ஞாயிறு, 24 மார்ச், 2013

மாறும் மனிதம்

மாறும் மனிதம்
-------------------------பரிணாம வளர்ச்சியிலேஉடலைப் பெற்றுபயமான உணர்ச்சியிலேஉள்ளம் பெற்றுவிரிவான இயற்கையிலேவேலை கற்றுபெரிதான உலகத்தில்பேதம் பெற்றுமலையாக மடுவாகமாறும் மனிதம்-------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 23 மார்ச், 2013

அடுப்படிக் கைதிகள்

அடுப்படிக் கைதிகள்
--------------------------------------ஒண்ணு ரெண்டு கழுவி விட்டுஉக்காத்திக் குளிப்பாட்டிஅடி உதை திட்டு வாங்கிஆடையிட்டு ஊட்டிவிட்டுபடிப்பையும் பதவிசையும்பார்த்துப் பூரித்துஒண்ணொண்ணும் பெருசாகிஊரு தேசம் பறந்தாலும்அம்மாச்சிகளும் அப்பத்தாக்களும்அடுப்படியே கதியாக------------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 11 மார்ச், 2013

உதிரிப் பூக்கள்

உதிரிப் பூக்கள்
----------------------------அமில வீச்சும்ஆபாசப் பேச்சும்உமிழும் கொடியவர்உன்மத்தம் அடக்கஉதிரிப் பூக்கள்உருக்காய் மாறட்டும்இரும்பு மாலையாய்இணைந்து சேரட்டும்இதயம் இழந்தவர்கழுத்தை இறுக்கட்டும்-------------------------------நாகேந்திர பாரதிவியாழன், 7 மார்ச், 2013

முளக்கட்டுத் திண்ணை
முளக்கட்டுத் திண்ணை-------------------------------------------முக்குத் தெருவிலேமுளக்கட்டுத் திண்ணைவருடத்துக்கு ஒரு முறைவாழ்வு பிறக்கும்மைக்செட்டு போட்டுபாட்டு பறக்கும்முளைப்பாரி இறக்கிகும்மி குதிக்கும்மத்த நாட்களில்மாடுகள் மேயும்--------------------------நாகேந்திர பாரதி


விடுமுறை தினங்கள்

விடுமுறை தினங்கள்
---------------------------------------அஞ்சு நாள் வேலையாம்ரெண்டு நாள் விடுப்பாம்ரெண்டு நாள் வேலை வச்சுஅஞ்சு நாள் விடுப்பு விட்டாவேலையும் கொஞ்சம்வெரசா முடியும்சுத்துப்புறம் இன்னும்சுத்தமா இருக்கும்வீட்டிலேதான் கொஞ்சம்வீண் சண்டை வளரும்--------------------------------------நாகேந்திர பாரதி


சனி, 2 மார்ச், 2013

மாறிப் போனவர்கள்

மாறிப் போனவர்கள்
-------------------------------------ஒடிஞ்சு ஒடிஞ்சு நடக்கறவஊர்வசியாத் தான் இருக்கும்நெடு நெடுன்னு வளந்தவஓட்டப் பந்தயம் ஜெயிச்சவதொந்தியும் தொப்பையுமாதொஞ்சு நடக்கிறவன்தம்பித்துரையாத் தான் இருக்கும்அப்பவே ஆளுகொஞ்சம் குண்டுதான்ஊருக்குத் திரும்பமண்டபத்தில் இருக்கிறப்போடீக்கடைக் குள்ளிருந்துகுரலு கேட்குதுகருகருன்னு முடியோடதிரிஞ்ச கதிரேசனாபஞ்சுப் பொதியாகிப்பரதேசியாத் தெரியிறானேநம்மளைத்தான் சொல்றாய்ங்கநமக்குத் தெரியாதவய்ங்க-------------------------------------------------நாகேந்திர பாரதி