வெள்ளி, 30 நவம்பர், 2012

கங்க்னம் ஆட்டம்

கங்க்னம் ஆட்டம்




-----------------------------------



கையிக் கங்கணத்தை



கழட்டி மாட்டுறாப்பிலே



ஆடிப் பாடுறது



கங்க்னம் ஆட்டமாம்



காலுச் செருப்பை



கழட்டி மாட்டுறாப்பிலே



ஆடிப் பாடுறது



அடுத்த ஹிட்டாம்



கொலவெறி யூடியூப்பில்



கோடி ரசிகர்கள்



----------------------நாகேந்திர பாரதி






புதன், 28 நவம்பர், 2012

நில் கவனி பேசு - 10

நில் கவனி பேசு - 10




----------------------------------------------



குறுக்கெழுத்துப் போட்டியில்



குறியாய் பரமசிவம்



பக்கத்தில் வந்த



பேத்தியை விரட்டினார்



'உனக்கு ஒண்ணும்



தெரியாது போம்மா'



'கூகுளில் தேடித்



போடுங்க தாத்தா'



ஐபேடைக் கொடுத்துப்



போனாள் பேத்தி



----------------------------நாகேந்திர பாரதி





வரவும் செலவும்

வரவும் செலவும்




------------------------------------



ஷேர் மார்க்கெட்டில்



நுழைஞ்சார் பெருசு



குடிக்கற கூட்டம்



கூடறதைப் பாத்து



பீருக் கம்பெனி



ஷேரை வாங்கினார்



சிகரெட்டுக் கூட்டம்



சேர்றதைப் பார்த்து



புகையிலைக் கம்பெனியில்



போட்டார் கொஞ்சம்



பீரைக் குடிச்சு



சிகரெட்டு பிடிச்சு



வந்த லாபத்தை



திருப்பிக் குடுத்தார்



-----------------------நாகேந்திர பாரதி





புதன், 21 நவம்பர், 2012

சினிமா விருது

சினிமா விருது




-------------------------------



சினிமா இயக்கப்



போனார் பெருசு



ரஷ்யக் கதையைப்



படித்துப் பிடித்தார்



ஆப்பிரிக்க இசையை



பிடித்து அடித்தார்



தலைப்பை மட்டும்



தமிழில் வைத்தார்



விருதை வாங்க



வெளிநாடு போனார்



--------------------------நாகேந்திர பாரதி





ஞாயிறு, 18 நவம்பர், 2012

எழுத்தாளர் ஏகாம்பரம்

எழுத்தாளர் ஏகாம்பரம்




---------------------------------------



கிராமம், பெரியப்பு



டீக்கடை, சுடுகாடு



காதல், கண்ணீர்



கருவாடு, கண்மாய்



கலந்து கட்டி



கதை விட்டார் ஏகாம்பரம்



படித்த வர்கள்



வருத்தப் பட்டார்கள்



படிக்கா தவர்கள்



சந்தோஷப் பட்டார்கள்



--------------------------நாகேந்திர பாரதி






சனி, 17 நவம்பர், 2012

பரமசிவத்தின் கவிதை

பரமசிவத்தின் கவிதை




--------------------------------------------



பாட்டு எழுத



பரமசிவத்துக்கு ஆசை



பத்திரிகை எல்லாம்



பாப்பாக் கவிதைகள்



'ஆயிப் போயிட்ட



குழந்தை அழுதது



அழுகைக் குரலில்



அம்மா விழித்தாள் '



அடுத்த வாரமே



பிரசுரம் ஆனது



------------------------நாகேந்திர பாரதி







நில் கவனி பேசு - 9

நில் கவனி பேசு - 9




----------------------------------------



'பத்து வருஷமாச்சு



பதவி உயர்வு கிடைக்கலை'



அலுத்துக் கொண்டார்



ஆபீசர் பரமசிவம்



கேட்ட முதலாளி



உடனே செஞ்சுட்டார்



'ஆபீசர் பேரை



மாத்திப் புடுவோம்



எல்லா ஆபீசரும்



இனிமே பிரசிடெண்டு '



-----------------நாகேந்திர பாரதி





நில் கவனி பேசு - 8

நில் கவனி பேசு - 8




-----------------------------------------



'நாளைக்கு முடிக்க



வேண்டிய வேலையை



நேற்றே முடிக்கலை'ன்னு



கத்தினார் பரமசிவம்



பதிலும் வந்தது



பசங்களிடம் இருந்து



'நேத்தே கேட்காம



இன்னைக்குக் கேட்டா



எப்படி முடிக்கிறதாம்



லேட்டாய்ப் போச்சுல்ல '



-----------------------------------நாகேந்திர பாரதி







வெள்ளி, 16 நவம்பர், 2012

நில் கவனி பேசு - 7

நில் கவனி பேசு - 7




---------------------------------------



'மஞ்சள் கலர் ஜாக்கெட்



சிவப்பு கலர் புடவை



பொருத்தமா இருக்குன்னு



வாங்கிக் கொடுத்தேனே'



வழியும் பரமசிவம்



வாங்கிக் கட்டிக்கொண்டார்



'வாங்கிக் கொடுத்தது



வருஷம் ரெண்டாச்சு



பேச்சுலே மட்டும்



பெருமை குறையலே '



------------------------------------நாகேந்திர பாரதி





நில் கவனி பேசு - 6

நில் கவனி பேசு - 6




-----------------------------------------



ஆரக்கிள், ஜாவா



குடும்பம், படிப்புன்னு



அத்தனை கேள்விகளும்



கேட்டு திருப்தியாகி



'உனக்கு எதுவும்



கேக்கணுமா தம்பி'ன்னார்



'உங்களை மாதிரி



ஆளுங்களை வச்சிருக்கிற



கம்பெனியிலே சேர



விருப்பமில்லை'ன்னு



பளிச்சுன்னு சொன்னான்



பரமசிவத்திடம் பையன்



-----------------------------நாகேந்திர பாரதி





வியாழன், 15 நவம்பர், 2012

நில் கவனி பேசு - 5

நில் கவனி பேசு - 5




---------------------------------------



'சொன்ன பேச்சைக்



கேக்கிறதில்லை யாரும்'



அலுத்துக் கொண்டார் பரமசிவம்



நண்பர்களிடம் பார்க்கில்



'கத்தரிக்காய்ச் சாம்பார் கேட்டால்



வெண்டிக்காய்ச் சாம்பார் வைக்கிறாள் மனைவி



என்ஜினீயரிங் படிக்கச் சொன்னால்



டாக்டருக்குப் படிக்கிறான் பையன்



பாட்டுக் கிளாஸ் போகச் சொன்னால்



டான்ஸ் கிளாஸ் போகிறாள் பெண்'



வீட்டுக்குத் திரும்பியதும்



மனைவியின் வசவு



'துவரம் பருப்பு வாங்கி வரச் சொன்னால்



உளுந்தம் பருப்பை வாங்கி வந்திருக்கீங்க'



-------------------------------------------------நாகேந்திர பாரதி




புதன், 14 நவம்பர், 2012

எலும்பும் தோலும்

எலும்பும் தோலும்




--------------------------------



இடுப்பிலும் தலையிலும்



குடங்களை சுமந்தபடி



விறகு அடுப்பை



ஊதிச் சமைத்தபடி



கண்மாயைக் கலக்கி



மீனைப் பிடித்தபடி



திருவிழாச் சந்தையில்



பிள்ளைகளை மேய்த்தபடி



இரும்பாய் இருந்த



உடம்பு தேய்ந்தபடி



எலும்பும் தோலுமாய்



படுக்கையில் படுத்தபடி



-----------------------------------------நாகேந்திர பாரதி







இருண்ட குகை

இருண்ட குகை




-----------------------------



இருண்ட குகைக்குள்



எத்தனை உணர்ச்சிகள்



சில வெளியே வரும்



சில அமுங்கிக் கிடக்கும்



கனவு வெளிச்சத்தைக்



கண்ட பின்பு



அத்தனையும் எழுந்து



ஆட்டம் போடும்



விடிந்த பின்பு



வெட்கம் வரும்



--------------------------------நாகேந்திர பாரதி





செவ்வாய், 13 நவம்பர், 2012

நில் கவனி பேசு - 4

நில் கவனி பேசு - 4




----------------------------------------



மேனேஜர் பரமசிவம்



மீட்டிங்கில் பேசுறார்



'கம்பெனி நிலைமை



சரியாய் இல்லை



சம்பளக் குறைப்பும்



வந்துடும் போல



ராத்திரிப் பகலா



நல்லா உழைக்கணும்



நாளைக்குப் பாக்கலாம் 



சீக்கிரம் கிளம்புறேன்'



---------------------------நாகேந்திர பாரதி





திங்கள், 12 நவம்பர், 2012

நில் கவனி பேசு - 3

நில் கவனி பேசு - 3




----------------------------------



அறுபதாம் கல்யாணத்தில்



வாழ்த்தினார் பரமசிவம்



'பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும்



பொருத்தம் ஜோரு



ரெண்டு பேருக்கும்



ரத்தக் கொதிப்பு



சக்கரையும் இருக்கு



சாலேஸ்வரமும் இருக்கு'



தம்பதிகள் முறைக்க



தானாக இறங்கினார்



-----------------------------------------நாகேந்திர பாரதி





நில் கவனி பேசு - 2

நில் கவனி பேசு - 2




--------------------------------------



வந்த விருந்தாளியை



வரவேற்றார் பரமசிவம்



'முந்தி பாத்ததுக்கு



மெலிஞ்சு போயிட்டீங்க



உடம்புக்கு கிடம்புக்கு



முடியலியா என்ன



பக்கத்து தெருவு



டாக்டர்கிட்ட போகலாமா'



உள்ளே நுழையாம



ஓடியே போயிட்டான்



------------------------------------நாகேந்திர பாரதி





நில் கவனி பேசு -1

நில் கவனி பேசு -1




-------------------------------------



'என்னப்பா ஏகாம்பரம்



எப்படி இருக்கே'



'வீட்டிலே காய்ச்சல்



எனக்கு தலைவலி



பொண்ணுக்கு ஜலதோஷம்



பையனுக்கு இருமல்



அவசரமாய்க் கூப்பிட்டு



அப்படி என்ன இளிப்பு'



நொந்து நூலாகிப்



போனார் பரமசிவம்



---------------------------------------------------நாகேந்திர பாரதி





விளையாட்டு வலிகள்

விளையாட்டு வலிகள்

-----------------------------------------

கோலிக் குண்டில் தோற்றபோது
முட்டுக் கையில் பட்ட வலி

சைக்கிள் ஓட்டக் கற்றபோது
கெண்டைக் காலில் பட்ட வலி

கடலில் முங்கிக் குளிக்கும்போது
கற்கள் மோதிப் பட்ட வலி

பட்டாசுப் பொறி வெடிக்கும்போது
தீத் தெறித்து பட்ட வலி

வலிக்காத வலியெல்லாம்
விளையாட்டாய் எத்தனையோ

----------------------------------------நாகேந்திர பாரதி


ஞாயிறு, 11 நவம்பர், 2012

வாசமான வாழ்க்கை

வாசமான வாழ்க்கை

---------------------------------------

வெத்தலை மணத்தில்
அப்பத்தா வாழ்க்கை

கோயில் மணத்தில்
தாத்தா வாழ்க்கை

அடுப்படி மணத்தில்
அம்மாச்சி வாழ்க்கை

அரிசி மணத்தில்
அப்பா வாழ்க்கை

வானத்தில் பறந்தாலும்
வாசத்தில் வாழ்கிறார்கள்

---------------------------------------நாகேந்திர பாரதி


வெள்ளி, 9 நவம்பர், 2012

தொலைந்து போனவை

தொலைந்து போனவை

--------------------------------------------
அப்போது

புல்வெளி பக்கத்தில் இருந்தது

கோழிக் குஞ்சுகள் பெரிதாகத் தெரிந்தன

மழையில் நனையப் பிடித்தது

வெயிலில் விளையாடப் பிடித்தது

டீச்சரிடம் பேசிக் கொண்டு

நட்பிடம் சண்டை போட்டுக் கொண்டு

இப்போதோ

எல்லாமே விலகிப் போனது போல்

எங்கேயோ தொலைந்து போனது போல்

-------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 8 நவம்பர், 2012

நம்மை வளர்ப்போம்

நம்மை வளர்ப்போம்

---------------------------------

நம்மை விட்டு
விலகி இருந்து

நம்மை நாமே
பார்க்கும் போது

நம்மைப் பார்த்து
நகைக்கத் தோன்றும்

நம்மைப் பார்த்து
கோபம் தோன்றும்

நம்மைப் பார்த்து 
நம்மை வளர்ப்போம்

-----------------------------நாகேந்திர பாரதி

புதன், 7 நவம்பர், 2012

எழுத்தாளும் எண்ணம்

எழுத்தாளும் எண்ணம்

---------------------------------------

அழுத்தமான நிகழ்ச்சிகளை
அள்ளி விட வேண்டும்

கிண்டலையும் சோகத்தையும்
கிள்ளி விட வேண்டும்

சொந்தத்தையும் பந்தத்தையும்
சுற்றி விட வேண்டும்

சூது வாது கொஞ்சம்
பற்றி விட வேண்டும்

எழுத்தாளும் எண்ணத்தில்
இன்னும் பல வேண்டும்

----------------------------------------நாகேந்திர பாரதி



செவ்வாய், 6 நவம்பர், 2012

கனவுப் பருவங்கள்

கனவுப் பருவங்கள்

--------------------------------

சின்னக் கனவுகள்
தூக்கத்தில் உதிக்கும்

பெரிய கனவுகள்
வாழ்க்கையில் குதிக்கும்

எந்தக் கனவாக
இருந்த போதிலும்

விழித்துப் பார்த்தால்
வேறாக இருக்கும்

பருவங்கள் மாறும்
உருவங்கள் மாறும்

----------------------------------நாகேந்திர பாரதி






திங்கள், 5 நவம்பர், 2012

ஐம்பொறியும் உறுதி

ஐம்பொறியும் உறுதி

------------------------------------
பிரகாரம் சுற்றி
உடலுக்கு உறுதி

மந்திரம் சொல்லி
வாய்க்கு உறுதி

கடவுளைப் பார்த்து
கண்ணுக்கு உறுதி

தீபத்தின் வாசம்
நாசிக்கு உறுதி

மணியின் ஓசை
செவிக்கு உறுதி

கோயில் சென்றால்
ஐம்பொறியும் உறுதி

------------------------------நாகேந்திர பாரதி




ஞாயிறு, 4 நவம்பர், 2012

விரல் விழா

விரல் விழா


----------------------

பட்டாசுக் கடையைப் பார்க்கும் போது
மருந்தை உருட்டும்
விரல்களின் வேகம்

பட்சணக் கடையைப் பார்க்கும் போது
மாவை உருட்டும்
விரல்களின் வேகம்

ஜவுளிக் கடையைப் பார்க்கும் போது
தறியை உருட்டும்
விரல்களின் வேகம்

விழாக்களின் அழைப்பு
விரல்களின் உழைப்பு

--------------------------------------------------நாகேந்திர பாரதி




வெள்ளி, 2 நவம்பர், 2012

மௌனத்தின் மொழி

மௌனத்தின் மொழி


--------------------------------------

மௌனத்தின் மொழி

அதுதானே காதல்

அதில்தானே பேச்சு

அதில்தானே வளர்ச்சி

அதில்தானே தளர்ச்சி

அதில்தானே முடிவு

அதையும் தாண்டி

ஏதோ ஒன்று

இருப்பது தானே

காதலின் இயற்கை

--------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 1 நவம்பர், 2012

வீட்டு நினைப்பு

வீட்டு நினைப்பு


-----------------------------

வீதியின் குறுக்கே

விழுந்து கிடந்ததை

வெட்டி நறுக்கி

விலக்கிப் போட்டாச்சு

பாதை சரியாச்சு

பயணம் தொடர்ந்தாச்சு

வீட்டை இழந்த

பறவைகள் தவிர

வேற எல்லோரும்

வீடு சேர்ந்தாச்சு

-------------------------------நாகேந்திர பாரதி