செவ்வாய், 21 மே, 2013

அறிவுப் பல் அவஸ்தை

அறிவுப் பல் அவஸ்தை
---------------------------------------மரத்துப் போ என்றாலும்வலி யொன்றும் மறையாதுகடமுடா சத்தம்காதில் குறையாதுவாயைக் கிழிப்பது போல்வஸ்துக்கள் வேலை செய்யும்பக்கத்துப் பல்லெல்லாம்பார்த்துப் பரபரக்கும்ரத்தத்தில் முக்குளித்துசொத்தைப் பல் நஷ்டம்தான்அறிவு அகங்காரம்ஆனாலே கஷ்டம்தான்--------------------------------------நாகேந்திர பாரதி


சனி, 11 மே, 2013

'முடி'யாத கோலம்

'முடி'யாத கோலம்
-----------------------------------'கோடை வந்தாச்சுநல்லா குறைச்சிடு'அப்பா பேச்சுக்குகத்திரி ஆடும்மொட்டைக்குக் கொஞ்சம்கூட முடி வச்சுவீட்டுக்கு வந்தால்அம்மா திட்டுவாள்'புள்ளைக்கு சளி பிடிக்கும்இம்புட்டு முடி இருக்கே'------------------------------நாகேந்திர பாரதி
வியாழன், 9 மே, 2013

கோயில் பிரகாரம்

கோயில் பிரகாரம்
--------------------------------மண்ணுத் தரையாகஇருந்த போதுவலம் வந்த பக்தர்கள்சிமெண்ட்டுத் தரையாகஆன போதுஉட்கார்ந்து பேசிபளிங்குத் தரையாகமாறிய பின்புபடுத்துத் தூங்கினார்கள்-----------------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 6 மே, 2013

நீ வந்த போது

நீ வந்த போது
------------------------மேகப் பொதியில் ஒன்றுமெத்தென மோதியது போலதூறல் மழைச் சாரல்தொட்டுத் தடவியது போலதெக்குத் தென்றல் என்னைத்தேடி வந்தது போலமுல்லைப் பூவின் வாசம்மூச்சில் நிறைந்தது போலபக்கம் நீ வந்து மெல்லபட்டு அமர்ந்த போது----------------------------------நாகேந்திர பாரதி


மறுத்து விட்ட காலம்

மறுத்து விட்ட காலம்
-------------------------------------விளையாட வாப்பா என்ற போதுவிரட்டி அனுப்பினாய்விளையாட நினைக்கும் போது - பையன்வேலைக்குச் சென்று விட்டான்கடைக்குப் போகணுங்க என்ற போதுகத்தி அனுப்பினாய்கடைக்குப் போக நினைக்கும் போது - மனைவிகால் வலியில் படுத்து விட்டாள்பணம் அனுப்புடா என்ற போதுபதுங்கி ஒதுங்கினாய்பணம் அனுப்ப நினைக்கும் போது - அப்பாபாடையிலே போய் விட்டார்காலம் கூப்பிட்ட போது மறுத்தாய் - இப்போதுகாலம் உன்னை மறுத்து விட்டது------------------------------------------நாகேந்திர பாரதி


இப்பவே வாரீகளா

இப்பவே வாரீகளா
----------------------------------ஒப்படிக்கும் வயலடிக்கும்ஓடி ஓடி வேலை செஞ்சுநெல்லடிச்சுக் குமிச்சு வச்சநேரமெல்லாம் போயாச்சுவயக்காட்டுச் சகதியிலேவழுக்காம குடமிரண்டைஇடுப்பிலேயும் தலையிலேயும்ஏத்தி வந்து ஓஞ்சாஞ்சுமுந்தா நாள் நடக்கையிலேமுடியாம விழுந்ததிலேமூச்சு படபடத்துமுன் நாக்கு தள்ளுதடிஇப்பவே வாரீகளாஎழவுக்கு வாரீகளா---------------------------------------நாகேந்திர பாரதி
ஞாயிறு, 5 மே, 2013

சாலைக்கொரு சோகம்

சாலைக்கொரு சோகம்
-------------------------------------------மண் ரோடாய் நானிருந்த அந்தக் காலம்மழையோடு மகிழ்ந்திருந்த சகதிக் கோலம்சேற்று மண்ணில் மீன் குஞ்சு நீந்தி ஆடும்சிறு குருவி ஓரத்தில் பாடி ஓடும்காற்று வர மண் பறந்து விளையாடும்காலத்தில் செடிகளிலே பூக்கள் ஆடும்ஓரத்தில் வளர்ந்திருக்கும் புற் செடியும்ஒத்தாசைப் பேச்சுக்கு உடன் பாடும்இப்போது சிமெண்டாகி இறுகும் தேகம்விறைப்பான சாலையிலே உங்கள் வேகம்--------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 3 மே, 2013

'செல்'லத் தொல்லை

'செல்'லத் தொல்லை
-----------------------------------காலை எழுந்தவுடன் செல்லு - பின்புகாதில் ஒட்டிக் கொள்ளும் செல்லுமாலை முழுது மந்த செல்லு - என்றுவழக்கப் படுத்திக் கொண்ட செல்லுசெய்தி அனுப்புறதும் செல்லு - சினிமாபடத்தை அனுப்புறதும் செல்லுகைதி ஆக்கிப் புட்ட செல்லு - சின்னகம்ப்யூட்டர் ஆகிப் போன செல்லுமாசம் முழுக்க அந்த செல்லு - மாசக்கடைசி 'காய்ச்சு'மந்த பில்லு----------------------------------------நாகேந்திர பாரதி


வியாழன், 2 மே, 2013

ஒத்தையடிப் பாதை

ஒத்தையடிப் பாதை
-----------------------------------ஓராயிரம் கால்களின்ஒற்றுமை அடையாளம்கால்கள் பின்னியகாட்டுக் கயிறுநெளிந்து கிடக்கும்நீளப் பாம்புதார் ரோட்டின்தகப்பன் சாமிதேய்ந்து வளரும்வாழ்க்கைப் பாதை-------------------------------நாகேந்திர பாரதி