செவ்வாய், 29 ஜனவரி, 2013

பவர் ஸ்டார்

பவர் ஸ்டார்
--------------------------மனக் கவலைகள்மறைந்து போகும்உடல் உபாதைகள்கரைந்து போகும்கடன் தொல்லைகள்காணாமல் போகும்காதல் வாழ்வுதானாகச் சேரும்பவர் ஸ்டாரைப்பார்த்தாலே போதும்---------------------------நாகேந்திர பாரதி


வியாழன், 24 ஜனவரி, 2013

காதல் கண்ணாமூச்சி

காதல் கண்ணாமூச்சி
----------------------------------------------அழுகையும் சிரிப்பும்அணைப்பும் முறைப்பும்பிரிதலும் சேர்தலும்பேச்சும் மௌனமும்நாணமும் வேகமும்நடிப்பும் துடிப்பும்ஊடலும் கூடலும்உவர்ப்பும் இனிப்பும்காதலர் ஆடும்கண்ணாமூச்சி ஆட்டம்--------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 15 ஜனவரி, 2013

நன்றித் திருவிழா

நன்றித் திருவிழா
-----------------------------------மழைக்கு நன்றிமாட்டுக்கு நன்றிநிலத்திற்கு நன்றிநெல்லுக்கு நன்றிகதிருக்கு நன்றிகரும்புக்கு நன்றிவிளை நிலங்கள் எல்லாம்வீடுகளாய் ஆன பின்புநன்றி சொல்லநாதி இருக்குமா------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

காதல் பாதை

காதல் பாதை
---------------------------பேச்சும் சிரிப்பும்பிரிவும் சேர்தலும்மூச்சும் முடிவும்முன்னும் பின்னும்வாழ்க்கைப் பாதையின்வழித் தடங்கள்காதல் பாதைக்குபார்வை போதும்கண்கள் போதும்கண்ணீர் போதும்-----------------------------------நாகேந்திர பாரதி
வியாழன், 10 ஜனவரி, 2013

என்னென்ன ஆச்சு

என்னென்ன ஆச்சு
-----------------------------------உருண்டு புரண்டுவந்தாச்சுபடிச்சு மறந்துபோயாச்சுஎழுதிக் கிழிச்சுஇருந்தாச்சுவளைஞ்சு நெளிஞ்சுநின்னாச்சுஇருந்து இறந்துமண்ணாச்சு----------------------------நாகேந்திர பாரதி


புதன், 9 ஜனவரி, 2013

'எங்கிருந்தாலும் வாழ்க '

'எங்கிருந்தாலும் வாழ்க '
------------------------------------------------நேற்றிருந்த காலம்நெஞ்சிலே நிழலாடும்பூத்திருந்த காதல்புன்னகை உறவாடும்காத்திருந்த காலம்கண்ணீரில் கழிந்தாலும்சேர்த்திருந்த உறவுக்குசெலவாக உயிர் போகும்'எங்கிருந்தாலும் வாழ்க''நெஞ்சில் ஓர் ஆலயம்'--------------------------------------நாகேந்திர பாரதி


ஞாயிறு, 6 ஜனவரி, 2013

காதல் கதை

காதல் கதை
-------------------------------அந்தக் கோபத்தில் ஒருகுறும்பு இருக்கும்அந்தக் குறும்பில் ஒருகொஞ்சல் இருக்கும்அந்தப் கொஞ்சலில் ஒருகாதல் இருக்கும்அந்தக் காதலில் ஒருகலக்கம் இருக்கும்அந்தக் கலக்கத்தில்ஒரு கதை இருக்கும்-------------------------------நாகேந்திர பாரதி
வெள்ளி, 4 ஜனவரி, 2013

குடிகாரர் கூட்டம்

குடிகாரர் கூட்டம்
----------------------------------அருகம்புல் சாறுசர்க்கரை நோய்க்காம்முடக்கத்தான் சாறுமூட்டு வலிக்காம்துளசிச் சாறுஇருமல் சளிக்காம்சொல்லாமல் தெரியும்எல்லோரின் நோயும்வாக்கிங் பார்க்கில்குடிகாரர் கூட்டம்---------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 3 ஜனவரி, 2013

குழந்தை உள்ளம்

குழந்தை உள்ளம்
--------------------------------'யாரையும் திட்டக் கூடாது'என்று சொல்லிதிட்டும் போதும்'யாரையும் அடிக்கக் கூடாது'என்று சொல்லிஅடிக்கும் போதும்சொன்னதைச் செய்யாதஅம்மாவைப் பார்த்துகுழம்பிப் போகும்குழந்தை உள்ளம்-------------------------நாகேந்திர பாரதி