திங்கள், 30 டிசம்பர், 2013

புத்தாண்டு வண்ணம்

புத்தாண்டு வண்ணம்
-------------------------------------
ஆண்டின் தொடக்கம் - ஒரு 
அடையாளச் சின்னம் 

பழையன கழிந்து 
புதியன பூக்க 

தீமைகள் அழிந்து 
நன்மைகள் ஆக்க 

துன்பங்கள் ஒழிந்து
இன்பங்கள் சேர்க்க 

நம்பிக்கை கொடுக்கும் 
நல்லெண்ணச் சின்னம்  
--------------------------------நாகேந்திர பாரதி

புதன், 25 டிசம்பர், 2013

உணர்ச்சி நாட்கள்

உணர்ச்சி நாட்கள் 
-----------------------------
கிருஷ்ண ஜெயந்தியும்  
கிருஸ்துமசும்  ஒன்றே

ராம நவமியும் 
ரம்ஜானும் ஒன்றே

எல்லா மதங்களும் 
சம்மதம்  என்றால் 

தியாகத் தீபங்கள் 
தெரியும் வேளையில்

ஒவ்வொரு நாளும் 
உணர்ச்சி நாளே 
--------------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 17 டிசம்பர், 2013

மார்கழிக் காலம்

மார்கழிக் காலம்
--------------------------
மார்கழித் திங்கள் முதல் 
தையின் பொங்கல் வரை 

குளிரும் காலையில் 
நடக்கும் பாடல்கள் 

குனிந்து நிமிர்ந்து 
போடும் கோலங்கள் 

இழுத்துப் போர்த்தித் 
தூங்கும் சுகத்தில் 

இந்தப் பயிற்சியின் 
சொந்தம் புரியாது 
-----------------------------நாகேந்திர பாரதி 

திங்கள், 18 நவம்பர், 2013

நதியின் ஓட்டம்

நதியின் ஓட்டம் 
--------------------------
ஓடுகின்ற நதியாய் 
ஓடுகின்ற காலம் 

சுற்றமும் நட்பும் 
சூழ்ந்த பாதையில் 

வறண்ட கோலமும் 
திரண்ட கோலமுமாய் 

கடக்கும்  ஊர்கள் 
நடக்கும் நாட்கள் 

கடலைச் சேருமுன் 
எத்தனை கற்பனைகள் 
----------------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 5 நவம்பர், 2013

மினுக்கும் சினிமா

மினுக்கும் சினிமா
------------------------------------
உணர்ச்சியில் கடித்துத் 
துப்பும் வசனம் 

ஆராய்ச்சி செய்தும் 
அகப்படாத கதை

நாற்புறம் துடிக்கும் 
நகலெடுத்த இசை 

சதைகள் ஆடும் 
நடனம் ஆகும் 

மேற்கோ கிழக்கோ 
மினுக்கும் சினிமா 
------------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 1 நவம்பர், 2013

பார்வையின் மறுபக்கம்

பார்வையின் மறுபக்கம் 
------------------------------------
பால்கனியில் இருந்து
பார்த்தால் தெரிகிறது 

அந்தக் கால அழகி 
இந்தக் காலக் கிழவியாய் 

அந்தக் கால ரவுடி 
இந்தக் கால பிச்சைக்காரனாய் 

அந்தக் கால அம்பாசடர் கார் 
இந்தக் கால ஓட்டை ஒடசலாய்

நமக்கும் கூட 
வயதாகி விட்டதோ 
-------------------------------நாகேந்திர பாரதி 

திங்கள், 28 அக்டோபர், 2013

காசும் கரியும்

காசும் கரியும் 
---------------------------
தீப ஒளித் திருவிழா 
தெருக் குப்பைத் திருவிழா ஆச்சு 

காதைப் பிளக்கும் சத்தமும்
கண்ணைப் பறிக்கும் வெளிச்சமும் 

காசைக் கரியாக்கும்
காரியங்கள் ஆச்சு 

வயிற்றுக்குச் சோறில்லா 
வாழ்க்கையில் இருக்கையிலே 

இயற்கைக்குத் தீங்கிழைக்கும் 
புகை போக்கிகள் எதற்காக 
--------------------------------நாகேந்திர பாரதி 

காதல் மேகம்

காதல் மேகம் 
-----------------------
காதல் நினைவில்
கதறும் மேகம் 

அங்கும் இங்கும் 
அலைந்து ஏங்கும் 

கண்ணீர் கறுத்துத்
தண்ணீர் ஆகும் 

மழையாய்ப் பொழிந்து 
மறைந்து போகும் 

நிலமும் குளிரும் 
நினைவும் சாகும் 
--------------------------------நாகேந்திர பாரதி 


திங்கள், 21 அக்டோபர், 2013

தொடர்கதை வாழ்க்கை

தொடர்கதை வாழ்க்கை 
--------------------------------------
நாட்களில் நடந்த 
நிகழ்ச்சிகள் எத்தனை 

மாதங்களில் மலர்ந்த 
மகிழ்ச்சிகள் எத்தனை 

வருடங்களில் கரைந்த 
வருத்தங்கள் எத்தனை 

தொடர்கதை வாழ்க்கையில் 
தொடரும் திருப்பங்கள் 

முற்றும் போட்டும் 
முடியுமா உயிர்நிலை 
------------------------------நாகேந்திர பாரதி 

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

சிரிப்பு சினிமா

சிரிப்பு சினிமா 
-----------------------
கொலையும் கொள்ளையும் 
குடியும் கற்பழிப்பும் 

கொடூரச் செயல்களாய்க் 
காட்டிய காலம் போய் 

சிரிப்பும் பாட்டுமாய்க் 
காட்டும் சினிமாவில்  

சிக்கிச் சீரழியும் 
சிறுவர் சமுதாயம் 

தேறுமா இனிமேல் 
மாறுமா சினிமா 
---------------------------------நாகேந்திர பாரதி 

திங்கள், 30 செப்டம்பர், 2013

முக மாற்றம்

முக மாற்றம் 
---------------------
வயதான முகத்தோடு 
அவரைப் பார்த்தபோது 

அவரின் வாலிப முகம் தான் 
கண்ணுக்குள் வருகிறது 

குறும்பும் சிரிப்பும் 
ஆட்டம் போட்ட 
அந்த முகம் எங்கே 

அவரும் அப்படியே 
நினைத்து இருக்கலாம் 
நம்மைப் பற்றி 
----------------------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

எண்ணங்களின் எண்ணிக்கை

எண்ணங்களின் எண்ணிக்கை 
--------------------------------------------------
படிக்கும் போது 
படரும் எண்ணம் - காதல் 
துடிக்கும் போது 
தொடரும் எண்ணம் - வேலை 
கிடைக்கும் போது 
கிளறும் எண்ணம் - மணம் 
முடிக்கும் போது 
மலரும் எண்ணம் - காலம் 
முடியும் போது 
முடியும் எண்ணம் 
-----------------------------------நாகேந்திர பாரதி 

இரவின் ராகங்கள்

இரவின் ராகங்கள் 
---------------------------
இரவின் மௌனத்தில் 
எத்தனை ராகங்கள் 

அசையும் மரத்தினில் 
ஆடும் ஒரு ராகம்

ஆகாய வெளியினில் 
ஓடும் ஒரு ராகம் 

படுத்த வீதியில் 
பாடும் ஒரு ராகம் 

பகலில் பறக்கும்  
இரவின் ராகங்கள் 
---------------------------நாகேந்திர பாரதி 

புதன், 25 செப்டம்பர், 2013

கனவுக் காட்சிகள்

கனவுக்  காட்சிகள் 
-------------------------------
நினைவுத் தீபத்தின் 
நிழல் இருட்டு

நெஞ்சில் கிடக்கும் 
ஆசைத் திரட்டு 

மலர முடியாமல் 
மயங்கும்  மொட்டு 

முடிந்து போகாத 
மூல வித்து 

கடந்து போகாமல் 
கண்ணுக்குள் குத்தும் 
---------------------------நாகேந்திர பாரதி 
 

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

குழந்தை விளையாட்டு

குழந்தை விளையாட்டு 
----------------------------------------
குழந்தை விளையாட்டில் 
கூட ஒரு குழந்தையாய் 

கலந்து கொண்டாலோ 
கண்களில் சந்தோஷம் 

விலகிச் சென்றாலோ  
விம்மும்  கண்ணீர்

விளையாட்டை  வாழ்க்கையாய்  
விரும்பி ஆடட்டும் 

வாழ்க்கையும் விளையாட்டாய்
விளைந்து கூடட்டும் 
--------------------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

ஆண்டவன் கணக்கு

ஆண்டவன் கணக்கு 
------------------------------
ஒழுங்கா படிக்காட்டி
ஓட்டல் வேலைதான் 

நல்லாப் படிச்சாக்க 
நாடு வேறதான் 

ஒண்ணாப் பொறந்தாலும் 
ரெண்டு ரெண்டுதான் 

மண்ணாப் போறப்போ 
ரெண்டும் ஒண்ணுதான் 

அவனவன் தலையிலே 
ஆண்டவன் கணக்குத்தான் 
--------------------------------------நாகேந்திர பாரதி 

புதன், 18 செப்டம்பர், 2013

காக்கை நம்பிக்கை

காக்கை நம்பிக்கை
-----------------------------
சன்னலில் அமர்ந்து 
கரையும் காக்கை 

பிஸ்கெட் போடும்
பேத்தியைப் பார்க்கும் 

அப்பத்தாவோ பாட்டனாரோ 
அம்மாச்சியோ  தாத்தாவோ  

பிரியத்தோடு சாப்பிட்டு 
பறக்கும் பறவை 

கருணை நம்பிக்கைக்கு 
காரணங்கள் தேவையில்லை 
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

சனி, 14 செப்டம்பர், 2013

நேற்று இன்று நாளை

நேற்று இன்று நாளை 
--------------------------------------
நேற்றைய காதல்
நடந்து வந்தது

இன்றைய காதல் 
ஓடிப் போவது 

நாளைய காதல் 
கூடிப்  பிரிவது 

நேற்றைய இன்றைய 
நாளைய காதலில் 

நெஞ்சில் நிறைவது 
நேற்றைய காதலே 
--------------------------நாகேந்திர பாரதி 

புதன், 11 செப்டம்பர், 2013

பைபாஸ் பாதை

பைபாஸ் பாதை
------------------------
சிற்றூரின் ஸ்பெஷலான 
பலகாரம் காணோம் 

சிரித்தோடும்  பள்ளிச் 
சிறுவர்களைக் காணோம் 

ஊருக்குள் ஓடுகின்ற
ஆற்றையும் காணோம் 

ஆற்றோராம் இருக்கின்ற 
கோயிலையும் காணோம் 

பைபாஸ் பாதையிலே 
பறந்தென்ன கண்டோம் 
--------------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com/

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

உதிர்ந்த காதல்

உதிர்ந்த காதல்
----------------------
மரங்கள் உதிர்த்த 
மலர்களைப் போல

குயில்கள் உதிர்த்த 
குரல்களைப் போல

காதலை உதிர்த்து 
காணாமல் போனவள் 

மலரும் மரங்களும்
கூவும் குயில்களும் 

கூப்பிட்டு அழைத்தால் 
கூட வருவாளா 
-------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 9 செப்டம்பர், 2013

காலப் போக்கு

காலப் போக்கு 
----------------------
கையால் உருட்டிய
களிமண் பிள்ளையாரும் 

சீதக் களபச் 
செந்தாமரைப் பூவும் 

அவலும் பொரியும் 
கொழுக்கட்டை மோதகமும்

இதமாய் இனித்த 
காலம் அப்போது

மதமாய் மாறிய 
காலம் இப்போது 
-----------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

இயற்கை உணவு

இயற்கை உணவு
-----------------------------
பழங்கள் சாப்பிட்டால் 
ரத்தம் சுத்தமாம் 

காய்கறிகள் சாப்பிட்டால் 
நரம்பு இரும்பாம் 

தானியங்கள் சாப்பிட்டால் 
எலும்பு வலுவாம் 

இயற்கை உணவில் 
இருக்கிறதாம் மருந்து

ஏழைக்கு உணவு 
எவ்விடத்தில் இருந்து
------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 5 செப்டம்பர், 2013

ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம் 
--------------------------
சங்ககாலத் தமிழை 
மொழிபெயர்த்து ஊட்டியவர் 

ஆங்கில இலக்கணத்தின் 
அடிமுடியைக் காட்டியவர் 

அறிவியல் ஆர்வத்தை 
அடிப்படையில் தீட்டியவர்  

சமூகவியல் பாடத்தில் 
சமத்துவத்தை நாட்டியவர்  

எங்கிருந்தாலும் வாழ்க 
எங்களது ஆசிரியர் 
-----------------------------------நாகேந்திர பாரதி 

புதன், 4 செப்டம்பர், 2013

சென்னைப் பறவைகள்

சென்னைப் பறவைகள்
------------------------------------
சென்னைப் பறவைகளை 
எண்ணிப் பார்த்தால் 
ஏழோ எட்டோ 
எண்ணிக்கை வருகிறது
காக்கையும் புறாவும் 
மட்டுமே கண்களில்
மரங்களாம் வீடுகள் 
மறைந்து போனதால்
வெளியூர் தேடி 
விரைந்து போனதோ 
--------------------------------------நாகேந்திர பாரதி 

சனி, 17 ஆகஸ்ட், 2013

காய்கறியும் கரன்சியும்

காய்கறியும் கரன்சியும்
-----------------------------------
காய்கறி விலை
கூடிப் போனால் 
கரன்சி விலை
குறைந்து போகும்
ஒவ்வொரு வருக்கும்
ஒவ்வொரு வேலை
ஒழுங்காய்க் கிடைத்தால் 
உயரும் நாடு
டாஸ்மாக் வாசலில்
தத்துவம் பேசுவோம் 
--------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

தொலைந்து போன சுதந்திரம்

தொலைந்து போன சுதந்திரம் 
--------------------------------------------
இலவசத்தில் தொலைந்து போன
சேமிப்பின் சுதந்திரம் 
வறுமையிலே தொலைந்து போன
வளர்ச்சியின் சுதந்திரம்
மதுக் கடையில் தொலைந்து போன
மனிதத்தின் சுதந்திரம்
உலகத்தில் தொலைந்து போன
உள் வணிக சுதந்திரம்
ஊழலிலே தொலைந்து போன
உள் நாட்டு சுதந்திரம்
------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

திண்ணைப் பேச்சு

திண்ணைப் பேச்சு 
---------------------------
சாயந்திரம் ஆரம்பிக்கும் 
திண்ணைப் பேச்சு
ராத்திரி வரைக்கும் 
ரவுண்டு கட்டும் 
சாப்பிடச் சொல்லி
சவுண்டு கேட்கும் 
பெருசுகள் பசியோடு
பிரிந்து போகும் 
இரவுகள் கூடும் 
எண்ணிக்கை  குறையும் 
-----------------------நாகேந்திர பாரதி

ஆண் பாவம்

ஆண் பாவம்
----------------------------
பேச்சில் மயங்கி 
சிரிப்பில் மயங்கி
விரலில் மயங்கி
மடியில் மயங்கி
உணர்வில் மயங்கி
உள்ளம் மயங்கும் 
ஆண் பாவம்
பொல்லா தது
பெண் சோகம் 
சொல்லா தது  
--------------------நாகேந்திர பாரதி

சனி, 10 ஆகஸ்ட், 2013

ஒருதலைப் பெண்ணினம்

ஒருதலைப் பெண்ணினம்
----------------------------------------
அடுப்பாங் கரையில்
அவிந்து கிடந்து
வயக்காட்டு வரப்பில்
தேய்ந்து கிடந்து 
டூரிங் டாக்கீஸில் 
தொலைந்து கிடந்து 
திருவிழாச்  சாமியைத் 
தேடிக் கிடந்து 
ஒருதலைப் பெண்ணினம் 
ஓய்ந்து கிடந்தது 
--------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 28 ஜூலை, 2013

வறுமைக் கோடு

வறுமைக் கோடு
--------------------------------ஒரு நாள் சாப்பாட்டின்மதிப்பைக் குறைத்தால்வறுமைக் கோடுகீழே இறங்கும்ஒரு நாள் சாப்பாட்டின்அளவைக் குறைத்தால்வறுமைக் கோடுஇன்னும் இறங்கும்ஒரு நாள் சாப்பாடேஇல்லாமல் போனால்வறுமைக் கோடேஇல்லாமல் போகும்----------------------------நாகேந்திர பாரதி


சனி, 20 ஜூலை, 2013

தூக்கப் படுக்கை

தூக்கப் படுக்கை
------------------------
குதிரை வண்டியிலும்
மாட்டு வண்டியிலும்
குவித்து வைத்த 
வைக்கோல் படுக்கை
உரசிப் பார்த்தாலும்
உறக்கம் கலையாது
பஞ்சு மெத்தையிலும்
ரப்பர் மெத்தையிலும்
படுத்துப் புரண்டாலும்
தூக்கம் வாராது 
------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 19 ஜூலை, 2013

வாலிக்குச் சாவில்லை

வாலிக்குச் சாவில்லை
----------------------------------
வீட்டுக்கு ஒரு கவிஞன்
வீற்றிருக்கும் காலத்திலும்
பாட்டுக்குத் தலைவனாய்
பாராண்ட புலவனவன்
காதலோ பக்தியோ
கவிதையோ வசனமோ
எதுகையில் மோனையில்
எடுத்துவந்த இலக்கிய
வார்த்தைகள் இருக்கும்வரை
வாலிக்குச் சாவில்லை 
---------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 18 ஜூலை, 2013

வானம் பாத்த பூமி

வானம் பாத்த பூமி
---------------------------விதை முளைக்கவானம் பாத்துபயிர் பிடிக்கவானம் பாத்துகதிர் பழுக்கவானம் பாத்துபிழிஞ்சு கொடுத்ததுபேஞ்சு கெடுக்குதுசாவியை அறுக்குறப்போசகதியா ஆக்குது-------------------------நாகேந்திர பாரதி


புதன், 17 ஜூலை, 2013

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை
----------------------------------------
வெளிச்சத்தில் இருந்து
இருட்டுக்குள் பயணம்

சப்தத்தில் இருந்து
அமைதிக்குள் பயணம்

சக்திக்குள் இருந்து
சிவனுக்குள் பயணம்

உடலுக்குள் இருந்து
உயிருக்குள் பயணம்

துன்பத்தில் இருந்து
இன்பத்தில் பயணம்
------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 11 ஜூலை, 2013

சமுதாயக் கொடுமை

சமுதாயக் கொடுமை
-------------------------------
காதலில் பிரிந்து போய்
பாசத்தின் உயிரும் போய்
பாசத்தில் திரும்பி வந்து
காதலின் உயிரும் போய்
சாதிச் சண்டையின்
சமுதாயக் கொடுமை
உலகம் பெரிது
உயிர்கள் அரிது
காலம் மாறும்
கண்ணீர் ஆறும்
----------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 4 ஜூலை, 2013

இமயத்தின் இரத்தம்

இமயத்தின் இரத்தம்
-------------------------------
நதிகளின் ஈரங்கள்
நசுக்கப்பட்ட பொழுது
காடுகளின் ஆரங்கள்
கசக்கப்பட்ட பொழுது
மலைகளின் சாரங்கள்
மடக்கப்பட்ட பொழுது
மேகங்களின் பாரங்கள் 
மின்னல் பட்ட பொழுது
இமயமலை ஓரங்கள் 
இரத்தம் பட்ட பொழுது 
--------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 24 ஜூன், 2013

இரவும் பகலும்

இரவும் பகலும்
---------------------
இரவும் பகலும்
எதிர் பார்ப்பதில்லை
வரும் போகும்
வாரமாய் வருடமாய்
நரையும் திரையும்
நாட்களைக் காட்டும்
நட்பும் உறவும்
வாழ்க்கையைக் காட்டும்
வரவும் செலவும்
இயற்கையின் ஓட்டம் 
-------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 16 ஜூன், 2013

வார்த்தை ஊசிகள்

வார்த்தை ஊசிகள்
------------------------------
வார்த்தை ஊசிகள்
பிய்க்கும் தைக்கும்
பிரிவும் நேரும்
உறவும் சேரும்
முள்ளும் குத்தும்
மலரும் தடவும்
குத்திய வார்த்தைகள்
தழும்பாய் இருக்கும்
தடவிய வார்த்தைகள்
தேனாய் இனிக்கும்
-----------------------நாகேந்திர பாரதி

புதன், 12 ஜூன், 2013

தமிழின் நாக்‌கு

தமிழின் நாக்‌கு
----------------------
அமெரிக்க ஆப்பிரிக்க
மெட்டுக்குப் பாட்டா
தமிழன் வாழ்க்கைப்
பாட்டுக்கு மெட்டா
வாத்தியத்துக்கு வார்த்தையா
வார்த்தைக்கு வாத்தியமா 
இலக்கணத்துக்கு இலக்கியமா 
இலக்கியத்துக்கு இலக்கணமா 
தமிழின் நாக்‌குக்குத்
தட்டட்டும் தாளம் 
-------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 21 மே, 2013

அறிவுப் பல் அவஸ்தை

அறிவுப் பல் அவஸ்தை
---------------------------------------மரத்துப் போ என்றாலும்வலி யொன்றும் மறையாதுகடமுடா சத்தம்காதில் குறையாதுவாயைக் கிழிப்பது போல்வஸ்துக்கள் வேலை செய்யும்பக்கத்துப் பல்லெல்லாம்பார்த்துப் பரபரக்கும்ரத்தத்தில் முக்குளித்துசொத்தைப் பல் நஷ்டம்தான்அறிவு அகங்காரம்ஆனாலே கஷ்டம்தான்--------------------------------------நாகேந்திர பாரதி


சனி, 11 மே, 2013

'முடி'யாத கோலம்

'முடி'யாத கோலம்
-----------------------------------'கோடை வந்தாச்சுநல்லா குறைச்சிடு'அப்பா பேச்சுக்குகத்திரி ஆடும்மொட்டைக்குக் கொஞ்சம்கூட முடி வச்சுவீட்டுக்கு வந்தால்அம்மா திட்டுவாள்'புள்ளைக்கு சளி பிடிக்கும்இம்புட்டு முடி இருக்கே'------------------------------நாகேந்திர பாரதி
வியாழன், 9 மே, 2013

கோயில் பிரகாரம்

கோயில் பிரகாரம்
--------------------------------மண்ணுத் தரையாகஇருந்த போதுவலம் வந்த பக்தர்கள்சிமெண்ட்டுத் தரையாகஆன போதுஉட்கார்ந்து பேசிபளிங்குத் தரையாகமாறிய பின்புபடுத்துத் தூங்கினார்கள்-----------------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 6 மே, 2013

நீ வந்த போது

நீ வந்த போது
------------------------மேகப் பொதியில் ஒன்றுமெத்தென மோதியது போலதூறல் மழைச் சாரல்தொட்டுத் தடவியது போலதெக்குத் தென்றல் என்னைத்தேடி வந்தது போலமுல்லைப் பூவின் வாசம்மூச்சில் நிறைந்தது போலபக்கம் நீ வந்து மெல்லபட்டு அமர்ந்த போது----------------------------------நாகேந்திர பாரதி


மறுத்து விட்ட காலம்

மறுத்து விட்ட காலம்
-------------------------------------விளையாட வாப்பா என்ற போதுவிரட்டி அனுப்பினாய்விளையாட நினைக்கும் போது - பையன்வேலைக்குச் சென்று விட்டான்கடைக்குப் போகணுங்க என்ற போதுகத்தி அனுப்பினாய்கடைக்குப் போக நினைக்கும் போது - மனைவிகால் வலியில் படுத்து விட்டாள்பணம் அனுப்புடா என்ற போதுபதுங்கி ஒதுங்கினாய்பணம் அனுப்ப நினைக்கும் போது - அப்பாபாடையிலே போய் விட்டார்காலம் கூப்பிட்ட போது மறுத்தாய் - இப்போதுகாலம் உன்னை மறுத்து விட்டது------------------------------------------நாகேந்திர பாரதி


இப்பவே வாரீகளா

இப்பவே வாரீகளா
----------------------------------ஒப்படிக்கும் வயலடிக்கும்ஓடி ஓடி வேலை செஞ்சுநெல்லடிச்சுக் குமிச்சு வச்சநேரமெல்லாம் போயாச்சுவயக்காட்டுச் சகதியிலேவழுக்காம குடமிரண்டைஇடுப்பிலேயும் தலையிலேயும்ஏத்தி வந்து ஓஞ்சாஞ்சுமுந்தா நாள் நடக்கையிலேமுடியாம விழுந்ததிலேமூச்சு படபடத்துமுன் நாக்கு தள்ளுதடிஇப்பவே வாரீகளாஎழவுக்கு வாரீகளா---------------------------------------நாகேந்திர பாரதி
ஞாயிறு, 5 மே, 2013

சாலைக்கொரு சோகம்

சாலைக்கொரு சோகம்
-------------------------------------------மண் ரோடாய் நானிருந்த அந்தக் காலம்மழையோடு மகிழ்ந்திருந்த சகதிக் கோலம்சேற்று மண்ணில் மீன் குஞ்சு நீந்தி ஆடும்சிறு குருவி ஓரத்தில் பாடி ஓடும்காற்று வர மண் பறந்து விளையாடும்காலத்தில் செடிகளிலே பூக்கள் ஆடும்ஓரத்தில் வளர்ந்திருக்கும் புற் செடியும்ஒத்தாசைப் பேச்சுக்கு உடன் பாடும்இப்போது சிமெண்டாகி இறுகும் தேகம்விறைப்பான சாலையிலே உங்கள் வேகம்--------------------------------------------------நாகேந்திர பாரதி