வெள்ளி, 26 ஏப்ரல், 2013

கண்ணீர்ப் பொய்கள்

கண்ணீர்ப் பொய்கள்
------------------------------------மறக்க மாட்டேன்என்று சொல்லிமறந்து விட்ட போதும்பிரிய மாட்டேன்என்று சொல்லிபிரிந்து விட்ட போதும்திரண்ட சிவப்போடுதிரும்பிய கண்களுக்குள்உருண்ட கண்ணீர்பொய் சொல்லிப் போகும்---------------------------------நாகேந்திர பாரதி


சனி, 13 ஏப்ரல், 2013

கனவுப் பொய்கள்

கனவுப் பொய்கள்
------------------------------எவனையோ காதலித்துஎவனையோ மணமுடித்துஎவனையோ எவளையோமழலையாய்ப் பெற்று விட்டுதாயாகப் பாட்டியாகத்தவத்தை முடித்து விட்டுபோகும் நேரத்தில்புலப்பட்டே தீரும்காதலும் வாழ்க்கையும்கனவென்று பொய்யென்று-------------------------------------------நாகேந்திர பாரதி


சுசீலாவின் குரல்

சுசீலாவின் குரல்
-------------------------------சுசீலாவின் குரலுக்குசுவையைச் சேர்த்ததுசரோஜா தேவியாஜெய லலிதாவாவிஜயாவா வாணிஸ்ரீயாகாஞ்சனாவா பாரதியா
எழுதிய கவிஞனுக்கு


என்றும் பிடித்ததுஅபிநய சரஸ்வதிசரோஜா தேவியே-----------------------------நாகேந்திர பாரதி
வெள்ளி, 12 ஏப்ரல், 2013

பிள்ளையிட்ட தீ

பிள்ளையிட்ட தீ
----------------------------------பிள்ளையிட்ட தீபற்றி எரிகிறதுவாய்க்காலில் ஓடியஇள ரத்தம்எழும்பி வருகிறதுஇளைஞர் மனத்தில்இன மானத்தைஎழுப்பி வருகிறதுஅரசியல் தரகர்களும்ஐந்தாம் படைகளும்அலறி ஓடமாணவர் படைமறுபடி வருகிறது----------------------------------நாகேந்திர பாரதி
புதன், 3 ஏப்ரல், 2013

தண்ணீர் தண்ணீர்

தண்ணீர் தண்ணீர்
-------------------------------நகரத்துதண்ணி வண்டிகளில்சொட்டு சொட்டாகதரை இறங்கிஈரமாக்கும் தண்ணீர்கிராமத்துகிணத்து ஊத்தில்சொட்டு சொட்டாகதரை ஏறநேரமாக்கும் தண்ணீர்-----------------------------------நாகேந்திர பாரதி