கோடு

வறுமைக் கோடு
--------------------------------ஒரு நாள் சாப்பாட்டின்மதிப்பைக் குறைத்தால்வறுமைக் கோடுகீழே இறங்கும்ஒரு நாள் சாப்பாட்டின்அளவைக் குறைத்தால்வறுமைக் கோடுஇன்னும் இறங்கும்ஒரு நாள் சாப்பாடேஇல்லாமல் போனால்வறுமைக் கோடேஇல்லாமல் போகும்----------------------------நாகேந்திர பாரதி


சனி, 20 ஜூலை, 2013

தூக்கப் படுக்கை

தூக்கப் படுக்கை
------------------------
குதிரை வண்டியிலும்
மாட்டு வண்டியிலும்
குவித்து வைத்த 
வைக்கோல் படுக்கை
உரசிப் பார்த்தாலும்
உறக்கம் கலையாது
பஞ்சு மெத்தையிலும்
ரப்பர் மெத்தையிலும்
படுத்துப் புரண்டாலும்
தூக்கம் வாராது 
------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 19 ஜூலை, 2013

வாலிக்குச் சாவில்லை

வாலிக்குச் சாவில்லை
----------------------------------
வீட்டுக்கு ஒரு கவிஞன்
வீற்றிருக்கும் காலத்திலும்
பாட்டுக்குத் தலைவனாய்
பாராண்ட புலவனவன்
காதலோ பக்தியோ
கவிதையோ வசனமோ
எதுகையில் மோனையில்
எடுத்துவந்த இலக்கிய
வார்த்தைகள் இருக்கும்வரை
வாலிக்குச் சாவில்லை 
---------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 18 ஜூலை, 2013

வானம் பாத்த பூமி

வானம் பாத்த பூமி
---------------------------விதை முளைக்கவானம் பாத்துபயிர் பிடிக்கவானம் பாத்துகதிர் பழுக்கவானம் பாத்துபிழிஞ்சு கொடுத்ததுபேஞ்சு கெடுக்குதுசாவியை அறுக்குறப்போசகதியா ஆக்குது-------------------------நாகேந்திர பாரதி


புதன், 17 ஜூலை, 2013

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை
----------------------------------------
வெளிச்சத்தில் இருந்து
இருட்டுக்குள் பயணம்

சப்தத்தில் இருந்து
அமைதிக்குள் பயணம்

சக்திக்குள் இருந்து
சிவனுக்குள் பயணம்

உடலுக்குள் இருந்து
உயிருக்குள் பயணம்

துன்பத்தில் இருந்து
இன்பத்தில் பயணம்
------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 11 ஜூலை, 2013

சமுதாயக் கொடுமை

சமுதாயக் கொடுமை
-------------------------------
காதலில் பிரிந்து போய்
பாசத்தின் உயிரும் போய்
பாசத்தில் திரும்பி வந்து
காதலின் உயிரும் போய்
சாதிச் சண்டையின்
சமுதாயக் கொடுமை
உலகம் பெரிது
உயிர்கள் அரிது
காலம் மாறும்
கண்ணீர் ஆறும்
----------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 4 ஜூலை, 2013

இமயத்தின் இரத்தம்

இமயத்தின் இரத்தம்
-------------------------------
நதிகளின் ஈரங்கள்
நசுக்கப்பட்ட பொழுது
காடுகளின் ஆரங்கள்
கசக்கப்பட்ட பொழுது
மலைகளின் சாரங்கள்
மடக்கப்பட்ட பொழுது
மேகங்களின் பாரங்கள் 
மின்னல் பட்ட பொழுது
இமயமலை ஓரங்கள் 
இரத்தம் பட்ட பொழுது 
--------------------------------நாகேந்திர பாரதி