திங்கள், 24 ஜூன், 2013

இரவும் பகலும்

இரவும் பகலும்
---------------------
இரவும் பகலும்
எதிர் பார்ப்பதில்லை
வரும் போகும்
வாரமாய் வருடமாய்
நரையும் திரையும்
நாட்களைக் காட்டும்
நட்பும் உறவும்
வாழ்க்கையைக் காட்டும்
வரவும் செலவும்
இயற்கையின் ஓட்டம் 
-------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 16 ஜூன், 2013

வார்த்தை ஊசிகள்

வார்த்தை ஊசிகள்
------------------------------
வார்த்தை ஊசிகள்
பிய்க்கும் தைக்கும்
பிரிவும் நேரும்
உறவும் சேரும்
முள்ளும் குத்தும்
மலரும் தடவும்
குத்திய வார்த்தைகள்
தழும்பாய் இருக்கும்
தடவிய வார்த்தைகள்
தேனாய் இனிக்கும்
-----------------------நாகேந்திர பாரதி

புதன், 12 ஜூன், 2013

தமிழின் நாக்‌கு

தமிழின் நாக்‌கு
----------------------
அமெரிக்க ஆப்பிரிக்க
மெட்டுக்குப் பாட்டா
தமிழன் வாழ்க்கைப்
பாட்டுக்கு மெட்டா
வாத்தியத்துக்கு வார்த்தையா
வார்த்தைக்கு வாத்தியமா 
இலக்கணத்துக்கு இலக்கியமா 
இலக்கியத்துக்கு இலக்கணமா 
தமிழின் நாக்‌குக்குத்
தட்டட்டும் தாளம் 
-------------------------------நாகேந்திர பாரதி