வியாழன், 27 டிசம்பர், 2012

'என்ன ஆச்சு'

'என்ன ஆச்சு'




----------------------



அரையணா பாட்டுப் புஸ்தகம் வாங்கி



அடுக்கி வச்ச வன்னிச்சாமி



கருவ மரக் கிளை ஒடிச்சு



கம்புச் சண்டை போட்ட உதயகுமார்



சேதுக்கரைக்கு சைக்கிளில் போயி



கடல் குளியல் சேதுராஜு



மஞ்சப் பையும் தூக்குச் சட்டியுமா



ஓடி வரும் முனியசாமி



பாதிப் பேரு போயாச்சு



மீதிப் பேரு என்ன ஆச்சு



----------------------------------நாகேந்திர பாரதி






புதன், 26 டிசம்பர், 2012

மறக்காத பள்ளிக்கூடம்

மறக்காத பள்ளிக்கூடம்




===========================



பார்வதியும் ஈஸ்வரியும்



பாட்டியாகிப் போனாங்க



பானுமதி படிச்சிட்டு



பதவியிலே போயிட்டா



சீக்கிரமே மணமாகி



சிங்கப்பூர்  ஜெயலக்ஷ்மி



சினிமாவில் சேந்து



ஜெயிச்சு வந்த சிவகாமி



படிச்சதெல்லாம் மறந்தாலும்



மறக்காத பள்ளிக்கூடம்



---------------------------------------------------நாகேந்திர பாரதி





வியாழன், 20 டிசம்பர், 2012

'நிலவைப் பார்த்து வானம் சொன்னது'

'நிலவைப் பார்த்து வானம் சொன்னது'




-------------------------------------------------------------------------



தீண்டாதீர் திருநீலகண்டத்தின்



திருத்திய பதிப்பு



வேண்டாத கணவன்



கைப்பட்டால் குற்றம்தான்



வேண்டும் காதலின்



விரக்தி வெளிப்பாடு



பொருந்தாத உவமைகளைப்



பொருத்திப் பார்க்கிறான்



'நிலவைப் பார்த்து வானம் சொன்னது'



'சவாலே சமாளி'



--------------------------------நாகேந்திர பாரதி



'காவேரி ஓரம்'

'காவேரி ஓரம்'




---------------------------



காதல் களவு போகும்



கவலையில் பாடல்



உரிமையுடன் அவன்



உ'டை'யினைத் திருத்தினாலும்



உள்ளத்தின் உள்ளே



ஒளிந்திருக்கும் பயம்



பணத்திற்கும் அழகிற்கும்



பறி போய் விடுவானோ



'காவேரி ஓரம்'



'ஆடிப் பெருக்கு'



-----------------------------------------நாகேந்திர பாரதி




புதன், 19 டிசம்பர், 2012

'மெல்ல நட மெல்ல நட'

'மெல்ல நட மெல்ல நட'




---------------------------------------------



வேகமாய் நடந்தால்



வேதனை மேனிக்காம்



பெண்மையின் மென்மையின்



பெருமையைப் பேசி



வர்ணிக்கும் காதலன்



வார்த்தையில் மயங்கி



நாணத்தில் நடக்கும்



நளினத்தின் நாயகி



'மெல்ல நட, மெல்ல நட'



'புதிய பறவை'



-------------------------------நாகேந்திர பாரதி




மனோ தர்மம்

மனோ தர்மம்




-------------------------



எல்லாக் கச்சேரிகளிலும்



முன்வரிசை ஆசாமி



தப்புத் தாளங்கள்



போட்டு ரசிப்பார்



பக்கத்தில் இருப்பவர்



பாடு திண்டாட்டம்



தலையாட்டல் பார்ப்பவர்



கழுத்து வலிக்கும்



மனோ தர்மத்தோடு



ரசித்துக் கேட்கிறாராம்



--------------------------------நாகேந்திர பாரதி





திங்கள், 17 டிசம்பர், 2012

'நினைக்கத் தெரிந்த மனமே'

'நினைக்கத் தெரிந்த மனமே'




---------------------------------------------------



காதல் வலியின்



வேதனைப் புலம்பல்



மன்மத நாட்களை



மறக்கும் முயற்சி



திரும்பத் தேடித்



தேம்பும் நாயகி



விரும்பும் நாயகன்



வேதனைத் தோற்றம்



'நினைக்கத் தெரிந்த மனமே'



'ஆனந்த ஜோதி'



-----------------------------------நாகேந்திர பாரதி





ஞாயிறு, 16 டிசம்பர், 2012

'வசந்த காலக் கோலங்கள்'

'வசந்த காலக் கோலங்கள்'




--------------------------------------------------



காதல் பொய்யென்று



காரணம் சொல்வாள்



காதலன் பிழையென்று



நன்றியும் சொல்வாள்



துடைக்கும் கண்ணீரில்



துன்பத்தைச் சொல்வாள்



தூரத்தில் நாயகன்



துயரத்தில் செல்வான்



'வசந்த காலக்



கோலங்கள்' 'தியாகம்'



--------------------------நாகேந்திர பாரதி





'ஒரே பாடல் உன்னை அழைக்கும் '

'ஒரே பாடல் உன்னை அழைக்கும் '




---------------------------------------------------------------



கண்கள் வெறிக்கும்



காதல் தெறிக்கும்



முடிந்த காதலுக்கு



முடிவுரை எழுதும்



சோகப் பாடலின்



வேகம் தாங்காமல்



ஓடும் காதலியின்



உணர்ச்சி முடிவு



'ஒரே பாடல் உன்னை அழைக்கும்'



'எங்கிருந்தோ வந்தாள் '



-----------------------------நாகேந்திர பாரதி





சனி, 15 டிசம்பர், 2012

'சோதனை மேல் சோதனை'

'சோதனை மேல் சோதனை'




------------------------------------------------



உதடு துடிக்கும்



உணர்ச்சி வெடிக்கும்



கதறும் நெஞ்சம்



கண்ணீர் வடிக்கும்



இருக்கும் உறவை



நினைத்துப் புலம்பும்



இறந்த உறவை



நினைத்துக் கலங்கும்



'சோதனை மேல் சோதனை'



'தங்கப் பதக்கம்'



-------------------------நாகேந்திர பாரதி





வெள்ளி, 14 டிசம்பர், 2012

'காதல் சிறகை'

'காதல் சிறகை'




-------------------------------



விரிந்த கூந்தல்



பிரிந்த சோகம்



மறுபடி காதல்



மணக்கும் நேரம்



கணவனின் மார்பில்



கலக்கும் கனவு



கண்களில் ஏக்கம்



கலைந்தது தூக்கம்



'காதல் சிறகை'



'பாலும் பழமும் '



-------------------------------------நாகேந்திர பாரதி





வியாழன், 13 டிசம்பர், 2012

நண்பேன்டா..

நண்பேன்டா..




----------------------------



ஒண்ணா படிச்சு



ஒண்ணா மாடு மேச்சு



ஒண்ணா குடிச்சு



ஒண்ணா குறட்டை விட்டு



ஒண்ணா வளந்து



ஒண்ணா ஓடிப் போயி



ஒண்ணா திருடி



ஒண்ணா அடி வாங்கி



வேற வேற ஜெயில்லே



வெலக்கிப் போட்டாய்ங்க



----------------------------------நாகேந்திர பாரதி






இப்படிக்கு காதல்

இப்படிக்கு காதல்




-------------------------------



குளக்கரைப் பாசியும்



அப்படியே இருக்கிறது



கூந்தல் பனைமரமும்



அப்படியே இருக்கிறது



குண்டு மல்லிச் செடியும்



அப்படியே இருக்கிறது



அப்படியே இருந்ததெல்லாம்



அப்படியே இருக்கிறது



எப்படியோ மறந்து விட்டாள்



இப்படிக்கு காதல்



---------------------------------நாகேந்திர பாரதி






இளம் த்ரிஷா

இளம் த்ரிஷா




-------------------------



இளைய தளபதியோ



அல்டிமேட் ஸ்டாரோ



இணைந்து நடிக்கும்



இயல்பு ஒரு அழகு



நடனம் ஒரு அழகு



நளினம் ஒரு அழகு



உடை ஒரு அழகு



உடல் ஒரு அழகு



இந்தக் கால அழகு



இளம் த்ரிஷா



---------------------------------நாகேந்திர பாரதி





புதன், 12 டிசம்பர், 2012

அபிநய சரஸ்வதி

அபிநய சரஸ்வதி




-----------------------------------



எம்ஜிஆரோ சிவாஜியோ



எஸ்எஸ்ஆரோ ஜெமினியோ



ஏற்றபடி நடிக்கும்



நடிப்பு ஒரு அழகு



நடை ஒரு அழகு



இடை ஒரு அழகு



பேச்சு ஒரு அழகு



சிரிப்பு ஒரு அழகு



அந்தக் கால அழகு



அபிநய சரஸ்வதி



--------------------------------நாகேந்திர பாரதி





ஞாயிறு, 9 டிசம்பர், 2012

பெண் உரிமை

பெண் உரிமை




-------------------------------



கடைக்குப் போறேன்னு சொல்லுவாங்க



எந்தக் கடைக்குன்னு சொல்ல மாட்டாங்க



சினிமாவுக்குப் போறேன்னு சொல்லுவாங்க



எந்த சினிமாவுக்குன்னு சொல்ல மாட்டாங்க



ஊருக்குப் போறேன்னு சொல்லுவாங்க



எந்த ஊருக்குன்னு சொல்ல மாட்டாங்க



நண்பனைப் பாக்கன்னு சொல்லுவாங்க



எந்த நண்பனைன்னு சொல்ல மாட்டாங்க



முழுசாச் சொல்லாமல் போனாலும்



முழுசாச் திரும்பி வாராங்க , போதும்



------------------------------------------நாகேந்திர பாரதி





வியாழன், 6 டிசம்பர், 2012

சண்டையும் சமாதானமும்

சண்டையும் சமாதானமும்




-----------------------------------------------



வடக்குத் தெருவும்



தெக்குத் தெருவும்



வரப்புச் சண்டையால்



வரத்துப் போக்கில்லை



புயலும் மழையும்



பொளந்து கட்டுது



கண்மாய் உடைஞ்சா



கிராமம் காலி



மண்ணைப் போட்டு



கரையை உயர்த்த



மம்பட்டி கூடையோடு



மனுஷக் கூட்டம்



-----------------------------நாகேந்திர பாரதி






கண்ணிழந்த பாடகன்

கண்ணிழந்த பாடகன்




---------------------------------------



ஓரணா பாட்டு புத்தகம்



வாங்கிச் சேத்தான்



ஊராட்சி வானொலியை



உத்துக் கேட்டான்



பாடப் புத்தகத்துள்ளும்



பாட்டுப் புத்தகம்



காய்ச்சல் வந்து



கண்ணு போனது



பஸ் ஸ்டாண்டில்



பாடகன் ஆனான்



----------------------------------நாகேந்திர பாரதி






புதன், 5 டிசம்பர், 2012

மண்ணு தின்னி மரகதம்

மண்ணு தின்னி மரகதம்




-------------------------------------------------



சின்ன வயசிலே



மண்ணு வாயோட



பாத்ததால் வந்த



பட்டப் பெயரு



மத்தப்படி யாரும் அவன்



மண்ணு தின்னு பாத்ததில்லை



ஒரு தடவை போனப்ப



சைக்கிள் கடை வச்சிருந்தான்



காரெல்லாம் வாடகைக்கு விடற



கனவு இருக்குதுன்னான்



அடுத்த தடவை போனப்ப



டீக்கடை வச்சிருந்தான்



பெரிய ஓட்டலாக்கிற



கனவு இருக்குதுன்னான்



போன வாரம் போனப்ப



சொன்னாங்க சொந்தக்காரங்க




வயித்து வலி வந்து



செத்துப் போயிட்டானாம்



------------------------------நாகேந்திர பாரதி






திங்கள், 3 டிசம்பர், 2012

கசியும் இதயம்

கசியும்  இதயம்


-------------------------------



பாசத்திலும் கண்ணீர்



காதலிலும் கண்ணீர்



பாசத்தின் கண்ணீர்



பண்பட்ட கண்ணீர்



காதலின் கண்ணீர்



புண்பட்ட கண்ணீர்



பண்ணோ புண்ணோ



பாசமோ காதலோ



கண்ணுக்குள் இருந்து



கசியும்  இதயம்



-------------------------------நாகேந்திர பாரதி




காதல் கஷ்டம்

காதல் கஷ்டம்




-------------------------------



வேலைக்குப் போகாமல்



வெட்டியாய்ச் சுத்தறான்



பின்னாலே வந்து



பெரும்பார்வை பார்க்கிறான்



ரத்தக் கடிதத்தில்



கண்ணீர் வடிக்கிறான்



கஷ்டமா இருக்கு - அவன் மேல்



காதலாவும் இருக்கு - ஆனால்



ஆடம்பரக் கல்யாணம்



ஆசையாவும் இருக்கு



---------------------------------நாகேந்திர பாரதி





அப்பத்தாவின் ஆசை

அப்பத்தாவின் ஆசை


--------------------------------------

நினைத்து இருக்கலாம்
நெஞ்சு பிரியும் போது

ஒண்ணுக்கு கழுவி விட்டு
ரெண்டுக்கு தேய்த்து விட்டு

எண்ணைக் குளிப்பாட்டி
முடியைச் சீவி விட்டு

மழலையை ரசித்திருந்து
வளர்வதைப் பார்த்தவளுக்கு

வாய்க்கரிசி போடவாவது
வந்து சேர்வானா

கண்ணோரம் செத்திருந்த

கண்ணீருக் கென்ன அர்த்தம்

------------------------------நாகேந்திர பாரதி


ஞாயிறு, 2 டிசம்பர், 2012

நில் கவனி பேசு - 12

  நில் கவனி பேசு - 12
------------------------------------
அலட்டிக்  கொண்டார்
ஆக்டர்  பரமசிவம்
'நாலு படங்கள்
தொடர்ந்து  வெள்ளி விழா  
நடிகர்  உலகத்தில் 
நான்தான் ராஜா '
அஞ்சும் ஆறும்
அவுட்டாய்ப் போச்சு
அடுத்த தெருவு
பார்க்கில் படுக்கை
------------------------ நாகேந்திர பாரதி

சனி, 1 டிசம்பர், 2012

நில் கவனி பேசு - 11

நில் கவனி பேசு - 11




----------------------------------------------



புலம்பித் தீர்த்தார்



புரடியூசர் பரமசிவம்



'முதல் படத்துக்கு



மூணு லட்சம் வாங்குறானுங்க



அடுத்த படத்துக்கே



அரைக் கோடி கேட்குறானுங்க '



பதிலும் வந்தது



பரஸ்பர இடத்திடம் இருந்து



'எங்க பேரைச் சொல்லித்தானே



உங்க படம் ஓடுது'



-------------------------------நாகேந்திர பாரதி