வியாழன், 27 டிசம்பர், 2012

'என்ன ஆச்சு'

'என்ன ஆச்சு'
----------------------அரையணா பாட்டுப் புஸ்தகம் வாங்கிஅடுக்கி வச்ச வன்னிச்சாமிகருவ மரக் கிளை ஒடிச்சுகம்புச் சண்டை போட்ட உதயகுமார்சேதுக்கரைக்கு சைக்கிளில் போயிகடல் குளியல் சேதுராஜுமஞ்சப் பையும் தூக்குச் சட்டியுமாஓடி வரும் முனியசாமிபாதிப் பேரு போயாச்சுமீதிப் பேரு என்ன ஆச்சு----------------------------------நாகேந்திர பாரதி


புதன், 26 டிசம்பர், 2012

மறக்காத பள்ளிக்கூடம்

மறக்காத பள்ளிக்கூடம்
===========================பார்வதியும் ஈஸ்வரியும்பாட்டியாகிப் போனாங்கபானுமதி படிச்சிட்டுபதவியிலே போயிட்டாசீக்கிரமே மணமாகிசிங்கப்பூர்  ஜெயலக்ஷ்மிசினிமாவில் சேந்துஜெயிச்சு வந்த சிவகாமிபடிச்சதெல்லாம் மறந்தாலும்மறக்காத பள்ளிக்கூடம்---------------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 20 டிசம்பர், 2012

'நிலவைப் பார்த்து வானம் சொன்னது'

'நிலவைப் பார்த்து வானம் சொன்னது'
-------------------------------------------------------------------------தீண்டாதீர் திருநீலகண்டத்தின்திருத்திய பதிப்புவேண்டாத கணவன்கைப்பட்டால் குற்றம்தான்வேண்டும் காதலின்விரக்தி வெளிப்பாடுபொருந்தாத உவமைகளைப்பொருத்திப் பார்க்கிறான்'நிலவைப் பார்த்து வானம் சொன்னது''சவாலே சமாளி'--------------------------------நாகேந்திர பாரதி'காவேரி ஓரம்'

'காவேரி ஓரம்'
---------------------------காதல் களவு போகும்கவலையில் பாடல்உரிமையுடன் அவன்உ'டை'யினைத் திருத்தினாலும்உள்ளத்தின் உள்ளேஒளிந்திருக்கும் பயம்பணத்திற்கும் அழகிற்கும்பறி போய் விடுவானோ'காவேரி ஓரம்''ஆடிப் பெருக்கு'-----------------------------------------நாகேந்திர பாரதி
புதன், 19 டிசம்பர், 2012

'மெல்ல நட மெல்ல நட'

'மெல்ல நட மெல்ல நட'
---------------------------------------------வேகமாய் நடந்தால்வேதனை மேனிக்காம்பெண்மையின் மென்மையின்பெருமையைப் பேசிவர்ணிக்கும் காதலன்வார்த்தையில் மயங்கிநாணத்தில் நடக்கும்நளினத்தின் நாயகி'மெல்ல நட, மெல்ல நட''புதிய பறவை'-------------------------------நாகேந்திர பாரதி
மனோ தர்மம்

மனோ தர்மம்
-------------------------எல்லாக் கச்சேரிகளிலும்முன்வரிசை ஆசாமிதப்புத் தாளங்கள்போட்டு ரசிப்பார்பக்கத்தில் இருப்பவர்பாடு திண்டாட்டம்தலையாட்டல் பார்ப்பவர்கழுத்து வலிக்கும்மனோ தர்மத்தோடுரசித்துக் கேட்கிறாராம்--------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 17 டிசம்பர், 2012

'நினைக்கத் தெரிந்த மனமே'

'நினைக்கத் தெரிந்த மனமே'
---------------------------------------------------காதல் வலியின்வேதனைப் புலம்பல்மன்மத நாட்களைமறக்கும் முயற்சிதிரும்பத் தேடித்தேம்பும் நாயகிவிரும்பும் நாயகன்வேதனைத் தோற்றம்'நினைக்கத் தெரிந்த மனமே''ஆனந்த ஜோதி'-----------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

'வசந்த காலக் கோலங்கள்'

'வசந்த காலக் கோலங்கள்'
--------------------------------------------------காதல் பொய்யென்றுகாரணம் சொல்வாள்காதலன் பிழையென்றுநன்றியும் சொல்வாள்துடைக்கும் கண்ணீரில்துன்பத்தைச் சொல்வாள்தூரத்தில் நாயகன்துயரத்தில் செல்வான்'வசந்த காலக்கோலங்கள்' 'தியாகம்'--------------------------நாகேந்திர பாரதி

'ஒரே பாடல் உன்னை அழைக்கும் '

'ஒரே பாடல் உன்னை அழைக்கும் '
---------------------------------------------------------------கண்கள் வெறிக்கும்காதல் தெறிக்கும்முடிந்த காதலுக்குமுடிவுரை எழுதும்சோகப் பாடலின்வேகம் தாங்காமல்ஓடும் காதலியின்உணர்ச்சி முடிவு'ஒரே பாடல் உன்னை அழைக்கும்''எங்கிருந்தோ வந்தாள் '-----------------------------நாகேந்திர பாரதி

சனி, 15 டிசம்பர், 2012

'சோதனை மேல் சோதனை'

'சோதனை மேல் சோதனை'
------------------------------------------------உதடு துடிக்கும்உணர்ச்சி வெடிக்கும்கதறும் நெஞ்சம்கண்ணீர் வடிக்கும்இருக்கும் உறவைநினைத்துப் புலம்பும்இறந்த உறவைநினைத்துக் கலங்கும்'சோதனை மேல் சோதனை''தங்கப் பதக்கம்'-------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 14 டிசம்பர், 2012

'காதல் சிறகை'

'காதல் சிறகை'
-------------------------------விரிந்த கூந்தல்பிரிந்த சோகம்மறுபடி காதல்மணக்கும் நேரம்கணவனின் மார்பில்கலக்கும் கனவுகண்களில் ஏக்கம்கலைந்தது தூக்கம்'காதல் சிறகை''பாலும் பழமும் '-------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 13 டிசம்பர், 2012

நண்பேன்டா..

நண்பேன்டா..
----------------------------ஒண்ணா படிச்சுஒண்ணா மாடு மேச்சுஒண்ணா குடிச்சுஒண்ணா குறட்டை விட்டுஒண்ணா வளந்துஒண்ணா ஓடிப் போயிஒண்ணா திருடிஒண்ணா அடி வாங்கிவேற வேற ஜெயில்லேவெலக்கிப் போட்டாய்ங்க----------------------------------நாகேந்திர பாரதி


இப்படிக்கு காதல்

இப்படிக்கு காதல்
-------------------------------குளக்கரைப் பாசியும்அப்படியே இருக்கிறதுகூந்தல் பனைமரமும்அப்படியே இருக்கிறதுகுண்டு மல்லிச் செடியும்அப்படியே இருக்கிறதுஅப்படியே இருந்ததெல்லாம்அப்படியே இருக்கிறதுஎப்படியோ மறந்து விட்டாள்இப்படிக்கு காதல்---------------------------------நாகேந்திர பாரதி


இளம் த்ரிஷா

இளம் த்ரிஷா
-------------------------இளைய தளபதியோஅல்டிமேட் ஸ்டாரோஇணைந்து நடிக்கும்இயல்பு ஒரு அழகுநடனம் ஒரு அழகுநளினம் ஒரு அழகுஉடை ஒரு அழகுஉடல் ஒரு அழகுஇந்தக் கால அழகுஇளம் த்ரிஷா---------------------------------நாகேந்திர பாரதி

புதன், 12 டிசம்பர், 2012

அபிநய சரஸ்வதி

அபிநய சரஸ்வதி
-----------------------------------எம்ஜிஆரோ சிவாஜியோஎஸ்எஸ்ஆரோ ஜெமினியோஏற்றபடி நடிக்கும்நடிப்பு ஒரு அழகுநடை ஒரு அழகுஇடை ஒரு அழகுபேச்சு ஒரு அழகுசிரிப்பு ஒரு அழகுஅந்தக் கால அழகுஅபிநய சரஸ்வதி--------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

பெண் உரிமை

பெண் உரிமை
-------------------------------கடைக்குப் போறேன்னு சொல்லுவாங்கஎந்தக் கடைக்குன்னு சொல்ல மாட்டாங்கசினிமாவுக்குப் போறேன்னு சொல்லுவாங்கஎந்த சினிமாவுக்குன்னு சொல்ல மாட்டாங்கஊருக்குப் போறேன்னு சொல்லுவாங்கஎந்த ஊருக்குன்னு சொல்ல மாட்டாங்கநண்பனைப் பாக்கன்னு சொல்லுவாங்கஎந்த நண்பனைன்னு சொல்ல மாட்டாங்கமுழுசாச் சொல்லாமல் போனாலும்முழுசாச் திரும்பி வாராங்க , போதும்------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 6 டிசம்பர், 2012

சண்டையும் சமாதானமும்

சண்டையும் சமாதானமும்
-----------------------------------------------வடக்குத் தெருவும்தெக்குத் தெருவும்வரப்புச் சண்டையால்வரத்துப் போக்கில்லைபுயலும் மழையும்பொளந்து கட்டுதுகண்மாய் உடைஞ்சாகிராமம் காலிமண்ணைப் போட்டுகரையை உயர்த்தமம்பட்டி கூடையோடுமனுஷக் கூட்டம்-----------------------------நாகேந்திர பாரதி


கண்ணிழந்த பாடகன்

கண்ணிழந்த பாடகன்
---------------------------------------ஓரணா பாட்டு புத்தகம்வாங்கிச் சேத்தான்ஊராட்சி வானொலியைஉத்துக் கேட்டான்பாடப் புத்தகத்துள்ளும்பாட்டுப் புத்தகம்காய்ச்சல் வந்துகண்ணு போனதுபஸ் ஸ்டாண்டில்பாடகன் ஆனான்----------------------------------நாகேந்திர பாரதி


புதன், 5 டிசம்பர், 2012

மண்ணு தின்னி மரகதம்

மண்ணு தின்னி மரகதம்
-------------------------------------------------சின்ன வயசிலேமண்ணு வாயோடபாத்ததால் வந்தபட்டப் பெயருமத்தப்படி யாரும் அவன்மண்ணு தின்னு பாத்ததில்லைஒரு தடவை போனப்பசைக்கிள் கடை வச்சிருந்தான்காரெல்லாம் வாடகைக்கு விடறகனவு இருக்குதுன்னான்அடுத்த தடவை போனப்படீக்கடை வச்சிருந்தான்பெரிய ஓட்டலாக்கிறகனவு இருக்குதுன்னான்போன வாரம் போனப்பசொன்னாங்க சொந்தக்காரங்க
வயித்து வலி வந்துசெத்துப் போயிட்டானாம்------------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 3 டிசம்பர், 2012

கசியும் இதயம்

கசியும்  இதயம்


-------------------------------பாசத்திலும் கண்ணீர்காதலிலும் கண்ணீர்பாசத்தின் கண்ணீர்பண்பட்ட கண்ணீர்காதலின் கண்ணீர்புண்பட்ட கண்ணீர்பண்ணோ புண்ணோபாசமோ காதலோகண்ணுக்குள் இருந்துகசியும்  இதயம்-------------------------------நாகேந்திர பாரதி
காதல் கஷ்டம்

காதல் கஷ்டம்
-------------------------------வேலைக்குப் போகாமல்வெட்டியாய்ச் சுத்தறான்பின்னாலே வந்துபெரும்பார்வை பார்க்கிறான்ரத்தக் கடிதத்தில்கண்ணீர் வடிக்கிறான்கஷ்டமா இருக்கு - அவன் மேல்காதலாவும் இருக்கு - ஆனால்ஆடம்பரக் கல்யாணம்ஆசையாவும் இருக்கு---------------------------------நாகேந்திர பாரதி

அப்பத்தாவின் ஆசை

அப்பத்தாவின் ஆசை


--------------------------------------

நினைத்து இருக்கலாம்
நெஞ்சு பிரியும் போது

ஒண்ணுக்கு கழுவி விட்டு
ரெண்டுக்கு தேய்த்து விட்டு

எண்ணைக் குளிப்பாட்டி
முடியைச் சீவி விட்டு

மழலையை ரசித்திருந்து
வளர்வதைப் பார்த்தவளுக்கு

வாய்க்கரிசி போடவாவது
வந்து சேர்வானா

கண்ணோரம் செத்திருந்த

கண்ணீருக் கென்ன அர்த்தம்

------------------------------நாகேந்திர பாரதி


ஞாயிறு, 2 டிசம்பர், 2012

நில் கவனி பேசு - 12

  நில் கவனி பேசு - 12
------------------------------------
அலட்டிக்  கொண்டார்
ஆக்டர்  பரமசிவம்
'நாலு படங்கள்
தொடர்ந்து  வெள்ளி விழா  
நடிகர்  உலகத்தில் 
நான்தான் ராஜா '
அஞ்சும் ஆறும்
அவுட்டாய்ப் போச்சு
அடுத்த தெருவு
பார்க்கில் படுக்கை
------------------------ நாகேந்திர பாரதி

சனி, 1 டிசம்பர், 2012

நில் கவனி பேசு - 11

நில் கவனி பேசு - 11
----------------------------------------------புலம்பித் தீர்த்தார்புரடியூசர் பரமசிவம்'முதல் படத்துக்குமூணு லட்சம் வாங்குறானுங்கஅடுத்த படத்துக்கேஅரைக் கோடி கேட்குறானுங்க 'பதிலும் வந்ததுபரஸ்பர இடத்திடம் இருந்து'எங்க பேரைச் சொல்லித்தானேஉங்க படம் ஓடுது'-------------------------------நாகேந்திர பாரதி


வெள்ளி, 30 நவம்பர், 2012

கங்க்னம் ஆட்டம்

கங்க்னம் ஆட்டம்
-----------------------------------கையிக் கங்கணத்தைகழட்டி மாட்டுறாப்பிலேஆடிப் பாடுறதுகங்க்னம் ஆட்டமாம்காலுச் செருப்பைகழட்டி மாட்டுறாப்பிலேஆடிப் பாடுறதுஅடுத்த ஹிட்டாம்கொலவெறி யூடியூப்பில்கோடி ரசிகர்கள்----------------------நாகேந்திர பாரதி


புதன், 28 நவம்பர், 2012

நில் கவனி பேசு - 10

நில் கவனி பேசு - 10
----------------------------------------------குறுக்கெழுத்துப் போட்டியில்குறியாய் பரமசிவம்பக்கத்தில் வந்தபேத்தியை விரட்டினார்'உனக்கு ஒண்ணும்தெரியாது போம்மா''கூகுளில் தேடித்போடுங்க தாத்தா'ஐபேடைக் கொடுத்துப்போனாள் பேத்தி----------------------------நாகேந்திர பாரதி

வரவும் செலவும்

வரவும் செலவும்
------------------------------------ஷேர் மார்க்கெட்டில்நுழைஞ்சார் பெருசுகுடிக்கற கூட்டம்கூடறதைப் பாத்துபீருக் கம்பெனிஷேரை வாங்கினார்சிகரெட்டுக் கூட்டம்சேர்றதைப் பார்த்துபுகையிலைக் கம்பெனியில்போட்டார் கொஞ்சம்பீரைக் குடிச்சுசிகரெட்டு பிடிச்சுவந்த லாபத்தைதிருப்பிக் குடுத்தார்-----------------------நாகேந்திர பாரதி

புதன், 21 நவம்பர், 2012

சினிமா விருது

சினிமா விருது
-------------------------------சினிமா இயக்கப்போனார் பெருசுரஷ்யக் கதையைப்படித்துப் பிடித்தார்ஆப்பிரிக்க இசையைபிடித்து அடித்தார்தலைப்பை மட்டும்தமிழில் வைத்தார்விருதை வாங்கவெளிநாடு போனார்--------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 18 நவம்பர், 2012

எழுத்தாளர் ஏகாம்பரம்

எழுத்தாளர் ஏகாம்பரம்
---------------------------------------கிராமம், பெரியப்புடீக்கடை, சுடுகாடுகாதல், கண்ணீர்கருவாடு, கண்மாய்கலந்து கட்டிகதை விட்டார் ஏகாம்பரம்படித்த வர்கள்வருத்தப் பட்டார்கள்படிக்கா தவர்கள்சந்தோஷப் பட்டார்கள்--------------------------நாகேந்திர பாரதி


சனி, 17 நவம்பர், 2012

பரமசிவத்தின் கவிதை

பரமசிவத்தின் கவிதை
--------------------------------------------பாட்டு எழுதபரமசிவத்துக்கு ஆசைபத்திரிகை எல்லாம்பாப்பாக் கவிதைகள்'ஆயிப் போயிட்டகுழந்தை அழுததுஅழுகைக் குரலில்அம்மா விழித்தாள் 'அடுத்த வாரமேபிரசுரம் ஆனது------------------------நாகேந்திர பாரதிநில் கவனி பேசு - 9

நில் கவனி பேசு - 9
----------------------------------------'பத்து வருஷமாச்சுபதவி உயர்வு கிடைக்கலை'அலுத்துக் கொண்டார்ஆபீசர் பரமசிவம்கேட்ட முதலாளிஉடனே செஞ்சுட்டார்'ஆபீசர் பேரைமாத்திப் புடுவோம்எல்லா ஆபீசரும்இனிமே பிரசிடெண்டு '-----------------நாகேந்திர பாரதி

நில் கவனி பேசு - 8

நில் கவனி பேசு - 8
-----------------------------------------'நாளைக்கு முடிக்கவேண்டிய வேலையைநேற்றே முடிக்கலை'ன்னுகத்தினார் பரமசிவம்பதிலும் வந்ததுபசங்களிடம் இருந்து'நேத்தே கேட்காமஇன்னைக்குக் கேட்டாஎப்படி முடிக்கிறதாம்லேட்டாய்ப் போச்சுல்ல '-----------------------------------நாகேந்திர பாரதிவெள்ளி, 16 நவம்பர், 2012

நில் கவனி பேசு - 7

நில் கவனி பேசு - 7
---------------------------------------'மஞ்சள் கலர் ஜாக்கெட்சிவப்பு கலர் புடவைபொருத்தமா இருக்குன்னுவாங்கிக் கொடுத்தேனே'வழியும் பரமசிவம்வாங்கிக் கட்டிக்கொண்டார்'வாங்கிக் கொடுத்ததுவருஷம் ரெண்டாச்சுபேச்சுலே மட்டும்பெருமை குறையலே '------------------------------------நாகேந்திர பாரதி

நில் கவனி பேசு - 6

நில் கவனி பேசு - 6
-----------------------------------------ஆரக்கிள், ஜாவாகுடும்பம், படிப்புன்னுஅத்தனை கேள்விகளும்கேட்டு திருப்தியாகி'உனக்கு எதுவும்கேக்கணுமா தம்பி'ன்னார்'உங்களை மாதிரிஆளுங்களை வச்சிருக்கிறகம்பெனியிலே சேரவிருப்பமில்லை'ன்னுபளிச்சுன்னு சொன்னான்பரமசிவத்திடம் பையன்-----------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 15 நவம்பர், 2012

நில் கவனி பேசு - 5

நில் கவனி பேசு - 5
---------------------------------------'சொன்ன பேச்சைக்கேக்கிறதில்லை யாரும்'அலுத்துக் கொண்டார் பரமசிவம்நண்பர்களிடம் பார்க்கில்'கத்தரிக்காய்ச் சாம்பார் கேட்டால்வெண்டிக்காய்ச் சாம்பார் வைக்கிறாள் மனைவிஎன்ஜினீயரிங் படிக்கச் சொன்னால்டாக்டருக்குப் படிக்கிறான் பையன்பாட்டுக் கிளாஸ் போகச் சொன்னால்டான்ஸ் கிளாஸ் போகிறாள் பெண்'வீட்டுக்குத் திரும்பியதும்மனைவியின் வசவு'துவரம் பருப்பு வாங்கி வரச் சொன்னால்உளுந்தம் பருப்பை வாங்கி வந்திருக்கீங்க'-------------------------------------------------நாகேந்திர பாரதி
புதன், 14 நவம்பர், 2012

எலும்பும் தோலும்

எலும்பும் தோலும்
--------------------------------இடுப்பிலும் தலையிலும்குடங்களை சுமந்தபடிவிறகு அடுப்பைஊதிச் சமைத்தபடிகண்மாயைக் கலக்கிமீனைப் பிடித்தபடிதிருவிழாச் சந்தையில்பிள்ளைகளை மேய்த்தபடிஇரும்பாய் இருந்தஉடம்பு தேய்ந்தபடிஎலும்பும் தோலுமாய்படுக்கையில் படுத்தபடி-----------------------------------------நாகேந்திர பாரதிஇருண்ட குகை

இருண்ட குகை
-----------------------------இருண்ட குகைக்குள்எத்தனை உணர்ச்சிகள்சில வெளியே வரும்சில அமுங்கிக் கிடக்கும்கனவு வெளிச்சத்தைக்கண்ட பின்புஅத்தனையும் எழுந்துஆட்டம் போடும்விடிந்த பின்புவெட்கம் வரும்--------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 13 நவம்பர், 2012

நில் கவனி பேசு - 4

நில் கவனி பேசு - 4
----------------------------------------மேனேஜர் பரமசிவம்மீட்டிங்கில் பேசுறார்'கம்பெனி நிலைமைசரியாய் இல்லைசம்பளக் குறைப்பும்வந்துடும் போலராத்திரிப் பகலாநல்லா உழைக்கணும்நாளைக்குப் பாக்கலாம் சீக்கிரம் கிளம்புறேன்'---------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 12 நவம்பர், 2012

நில் கவனி பேசு - 3

நில் கவனி பேசு - 3
----------------------------------அறுபதாம் கல்யாணத்தில்வாழ்த்தினார் பரமசிவம்'பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும்பொருத்தம் ஜோருரெண்டு பேருக்கும்ரத்தக் கொதிப்புசக்கரையும் இருக்குசாலேஸ்வரமும் இருக்கு'தம்பதிகள் முறைக்கதானாக இறங்கினார்-----------------------------------------நாகேந்திர பாரதி

நில் கவனி பேசு - 2

நில் கவனி பேசு - 2
--------------------------------------வந்த விருந்தாளியைவரவேற்றார் பரமசிவம்'முந்தி பாத்ததுக்குமெலிஞ்சு போயிட்டீங்கஉடம்புக்கு கிடம்புக்குமுடியலியா என்னபக்கத்து தெருவுடாக்டர்கிட்ட போகலாமா'உள்ளே நுழையாமஓடியே போயிட்டான்------------------------------------நாகேந்திர பாரதி

நில் கவனி பேசு -1

நில் கவனி பேசு -1
-------------------------------------'என்னப்பா ஏகாம்பரம்எப்படி இருக்கே''வீட்டிலே காய்ச்சல்எனக்கு தலைவலிபொண்ணுக்கு ஜலதோஷம்பையனுக்கு இருமல்அவசரமாய்க் கூப்பிட்டுஅப்படி என்ன இளிப்பு'நொந்து நூலாகிப்போனார் பரமசிவம்---------------------------------------------------நாகேந்திர பாரதி

விளையாட்டு வலிகள்

விளையாட்டு வலிகள்

-----------------------------------------

கோலிக் குண்டில் தோற்றபோது
முட்டுக் கையில் பட்ட வலி

சைக்கிள் ஓட்டக் கற்றபோது
கெண்டைக் காலில் பட்ட வலி

கடலில் முங்கிக் குளிக்கும்போது
கற்கள் மோதிப் பட்ட வலி

பட்டாசுப் பொறி வெடிக்கும்போது
தீத் தெறித்து பட்ட வலி

வலிக்காத வலியெல்லாம்
விளையாட்டாய் எத்தனையோ

----------------------------------------நாகேந்திர பாரதி


ஞாயிறு, 11 நவம்பர், 2012

வாசமான வாழ்க்கை

வாசமான வாழ்க்கை

---------------------------------------

வெத்தலை மணத்தில்
அப்பத்தா வாழ்க்கை

கோயில் மணத்தில்
தாத்தா வாழ்க்கை

அடுப்படி மணத்தில்
அம்மாச்சி வாழ்க்கை

அரிசி மணத்தில்
அப்பா வாழ்க்கை

வானத்தில் பறந்தாலும்
வாசத்தில் வாழ்கிறார்கள்

---------------------------------------நாகேந்திர பாரதி


வெள்ளி, 9 நவம்பர், 2012

தொலைந்து போனவை

தொலைந்து போனவை

--------------------------------------------
அப்போது

புல்வெளி பக்கத்தில் இருந்தது

கோழிக் குஞ்சுகள் பெரிதாகத் தெரிந்தன

மழையில் நனையப் பிடித்தது

வெயிலில் விளையாடப் பிடித்தது

டீச்சரிடம் பேசிக் கொண்டு

நட்பிடம் சண்டை போட்டுக் கொண்டு

இப்போதோ

எல்லாமே விலகிப் போனது போல்

எங்கேயோ தொலைந்து போனது போல்

-------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 8 நவம்பர், 2012

நம்மை வளர்ப்போம்

நம்மை வளர்ப்போம்

---------------------------------

நம்மை விட்டு
விலகி இருந்து

நம்மை நாமே
பார்க்கும் போது

நம்மைப் பார்த்து
நகைக்கத் தோன்றும்

நம்மைப் பார்த்து
கோபம் தோன்றும்

நம்மைப் பார்த்து 
நம்மை வளர்ப்போம்

-----------------------------நாகேந்திர பாரதி

புதன், 7 நவம்பர், 2012

எழுத்தாளும் எண்ணம்

எழுத்தாளும் எண்ணம்

---------------------------------------

அழுத்தமான நிகழ்ச்சிகளை
அள்ளி விட வேண்டும்

கிண்டலையும் சோகத்தையும்
கிள்ளி விட வேண்டும்

சொந்தத்தையும் பந்தத்தையும்
சுற்றி விட வேண்டும்

சூது வாது கொஞ்சம்
பற்றி விட வேண்டும்

எழுத்தாளும் எண்ணத்தில்
இன்னும் பல வேண்டும்

----------------------------------------நாகேந்திர பாரதிசெவ்வாய், 6 நவம்பர், 2012

கனவுப் பருவங்கள்

கனவுப் பருவங்கள்

--------------------------------

சின்னக் கனவுகள்
தூக்கத்தில் உதிக்கும்

பெரிய கனவுகள்
வாழ்க்கையில் குதிக்கும்

எந்தக் கனவாக
இருந்த போதிலும்

விழித்துப் பார்த்தால்
வேறாக இருக்கும்

பருவங்கள் மாறும்
உருவங்கள் மாறும்

----------------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 5 நவம்பர், 2012

ஐம்பொறியும் உறுதி

ஐம்பொறியும் உறுதி

------------------------------------
பிரகாரம் சுற்றி
உடலுக்கு உறுதி

மந்திரம் சொல்லி
வாய்க்கு உறுதி

கடவுளைப் பார்த்து
கண்ணுக்கு உறுதி

தீபத்தின் வாசம்
நாசிக்கு உறுதி

மணியின் ஓசை
செவிக்கு உறுதி

கோயில் சென்றால்
ஐம்பொறியும் உறுதி

------------------------------நாகேந்திர பாரதி
ஞாயிறு, 4 நவம்பர், 2012

விரல் விழா

விரல் விழா


----------------------

பட்டாசுக் கடையைப் பார்க்கும் போது
மருந்தை உருட்டும்
விரல்களின் வேகம்

பட்சணக் கடையைப் பார்க்கும் போது
மாவை உருட்டும்
விரல்களின் வேகம்

ஜவுளிக் கடையைப் பார்க்கும் போது
தறியை உருட்டும்
விரல்களின் வேகம்

விழாக்களின் அழைப்பு
விரல்களின் உழைப்பு

--------------------------------------------------நாகேந்திர பாரதி
வெள்ளி, 2 நவம்பர், 2012

மௌனத்தின் மொழி

மௌனத்தின் மொழி


--------------------------------------

மௌனத்தின் மொழி

அதுதானே காதல்

அதில்தானே பேச்சு

அதில்தானே வளர்ச்சி

அதில்தானே தளர்ச்சி

அதில்தானே முடிவு

அதையும் தாண்டி

ஏதோ ஒன்று

இருப்பது தானே

காதலின் இயற்கை

--------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 1 நவம்பர், 2012

வீட்டு நினைப்பு

வீட்டு நினைப்பு


-----------------------------

வீதியின் குறுக்கே

விழுந்து கிடந்ததை

வெட்டி நறுக்கி

விலக்கிப் போட்டாச்சு

பாதை சரியாச்சு

பயணம் தொடர்ந்தாச்சு

வீட்டை இழந்த

பறவைகள் தவிர

வேற எல்லோரும்

வீடு சேர்ந்தாச்சு

-------------------------------நாகேந்திர பாரதி

புதன், 31 அக்டோபர், 2012

கடலின் வலி

கடலின் வலி


-----------------------

அலையை உயர்த்தி

ஆகாயத்திடம் சொல்கிறது

கரையில் மோதி

தரையிடம் சொல்கிறது

ஆழத்துக்குப் போகிறது

அங்கே அமைதி

தாவரங்களும் மீன்களும்

தடவிக் கொடுக்கின்றன

கடலின் வலி

காணாமல் போகிறது

----------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 26 அக்டோபர், 2012

கப்பலோட்டிய காலம்

கப்பலோட்டிய காலம்


-----------------------------------------

வாய்க்கால் தண்ணியில்

வரிசையாய்க் கப்பல்கள்

சில மூழ்கிப் போகும்

சில சீறிப் பாயும்

கப்பலோடு சேர்ந்து

வரப்போரம் ஓடி

வழுக்கி விழுந்து

அடிபட்ட காயங்கள்

காகிதக் கப்பலின்

அடையாளச் சின்னங்கள்

-----------------------------------நாகேந்திர பாரதி


அரங்கேற்ற இடங்கள்

அரங்கேற்ற இடங்கள்


------------------------------------------

ஒவ்வொரு கடற்கரையிலும்

ஒவ்வொரு ஆற்றங்கரையிலும்

ஒவ்வொரு கண்மாய்க்கரையிலும்

ஒவ்வொரு அருவி ஓரத்திலும்

ஏதாவது ஒரு காதல் கதை

அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது

கண்ணீரைத் தண்ணீரில்

கரைத்துக் கொண்டு

-----------------------------------------நாகேந்திர பாரதி


புதன், 24 அக்டோபர், 2012

இட்லி அதிகாரம்

இட்லி அதிகாரம்


------------------------------

குண்டாச் சட்டியில் அவிச்சு

கோரைப் பாயை விரிச்சு

ஆறப் போட்ட நெல்லை

அரிசி மில்லில் அரைச்சு

தவிடு உமியை நீக்கி

கல்லு மண்ணைப் பொடச்சு

ஊறப் போட்ட அரிசியில்

உளுந்தம் பருப்பும் சேர்த்து

ஆட்டுக் கல்லில் அரைச்சு

பொங்கி வந்த மாவில்

பூவுப் பூவாய் இட்டிலி

பூக்கும் வாசம் தூக்கும்

--------------------------------------நாகேந்திர பாரதி

பட்டணம் போன கிராமம்

பட்டணம் போன கிராமம்


--------------------------------------------

நாலு கல்லு வச்சாச்சு

கோயில் இன்னும் கட்டலை

மொட்டைக் கோபுரம்

முழுசா எழும்பலை

காஞ்சு போன கண்மாயை

கருமேகம் பார்க்கலை

ஓஞ்சு போன வயலிலே

ஒத்தைப் பயிரும் இல்லே

ஊரு சனம் எல்லாம்

பட்டணம் பறந்தாச்சு

------------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 22 அக்டோபர், 2012

சமரச நிலை

சமரச நிலை


----------------------

அறிவுச் சக்தியை

அன்புச் சிவத்தில்

அடங்கச் செய்தால்

அமைதி ஆகும்

பிறவிச் சக்தியை

படைப்புச் சிவத்தில்

பாயச் செய்தால்

பரவசம் ஆகும்

சக்தியும் சிவமும்

சமரசம் ஆகும்

------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 19 அக்டோபர், 2012

காலமும் காதலும்

காலமும் காதலும்


----------------------------------

அசைந்து அமர்ந்து

பார்த்த காதல்

இசைந்து இணைந்து

சிரித்த காதல்

கட்டிப் பிடித்து

சுழலும் காதல்

விட்டுப் பிரிந்து

வேறொரு காதல்

காலம் மாறுது

காதலும் மாறுது

---------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 17 அக்டோபர், 2012

பாட்டி படும் பாடு

பாட்டி படும் பாடு


------------------------------

படிச்சு விளையாண்ட

காலம் போயாச்சு

பட்டமும் பதவியும்

குடும்பமும் ஆயாச்சு

வருஷம் ஒரு தடவை

வந்து தான் போறே

ஒண்ணுக்கு ரெண்டுக்கு

எடுத்த பாட்டியை

ஒப்புக்கு பாத்திட்டு

உடனே கிளம்புறே

கண்ணிலே வச்சிட்டுக்

காத்துக் கிடக்கிறேன்

மாசம் ஒருவாட்டி

வந்துட்டுப் போயேன்

------------------------------------------நாகேந்திர பாரதிதிங்கள், 15 அக்டோபர், 2012

அமாவாசை வெளிச்சம்

அமாவாசை வெளிச்சம்


---------------------------------------------

ஒவ்வொரு பெயரைச்

சொல்லும் போதும்

ஒவ்வொரு உருவம்

கண்ணில் நிறையும்

ஊட்டி வளர்த்த

கைகள் தெரியும்

தூக்கி வளர்த்த

தோள்கள் தெரியும்

அமாவாசை நாளில்

அன்பின் வெளிச்சம்

-----------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

குருவக் களஞ்சியம்

குருவக் களஞ்சியம்


-----------------------------------

உலக்கையில் குத்திய

குருவக் களஞ்சியம்

பாதி அவிச்சு

பதினியைச் சேக்கலாம்

முழுசா அவிச்சு

குழம்பில் முக்கலாம்

மொக்கை மொக்கையா

சிவப்பும் ருசியுமா

சிரிச்ச அரிசி

ஆளையே காணோம்

------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 12 அக்டோபர், 2012

உலக அரட்டை

உலக அரட்டை


---------------------------------

சைக்கிள் கடையிலும்

காப்பிக் கடையிலும்

அரசியல் சினிமா

உள்ளூர் அரட்டை

கம்ப்யூட்டர் முன்னே

பேஸ்புக் டிவிட்டரில்

அடிக்கும் அரட்டை

உலக அரட்டை

கலகமும் நேருது

காதலும் சேருது

-----------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

குழந்தையின் குரல்

குழந்தையின் குரல்


-------------------------------------

சாப்பிட்டு முடிக்க

நேரம் தான் ஆகும்

தண்ணியில் அடிச்சு

ஆடத்தான் வேணும்

எல்லாப் பொருளையும்

எடுத்துத்தான் பார்க்கணும்

தினசரி வெளியே

தூக்கிட்டுப் போகணும்

குழந்தையின் குரலைக்

கேட்டுத்தான் ஆகணும்

-------------------------------------நாகேந்திர பாரதிசெவ்வாய், 2 அக்டோபர், 2012

முதியவர் தினம் தினம்

முதியவர் தினம் தினம்


-----------------------------------------------

ஏதாவது ஒரு குறிக்கோளை

எப்போதும் வைத்துக் கொண்டு

ஏதாவது ஒரு செயலை

எப்போதும் செய்து கொண்டு

ஏதாவது ஒரு நம்பிக்கையை

எப்போதும் வைத்துக் கொண்டு

ஏதாவது ஒரு உதவியை

எப்போதும் செய்து கொண்டு

இருந்தால் இளமைதான்

எப்போதும் முதியவர்க்கும்

------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 1 அக்டோபர், 2012

காதல் பொறிகள்

காதல் பொறிகள்


------------------------------

மூக்கிலே முன்கோபம்

வாயிலே வசைப் பேச்சு

கண்களோ கனல் வீசும்

காதுகள் சினந்திருக்கும்

உடலோ சிலிர்த்திருக்கும்

உள்ளமோ களித்திருக்கும்

ஐம்பொறியின் தீப்பொறியில்

அகப்பட்ட காதலர்க்கு

இதுவெல்லாம் வேடிக்கை

இன்பமே வாடிக்கை

---------------------------------------------நாகேந்திர பாரதி


சனி, 29 செப்டம்பர், 2012

புரணிப் பாட்டி

புரணிப் பாட்டி


-----------------------------

அடுப்படியில் ஒரு காது

முற்றத்தில் ஒரு காது

அறையினிலே ஒரு காது

ஹாலிலே ஒரு காது

எப்படித்தான் வைக்கிறாளோ

இத்தனை இடங்களிலும்

இரண்டே காதுகளை

ஒட்டுக் கேட்கும் பாட்டி

இத்தனைக்கும் பாட்டிக்கு

காது சரியாய் கேட்காது

---------------------------------------------நாகேந்திர பாரதி

இட்லியும் இளமையும்

இட்லியும் இளமையும்


-------------------------------------------

சட்னியோ பொடியோ

சாம்பாரோ துகையலோ

தொட்டுச் சாப்பிட்டா

துரத்தும் இட்லி

பத்தோ இருபதோ

பறக்கும் வயிற்றுக்குள்

இரண்டுக்கு மேல்

இறங்க மாட்டேங்குது

இட்லி மாறிருச்சா

இளமை மாறிருச்சா

-----------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

முறைப்பு முகங்கள்

முறைப்பு முகங்கள்


-------------------------------------

காலையில் பார்க்கும் போதும்

முறைப்பு முகம்

மாலையில் பார்க்கும் போதும்

முறைப்பு முகம்

நம்ம முகத்தை

நம்ம கண்ணாடியில்

பார்க்கும் போதுமா

முறைச்சுப் பார்க்கணும்

சிரித்துப் பார்ப்போம்

சிரிக்கும் கண்ணாடி

------------------------------------------------நாகேந்திர பாரதி

பூரண வாழ்வு

பூரண வாழ்வு


------------------------------

இருப்பு நிலையில்

பூரணம் ஆகவும்

இயக்க நிலையில்

உயிரினம் ஆகவும்

தாவரம் தொடங்கி

தாத்தா வரைக்கும்

ஐந்து அடர்த்திகளும்

ஐந்து உணர்வுகளாய்

வளரும் நிலையை

வணங்கி வாழ்வோம்

------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 27 செப்டம்பர், 2012

உண்மை விழிக்கும்

உண்மை விழிக்கும்


-----------------------------------

எல்லாம் தெரியும்

என்ற எண்ணத்தில்

எழுதும் போதும்

பேசும் போதும்

என்ன தெரியும்

என்ற கேள்வி

உள்ளே தோன்றி

உசுப்பும் போது

ஒன்றும் தெரியா

உண்மை விழிக்கும்

------------------------------நாகேந்திர பாரதி

மனித மரங்கள்

மனித மரங்கள்


----------------------------

கூரையைப் பிய்த்தும்

மரங்களைச் சாய்த்தும்

மண்ணை வாரியும்

எறிந்தது காற்று

தென்றலும் அதுவே

புயலும் அதுவே

மனித மரத்தின்

உள்ளே இருந்து

ஆட்டும் மூச்சை

அறிந்து வாழ்வோம்

-------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 26 செப்டம்பர், 2012

காதல் கொலைகள்

காதல் கொலைகள்


---------------------------------

காதல் என்பது

கருணை, கண்ணியம்

காதல் என்பது

அன்பு, அரவணைப்பு

காதல் என்பது

பண்பு, பந்தம்

இந்தக் கால

மோக வேகத்தில்

காதல் என்பது

கொலையில் தொலையும்

-----------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 24 செப்டம்பர், 2012

இரவின் அமைதி

இரவின் அமைதி


-------------------------------

கவியும் இருளில்

கனக்கும் வானம்

கிழித்துப் பார்த்து

சிரிக்கும் சுடர்கள்

பாலில் தோய்ந்த

பளிங்காய் நிலவு

மரத்தின் பறவைக்

குரலும் குறையும்

மனத்தில் அமைதி

மலர்ந்து நிறையும்

----------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

காகிதக் கப்பல்கள்

காகிதக் கப்பல்கள்


------------------------------------

சாதியும் மதமும்

மொழியும் நாடும்

அடையாளம் ஆகிவிட்ட

சமுதாயத் தீவுகளில்

சாதி சமத்துவமும்

மத ஒற்றுமையும்

மொழி இணக்கமும்

உலக அமைதியும்

கரை சேர முடியாத

காகிதக் கப்பல்கள்

------------------------------------நாகேந்திர பாரதி

மக்கள் அரசு

மக்கள் அரசு


-------------------

படித்தவர் சில பேர்

எழுதி ஓய்ந்தார்

படிக்காதோர் சில பேர்

பேசி ஓய்ந்தார்

கையும் வாயும்

காய்ந்து தேய்ந்தார்

சரின்னு பல பேர்

சாய்ந்து மேய்ந்தார்

மக்கள் எவ்வழி

மன்னர் அவ்வழி

-------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

கருவக் காட்டுச் சிறுவர்கள்

கருவக் காட்டுச் சிறுவர்கள்


-----------------------------------------------

கருவ முள் -

ஓலையிலே குத்தினா காத்தாடி

காலிலே குத்தினா ஆத்தாடி

கருவ மரம் -

வெட்டி விறகாக்கி உழைப்பு

விறகைக் கரியாக்கி பொழைப்பு

முள்ளு மரமாகி

சிறுசு பெருசாகி

கட்டைச் சுமந்தது

கரியை மூட்டும்

----------------------------------------நாகேந்திர பாரதி

சுடுகாட்டுப் பக்கம்

சுடுகாட்டுப் பக்கம்


----------------------------------

ஒவ்வொரு நாளும்

ஏதாவது ஒரு உடல்

எரிந்து கொண்டு இருக்கிறது

கண்மாய்க் கரையில்

சேலையும் வேட்டியும்

காய்ந்து கொண்டு இருக்கின்றன

ஈரத்தைக் காய வைக்க

காற்று போதும்

இதயத்தைக் காய வைக்க

காலம் வேண்டும்

------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 20 செப்டம்பர், 2012

வந்தியத் தேவன் வரவு

வந்தியத் தேவன் வரவு


-------------------------------------------

வெண்ணாறும் வெட்டாறும்

குடமுருட்டி ஆறும்

தஞ்சையும் நாகையும்

கும்ப கோணமும்

கோயிலும் குளமும்

பிரசாத அமுதும்

வயலும் வரப்பும்

வாய்க்கால் தண்ணியும்

வந்தியத் தேவன்

வரவுக்குக் காத்திருக்கும்

இன்னொரு கல்கி

எப்போது பிறப்பார்

--------------------------------------------------நாகேந்திர பாரதிபுதன், 19 செப்டம்பர், 2012

மழைக் காலம்

மழைக் காலம்


---------------------------

மழையில் விளையாடி

மகிழ்வது ஒரு காலம்

குடையைப் பிடித்து

தும்முவது ஒரு காலம்

பயந்து வீட்டில்

பதுங்குவது ஒரு காலம்

இடியும் மின்னலுமாய்

சிரிக்கும் மழை

நம்மைப் பார்த்து

நகைத்துப் போகிறதோ

-------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

தொண்டர்தம் துன்பம்

தொண்டர்தம் துன்பம்


------------------------------------------

வரப்புச் சண்டையில்

வழுக்கி விழுந்து

சாதிச் சண்டையில்

சறுக்கி விழுந்து

கட்சிச் சண்டையில்

கலந்து விழுந்து

பழியும் பயமும்

தொடர்ந்து சுமக்கும்

தொண்டர்தம் துன்பம்

சொல்லவும் பெரிதே

--------------------------நாகேந்திர பாரதி

அடுப்படி உழைப்பு

அடுப்படி உழைப்பு


--------------------------------------

மிளகு ரசத்தின் பின்

எவ்வளவு உழைப்பு இருக்கிறது

கத்திரிக்காய்க் கூட்டின் பின்

எவ்வளவு உழைப்பு இருக்கிறது

அவசரம் அவசரமாய்

அள்ளிப் போட்டுக் கொண்டு

அலுவலகம் சென்று

அரட்டை அடிப்போர்க்கு

அடுப்படி உழைப்பின்

களைப்பு தெரியுமா

---------------------------------------நாகேந்திர பாரதிதிங்கள், 17 செப்டம்பர், 2012

மக்கள் அலை

மக்கள் அலை


---------------------------------------------

இந்த நொடியில்

வந்த அலையும்

அடுத்த நொடியில்

ஆடும் அலையும்

ஒன்றா வேறா

ஒரே நீரா

வந்து போகும்

மக்கள் அலையும்

ஒன்றா வேறா

ஒரே பேரா

----------------------------நாகேந்திர பாரதிசனி, 15 செப்டம்பர், 2012

கடலும் குளமும்

கடலும் குளமும்


-------------------------------

வாழ்வின் ஆதாரம்

வளைஞ்சி போறப்போ

கோட்டும் சூட்டும்

குனிஞ்சு போயிரும்

வேட்டியும் வெத்துடம்பும்

வெறிச்சுப் பாக்கும்

உணர்ச்சியைச் சேத்து

வளர்ச்சியைப் பாத்தா

கடலும் குளமும்

கண்ணீர் ஆகாது

------------------------------------ நாகேந்திர பாரதி

பாட்டியின் புடவை

பாட்டியின் புடவை


------------------------------

அவரு வாங்கிக் கொடுத்த

அரக்குக் கலர் புடவையாம்

பண்டிகை விஷேசங்கட்கு

பதவிசாய் உடுத்துவாங்க

மத்த நாட்கள்லே

மடிச்சு மஞ்சப் பைக்குள்

பாடையிலே போகும் போதும்

பாத்து உடுத்தியாச்சு

முன்னாடி போனவரு

மூஞ்சி நிறைஞ்சிருக்கும்

-------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 13 செப்டம்பர், 2012

ஆணும் பெண்ணும்

ஆணும் பெண்ணும்


---------------------------------------

அப்பத்தா அம்மாச்சி

வளர்த்த காலம் போய்

அத்தை சின்னம்மா

வளர்த்த காலம் ஆய்

மனைவி மகள்

வளர்க்கும் காலம் வந்து

ஆணுக்கு எப்போதும்

வளரும் காலம்தான்

பெண்ணுக்கு எப்போதும்

வளர்க்கும் காலம்தான்

--------------------------------------------நாகேந்திர பாரதிஅவரவர் வேலை

அவரவர் வேலை


----------------------------------

நல்லவர்களைக் காப்பதுவும்

தீயவர்களை அழிப்பதுவுமாய்

ஆண்டவருக்கு எத்தனையோ

அவசர வேலைகள்

காலம் பார்த்து

கணக்காய் முடிக்கிறார்

காத்துக் கிடந்து

கடவுளைப் படுத்தாமல்

நம்ம வேலையை

நல்லதாய்ப் பாப்போம்

-----------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 10 செப்டம்பர், 2012

அவசர உலகம்

அவசர உலகம்


------------------------------

பக்கத்தூருச் சந்தைக்கு

பாதையிலே நடந்து போயி

ஒடிச்சுக் கடிச்சு

ஒழுங்கான காய் வாங்கி

விறகடுப்பு சமையல்

வேகறதுக்கு காத்திருந்து

நொறுங்கத் தின்னு

நூறு வரை இருந்தாங்க

செல்போனில் ஆர்டர் பண்ணி

சீக்கிரமாய்   வீடு வரும்

அவசரமாய்ச் சாப்பிட்டு

அம்பதிலே போனாங்க

-------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

பஞ்சு மிட்டாய்ப் பாப்பா

பஞ்சு மிட்டாய்ப் பாப்பா


-----------------------------------------

பஞ்சு மிட்டாய்க்கு

கையும் காலும் முளைச்சிருக்கு

இங்கிட்டும் அங்கிட்டும்

ஓடிக்கிட்டே இருக்கும்

ஒண்ணுக்கும் ஆயும்

ஓயாம போகும்

சாப்பிட தூங்க வைக்க

பாடாய்ப் படுத்தும்

தூங்க வச்சுட்டா

'அப்பாடா'ன்னு இருக்கும்

எப்படா முழிக்கும்னு

'ஏக்கமா'வும் இருக்கும்

-----------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

வேதனை வெடிகள்

வேதனை வெடிகள்


------------------------------

எத்தனை உடல்கள்

எரிந்து பறந்தன

மருந்து நெருப்பு

பரந்து விரிந்து

தீயின் நாக்கும்

புகையின் போக்கும்

அலறல் சப்தம்

கருகும் காற்று

அய்யோ வேண்டாம்

வேதனை வெடிகள்

--------------------------நாகேந்திர பாரதி

புதன், 5 செப்டம்பர், 2012

ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம்


---------------------------

பானிப்பட்டு யுத்தமும்

ஊசியிலைக் காடுகளும்

பதினாறாம் வாய்ப்பாடும்

பாஸ்பரஸ் நெருப்பும்

மனப்பாடத் திருக்குறளும்

பில் அப் தி ப்ளாங்க்சும்

மறந்து போனாலும்

பள்ளிக்கூடம் மறக்காது

வருஷம் ஒரு தடவை

வாத்தியாரை நினைப்போம்

---------------------------------------------நாகேந்திர பாரதி

உலக இருதய தினம்

உலக இருதய தினம்


-----------------------------------

இருதய தினத்தில்

இலவச சிகிச்சையாம்

கொழுப்பு கூடினால்

மருந்து கிடைக்குமாம்

அழுத்தம் கூடினால்

மருந்து கிடைக்குமாம்

சக்கரை கூடினால்

மருந்து கிடைக்குமாம்

காதல் கூடினால்

காதலி கிடைப்பாளா

---------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 3 செப்டம்பர், 2012

கல்யாண வரிசை

கல்யாண வரிசை


------------------------------

வரிசையில் நின்னு

பரிசைக் கொடுத்திட்டு

வரிசையில் நின்னு

விருந்தைச் சாப்பிட்டு

வரிசையில் நின்னு

தாம்பூலம் வாங்கிட்டு

வரிசையில் நின்ன

களைப்பைப் போக்க

வரிசையில் இருந்து

டாக்டரைப் பாக்கணும்

-----------------------------------நாகேந்திர பாரதி


காரியக் காரர்கள்

காரியக் காரர்கள்


------------------------------------

வந்திருக்கும் பெருசுகட்கு

காபி கொடுத்தாச்சு

அழற குழந்தைகட்கு

இட்லி கொடுத்தாச்சு

காரியம் செய்பவர்க்கு

காசு கொடுத்தாச்சு

சோக வீட்டுக்குள்

சுறுசுறுப்பாய் சில பேர்

அழறவங்க அழட்டும்

ஆக வேண்டியதை பாக்கணுமே

-----------------------------------------------நாகேந்திர பாரதி


ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

விரதக் கிழமைகள்

விரதக் கிழமைகள்


-------------------------------------

ஞாயிற்றுக் கிழமை

சூரியனுக்கு விரதம்

திங்கட் கிழமை

சிவனுக்கு விரதம்

செவ்வாய்க் கிழமை

ஆஞ்சநேயர் விரதம்

புதன் கிழமை

பெருமாள் விரதம்

வியாழக் கிழமை

குருவுக்கு விரதம்

வெள்ளிக் கிழமை

அம்மன் விரதம்

சனிக் கிழமை

சனீஸ்வரர் விரதம்

எந்தக் கிழமை

கறி , மீன் சாப்பிடறது

--------------------------------------நாகேந்திர பாரதி


காலத்தின் பேச்சு

காலத்தின் பேச்சு


---------------------------

பத்து வருடங்களுக்குப் பின்

பழைய கம்பெனிக்கு

சிலருக்கு கல்யாணம் ஆகிவிட்டது

சிலர் இறந்து போய் விட்டார்கள்

சிலர் பேசவில்லை

சிலர் காணவில்லை

நம்மைப் பற்றியும்

யாரோ பேசிக் கொள்கிறார்கள்

நல்லதோ கேட்டதோ

நாம் பேசியது போல

--------------------------------------நாகேந்திர பாரதி


சனி, 1 செப்டம்பர், 2012

கம்ப்யூட்டர் உலகம்

கம்ப்யூட்டர் உலகம்


----------------------------------

வீட்டு வாடகையை

ஏத்தி விட்டுட்டு

விலை வாசியை

உசத்தி விட்டுட்டு

பீரு பிஸ்ஸாவை

பெருக்கி விட்டுட்டு

கவுந்து கிடக்குது

கம்ப்யூட்டர் உலகம்

அமெரிக்கா ஐரோப்பா

ஆட்டம் குறைஞ்சதால்

-----------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

குடும்பத் தலைவர்கள்

குடும்பத் தலைவர்கள்


---------------------------------------

வாயெல்லாம் பல்லாக

வயிறு வரை நகையாக

மனைவியர் கூட்டம்

காதிலே செலபோன்

கண்ணிலே பயத்தோடு

தலைவர்கள் கூட்டம்

பல நாள் திருடர்கள்

ஒரு நாள் விசாரணைக்கு

அதற்குப் பின்னாலே

அவரவர் சாமர்த்தியம்

----------------------------------------நாகேந்திர பாரதி


வியாழன், 30 ஆகஸ்ட், 2012

கலாச்சார மோதல்

கலாச்சார மோதல்


-------------------------------------

மாகாணி வாய்ப்பாடு

சொல்லத் தெரியாது

மண்ணிலே ஆவன்னா

எழுதத் தெரியாது

காலணா அரையணா

பாத்தது கிடையாது

கஞ்சிக்கு கருப்பட்டி

கடிச்சது கிடையாது

காகிதம் மேஞ்சுட்டு

கலாச்சாரம் பேசறான்மெட்ரிக்கு காலத்தில்

மாகாணி தேவையா

ஐபேடு காலத்தில்

மண்ணெல்லாம் எதுக்கையா

அரையணா பார்க்க

பொருட் காட்சி போகலாம்

கருப்பட்டிக் கஞ்சி எல்லாம்

ஹார்லிக்சாய் ஆயாச்சு

பேஸ்புக்கில் போட்டுட்டு

பெருசு புலம்புது

-------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

செயல் மேலாளர்

செயல் மேலாளர்


-----------------------------------

செய்து முடிக்கச்

சொல்லிச் செல்லுவார்

செய்யும் செயலில்

மாற்றம் சொல்லுவார்

செய்து முடிக்கும்

தேதி குறிப்பார்

செய்து முடித்த

சேதி அரிப்பார்

செய்ய மட்டும்

விடவே மாட்டார்

----------------------------------------நாகேந்திர பாரதி


வருத்தம் தந்த மகிழ்ச்சி

வருத்தம் தந்த மகிழ்ச்சி  

--------------------------------------

நினைவையும் கனவையும் தாண்டிய

நீள் வெண் பரப்பின் கவிஞன் அவன்அவனுக்கே புரியாத அவன் கவிதை

ஆசிரியர்க்குப் புரியாததில் வியப்பில்லைவீட்டாரும் படிப்பதற்கு விரும்புவதில்லை

நண்பர்களும் நயமாக மறுத்திடுவார்வந்தது ஒரு நாள் மடல் ஒன்று

'பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்'பாடினான் ஆடினான் மகிழ்ந்தான்

படித்துப் பார்த்தானே ஒருவன் என்று

----------------------------------------------------------நாகேந்திர பாரதிசனி, 25 ஆகஸ்ட், 2012

நீங்கள் கேட்டவை

நீங்கள் கேட்டவை


-----------------------------------

பறவைச் சிறகு

பறக்கும் சப்தம்

பழுத்த இலைகள்

உதிரும் சப்தம்

பாசக் கண்ணீர்

பேசும் சப்தம்

காதல் நெஞ்சம்

துடிக்கும் சப்தம்

கேட்க நினைத்தால்

கேட்கும் சப்தம்

----------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

காதலித்துப் பார்

காதலித்துப் பார்


-----------------------------

காதலித்துப் பார்த்தால்

தான் தெரியும்

காதல் காத்து இருத்தல் என்று

காதல் பார்த்து சிரித்தல் என்று

காதல் பழகிப் பிரிதல் என்று

காதல் பிரிந்து சேர்தல் என்று

காதல் கண்ணீர் என்று

காதல் கடமை என்று

காதல் உலகம் என்று

காதல் உண்மை என்று

---------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

கல்லும் மண்ணும்

கல்லும் மண்ணும்


-------------------------------

நெல்லின் மணியோ

வானம் பாக்குது

ஆலைப் பஞ்சோ

பாழாய்ப் போகுது

கிரானைட் கல்லோ

கொட்டுது கோடி

ஆத்து மணலோ

அள்ளுது கோடி

கல்லும் மண்ணும்

காசாய் ஆகுது

புல்லும் பொறியும்

பொசுங்கிச்   சாகுது
--------------------------------------நாகேந்திர பாரதி


சனி, 18 ஆகஸ்ட், 2012

வளரும் கவிதை

வளரும் கவிதை


----------------------------

அரசினைப் பாடி

பரிசினைப் பெற்று

கடவுளைப் பாடி

கருணையைப் பெற்று

இயற்கையைப் பாடி

இன்பத்தைப் பெற்று

அகத்தினைப் பாடி

அனுபவம் பெற்று

வடிவங்கள் மாறி

வளரும் கவிதை

----------------------------நாகேந்திர பாரதி

சனி, 4 ஆகஸ்ட், 2012

ஒலியும் ஒளியும்

ஒலியும் ஒளியும்


----------------------------------------

மூலத்தில் ஆதாரம்

உச்சத்தில் துரியம்

ஆதாரம் துரியமாய்

மயங்கிடும் ஒலி

ஆகாயம் சக்தி

அதன் பின்னே சிவம்

சக்தியும் சிவனுமாய்

முயங்கிடும் ஒளி

ஒலியும் ஒளியுமாய்

இயங்கிடும் வெளி

-----------------------------நாகேந்திர பாரதி


வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

வண்டித் தடம்

வண்டித் தடம்


-------------------------

சேறாக இருந்தபோது

சிக்கிப் போயிருக்கும்

காய்ந்து போனபின்பு

குழியாக மாறி

ஓரமெல்லாம் உலர்ந்து

மல்லாக்கக் கிடக்கும்

உதிர்ந்த மண் ஓரம்

குழிக்குள்ளே குப்பாந்து

மூடப் பார்த்தாலும்

மூடாது வண்டித்தடம்

-------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

கவிதை உருவங்கள்

கவிதை உருவங்கள்


-------------------------------------

வாழ்க்கையைக் கவிதையாக

வடித்தது அந்தக் காலம்

நிகழ்ச்சியைக் கவிதையாக

நிறுத்தியது அடுத்த காலம்

காட்சியைக் கவிதையாக

காட்டியது வந்த காலம்

பார்வையைக் கவிதையாக

பதிவது இந்தக் காலம்

உணர்ச்சிகள் ஒன்றுதான்

உருவங்கள் வேறுவேறு

--------------------------------------------நாகேந்திர பாரதி


பாக்கலாண்டா மச்சான்

பாக்கலாண்டா மச்சான்


--------------------------------------------

வகுப்பில் இருந்துகொண்டு

வாட்சைப் பார்த்ததும்

கிளாஸைக் கட்டடித்து

சினிமா போனதும்

ஆணும் பெண்ணுமாய்

அரட்டை அடித்ததும்

விடுதி விழாக்களில்

விடியவிடிய ஆடியதும்

'பாக்கலாண்டா மச்சானில்'

பறந்து போகிறது

------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 27 ஜூலை, 2012

படுத்துக் கிடக்கும் பாதை

படுத்துக் கிடக்கும் பாதை


---------------------------------------------

வெயிலில் வெளுத்து

மழையில் கறுத்து

கல்லும் மண்ணும்

கலந்து அடித்து

வெளியில் தடித்து

உள்ளே வெடித்து

மரமும் மனிதரும்

காரும் சேறும்

தாங்கிப் பொறுத்துத்

தூங்கிக் கிடக்கும்

-----------------------------------------நாகேந்திர பாரதிசனி, 21 ஜூலை, 2012

பிச்சைக் காரர்கள்

பிச்சைக் காரர்கள்


---------------------------------

கோயில் வாசலில்

பிச்சைக் காரர்கள்

சர்ச் வாசலில்

பிச்சைக் காரர்கள்

மசூதி வாசலில்

பிச்சைக் காரர்கள்

மனிதரிடம் பிச்சை கேட்டு

இவர்கள் வெளியே

இறைவனிடம் பிச்சை கேட்டு

அவர்கள் உள்ளே

------------------------------நாகேந்திர பாரதி

நாலு கல்லு சாமி

நாலு கல்லு சாமி


---------------------------

நாலு கல்லு சாமி

நம்ம ஊரு சாமி

காலு கையு வாங்கும்

கண்ணு மூக்கு வீங்கும்

வெள்ளி செவ்வாய் வந்து

விரதம் இருக்க வேணும்

ஆடு கோழி வெட்டி

ஆக்கிப் போட வேணும்

இந்தக் காலம் இப்புடி

ஆகிப் போன தெப்புடி

அந்தக் காலத் தாத்தா

ஆடு அடைச்ச கொட்டாய்

------------------------------------நாகேந்திர பாரதி


கண்மாய்க் கதை

கண்மாய்க் கதை


------------------------------

மழைக் காலத்தில்

வழுக்கும் சகதி

குளிக்கும் துவைக்கும்

கூட்டம் மிகுதி

கோடைக் காலத்தில்

குத்தும் கல்லு

கடக்கும் நடக்கும்

காலில் முள்ளு

கண்மாய்க் கதையில்

கிராமம் இருக்கும்

-------------------------------------நாகேந்திர பாரதி


வெள்ளி, 20 ஜூலை, 2012

மணிக் கணக்கு


மணிக் கணக்கு

----------------------------

ஒரு மணி நேரக் கிளர்ச்சி

பல மணி நேரத் தளர்ச்சி

ஒரு மணி நேர வேகம்

பல மணி நேர சோகம்

ஒரு மணி நேரச் சத்தம்

பல மணி நேரப் பித்தம்

ஒரு மணி நேர இன்பம்

பல மணி நேரத் துன்பம்

ஒரு மணி நேரம் ஏந்தி

பல மணி நேரம் வாந்தி

----------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 18 ஜூலை, 2012

ஓரம் போ

ஓரம் போ


----------------

ஓரம் முழுக்க

ஒழுகும் தண்ணீர்

நடு ரோட்டில்

நாலு கால் வண்டிகள்

நடை பாதையிலோ

நசுக்கும் கல்லு

அடிப் பாதையோ

அசுத்தக் கூடம்

நடக்க முடியுமா

கடக்க முடியுமா

--------------------------------------நாகேந்திர பாரதி
செவ்வாய், 17 ஜூலை, 2012

பொழுது போக்கு

பொழுது போக்கு


------------------------------------

சம்பாச்செய் பக்கத்துக்கு

சாணி மெழுகின திண்ணை

பெருசுக உட்கார்ந்து

பீடி சுருட்டு பிடிக்கும்

சிறுசுக வந்தாலோ

சில்லறை அடிக்கும்

பொண்டுக உட்கார்ந்து

புரணி படிக்கும்

பொழுது போகணுமே

பொழப்பத்த காலத்திலே

-----------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 16 ஜூலை, 2012

பருவ காலங்கள்

பருவ காலங்கள்


-----------------------------------

சிறுமிப் பருவத்தில்

குறும்புகள் செய்து

இளம்பெண் பருவத்தில்

கனவுகள் வளர்த்து

மணப்பெண் பருவத்தில்

துணையுடன் சேர்ந்து

தாய்மைப்   பருவத்தில்

பொறுப்புக்கள் சுமந்து

முதுமைப் பருவத்தில்

சிறுமியைத் தேடும்

-------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 15 ஜூலை, 2012

உடலும் உள்ளமும்

உடலும் உள்ளமும்
--------------------------------------படுத்துக் கிடந்தாலும்உட்கார்ந்து இருந்தாலும்எழுந்து நின்றாலும்ஓடிப் பார்த்தாலும்உடலுக்கு மட்டும்தான்ஓய்வும் அசைவும்உள்ளம் எப்போதும்ஒன்றில் அடக்கம்காதல் நினைவில்கலந்து கிடக்கும்-----------------------------------நாகேந்திர பாரதி


ஓய்வு வங்கி

ஓய்வு வங்கி


----------------------------

ஓய்வு பெற்ற

வங்கி அதிகாரியாம்

எந்த வங்கி

ஓய்வு பெற்றது

லண்டன் வட்டியிலும்

நியூயார்க் சட்டியிலும்

மக்களின் பணத்தில்

சூதாட்டம் ஆடும்

வங்கிகள் எல்லாம்

வாய்தா வாங்குது

-------------------------------நாகேந்திர பாரதி


இன்பப் பயணம்

இன்பப் பயணம்


-----------------------------

ஓர சீட்டைப் பார்த்து

உடனே பிடிக்கணும்

ஒல்லியான ஆளு

உட்காரணும் பக்கத்திலே

எழுதிக் கொடுத்த பாக்கியை

இறங்கிறப்போ வாங்கணும்

மேல வச்ச பெட்டியை

மெதுவாக இறக்கணும்

இவ்வளவு இருக்கிறப்போ

இனிக்குமா பஸ் பயணம்

--------------------------------------------நாகேந்திர பாரதி


செவ்வாய், 10 ஜூலை, 2012

கோயில் பிரசாதம்

கோயில் பிரசாதம்


---------------------------------

மணியோசை கேட்டு

கோயிலுக்குப் போய்

ஓதுவார் பாடலில்

உறங்கிப் போய்

நாதஸ்வர மேளத்தில்

விழித்துப் பார்த்தால்

பூஜையும் முடிந்தது

சுண்டலும் காலி

வெறும் கையோடு

சாமிக்குக் கும்பிடு

----------------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 9 ஜூலை, 2012

இருட்டுக்குள் வெளிச்சம்

இருட்டுக்குள் வெளிச்சம்


---------------------------------------------------

எத்தனை உலகங்கள்

எத்தனை உயிர்கள்

எத்தனை இன்பங்கள்

எத்தனை துன்பங்கள்

எத்தனை வடிவங்கள்

எத்தனை வண்ணங்கள்

எத்தனை கருத்துக்கள்

எத்தனை காலங்கள்

இருட்டுக்குள் வெளிச்சமாய்

எல்லையில்லா வானம்

--------------------------------------------நாகேந்திர பாரதி


வெள்ளி, 6 ஜூலை, 2012

இறக்காத பதிவுகள்

இறக்காத பதிவுகள்


--------------------------------------

அஞ்சறைப் பெட்டியில்

அம்மாச்சி நினைவு

தாயக் கட்டத்தில்

அப்பத்தா நினைவு

பொடி டப்பாவில்

தாத்தாவின் நினைவு

நுங்குப் பதனியில்

அப்பாவின் நினைவு

இறந்து போன உறவுகள்

இறக்கி வைத்த பதிவுகள்

-------------------------------------------நாகேந்திர பாரதி


செவ்வாய், 3 ஜூலை, 2012

ஐம்பொறிக் காதல்

ஐம்பொறிக் காதல்


----------------------------------

மெய்ப் பொறியில்

மென்மை வைத்தாள்

வாய்ப் பொறியில்

வாய்மை வைத்தாள்

கண் பொறியில்

கருணை வைத்தாள்

நாசிப் பொறியில்

நளினம் வைத்தாள்

செவிப் பொறியில்

சேதி வைத்தாள்

ஐம் பொறியில்

அகப்பட வைத்தாள்

----------------------------நாகேந்திர பாரதி


ஞாயிறு, 1 ஜூலை, 2012

கிராமத்து மண்ணு

கிராமத்து மண்ணு

------------------------------

கத்தாழைச் செடியும்

கருவ மரக் காடும்

கண்மாய்க் கரையும்

கருப்ப சாமியும்

வேகும் வெயிலும்

ஊத்தும் மழையும்

காத்தும் நாத்தும்

கருவாடும் கோழியும்

கலந்து மணக்கும்

கிராமத்து மண்ணு-------------------------- நாகேந்திர பாரதி


கல்லூரிக் காலம்

கல்லூரிக் காலம்


-----------------------------------

ஒரே ஒரு நோட்டை

எடுத்துக் கொண்டு

ஒரே ஒரு பெண்ணைப்

பார்த்துக் கொண்டு

ஒரே ஒரு பாடம்

படித்துக் கொண்டு

ஒரே ஒரு நினைவில்

இருந்து கொண்டு

ஒரே ஒரு காலம்

கல்லூரிக் காலம்

------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 30 ஜூன், 2012

காதல் சுகங்கள்

காதல் சுகங்கள்


--------------------------------

காத்து இருந்து

பார்ப்பது ஒரு சுகம்

பார்த்து இருந்து

பேசுவது ஒரு சுகம்

பேசி இருந்து

பிரிவது ஒரு சுகம்

பிரிந்து இருந்து

சேர்வது ஒரு சுகம்

சேர்ந்து இருந்து

வாழ்வது ஒரு சுகம்

------------------------------------------நாகேந்திர பாரதி


வெள்ளி, 29 ஜூன், 2012

கோபத்தில் முளைத்த காதல்

கோபத்தில் முளைத்த காதல்


-------------------------------------------------------

வராவிட்டால் கோபம்

வந்தாலும் கோபம்

சிரிக்காவிட்டால் கோபம்

சிரித்தாலும் கோபம்

பேசாவிட்டால் கோபம்

பேசினாலும் கோபம்

தொடாவிட்டால் கோபம்

தொட்டாலும் கோபம்

கோபத்தில் முளைத்த காதல்

காலத்தில் நிலைத்து நிற்கும்

------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 27 ஜூன், 2012

காதல் மாறாது

காதல் மாறாது


--------------------------

பாவாடை தாவணி

சுடிதார் துப்பட்டாவாகி

ஆறு கஜம் புடவையாக

ஆனபின்னும் இன்னும்

அன்று கண்ட அன்பும்

அப்படியே இருக்கும்

அன்று கண்ட வம்பும்

அப்படியே வறுக்கும்

காலம் மாறினாலும்

காதல் மாறாது

-----------------------------------------நாகேந்திர பாரதி


செவ்வாய், 26 ஜூன், 2012

ஒயில் ஆட்டம்

ஒயில் ஆட்டம்


------------------------------

சோளப் பயித்துக்குள்ளே

குள்ள நரி ஓடுது

காலும் கையும்

கர்சீப்போடு ஆடுது

முன்னாலே துள்ளுது

பின்னாலே தாவுது

சுழண்டு ஆடுது

சுத்திப் பாடுது

ஒயில் ஆட்டம்

ஒய்யார ஆட்டம்

-----------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 25 ஜூன், 2012

பரீட்சை பயம்

பரீட்சை பயம்


-------------------------------

ரெண்டு தடவை

படிச்சு முடிச்சாச்சு

நாலு தடவை

நினைச்சுப் பாத்தாச்சு

பரீட்சை மணிக்கு

பத்தே நிமிஷம்

வேக வேகமாய்

விரல்கள் புரட்டும்

வேர்வை வெள்ளம்

வழிந்து மிரட்டும்

-------------------------------------நாகேந்திர பாரதி


ஞாயிறு, 24 ஜூன், 2012

புகைப் படங்கள்


புகைப் படங்கள்


----------------------------

புகையாய்ப் பறந்து

மேகத்தில் கலந்துமறைந்து போன

முகங்கள் எல்லாம்சிரித்துக் கொண்டு

புகைப் படங்களில்நினைவுக் காற்றில்

 நிழல்கள் ஆடும்நெஞ்சம் தேடும்

கண்ணீர் கூடும்

------------------------------------நாகேந்திர பாரதிதிங்கள், 18 ஜூன், 2012

கலங்கிய கண்மாய்

கலங்கிய கண்மாய்


--------------------------------------

கண்மாய் அழியுதுன்னு

தண்டோரா போட்டாச்சு

விராலு , கெளுத்தின்னு

வித விதமாய் மீன்கள்

வலையிலே மாட்டி

வயித்துக்குப் போகும்

கறுப்புச் சேறாய்

கண்மாய் கிடக்கும்

நாளைக்குத் தண்ணிக்கு

நடக்கணும் கிணத்துக்கு

-------------------------------------------நாகேந்திர பாரதி


வியாழன், 14 ஜூன், 2012

வாண்டு அம்மா

வாண்டு அம்மா


-----------------------------

குளிக்க வைக்க

கும்பிடு போடணும்

சாப்பிட வைக்க

சண்டை போடணும்

விளையாட வைக்க

வேகமா ஓடணும்

தூங்க வைக்க

தொடர்ந்து பாடணும்

அசதி ஆகி

அடுத்துத்  தூங்கணும்

நம்ம அம்மாவும்

ஞாபகம் வரணும்

-----------------------------------நாகேந்திர பாரதி


கரி பூசும் காரியம்

கரி பூசும் காரியம்


-------------------------------------

நிலக்கரியும் தருகின்றாள்

நிலமென்னும் நல்லாள்

இருக்கின்ற நிலக்கரியை

எடுப்பதை விட்டு

இறக்குமதி நிலக்கரியில்

ஏராள துட்டு

இடைத் தரகர் வேறு

இதற்கெல்லாம் கூட்டு

ஆடிட்டர் சொன்னபின்

அகலுமா   கரி

--------------------------------நாகேந்திர பாரதி


பங்கும் பத்திரமும்

பங்கும் பத்திரமும்


---------------------------------------

இத்தாலிக்கும் ஸ்பெயினுக்கும்

ஏராளப் பண உதவி

போர்ச்சுகலுக்கும் கிரீஸுக்கும்

பொரி உருண்டை பொட்டலம்

கனத்த நாடென்றால்

காப்பாற்ற வேண்டுமாம்

பங்குச் சந்தை

பல்லிளித்து ஆடும்

பத்திரச் சந்தையோ

பாதுகாப்பாய் ஓடும்

---------------------------------------நாகேந்திர பாரதி


செவ்வாய், 12 ஜூன், 2012

கொடுக்கல் வாங்கல்

கொடுக்கல் வாங்கல்


--------------------------------------

தேர்தல் நிதி வசம்

தினசரி இலவசம்


இறக்குமதி விலக்கு

ஏற்றுமதி இலக்கு


வர்த்தக உடன்பாடு

வணிகர் படும் பாடு


ஊழல் பெருச்சாளி

உலகை உருட்டும்


கொடுக்கல் வாங்கல்

குஷியாய் நடக்கும்

------------------------------------------நாகேந்திர பாரதி


காலத்தின் கண்ணீர்

காலத்தின் கண்ணீர்

------------------------------

பார்வையில் விருப்பம் வைத்து

பதிலினில் குறும்பு வைத்து

சேர்கையில் சிரிப்பு வைத்து

செல்கையில் அழுகை வைத்து

மாலையில் மயக்கம் வைத்து

காலையில் தயக்கம் வைத்து

வருகையில் வாடை வைத்து


பிரிகையில் கோடை வைத்து

காதலில் சோகம் வைத்து

காலத்தில் கண்ணீர் வைக்கும்

----------------------------------நாகேந்திர பாரதி

சிலேட்டும் ஐபேடும்

சிலேட்டும் ஐபேடும்

-----------------------------------

அந்தக் கால சிலேட்டு

இந்தக் கால ஐபேடு

வேண்டாம் குச்சி

விரலே போதும்

எழுதிப் படித்ததை

இழுத்துப் படிக்கலாம்

இன்டெர் நெட்டில்

எல்லாமே இருக்கிறது

விஷயமும் இருக்கு

விஷமும் இருக்கு

--------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 4 ஜூன், 2012

வெளிப் பூச்சு

வெளிப் பூச்சு


-------------------------

எல்லாக் கருத்துக்களும்

சொல்லப் பட்டவைகள் தான்

எல்லா உணர்ச்சிகளும்

உணரப் பட்டவைகள் தான்

எல்லாச் சண்டைகளும்

போடப் பட்டவைகள் தான்

எல்லாச் சமாதானங்களும்

பேசப் பட்டவைகள் தான்

உள்ளுக்குள் எல்லாமே பழசு தான்

வெளிப் பூச்சு மட்டும் தான் வேறு வேறு

--------------------------------------------------நாகேந்திர பாரதி


சனி, 26 மே, 2012

கணவன் மனைவி

கணவன் மனைவி


----------------------------------------

பாடலில் ராகம்

பதிவது போல்

ஊடலில் கூடல்

ஒளிந்து இருக்கும்

ஆடலில் நளினம்

அமைவது போல்

காதலில் கடமை

கலந்து இருக்கும்

உடலும் ஒன்றாய்

உள்ளமும் ஒன்றாய்

-----------------------------------நாகேந்திர பாரதி


வெள்ளி, 25 மே, 2012

அம்மாவும் அப்பாவும்

அம்மாவும் அப்பாவும்


--------------------------------------------

அப்பா இறந்து

அம்மா இருந்தால்

அம்மாவுக்கு நஷ்டம்தான்

அம்மா இறந்து

அப்பா இருந்தால்

அப்பாவுக்கு கஷ்டம்தான்

அம்மாவுக்கு அப்பாவும்

குழந்தை களும்

அப்பாவுக்கு அம்மா

மட்டும் தான்

------------------------------நாகேந்திர பாரதி


ஏன், ஏன், ஏன்

ஏன், ஏன், ஏன்


------------------------

அவளை ஏன்

பார்க்க வேண்டும்

அவளிடம் ஏன்

பேச வேண்டும்

அவளை ஏன்

தொட வேண்டும்

அவளிடம் ஏன்

மயங்க வேண்டும்

அவளை ஏன்

பிரிய வேண்டும்

--------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 18 மே, 2012

கண்டதும் தெரியணும்

கண்டதும் தெரியணும்


---------------------------------------

கிராமமும் தெரியணும்

நகரமும் தெரியணும்

காதலும் தெரியணும்

மோதலும் தெரியணும்

வறுமையும் தெரியணும்

வசதியும் தெரியணும்

பாசமும் தெரியணும்

மோசமும் தெரியணும்

கவிஞனாய் இருக்க

கண்டதும் தெரியணும்

-----------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 16 மே, 2012

கண்கள் கூசும்

கண்கள் கூசும்
------------------------

தானென்ற நினைப்பு

தடுமாற வைக்கும்

தனதென்று உலகை

உருவாக்க நினைக்கும்

வீணென்ற விஷயம்

விளங்காமல் போகும்

விடிகின்ற நேரம்

வெளிச்சமாய் வீசும்

கண்கள் கூசும்

காலம் ஏசும்

--------------------------------நாகேந்திர பாரதி

நேற்று இன்று நாளை

நேற்று இன்று நாளை


------------------------------------

காதல் என்பது

வெளுப்பா கருப்பா

கற்பு என்பது

இனிப்பா புளிப்பா

கடமை என்பது

களிப்பா களைப்பா

கனவு என்பது

சுகமா சோகமா

காலம் என்பது

நேற்றா இன்றா

------------------------------நாகேந்திர பாரதி


ஞாயிறு, 13 மே, 2012

பனைமரப் பலகாரங்கள்

பனைமரப் பலகாரங்கள்

------------------------------------------
கம்பரித்து விரலால்
தோண்டிய நுங்கும்

சப்பித் துப்பிய
சுட்ட பனங்காயும்

மடித்த பனை ஓலையில்
உறிஞ்சிய பதினியும்

தோண்டி எடுத்து
அவித்த கிழங்கும்

பால்யப் பருவத்து
பனைமரப் பலகாரங்கள்
-----------------------------------------நாகேந்திர பாரதி


வியாழன், 10 மே, 2012

காலம் மாறிப் போச்சு

காலம் மாறிப் போச்சு


--------------------------------------------

காதல் தோல்வியில்

தாடி வளர்த்தது அந்தக் காலம்

பேஷன் ஷோவுக்கு

தாடி வளர்ப்பது இந்தக் காலம்

காதல் தோல்வியில்

கள்ளுக் குடித்தது அந்தக் காலம்

வாரக் கடைசியில்

பீரு அடிப்பது இந்தக் காலம்

காலம் மாறிப் போச்சு

காதல் ஆறிப் போச்சு

---------------------------------------நாகேந்திர பாரதி


செவ்வாய், 8 மே, 2012

விளம்பர வீடுகள்

விளம்பர வீடுகள்


-------------------------------

கூப்பிடு தூரத்தில்

ரயில்வே ஸ்டேஷனாம்

ஆட்டோவில் சென்று

கூப்பிட வேண்டுமாம்

தண்ணீர் வளம்

கொட்டிக் கிடக்கிறதாம்

குடித்தால் மட்டும்

உப்புக் கரிக்கிறதாம்

விளம்பரம் பார்த்து

வீணாய்ப் போயாச்சாம்

---------------------------------நாகேந்திர பாரதி


காதல் மாறிப் போச்சு

காதல் மாறிப் போச்சு


-------------------------------------------

ஆண் குரலுக்கு டி எம் எஸ்

பெண் குரலுக்கு பி சுசிலா

ஆணுக்குப் பெண்ணாய்

இருந்த காதல் அது

ஆண் குரலுக்கு மாலதி

பெண் குரலுக்கு க்ரிஷ்

பெண்ணுக்கு ஆணாய்

மாறிய காதல் இது

காலம் மாறிப் போச்சு

காதலும் மாறிப் போச்சு

----------------------------------நாகேந்திர பாரதி


புதன், 2 மே, 2012

இளமையில் முதுமை

இளமையில் முதுமை


-----------------------------------------

வாலிபத்தில் இஷ்டம்தான்

வயதானால் கஷ்டம்தான்

எலும்புகளும் நரம்புகளும்

இளமையிலே முறுக்குத்தான்

மூச்சடக்கத் தெரிந்திருந்தால்

முதுமையிலும் உருக்குத்தான்

ரத்தத்தின் வேகத்தில்

ராகத்தைத் தவறவிட்டால்

மொத்தத்தில் மோசம்தான்

இளமையிலும் முதுமைதான்

-------------------------------------நாகேந்திர பாரதிசெவ்வாய், 1 மே, 2012

வெள்ளி விழா

வெள்ளி விழா


-------------------------------

காலங்கள் ஓடும்
காட்சிகள் மாறும்
கணவனாய் மனைவியாய்
தந்தையாய் தாயாய்
கடமைகள் முடியும்
கனவுகள் வடியும்
முதுமையின் தளர்ச்சியில்
முகம் பார்த்து இருந்து
உடலாய் இருந்தது
உயிரிலும் இணையும்

-------------------------------- நாகேந்திர பாரதி


ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

காரண காரியம்

காரண காரியம்


--------------------------------

எழுத்தில் இருந்து பொருள்

பொருளில் இருந்து வாழ்க்கை

வாழ்க்கையில் இருந்து இயக்கம்

இயக்கத்தில் இருந்து இன்பம்

இன்பத்தில் இருந்து துன்பம்

துன்பத்தில் இருந்து பாடம்

பாடத்தில் இருந்து கண்ணீர்

கண்ணீரில் இருந்து கவிதை

கவிதையில் இருந்து காரணம்

காரணத்தில் இருந்து காரியம்

--------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 28 ஏப்ரல், 2012

மௌனங்கள் பேசும்

மௌனங்கள் பேசும்


------------------------------------

அந்தந்த வயதில்

அந்தந்த உணர்ச்சிகள்

அவனுக்கு ஒரு அவள்

அவளுக்கு ஒரு அவன்

காலங்கள் மாறிப் போகும்

கனவுகள் ஆறிப் போகும்

கணவனுக்கு மனைவி ஆகும்

மனைவிக்கு கணவன் ஆகும்

மறுபடி பார்க்கும் நேரம்

மௌனங்கள் பேசிப் போகும்

----------------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

இயற்கை இயக்கம்

இயற்கை இயக்கம்
------------------------------------
நிலம் நீர்
நெருப்பு காற்று
விண் கலந்து
விளங்கும் உலகம்
சுவை ஒளி
ஊறு ஓசை
மணம் கலந்து
 மகிழும் மனிதன்
இரண்டும் கலந்து
இயங்கும் இயற்கை
-------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 14 ஏப்ரல், 2012

ஜோடிப் பொருத்தம்

ஜோடிப் பொருத்தம்
-------------------------------
இடியாப் பத்திற்கு
தேங்காய்ப் பால்தான்
வெந்தயக் களிக்கு
வெல்லம், எண்ணை
இட்லி, தோசைக்கு
சட்னி, மிளகாய்ப்பொடி
உப்புமா, அடைக்கு
சீனிதான் பொருத்தம்
ஜோடிகள் மாறினால்
வயிற்றுக்கு வருத்தம்
-------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

உள்ளே வெளியே

உள்ளே வெளியே
-----------------------------------
உள்ளே இருந்து
வெளியே வந்து
உள்ளும் புறமும்
உணர்ந்து அறிந்து
இருந்து வருந்தி
இறக்கும் முன்னே
உள்ளுக் குள்ளே
ஒன்றாய்க் கலந்து
உருகிப் பிரிய
பிறவி போகும்
----------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 5 ஏப்ரல், 2012

நாயும் அவனும்

நாயும் அவனும்
-----------------------------
கிழிந்த கோணிப்பை
கீறல் தட்டு
கடித்த சப்பாத்தி
கறுப்புக் குவளை
அவனை மட்டும்
அங்கே காணோம்
பசியின் கண்ணோடு
பார்க்கும் நாய்
கவலை யோடு
காத்துக் கிடக்கிறது
----------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

மயான வைராக்கியம்

மயான வைராக்கியம்
----------------------------------
வளர்த்த சொந்தத்திற்கு
வாய்க்கரிசி போட்டு விட்டு
கடைசி முறையாக
முகம் பார்த்து அழுது விட்டு
காடு விட்டு வீடு வந்து
கடந்ததெல்லாம் நினைத்துப் பார்த்து
காசெல்லாம் தூசென்று
பாசம் பொங்குகையில்
சிங்கப்பூர் மச்சான்
கேதம் கேட்பதற்கு
வளு வளு காரினிலே
வந்து இறங்கியதும்
பாசக் கணக்கெல்லாம்
பஞ்சாய்ப் பறந்து விடும்
வேதாளம் மறுபடியும்
காசு மரம் ஏறி விடும்
-----------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 31 மார்ச், 2012

பொய்யும் மெய்யும்

பொய்யும் மெய்யும்
-----------------------------------
பொய் முகத்தைப்
பூசிக் கொண்டு
பொய்ப் பேச்சைப்
பேசிக் கொண்டு
புலம்பித் திரிவார்
நகரத்து மாந்தர்

உணர்ச்சிப் பிழம்பாக
உள்ளம் வெளுப்பாக
உடலோ கறுப்பாக
உதடும் இதயமும்
ஒட்டித் திரிவார்
கிராமத்து மாந்தர்
--------------------------------நாகேந்திர பாரதி

புதன், 28 மார்ச், 2012

வறுமைக் கோடு

வறுமைக் கோடு
--------------------
வறுமைக் கோட்டின்
வண்ணங்கள் ஏராளம்
பணம் ஒரு வண்ணம்
பாசம் ஒரு வண்ணம்
இனம் ஒரு வண்ணம்
இகழ்ச்சி ஒரு வண்ணம்
குணம் ஒரு வண்ணம்
குற்றம் ஒரு வண்ணம்
ஏற்றத் தாழ்வின்
வண்ணங்கள் ஏராளம்
-----------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 25 மார்ச், 2012

மண்ணுத் திண்ணை

மண்ணுத் திண்ணை
--------------------------------------
சாணி மணமும்
கோல மணமும்
வேப்ப மரத்து
இலையின் மணமும்
கலந்து கிடக்கும்
மண்ணுத் திண்ணை
துண்டை உதறிப்
போட்டுப் படுத்தா
கண்ணு சாயும்
காலம் மாறும்
-----------------------------நாகேந்திர பாரதி

சனி, 24 மார்ச், 2012

அளவில்லா அளவு

அளவில்லா அளவு
-----------------
எவ்வளவு நேரம்
ஆனாலும் அலுக்காது
எவ்வளவு தூரம்
போனாலும் சலிக்காது
எவ்வளவு பாரம்
இருந்தாலும் வலிக்காது
நேரம் தூரம்
பாரம் கடந்த
காரம் இனிப்பு
கலந்த காதல்
--------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 20 மார்ச், 2012

நாடகக் காட்சி

நாடகக் காட்சி 
---------------------
தொடக்கமும் தெரியாது
முடிவும்    புரியாது
நடுவில் நடக்கும்
நாடகத்தில் மட்டும் 
இன்பம் துன்பம்
இளமை முதுமை
நேற்று இன்று
நாளை என்று
வந்து போகும்
வாழ்க்கை ஆகும்
----------------------நாகேந்திர பாரதி 
 
 

வியாழன், 15 மார்ச், 2012

மாதம் ஒருமுறை

மாதம் ஒருமுறை
--------------------------------
வீட்டுப் பெரியவர்களுடன்
சிரித்துப் பேசிக்கொண்டு

கணவனும் மனைவியும்
முகங்களைப் பார்த்துக்கொண்டு

பிள்ளைச் செல்வங்களுடன்
ஆட்டமும் பாட்டமுமாய்

தொலைக்காட்சி கணினியின்
தொந்தரவு இல்லாமல்

மாதம் ஒருமுறை
மின்விடுப்பு தினத்தன்று
----------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 9 மார்ச், 2012

நூலகர் மறைவு

நூலகர் மறைவு
------------------------------------
இரங்கல் சுவரொட்டியில்
சிரித்துக் கொண்டிருந்தார்
முந்தா நாள் பார்த்த போது
புத்தக வாசனையை
அனுபவித்த படி
அடுக்கிக் கொண்டிருந்தார்
திருப்பித் தராதவர்களை
திட்டிக் கொண்டிருந்தார்
இறைவனுக்கும் புத்தகம்
இரவலாய்க் கொடுத்தாரோ
-----------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 6 மார்ச், 2012

காலக் கணக்கு

காலக் கணக்கு
------------------------------
மழையும் வெயிலும்
பகலும் இரவும்
மாறும் சேரும்
மலரும் உலரும்
உறவும் பிரிவும்
உணர்வும் தளர்வும்
வரும் போகும்
வாழ்வும் தாழ்வும்
காலக் கணக்கு
கழிக்கும் கூட்டும்
-------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

பொம்மை உலகம்

பொம்மை உலகம்
-----------------------------------
குழந்தையின் உலகத்தில்
நாமெல்லாம் பொம்மைகளே
குளிக்க வைக்க ஒரு பொம்மை
சோறு ஊட்ட ஒரு பொம்மை
சேர்ந்து ஆட ஒரு பொம்மை
வெளியில் போக ஒரு பொம்மை
பாட்டுப் பாட ஒரு பொம்மை
தூங்க வைக்க ஒரு பொம்மை
பொம்மைகள் விட்டுப்போனால்
பிடிக்காது குழந்தைக்கு
---------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 15 பிப்ரவரி, 2012

புத்தக அலமாரி

புத்தக அலமாரி
------------------------------
விரும்புகின்ற புத்தகத்தை
விலை கொடுத்து வாங்கும்
படிப்பதற்கு நேரமின்றி
படுக்கையிலே தூங்கும்
பார்க்கின்ற போதெல்லாம்
படபடத்து ஏங்கும்
வீடு மாற்றும் போதினிலே
வீசைக்கு விற்கும்
அடுத்த வீட்டினிலும்
அலமாரி நிரம்பும்
-------------------------------------நாகேந்திர பாரதி

காதல் இயற்கை

காதல் இயற்கை
-----------------------------------
வார்த்தைகள் இன்றி
வாய் பேசி வைக்கும்
சத்தங்கள் இன்றி
செவி கேட்டு வைக்கும்
வெளிச்சமே இன்றி
கண் பார்த்து வைக்கும்
தொடுதலே இன்றி
உடல் புரிந்து வைக்கும்
இயற்கையை மாற்றும்
இன்பமே காதல்
-------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

உயர்ந்த காதல்

உயர்ந்த காதல்
---------------------------------
உடலைத் தாண்டிய
மயக்கங்கள் உண்டு
உணர்வில் ஊறிய
உள்ளங்கள் உண்டு
இரவைத் தாண்டிய
ஏக்கங்கள் உண்டு
உறவில் சிறந்த
உணர்ச்சிகள் உண்டு
உலகில் உயர்ந்த
காதலில் உண்டு
-----------------------------நாகேந்திர பாரதி

நல்லோர் நூல்

நல்லோர் நூல்
-------------------------
ஊருக்கு ஏற்றாற்போல்
உடைகளை மாற்றிக்கொண்டு
ஆளுக்கு ஏற்றாற்போல்
அரட்டையை அடித்துக்கொண்டு
பொய்யான சிரிப்புகளை
பொலபொலென்று உதிர்த்துக்கொண்டு
நடமாடும் மனிதர்களின்
தோலுரித்துக் காட்டுதற்கு
நமக்கென்றும் துணையுண்டு
நல்லோரின் நூல்கள்
----------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

உழைப்பின் உயர்வு

உழைப்பின் உயர்வு
--------------------------------
சுத்தமான உறவும்
சுற்றுப்புற நட்பும்
குடிசையில் பிறந்தவரை
கோபுரத்தில் ஏற்றி வைக்கும்

பரம்பரையைச் சொல்லிக்கொண்டு
பரிகசித்துத் திரிபவர்
மாளிகையில் பிறந்தாலும்
மண்சட்டி ஏந்த வைக்கும்

பிறப்பில் உயர்வில்லை
பேருழைப்பே உயர்வு தரும்
--------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 9 பிப்ரவரி, 2012

குழந்தை உண(ர்)வு

குழந்தை உண(ர்)வு
------------------------------
அரிசி, கடலை
பாசிப் பயறு
கம்பு, கேப்பை
ஜவ்வரிசி
பார்லி, பாதாம்
முந்திரிப் பருப்பு
பாத்துப் பாத்து
சேத்து எடுத்து
அரைச்சுக் கலக்கி
ஆக்கிக் கொடுத்து
சத்து உணவுன்னு
சாப்பிடச் சொன்னா
முறைச்சுப் பாத்திட்டு
முழுங்கி வைக்கும்
--------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 4 பிப்ரவரி, 2012

சுமையும் சுவையும்

சுமையும் சுவையும்
------------------------------------
பார்ப்பது ஒரு சுகம்
பிரிவது ஒரு சோகம்
பார்ப்பதும் பிரிவதும்
பழகிப் போகும்
பார்ப்பது மீண்டும்
பிரிவதற்காக
பிரிவது மீண்டும்
பார்ப்பதற்காக
சோகத்தின் சுமையும்
சுகத்தின் சுவையும்
பாகத்தைப் பிரித்து
பாடத்தை நடத்தும்
---------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

சமையல் சந்தேகம்

சமையல் சந்தேகம்
--------------------------------------
நாம் பால் காய்ச்சும்போது மட்டும் ஏன்
பொங்கி வழிந்து அடுப்பு அணைகிறது
நாம் காய் வெட்டும்போது மட்டும் ஏன்
விரல் பட்டு ரத்தம் வழிகிறது
நாம் கிழங்கு வறுக்கும்போது மட்டும் ஏன்
காய்ந்து கறுத்து தீய்ந்து போகிறது
நாம் குழம்பு வைக்கும்போது மட்டும் ஏன்
உப்பும் புளிப்பும் உறைப்பும் கூடுகிறது
நாம் சமையல் செய்யும்போது மட்டும் ஏன்
சமையல் அறைக்கு கோபம் வருகிறது
----------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 1 பிப்ரவரி, 2012

மோட்டலின் ஏக்கம்

மோட்டலின் ஏக்கம்
---------------------------------------------
கண்டக்டரின் குரலோடு
கானா பாட்டும் உசுப்பும்
கால் மணி நேரம் நிக்கும்
காப்பி கீப்பி குடிக்கலாம்
கடலை மிட்டாய் முறுக்கோடு
கருப்பு கிளாஸ் காப்பி டீ
இறங்கி ஏறி மறுபடியும்
இருட்டுக்குள் பயணம்
இரைச்சல் குறைந்து விட்ட
ஏக்கத்தில் மோட்டல்
------------------------------------நாகேந்திர பாரதி