சனி, 23 பிப்ரவரி, 2013

வெடிச் சத்தம்

வெடிச் சத்தம்
------------------------வெடிச் சத்தத்தில்விறைத்துப் பறக்கும்பறவைகள் பார்க்கவேநெஞ்சு பதைக்குதேவெடித்துச் சிதறிவிழுந்து சிதைந்துரத்தமும் சதையுமாம்எத்தனை உடல்கள்வன்முறை ஆட்டம்ஓய்வது எப்போது----------------------------------நாகேந்திர பாரதி
திங்கள், 11 பிப்ரவரி, 2013

பண மாற்றம்

பண மாற்றம்
-------------------------ஈயம் பித்தாளைக்குபேரீச்சம் பழமாம்கைப்பிடி நெல்லுக்குகத்திரிக்காய் கீரையாம்ஓட்டை உடைசலுக்குமாத்துப் பாத்திரமாம்பண்ட மாற்றுக்காலம் போனதுபைசா வந்ததுபற்றாக்குறை ஆனது----------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

என்றும் இனிமை

என்றும் இனிமை
------------------------------எத்தனை காலம்ஆனால் என்னஇளமை போயேபோனால் என்னபார்த்தால் போதும்சிரித்தால் போதும்பேசினால் போதும்தொட்டால் போதும்இதயக் காதலில்என்றும் இனிமை------------------------------நாகேந்திர பாரதி


சனி, 9 பிப்ரவரி, 2013

நிலாக் காலம்

நிலாக் காலம்
--------------------------நிலவுக்கும் காதலுக்கும்நெருக்கம் உண்டுகண்ணுக்கும் கனவுக்கும்அதுதானே காலம்பெண்ணுக்கும் ஆணுக்கும்அதுதானே பாலம்உணர்வுக்கும் துடிப்புக்கும்அதுதானே காட்சிஉறவுக்கும் பிரிவுக்கும்அதுதானே சாட்சி--------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

வெயில் விளையாட்டு

வெயில் விளையாட்டு
----------------------------------------சுள்ளுன்னு உறைக்கும்சில்லுன்னு வேர்க்கும்கபடியோ கிட்டியோகை, கால் பந்தோவெயிலில் விளையாடிவேர்த்து விறுவிறுத்துகுளத்தில் மூழ்கிகுளித்து எழுந்தால்வெயிலின் அருமை


பசியில் தெரியும்---------------------------நாகேந்திர பாரதி

புதன், 6 பிப்ரவரி, 2013

பெண் பாடு

பெண் பாடு
-------------------------கருவக் கட்டைத்தலையில் சுமந்துகழுத்தும் காலும்வலிக்க நடந்துவயலைக் கடந்துவீட்டை அடைந்துஇறக்கி வைத்துஇளைக்கும் போது'இத்தனை நேரம்எங்கடி தொலஞ்சே '--------------------------நாகேந்திர பாரதி
செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

வயலும் வாழ்வும்

வயலும் வாழ்வும்
----------------------------------கண்மாய்க் கரையைஉசத்துவதில் ஆகட்டும்யூரியா , பாஸ்பேட்டைதூவுவதில் ஆகட்டும்கூட்டுறவுக் கடனைஅடைப்பதில் ஆகட்டும்குளமும் வயலுமாய்க்கூடிய சனத்தைசாதியும் சமயமும்பிரிக்கப் பார்க்கும்---------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

காலக் கணக்கு

காலக் கணக்கு
--------------------------------கூட்டல் கணக்குகழித்தல் ஆகும்வயதும் கூடிஇளமை கழியும்பெருக்கல் கணக்குவகுத்தல் ஆகும்தளர்வும் பெருகிஉணர்வை வகுக்கும்காலம் மாறும்கணக்கும் மாறும்----------------------------- நாகேந்திர பாரதி