திங்கள், 28 பிப்ரவரி, 2011

பண்பாடும் படக் காட்சியும்

பண்பாடும் படக் காட்சியும்
-----------------------------------------
கபடி விளையாடி
காலொடிந்து கிடந்தாக்க 
காசில்லை ஆஸ்பத்திரிக்கு
கிரிக்கெட் விளையாடி
சுண்டுவிரல் சுளுக்கானா
சுத்தித் சுத்தி   மருத்துவம்
மக்களின் ஆதரவு
மாறிப் போனதற்கு
பண்பாடு காரணமா
படக்காட்சி காரணமா
---------------------------------------நாகேந்திர பாரதிசனி, 26 பிப்ரவரி, 2011

சாமக் கூத்து

சாமக் கூத்து
---------------------
பத்த  வச்ச ஓலையிலே
சுட்ட தண்ணி குளிச்சுட்டு
ஆவியிலே மணம் பரப்பி
அவியும் இட்டிலியும்
அவியரசி, பதினிக் கூழ்
அவிச்சி, சுட்ட பனங்கிழங்கு  
குருத் தோலைக்   கொழுக்கட்டை
கம்மாய் மீன் கருவாடும்
சாதமும் மொங்கிட்டு
சாமம் வரை கூத்துத்தான்
----------------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

இன்ப தவம்

இன்ப தவம்
-------------------
அலுவலகம் விட்டு வரும்
அவள் முகம் பார்ப்பதற்கு  
ஒவ்வொரு நாள் மாலையும்
ஓயாமல் தவமிருப்பான்
இறங்கும் ரெயிலில்
ஏற்றி வைப்பான் காதலை
இறங்கினாள்      ஒரு நாள்
இணையோடு ரெயிலிலே
இறக்கி வைத்தான் காதலை
இனி ஏது இன்ப தவம்
----------------------------------------நாகேந்திர பாரதி


வியாழன், 24 பிப்ரவரி, 2011

சாதி சனம்

சாதி சனம்
--------------------
வடக்குத் தெரும் தெக்குத் தெரும்
வரத்துப் போக்கு இல்லை
கனத்த மழை பெஞ்சு
கண்மாய் உடைஞ் சாச்சாம்
வீட்டுக்கு ஒரு ஆளை
வரச் சொல்லித் தண்டோரா
வடக்குத் தெரு மண்ணு   வெட்ட
தெக்குத் தெரு தலை சுமக்கும்
ஊருக்கு ஒண்ணுன்னா
ஒண்ணாகும் சாதி சனம்
---------------------------------------------நாகேந்திர பாரதி

  புதன், 23 பிப்ரவரி, 2011

பிரிவில் பூத்த உறவு

பிரிவில் பூத்த உறவு
--------------------------------
கோடி வீட்டிலே
கேதம் விழுந்துச்சு
கேக்கப் போனது
அம்மாவும் பையனும்
பிரிஞ்சு கிடந்த
உறவுக் குடும்பம்
அப்பாவை இழந்த
அப்பாவிப் பொண்ணுக்கு
கண்ணாலே ஆறுதல்
சொன்னானே பையன்
-----------------------------------நாகேந்திர பாரதி

சின்னப் பூந்தோட்டம்

சின்னப் பூந்தோட்டம்
--------------------------------
செல்லப் பொண்ணு பெத்த
சின்னப் பூந் தோட்டம்
சிரிச்சா  செடியாட்டம்
சிணுங்கினா கொடியாட்டம் 
தூக்கிகிட்டு   திரிஞ்சா
துள்ளும் கொண்டாட்டம்
கீழே விட்டுட்டா
கிளம்பும் திண்டாட்டம்
அழுதா ஆர்ப்பாட்டம்
அமைதி அம்மாவாட்டம்
-------------------------------------நாகேந்திர பாரதி  

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

காசிப் பாட்டி

காசிப் பாட்டி
------------------------
எம்பது வயசாச்சு
எச்சுமிப் பாட்டிக்கு
இரும்பு உடம்பு
இளகின மனசு
காசிக்குப் போயி
கருமம் கழிக்கணுமாம்
சொல்லிக்கிட்டே இருந்தவ
சொல்லாம போயிட்டா
தேட வேண்டாமாம்
திரும்ப மாட்டாளாம்
கண்ணீரைக் கொடுத்துட்டு
கங்கைக்குப் போயிட்டா
காணாமப் போயிட்ட
காசிப்பாட்டி ஆயிட்டா
--------------------------------------------நாகேந்திர பாரதி

தாடியும் மூடியும்

தாடியும் மூடியும்
------------------------------
கண்களில் விழுந்தவர்
கரை சேர்வதில்லை
காதலில் தோற்றவர்
கண் மூடுவதில்லை
தாடியை வளர்த்து
மூடியைத் திறந்து
ஓட்டலில் ஒயின் அடித்து
பாரினில் பீர் அடித்து
வீட்டினில் ஹாட் அடித்து
விழுந்து கிடப்பார்
-----------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 21 பிப்ரவரி, 2011

பச்சையும் பழுப்பும்

பச்சையும் பழுப்பும்
------------------------------
இளம்பச்சை கிளிப்பச்சை  
கரும்பச்சை என்று
எத்தனை  பச்சைகள்
இலைகளாய்க்   கிளைகளில்
பழுத்து உதிரும்
பழுப்பு இலைகள்
குப்பையாய் மக்கி
எருவாய் மாற  
உண்டு வளரும்
பச்சைச் செடி ஒன்று
---------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

வீட்டின் முகவரி

வீட்டின் முகவரி
-------------------------
மரமும் மண்ணும்
மட்டுமல்ல வீடு - அது
உறவுகளின் தாலாட்டு
உணர்ச்சிகளின் முதல் பாட்டு
படிப்பின் குரல் மொழி
காதலின் இருள் விழி
கல்யாண மாடம்
விருந்துக் கூடம்
இன்பமும் துன்பமும்
இணையும் அன்பகம்
-------------------------------------நாகேந்திர பாரதி

ஓட்டப் பந்தயம்

ஓட்டப் பந்தயம்
-----------------------
மரங்கள் ஓடின
மனிதர்கள் நகர்ந்தார்கள்
தெரிந்த ஆறும்
தெரியாமல் போனது
ஊர்கள் மாறின
வீடுகள் போயின
நாளும் நகர்ந்தது
இரவும் மறைந்தது
ஓடும் ரயிலில்
ஓட்டப் பந்தயம்
------------------------------நாகேந்திர பாரதி

சனி, 19 பிப்ரவரி, 2011

வெற்றி மந்திரம்

வெற்றி மந்திரம்
--------------------------
தந்தை தாய் பக்தியும்
தாரத்தின் சக்தியும்
புத்திர சித்தியும்
புலன்களின் முக்தியும்
சிந்தனை சுத்தியும்
சிறந்தவர் புத்தியும்  
சுற்றத்தின் சேர்த்தியும்
நட்பதன் நேர்த்தியும்
சேர்த்திடும் வெற்றி
செந்தமிழ் போற்றி
--------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

விட்டு விட்ட நினைப்பு

விட்டு விட்ட நினைப்பு - (பாக்யா - மார்ச் 18-24 /-2011)
---------------------------------------
விளையாட்டில் திரிந்து விட்டு
பாடத்தில் மூழ்கி   விட்டு
காதலை மறந்து விட்டு
கல்யாணம் ஆகி விட்டு
பிள்ளைகள் பெற்று விட்டு
பொறுப்புகள் சுமந்து விட்டு
வயதாகி நோய்வாய்ப் பட்டு
படுக்கையில் புரளும் நேரம்
பிறந்த ஊர் கனவில் தட்டும்
பெற்றோரின் நினைவு  முட்டும்
--------------------------------------------------நாகேந்திர பாரதி
வியாழன், 17 பிப்ரவரி, 2011

காதல் கஷ்டம்

காதல் கஷ்டம்
--------------------------
பார்த்துச் சிரித்துவிட்டு
முகமா முதுகா என்று
பயந்து கிடக்கும் மனது
பேச்சுக் கொடுத்துவிட்டு
பதிலா முறைப்பா என்று
துடித்துக் கிடக்கும்   இதயம்
கடிதத்தைக் கொடுத்து விட்டு
காயா பழமா என்று
காத்துக்  கிடக்கும் மூச்சு
காதலென்றால் கஷ்டம்தான்
---------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 16 பிப்ரவரி, 2011

என்றும் அவள்

என்றும் அவள்
------------------------------
சேர்ந்து நடந்த கால்கள்
அவள் கால்கள்
சிரித்து மகிழ்ந்த இதழ்கள்
அவள் இதழ்கள்
கண்ணீர் துடைத்த விரல்கள்
அவள் விரல்கள்
கருணை  பேசிய விழிகள்
அவள் விழிகள்
எல்லாப் பிறவியிலும்   காதல்
அவள் காதல்
------------------------------------------நாகேந்திர பாரதி

பாழாய்ப் போன பால்

பாழாய்ப்   போன   பால்
-----------------------------------------
வாசலுக்கே பசு வந்து
வார்த்த பாலை வடிகட்டி
நுரை ததும்பும் காப்பியாக்கி
நுகர்ந்தபடி குடித்ததப்போ
சைக்கிளிலே வந்த பால்
பாக்கெட்டைக் கீறிவிட்டு
காய்ச்சையிலே   கெடாவிட்டால்
காப்பியாக்கிக் குடிப்பதிப்போ
பசுமடியின் பால் மாறி
பாக்கெட்டில்   பாழாய்ப் போச்சு
------------------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

கால்நடைக் காதல்

கால்நடைக் காதல்
----------------------------------
சைக்கிளில் செல்லும்போது
நிறுத்திப் பேசிச் சென்றாள்
ஸ்கூட்டரில் போகும்போது
கையசைத்துச் சென்றாள்
காரில் பறக்கும்போது
கண்டுக்காமல் விரைந்தாள்
கடந்து போகும் காதலை
நடந்து போகும் கால்களால்
விரட்டிப் பிடிப்பதற்கு
வேகமுமில்லை விருப்பமுமில்லை
--------------------------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 14 பிப்ரவரி, 2011

சந்திப்பூப் பூத்தது

சந்திப்பூப் பூத்தது
--------------------------
முதல் சந்திப்பில்
முறைத்துப் போனாள்
இரண்டாம் சந்திப்பில்
என்ன என்றாள்
மூன்றாம் சந்திப்பில்
முடியாது என்றாள்
நாலாவது சந்திப்பில்
நலமா என்றாள்
ஐந்தாவது சந்திப்பில்
அடைக்கலம் ஆனாள்
----------------------------------------நாகேந்திர பாரதிஓடிய கோபம்

ஓடிய கோபம்
----------------------
ஆறு பத்து
ரெயிலில் வரவில்லை
ஆறு இருபது
ரெயிலிலும் வரவில்லை
ஆறு மணிக்கே
வருவதாகச் சொன்னவள்
ஏழு மணிக்கு
இறங்கி,  பார்த்து
ஓடி வரும்போது
கோபப் பட முடியவில்லை
-------------------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 12 பிப்ரவரி, 2011

காதல் பருவங்கள்

காதல் பருவங்கள்
----------------------------------
பார்த்து வருவது
பள்ளிப் பருவத்தில்
பேசி வருவது
கல்லூரிப் பருவத்தில்
பழகி வருவது
வேலைப் பருவத்தில்
கலந்து வருவது
கல்யாணப் பருவத்தில்
உணர்ந்து வருவது
குடும்பப் பருவத்தில்
உருகி வருவது
முதுமைப் பருவத்தில்
-------------------------------------------நாகேந்திர பாரதி


வியாழன், 10 பிப்ரவரி, 2011

காதல் தினம்

காதல் தினம்
------------------------------
கால் முதல் தலை வரை
கண்களாலே கட்டிப் போடும்
காலை முதல் மாலை வரை
கண்டபடி அலைய வைக்கும்
வரச் சொல்லிக் காக்க வைத்து
வந்த பின்னே சாக்கு சொல்லும்
பொய்க் கோபம் போன  பின்பு
புதிதாகக் கோபம் கொள்ளும்
வாலிபப் பருவத்திலே
வயசுக்  கோளாறு தான்
காணும் தினங்கள்  எல்லாம்
காதல் தினங்கள் தான்
-----------------------------------------நாகேந்திர பாரதிசெவ்வாய், 8 பிப்ரவரி, 2011

தொல்லைக் காட்சித் தொடர்

தொல்லைக் காட்சித் தொடர்
------------------------------------------------------
ஆயிரம் எபிசோடைத்
தாண்டி ஓடும்
அழுகைத் தொடரை
முடிக்கச் சொன்னார்கள்
இடைவேளை இல்லாத
இறுதி எபிசோடில்
அத்தனை பேரையும்
அரை மணி நேரம்
சும்மாவே அழச் செய்து
சுகமாக முடித்தார்கள்
-----------------------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 7 பிப்ரவரி, 2011

தேங்காய் புராணம்

தேங்காய் புராணம்
------------------------------------
இட்லி தோசைக்கு
சட்னி தேங்காய்
இடியாப்பம் மேலே
பூப்பூவாய்த் தேங்காய்
ஆப்பத்தோடு சேர
பாலாய்த் தேங்காய்
மொறமொற மிட்டாயாய்
சதுரத் தேங்காய்
கண்ணுக்குள் வெல்லத்தோடு
வெடி தேங்காய்
புள்ளையார் கோயிலில்
சிதறு தேங்காய்
அர்ச்சனை செய்ய
பழத்தோடு தேங்காய்
பேசி முடிக்கையில்
தட்டிலே தேங்காய்
தேங்காய் இல்லாத
திருவிழா இல்லை
சின்னவயசு முதல்
சேர்ந்து வரும் தேங்காய்
----------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

எகிப்து ஒரு எச்சரிக்கை

எகிப்து ஒரு எச்சரிக்கை
-----------------------------------------
எல்லா நாட்டுக்கும்
எகிப்து ஒரு எச்சரிக்கை
உறங்கும் விலங்கினைப்
போல்வர் மக்கள்
ஊழல் ரத்தம்
முகர்ந்து கிடப்பர்
நேரம் பார்த்து
நிமிர்வர் எழுவர்
தெருவில் தெறிக்கும்
மாறுதல் புரட்சி
--------------------------------------------நாகேந்திர பாரதி

தண்ணீர்க் கனவு

தண்ணீர்க் கனவு
--------------------------
கண்மாயில் முங்கிக்
குளிப்பதாய்க் கனவு
ஆற்றில் நீச்சல்
அடிப்பதாய்க் கனவு
திடுக்கிட்டு முழிப்பான்
தண்ணீரைக் குடிப்பான்
ஒருநாள் கனவில்லை
தவித்து எழவில்லை
தோசையும் துவையலும்
சாப்பிடா இரவு
---------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

ஓட்டமும் நடையும்

ஓட்டமும் நடையும்
---------------------------------
காலையில் எழுந்ததும்
கடைத்தெருவுக்கு ஓட்டம்
பத்து மணி அளவில்
பஸ்சுக்கு   ஓட்டம்
குடையில்லா மழைக்காலம்
கொஞ்ச தூரம்  ஓட்டம்
கலவரத் தெருக்களில்
கண்டபடி ஓட்டம்
ஓட்டமும் நடையுமாய்
ஓடுகின்ற வாழ்க்கை
----------------------------------------------நாகேந்திர பாரதி
 

வியாழன், 3 பிப்ரவரி, 2011

சோதனைக் கூடம்

சோதனைக் கூடம்
------------------------------------
பிப்பெட்டும் பியுரெட்டுமாய்
இளம்    சிவப்பு நிறத்திற்காக
சொட்டுச் சொட்டாய் விட்ட
சோதனைக் கூடத்திலே
அதிக ஒரு துளி விழுந்து
அடர் சிவப்பாய் ஆக்கி விடும்
செயலிலும் பேச்சிலும்
சின்னப் பிழை ஆனாலும்
நட்பைக் குலைத்து விடும்
உறவைக் கலைத்து விடும்
----------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 2 பிப்ரவரி, 2011

இயற்கைத் திம்பண்டம்

இயற்கைத் திம்பண்டம்
--------------------------------------
கம்பரிச்ச நுங்கு
கடவாயில்  ஒரு காலம்
பனங்காயைச்   சுட்டு
பதம் பார்ப்ப தொரு காலம்
அவிச்ச பனங்கிழங்கை
அதக்குவது  ஒரு  காலம்
சுண்ணாம்புப் பதினி
சுகமாக முக்காலம்
இயற்கைத் திம்பண்டம்
எப்போதும்  கிராமத்தில்
---------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளந்தி விஷம்

வெள்ளந்தி விஷம்
--------------------------------
பொய்யான சிரிப்பைப்
போர்த்தியுள்ள முகம்
வெளுப்பான உடைக்குள்
கருப்பான மனம்
வெள்ளந்தி நடிப்போடு
விஷமான பேச்சு
அமைதிபோல் நடைக்குள்
ஆர்ப்பரிக்கும் ஆணவம்
பார்த்தாலே சில பேரைப்
பார்க்கவே பிடிப்பதில்லை
-----------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

கலையும் கலை

கலையும் கலை
----------------------------
கருப்பு வெள்ளைப் படங்களாகக்
குடும்பக் கதை காலம் போய்
கலர்க் கலர்ப் படங்களில்
உடைக் குறைப்பு ஆன பின்பு
கண்றாவி நடனங்கள்
தொல்லைக் காட்சி ஆன பின்பு
என்ன ஆகும் எதிர்காலம்
எண்ணவே  நடுக்கம் தான்
மேற்கத்தியப் பாதிப்பில்
மெல்லச் சாகும் தமிழ்க் கலை
--------------------------------------------நாகேந்திர பாரதி

விட்டு, விட்டு

விட்டு, விட்டு
-------------------------
கூட்டம் கூட்டமாய்
கூடி வந்து நிற்பார்கள்
ஒருவரை மட்டும்
ஒதுக்கி விட்டுப் போவார்கள்
பழையவரும்   புதியவரும்
பாதையிலே சேர்வார்கள்
விட்டு, விட்டு வருவார்கள்
விட்டு விட்டுச் செல்வார்கள்
இருப்பவரும் போவோருமாய்
இருக்கின்ற இடுகாடு
---------------------------------------------நாகேந்திர பாரதி